புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 8:32 am

» books needed
by Manimegala Today at 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 6:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 9:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 5:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 5:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
1 Post - 14%
Manimegala
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
11 Posts - 4%
prajai
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
9 Posts - 4%
Jenila
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
2 Posts - 1%
jairam
விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10விலை  கொடுத்த  விபரீதம். Poll_m10விலை  கொடுத்த  விபரீதம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை கொடுத்த விபரீதம்.


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Mar 08, 2013 8:18 am

விலை கொடுத்த விபரீதம்.
(சிறுகதை)

வழக்கமாக இரவு எட்டு மணிக்கு உறங்கச் சென்று விடும் கந்தசாமிப்பிள்ளை இன்று மணி பத்தாகியும் உறக்கம் கண்ணிமைகளில் வந்தமர்ந்து உக்கிரத் தாண்டவம் ஆடிய நிலையிலும் படுக்கைக்குச் செல்லாமல் கூடத்து நாற்காலியில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகும் தன் மகன் சக்திவேலுவிடம் இன்றே அதைப் பற்றிப் பேசி ஒரு முடிவு எடுத்தே தீர வேண்டும் என்கிற ஆவேசம்தான் அவரை அப்படி அமரச் செய்திருந்தது.

வாசலில் செருப்புச் சத்தம் கேட்க தலையைத் தூக்கிப் பார்த்தார்.

சக்திவேலுதான்.

“என்ன,..தூங்கப் போகலையா?” கேட்டவாறே உள்ளே நுழைந்த மகனிடம்,

“உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்..அதுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்”

“பச்..நாளைக்குக் காலைல பேச வேண்டியதுதானே?”

“இல்லை..இன்னிக்கே..இப்பவே பேசியாகணும்” பெரியவரின் முகத்தில லேசான கோபம் தெரிய,

“ம்..சரி..சொல்லுங்க”

“நாளைக்கு நம்ம வீட்டுக்கு யாரோ வரப் போறாங்களாமே..யாரது?”

“அது..வந்து..சிவகிரிச் சாத்தைய்யன்..பெரிய வாஸ்து நிபுணர்”

“ஏம்ப்பா..ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படிச் சொல்லித்தான் ஒருத்தரைக் கூட்டியாந்தே..வந்தவரு.. “இது சரியில்லை..அது சரியில்லை…இது இங்க இருந்தா தொழில் முடங்கும.;.அது அங்க இருந்தா துர்மரணம் சம்பவிக்கும்” அப்படியிப்படின்னு எதையெதையோ சொல்லிட்டுப் போக..நீயும் அதைக் கேட்டுக்கிட்டு எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளி கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்துக்கு மேல செலவு பண்ணி மாத்தினே”

“அப்ப அப்படிச செய்யப் போகத்தான் இன்னிக்கு வரைக்கும் நாம எல்லோரும் இந்த மட்டிலாவது இருக்கோம்” தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் விதமாய் மகன் சொல்ல,

“அத்தோட விட்டியா,..ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட மாமனார் ஒரு வாஸ்துக்காரரை அனுப்ப…வந்தவனும் அவன் பங்குக்கு எதையோ சொல்லிவிட்டுப் போக..மறுபடியும் இடிக்கறதை ஆரம்பிச்சே..மாத்திக் கட்டுனே..அப்ப ஒரு லட்ச ரூபாய் கரைஞ்சுது”

“ப்ச்..இப்ப என்ன சொல்ல வர்றீங்க,” எரிச்சலுற்ற சக்திவேல் காட்டமாய்க் கேட்க,

“இப்ப திடீர்ன்னு மறுபடியும் நாளைக்கு வேற யாரையோ கூட்டிட்டு வர்றேங்கறே..எதுக்குப்பா?..தேவையா?…யோசிச்சுப்பாருப்பா..உறுதியா..எஃகாட்டமா..நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல கட்டுன இந்த வீட்டை இப்படித் திரும்பத் திரும்ப இடிச்சா..அதோட நல்ல அமைப்பு பாழாப் போறதோடயில்லாம..உறுதியும் கூடப் போயிடும்ப்பா.. அதனாலதான் சொல்றேன் போதும்பா..வேணடாம்ப்பா இனியும் இடிச்சா தாங்காதுப்பா”

“த பாருங்க..எனக்கு எல்லாம் தெரியும்..நீங்க எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை..தயவு செய்து இதைப்பத்தி இதுக்கு மேல பேசாதீங்க…பேசினா..மரியாதை கெட்டிடும்” ஆட்காட்டி விரலை முகத்துக்கெதிரே நீட்டி ஆக்ரோஷமாய்ச் சொல்லிவிட்டுச் சென்ற மகனை வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்ததே தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை அந்த வயோதிகத் தந்தையால்.

மறுநாள் வந்திறங்கிய அந்த சிவகிரிச் சாத்தையன் என்னும் வாஸ்துக்காரன் தான் பெற்ற கூலிக்கு வஞ்சகமில்லாமல் பல இடிப்புக்களை அந்த வீட்டின் சிரசில் ஏற்றிச் செல்ல மாயக்காரன் வாக்கினை மகேசன் வாக்காய் நம்பி சக்திவேலும் கட்டிடத்தை நாசமாக்கத் துவங்கினான்.

தன் பாட்டன் காலத்து வீடு தன் கண்ணெதிரெ கொஞ்சம் கொஞ்சமாய் உருமாறி…உறுதியிழந்து…சிதிலமாகிச் சிதைவதைக் காணச் சகியாத கந்தசாமிப்பிள்ளை உள்ளக் குமுறலுடன் வீட்டை விட்டு வெளியேறி..கண் போன போக்கில்..கால் போன வாக்கில் நடக்கலானார்.
----

அடுத்த மாதத்தில் அந்த கிராமத்தை ஆட்டிப்படைத்த பேய் மழையும் சூறாவளிக் காற்றும் குடிசைகளைச் சிதறடித்ததோடு நில்லாமல் பல ஓட்டு வீடுகளையும் ஆட்டம் காண வைத்தன.

அடுத்தடுத்த இடிப்புக்களால் உண்மையான உறுதியைத் தொலைத்து விட்டிருந்த கந்தசாமிப்பிள்ளையின் பாரம்பரிய வீடு தொடர் மழைத் தாக்குதலால் ஆங்காங்கே நீர்க்கசிவையும் லேசான விரிசல்களையும் வாங்கிக் கொண்டு நிற்க,

சக்திவேலுவின் மனத்தில் குன்றிமணியளவு அச்சம் துளிர்த்தது

“இங்கே இருக்கும் வாசலை அடைத்து விட்டு நைருதியில் திறப்பு செய்து பாருங்க..செல்வம் கொழிக்கும்..புகழ் வந்து சேரும்…அரசுக் கருவூலத்திலிருந்து ஆதாயம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை”

சிவகிரிச் சாத்தையன் சொல்லிச் சென்ற வாஸ்து பலன் காதுகளுக்குள் ஒலிக்க துளிர்த்த அச்சம் தூரப் போய் விழுந்தது.

அன்று மதியம் பெய்த ஆவேச மழை சுழன்றடிக்கும் சூறைக்காற்றோடு கூட்டணி அமைத்தது.

இடித்து இடித்துக் கட்டப்பட்டதால் இயற்கைப் பிடிமானத்தையும் உண்மை உறுதியையும் இழந்து நின்ற அந்த வீட்டின் சுவர்கள் “இதற்கு மேல் எங்களால் முடியாது” என்கிற பாணியில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து விட,

“சட..சட”வென விழுந்த வரை மொத்தக் குடும்பத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டது.

மறுநாளைய செய்தித்தாள் அச்சம்பவத்தை முக்கியச் செய்தியாக வெளியிட,

அதே நேரத்தில்,

சிவகிரியில் தான் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் சந்தோஷமாய் சிரித்துக் கொண்டிருந்தான் சிவகிரிச்சாத்தையன் என்னும் அந்த வாஸ்துக்காரன்

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 08, 2013 8:23 am

உண்மையை உரைக்கும் கதை பகிர்வுக்கு நன்றி




அன்புடன்
சின்னவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக