ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 8:36 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

Admins Online

ஆஸ்துமா அரக்கன்!

Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty ஆஸ்துமா அரக்கன்!

Post by Powenraj on Mon Dec 31, 2012 3:44 pm

மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்... கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும். விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!
:-
ஆஸ்துமா என்கிற அரக்கனுக்கு வயது வித்தியாசமோ, ஆண், பெண் பேதமோ கிடையாது. பிறந்த குழந்தை முதல், தளர்ந்த பாட்டி, தாத்தா வரை சகட்டுமேனிக்கு பாதிக்கும். மழை, குளிர் காலங்களில் அதன் கோர தாண்டவம் கொஞ்சம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம்.
:-
ஆஸ்துமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள், நிவாரணங்கள்... இவை எல்லாவற்றையும் விரிவாகப்பேசுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் லோகமூர்த்தி.
அதென்ன ஆஸ்துமா?
:-
ஆஸ்துமா என்பது சுவாசக் குழல்களைப் பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள்தான் மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்.
இந்த சுவாசக் குழாய்களின் உள்பக்க சவ்வில் ஒருவித அழற்சி ஏற்படும். மூச்சுக்குழாய் மற்றும் அதன் கிளைகளின் சாதாரண விட்டம் குறைந்து, திடீரென சுருங்கும். சுவாசக் குழாயின் உள்சுவர் வீங்கி, ஒவ்வாமை உண்டாகும். இதன் விளைவாக சாதாரண அளவைவிட, மிகக்குறைந்த அளவு காற்றே, நுரையீரலின் காற்று பரிமாணம் நடக்கும் இடத்துக்குச் செல்லும். அதனால், உடல் திசுக்களுக்குச் செல்லும்பிராண வாயுவின் அளவும் குறைவதால், மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதாவது மூச்சு விட முடியாமை, விசில் சத்தத்துடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப்பகுதி இறுக்கமாவது, அரிதாக சில வேளைகளில் நெஞ்சுவலி போன்றவற்றை உண்டாக்கும். ஆஸ்துமாவின் பாதிப்பு நள்ளிரவு 1 மணியிலிருந்து,அதிகாலை 4 மணிக்குள் சற்றே தீவிரமாக இருக்கும்.
:-
சுற்றுப்புற மாசு, தூசு, பூக்களில் உள்ள மகரந்தத்துகள்கள், வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள். இது பரம்பரையாகத் தொடரக்கூடியஒரு நோய். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அந்த வழியில் வரக்கூடிய குழந்தைகளுக்கும் ஆஸ்துமாதாக்க 25 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக குழந்தையின் 5வது வயதுக்குள் ஆஸ்துமா ஆரம்பித்து விடும். அதில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு 3 வயதுக்குள்ளாகவும் தாக்கலாம்.
:-
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பி.எஃப்.டி மற்றும் இசிஜி என நோயின் தீவிரத்தைப் பொறுத்தது சோதனை முறை. தேவைப்பட்டால், சருமத்துக்கான சோதனையும் பரிந்துரைக்கப்படும். பி.எஃப்.டி. (Pulmonary Function Test) எனப் படுகிற சோதனை மிக முக்கியமானது. இதில் நுரையீரலின் விரிவடையும் தன்மை கண்டுபிடிக்கப்படும். இது ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்யப்படுகிற சோதனை.
:-
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
சரியான மருத்துவம், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மற்ற நோய்களுக்கு மருத்துவம் செய்து முற்றிலும் சரியாக்கி விடுகிற மாதிரி இதில் வாய்ப்பில்லை. ஒரு முறை ஆஸ்துமாவுக்கு மருத்துவம் செய்து, சரியாகி விட்டால், அது மறுபடி வராது என நினைக்க வேண்டாம். வருடம் 2-3 முறை மருத்துவரைப் பார்த்து, மறுபடி ஆஸ்துமாவின் தீவிரம் எட்டிப்பார்க்காமல் இருக்க ஆலோசனை பெறுவது முக்கியம்.
:-
என்ன சிகிச்சை?
ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். நோயின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவர்கள் ‘நெபுலைசர்’ என்கிற கருவியின் மூலம் தீவிரத்தைக் குறைப்பார்கள். மருந்துடன்ஆக்சிஜனும் சேர்த்து, நீராவி வடிவத்தில் சுவாசிக்கும்படி நோயாளிக்கு
செலுத்தப்படும்.
இதற்கும் கட்டுப்படாத ஆஸ்துமா என்றால், உடனடியாகமருத்துவமனையில் சேர்த்து, நரம்பு வழியே செலுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இன்ஃபெக்ஷன் இருந்தால் அதற்கும் மருந்து கொடுக்கப்படும்.
:-
ஆஸ்துமாவுக்கான சிறந்த சிகிச்சை முறை என்றால் அதுஇன்ஹேலர் மட்டுமே. வாய் வழியே வைத்து உறிஞ்சக்கூடிய குழல் வடிவிலான சிறிய கருவியான இதில் ஏற்கனவே மருந்து ஏற்றப்பட்டிருக்கும். உறிஞ்சிய உடனேயே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்து சென்று, சுருங்கிய காற்றுக்குழாய்களின் தசைகளைத் தளர்த்தி, நிவாரணம் அளிக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இன்ஹேலரை சரியாக உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாயில் வைத்து உறிஞ்சிய உடனேயே வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.
:-
இன்ஹேலரிலேயே இரண்டு வகை உண்டு. ப்ரிவென்ட்டர் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமா இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ரிலீவர் என்பதை, பிரச்னை தீவிரமாக இருக்கும்போது மட்டும் உபயோகிக்கலாம். பலருக்கும்இந்த வித்தியாசம் தெரியாமல், வருடக்கணக்கில் ரிலீவரை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அப்படிஉபயோகிப்பது இதய நோயை வரவழைக்கலாம்.
ஜாக்கிரதை!
இன்ஹேலர் உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு மருத்துவர்கள் ‘ஸ்பேசர்’ என்கிற கருவியைப் பரிந்துரைப்பார்கள். பக்க விளைவுகள் இல்லாத இன்ஹேலர் உபயோகித்து, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது. அளவின்றி, அடிக்கடி ஊசி, மாத்திரைகள்எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், ஆஸ்டியோ பொரோசிஸ், பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty Re: ஆஸ்துமா அரக்கன்!

Post by Ahanya on Mon Dec 31, 2012 3:50 pm

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கும் ஆஸ்துமா உண்டு. இப்போது குறைந்துள்ளது. பதிவுக்கு நன்றி பவுன்ராஜ் நன்றி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty Re: ஆஸ்துமா அரக்கன்!

Post by Powenraj on Mon Dec 31, 2012 3:51 pm

ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்!
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க, நமது இருப்பிடம், உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் கவனம் தேவை. முதல் விஷயம் சுற்றுச்சூழல் சுத்தம். தூசி, மாசு இல்லாமல் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் போன்றவை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளியலறையும் கழிவறையும் பாசியோ, ஈர நைப்போ இல்லாமல் உலர்ந்ததாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். பூக்களின் மகரந்தத்தூள், மேசை, நாற்காலி போன்றவற்றில் இருந்து கிளம்பும் தூசு, பெயின்ட், பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே,ஆசிட், வார்னிஷ், பஞ்சு, கொசுவர்த்திச் சுருள், வளர்ப்புப்பிராணிகள், சமையலறைப் புகை போன்றவை ஆஸ்துமாவை தூண்டக் கூடியவை என்பதால் இவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம். புகைப்பிடிப்பவர்களிடம் இருந்தும் விலகியிருக்க வேண்டும். எந்த விஷயம் ஆஸ்துமாவை தூண்டுகிறது, தீவிரப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டு,அதைத் தவிர்க்க வேண்டும்.
:-
ஆஸ்துமா தொற்று நோயா?
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நிச்சயம் தொற்றாது. ஆனால், மரபு வழியே குடும்பத்தில் தலைமுறைகள் தாண்டியும் வரலாம்.
:-
கர்ப்பிணிகள் கவனத்துக்கு...
கர்ப்ப காலத்தில் 2 - 3 சதவிகிதப் பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் பாதிக்கலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால்,எடை குறைவான குழந்தையோ, குறைப்பிரசவக் குழந்தையோ பிறக்கலாம்.
:-
குழந்தைகளைக் கவனியுங்கள்...
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின்பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும்.கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம், ‘ஆஸ்துமா வரும் போது எப்படி ஃபீல் பண்றே’ எனக் கேட்டிருக்கிறார் மருத்துவர். வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாத அந்தக் குழந்தை, தன் அவஸ்தையை படமாக வரைந்து காட்டியதாம். அந்தப் படம் எப்படியிருந்தது தெரியுமா? அந்தக் குழந்தை படுத்திருக்க, அதன் நெஞ்சின் மேல் ஒரு யானை ஏறி உட்கார்ந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தையின் வேதனையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
:-
நன்றி தேடிப்பார் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty Re: ஆஸ்துமா அரக்கன்!

Post by ராஜா on Mon Dec 31, 2012 3:54 pm

அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty Re: ஆஸ்துமா அரக்கன்!

Post by ஜாஹீதாபானு on Mon Dec 31, 2012 4:28 pm

@ராஜா wrote:அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................
@ராஜா wrote:அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

ஆஸ்துமா அரக்கன்! Empty Re: ஆஸ்துமா அரக்கன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum