புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
219 Posts - 21%
sugumaran
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10ஐயனின் ஐம்புலன்கள் Poll_m10ஐயனின் ஐம்புலன்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயனின் ஐம்புலன்கள்


   
   
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Mon Jan 14, 2013 2:55 pm

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதிக்குப் பிடித்த பொய்யாமொழிப் புலவனின் பொய்யாமொழியில் பயணித்தபொழுது, ஒருசிற்றனுபவம் இடறியது. அவ்வனுபவப்பகிர்வின் உணர்வு பேரின்பமெய்தக் கூடியதாக அமைந்தது.
ஸ்டீபன் ஹாக்கிங் காலம் சார்ந்த பதிவுகளைக்கூறுவதற்கு முன்பே,முதற்பாவலரின் வள்ளுவக் காலப் பதிவுகள் உலகை வியக்கவைத்தன. காலத்தின் உண்மைத் தன்மையை இரண்டாயிரம்ஆண்டுகட்கு முன்பே,” வாழ்நாளைச் சிறிதுசிறிதாக அறுக்கும் வாளே, நாளெனக்”காட்டிச் சென்ற வள்ளுவத்தின் பதிவு எண்ணினும் மேன்மையுடையது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். _ [அறம்;துறவறவியல்;-நிலையாமை-334 ]
வாயுறைவாழ்த்தில் பல வாழ்வுத்தளங்கள் கணினிநினைவகமாய் எண்ணிறந்து காணப்படினும் புறப்பொருள்சார்ந்த பல்வேறு விழுதுகளுள் ஐம்புலன்களைப் பற்றியமேலறிவைப் பகிர்தலுக்காய் இக்கட்டுரையின் சூழல்நோக்கப்பட்டது.
ஐம்புலனியக்கம் :
மனிதனின் இயக்கச்சூழலில் புலன்கள் முதன்மைப்பங்குவகிக்கின்றன. சமூகத் தகவல்தொடர்பிலிருந்து இல்லறநலம்மேம்படுவது வரை புலன்களின் செயல்கள் சமமாய்ப்பேணப்படுவதையே மனிதன் விரும்புகிறான்.நல்லெண்ணங்களை முன்னியக்குவது புலன்களேயாகும்.புலன்களின் சமநிலை தவறுவதாலேயே சமூகச்சிக்கல்கள்கிளர்ந்தெழுகின்றன என்பது இயல்பான உண்மையாகும்.இத்தகுமுக்கியம் பெற்ற புலன்களின் இயக்குநிலையை செந்நாப்புலவர்பல நிலைகளில் எடுதுக்காட்டியுள்ளார்.
ஐம்புலனடக்கமே இறைநெறி :
தற்காலச் சூழலில் தடம் மாறிய மனிதத்தடங்கள்எதிர்மறை செயலூக்கிகளாய் வலம் வருவது கண்டு சமூகமேம்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். விழிப்புணர்வில்லாத விழியிழந்த அவலநிலை தொடர்கின்ற சமூகப்போலித்தனம் அதிகரித்துவருகிறது. பண்பாட்டுச்சிதைவு புரையோடியிருக்கும் சமூகக்களத்தில் வாழ்வியல் நசுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒழுக்கமென்ற எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கான இயல்புச்சூழல் மிகையாகி வருவதாக சமூகவியலாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பண்பட்ட உயர்நெறிகளை வாழ்வியல் கோட்பாடுகளாகக் கூறிய தெய்வப்புலவர் இவ்விழிநிலை நீங்கமலர்ப்பாதையொன்றை அமைத்துத் தருகிறார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். [ அறம் – பாயிரம் –இறைவணக்கம் – 6 ]
நமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தினால் ஒழுக்கநெறி மேம்படும். இவ்வுணர்வுகளைப் பக்குவப்படுத்துபவன் இறைவன். அவ்வொழுக்கநெறியில் வாழும் உண்மையான இறைப்பற்றே நீண்ட நலவாழ்வைக் கிட்டச் செய்யும். தற்போதைய சமூகப்பிறழ்தன்மையை மாற்ற வள்ளுவனின் இத்தீர்ப்பினை தன்மனத்தீர்ப்பாய் அனைவரும் கொள்ளுதல் நன்று. தனிமனித ஒழுக்க மேம்பாடு சமூக உயர்விற்கான வித்து என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
ஐம்புலனடக்கமே அறிவுத்திண்மை :
சமூகமறுமலர்ச்சிக்கான தொடக்கம் கல்வியால் கிட்டுமென்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.இவ்வுலகம் உயர்வு பெற வேண்டுமென்பதற்காக அனைவரும் அரிதின் முயன்று உழைக்கிறோம். இவ்வுழைப்பினைச் செம்மையாக்கிச் சீராக்கும் பணியினை கல்விச்சாலைகள் செய்ய வேண்டும். உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம் என்பதைநாயனார் நயம்படக் கூறுகின்றார்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை- 24 ]
ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை.யானையைப் போல்மலையானவை. இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் தோட்டியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். இவ்விதைகள் இன்றையகல்விக்களத்தில் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.
ஐம்புலனடக்கிய கோமான் :
இத்தகைய புலன்களை இவ்வுலகில் அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு மாந்தரையும் காட்டுகிறார் செந்நாப்போதார்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
[ அறம் – பாயிரம் –நீத்தார்பெருமை – 25 ]
தேவர் தலைவனாகிய இந்திரன் ஐம்புல உணர்வினை அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு எடுத்துக்காட்டாவான். இந்திரனைக் காண முடியாதவர்க்கு அப்துல்கலாம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
ஐம்புலனாய்ந்தவன் அறிவின்கண் உலகம் :
‘ பற்றற்ற பெரு மனிதர் பொற்பாதங் காண எத்தனை கோடி ஆண்டு எனக்கு வேண்டுமம்மா ? ‘ எனக் கேட்ட மனிதனிடம் காந்தியைக் காட்டினாள் பாரதத்தாய். சுவை, ஒளி,தொடுஉணர்வு, ஓசை, மணம் என்ற ஐவகைப் புலனுணர்வின்வகைகளையும் ஆராய்ந்தறிந்தவன்கண் உலக இயக்கம் அடங்கியுள்ளதென பெருநாவலர் கூறியது மேம்பட்ட உண்மை.


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
[ அறம் – பாயிரம் - நீத்தார்பெருமை – 27 ]
முப்பதுகோடி முகங்களில் விடுதலையுணர்வினை துளிர்க்கச் செய்த அம்மகாத்மா வள்ளுவக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானவரென்றே கருதலாம். ஐம்புலன் சுவைகளைஆராயும் அறிவுடையோர் சமூகவளர்ச்சியின் தூண்களாவர்.புலன்வென்ற குற்றமற்ற அறிவுடையோர் ‘ யாம் இல்லாத ஏழையென்று’ கருதிப் பிறர் பொருளைக் கவரவிரும்பமாட்டார்.
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்.
[ அறம் – இல்லறவியல் –வெஃகாமை – 174 ]
இத்தகைய தன்னலமிலாத் தன்மான வித்தகர்களையே நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. புலம் வெல்லும் புன்மையை உருவாக்குவதே வாழ்வின் வெற்றிமிகு கோட்பாடாகும்.
ஐம்புலனாசை அழிவைத் தரும் :
நம் நாட்டின் போற்றத்தக்க பெரும்பேறு புத்தபிரான் இங்கு தோன்றியதாகும். ஆசையை அறுத்தால் துன்பம் நீங்குமென்ற அப்பெருமானின் வழிநின்று வள்ளுவனும் வானோங்கிய கோட்பாடொன்றை நம்முன் வைக்கிறார்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு .
[ அறம் – துறவறவியல் –துறவு – 34 ]
ஐம்புல உணர்வுகளை தீயவழியில் செலுத்தாமல் அடக்க வேண்டும். தீயவழியில் செல்லத் தூண்டும் பொருள்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட வேண்டும். பற்றுவிட்டவனைத் துன்பம் பற்றாது என்ற உயர் வாழ்வியல் தத்துவம் வள்ளுவரால் மட்டுமே கூற முடியும்.
ஐம்புலனின்பமே இல்லாள் :
சமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை.காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக் கணவன் கூறுகிறான்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
[ இன்பம் – களவியல் –புணர்ச்சிமகிழ்தல் -1101 ]
தன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. இவ்வன்பே நம் பண்பாட்டுச்சிதைவை வேரோடு அறுக்கும் வலிமையானகூர்வாளாகும்.
ஐயனின் ஐம்புலனாளும் தன்மை :
ஒழுக்க நெறி வாழ்ந்து, அறிவுத்திண்மை பெற்று,ஐம்புலன்சுவை ஆராயும் அறிவுடையோனாய், புலன் வென்ற புன்மையோடு, ஆசை அறுத்து, தூய நல்லன்பின் இல்லறம் செழிக்க வாழ்வோரே வாழ்வாங்கு வாழ்பவராவார். இந்த உயர்நிலையடைய ஐம்புலன்களையும் கையாளும் அரியவித்தையினை நமக்குக் கற்றுக்கொடுத்த ஐயனின்ஐம்புலனாளும் தன்மை’ இவ்வுலகம் உய்ய உயர்ந்த நல்வழியாகும். ஒவ்வொரு
நிமிடமும் உங்களால் உலகை வெல்ல முடியும். முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசியுங்கள். யோசிக்கும் நிமிடத்தின் வெற்றிச்சமன்பாடு வள்ளுவத்தில் உள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக