புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
53 Posts - 60%
heezulia
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_m10இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 07, 2013 6:57 pm

1990 களில் இந்திய மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முகமாக நவோதயா பள்ளிகளை திறக்க முற்பட்டது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இது இந்தி திணிப்பு என்று திராவிடர் கழகம் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளும் எதிர்த்தன.

ஆனால் இன்று ...இந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநிலத்தினர் அங்கே வேலை கிடைக்காமல் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்க்கின்றனர்.

*********************************
இந்தி மத்திய அரசின் அலுவலக மொழியே தவிர தேசிய மொழி அல்ல. இந்தியாவுக்கென்று ஒரு தேசிய மொழி இல்லை. நிறைய பேர் தவறுதலாக இந்தி தேசிய மொழி என்று கூறுகின்றனர். திருத்திக் கொள்ளவும். . இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் இந்தி படித்த மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. ஏன்?தாய் மொழி மற்றும் ஆங்கிலம் படித்தால் மட்டும் போதும். ஆங்கிலம் முக்கியம்.தாய் மொழி ஒருவனுக்கு அடையாளம். அதுவும் முக்கியம்.ஈழத் தமிழர்கள் டாக்டர் படிப்பு தமிழிலே படித்து மிகச் சிறந்த மருத்துவர்களாக பல நாடுகளில் பணி புரிகிறார்கள். ஆங்கிலமும் அவர்கள் சிறப்பாக கற்றுள்ளார்கள். மூன்று மொழி மாணவர்கள் படிப்பது என்றால் சுமை, நேரம் வீணடிப்பு. மொழி ஆர்வம் உள்ளவர்கள் எத்தனை மொழி வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம் தடை ஒன்றும் இல்லை. இந்தி மொழி பல வகைப் பட்டது. பதினேழுக்கும் அதிகமான இந்தி உள்ளது. ராஜஸ்தான் இந்தி பீகாரிகளுக்கு புரியாது. இந்தியா விடுதலை அடைந்ததும் பெரும்பான்மை காட்டுவதற்காக எல்லா இந்திகளையும் சேர்த்து இந்தி தான் அதிகமாக பேசபடுகிறது என்று சொன்னார்கள். தெலுங்கு தான் அதிகமாக பேசப்பட்ட ஒரே மொழி.

*********************************

தமிழன் தன்மானத்தோடு வாழ தனித்தமிழ் தேசம் வேண்டும். தாய் மொழியை தவிர்த்து பிறமொழியில் எந்ததேசமவது வளர்ச்சியடைந்து இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். சற்று உலகத்தை பாருங்கள் மருத்துவம்,பொறியியல்,அறிவியல் போன்ற அனைத்தும். அவன் தாய்மொழியில் அமைந்திருக்கும்.(உ ம்) ஜப்பான்,சீனா,இத்தாலி,ஜெர்மனி,பிரான்ஸ்,ருஷ்ய, சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே இவைகள் அனைத்தும் வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகள் மேலும் இந்த நாடுகளில் தயாரிப்புகளையே நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம்.இந்திய என்பது ஒரே தேசம் அல்ல இது பலதேசங்களின் கூட்டமைப்பு இதற்க்கு இந்திய என்று பெயர் வைத்ததே தவறு மற்றநாடுகளில் உள்ளதுபோல் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய அல்லது இந்திய கூட்டமைப்பு (United India )
(உ ம்) uk,usa,UAE,USSR, ஒருவன் பிழைப்பு தேடி செல்லவேண்டும் என்றல் எந்தமொழியாயையும் ஆறே மாதத்தில் கற்கலாம் தமிழ் வாழ்க

*********************************
ஆங்கிலம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொளப்பட்ட மொழி.இதை ஜப்பானியரும் சீனரும் உணர்ந்து கொண்டு இப்பொழுது இதை மிகவும் கஷ்டத்துடன் படிக்கிறார்கள்.இந்தயாவில் 240 மொழிகள் இருக்கின்றன.எல்லோர்ற்கும் தத்தம் தாய் மொழிகளில் பாசமும் பற்றும் இருக்கும்.அதற்காக எல்லா மொழிகளையும் ரூபாய் நோட்டில் கிறுக்க முடியுமா? யார் சொன்னது வெளி நாட்டில் ஹிந்தி தேவை என்று.

*********************************

வணக்கம் அன்பர்களே யாம் வெளி நாட்டில் வாழ்கிறோம் ஆனால் இந்தி அவசியமில்லை யாம் உலகம் புறாவும் போய் வந்து இருக்கிறோம் ஆனால் எங்கேயும் இந்தியை கண்ணால் பார்த்தது கூட கிடையாது தமிழர் இந்தியர் கிடையாது தமிழர் மட்டும்தான் இந்தி எமது மொழி கிடையாது அதை மதிக்கமாட்டோம் மிதிப்போம் மீறினால் யாம் அந்த்த மொழியால் பாதிக்க பட்டுள்ளோம் ஆதலால் வெளி நாட்டுக்கு ஓடி வந்தோம் இல்லையானால் நானும் மற்றவரை போல் பயங்கரவாதி ஆக வேண்டியதுதான் வேறு வழி இந்தியா ஒன்று பட்டு இருக்க வழியி இனிமேல் கிடையாது இலங்கையில் பார்த்தோமே இந்த்தியாவுடைய லட்சணத்தை நாங்கள் தமிழர்தான் இனிமேல் இந்தியர்கள் என்று எங்கும் கூறமாட்டோம் இது சத்தியம்

*********************************

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முதல் பக்கமே "இந்திய ஒரு ஒன்றியம்" என்று தான் குறிபிடுகிறது ஆம் இங்கு நாம் தமிழன்,கன்னடன்,தெலுங்கன் என தேசிய இனமாக உள்ளோம் இந்தியாவில் குடியுரிமை பெற்று உள்ளோம் இந்தியன் என்று ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை (ஆதாரம் முரசொலி மாறன் எழுதிய "மாநில சுயாட்சி& ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" நூல்கள்) நாம் தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் ரூபாய் குறியீட்டின் வழி ஹிந்தி ஆதிக்கத்தையும், மாற்று தேசிய இன மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் ஆக்கும் இந்த அராஜக போக்கை கண்டிப்போம் இது தமிழர்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஹிந்தி தவிர்த்த அத்தனை தேசிய இன மக்களையும் கொச்சைபடுத்தும் செயல் "ஒரு இனத்தை அழிக்க முதலில் அதன் மொழியை அழி"-என்பது பாசிச ஹிட்லர் வெறி.

*********************************

ஒரு பாஷா நமக்கு கூட தெரிந்த நல்லதுதானே.கேரள்விலே எல்லாவனுக்கும் ஹிந்தி தெரியும் .மத்திய அரசு பணிக்கு அவன் முந்திக்கிறான்.நம்ம ஆளுங்க ஆடு மாதிரி வடக்கே போய் ஹிந்தி தெரியாம முளிகாங்க,.இதை வெறி என்று எடுத்து கொள்ள கூடாது.வடக்கே சேவகம் பண்ணிதான் நம்ம திராவிட கட்சிகளும் பிழைக்குது.பின்னே பள்ளியிலும் ஹிந்தி வச்ச கேரளா மாதிரி நம்ம மாணவர்களும் உருப்பட வழி கிடைக்கும்.வாடா நாட்டுக்காரன் நம்ம ஏமாற்ற முடியாது.

*********************************

இவர்களின் பிள்ளைகல்லுக்கு கூட இவர்கள் தமிழ் சொல்லி கொடுபதில்லை. ஹிந்தி பெயர்களை தான் வைகிறார்கள் . பணத்திற்காக ஹிந்தியை படி என்று சொல்லுகிறார்கள் . ஹிந்தி படித்து வெளி நாட்டில் எந்த வேலையும் செய்ய போவதில்லை . வெளி நாட்டில் ஹிந்தி அவசியமும் இல்லை . தமிழ்நாட்டில் வேலை பார்த்தாலே போதும் . இவன் டெல்லிக்கு போய் என்ன செய்யப்போகிறான். என் சிங்களவனை ஹிந்தி படிக்க சொல்லுங்கள் . அவன் செருப்பால் அடிப்பான். அப்படிதான் தமிழனும் . நமக்கு மொழி பற்று இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஜப்பானியர் ஒரு உதாரணம் . முதலில் நம் தாய் மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் . பிறகு அந்நிய மொழியான இந்தியை கற்காலம் . ஆங்கிலமும் தாய் மொழி தமிழுமே நமக்கு போதும் தரணியை ஆள்வதற்கு

*********************************

இதுல என்ன தவறு இருகின்றது என்று தெரியவில்லை ஒவ்வரு தமிழனும் கண்டிப்பாக ஹிந்தி படிக்கணும் இல்லேன்னா நம்மளால் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கூட தாண்ட முடியாது வெளி நாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு பாருங்கள் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் கூட ஹிந்தி பேசுகிறார்கள் தமிழனால் முடியல நீ இந்தியனா என்று கேவலமா கேக்குறான்.அரசியல் இலாபத்திற்காக தமிழன் மற்றவர்களிடம் கேவல பட வைகிறார்கள்

*********************************

நான் பார்த்த எல்லாம் இடத்துலேயும் அவங்களோட பிராந்திய மொழி. புரக்கனிக்க படுகிறது. வேறு மொழி தினிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வேறுபட்ட திராவிடர்களுக்கு ரொம்ப கஷ்டம். என்னை மாதிரி மாநிலத்தை கடக்குற சிலர் கஷ்ட்டப்படாலும் பராவாயில்லை. நம் நாட்டுக்குள் தமிழ் புற‌க்கணிக்க படுவதை நான் விரும்பவில்லை. இங்கு நான் "தமிழ் நாட்டில் ஹிந்தி இல்லை"ன்னு சொல்ல ரொம்ப பெருமையா இருக்கு. ஏன்னா இங்க ஒரு மராத்தியனை , மராத்தியில் சொல்லாதே! ஹிந்தியில் சொல்லுன்னு ஒருவன் திட்டியதை நான் கண்கூட பார்த்துள்ளேன்.

*********************************

இந்த காலத்துல ஹிந்தி வேண்டாம்-னு சொல்றது தப்புதான், அதுக்காக நண்பர் பிரபு சொல்றது கொஞ்சம் ஓவர்தான்... என்னதான் ஹிந்தி வேண்டாம்-னு சொல்லி நெறைய பேரு இருந்தாலும், தமிழ்நாட்டுல ஹிந்தி பிரசார் சபா இல்லாமையா இருக்கு? எத்தனையோ மாணவர்கள் ஹிந்தி-ல மேல மேல எக்ஸாம் எழுதி பாஸ் ஆகாமயா இருக்காங்க? அவசியம் இருந்தா அவங்கவங்க வேண்டியதை கத்துக்குவாங்க... கட்டாயப்பாடமா இல்லாதப்பவே தமிழ்நாட்டுல தமிழை முதல் மொழியா எடுத்துருக்குரவங்கள ரொம்ப குறைச்சலா தான் பார்க்க முடியுது (அரசுப்பள்ளிகள் இதுல உட்படுத்தப்படவில்லை)...

தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய் பார்த்தாக் கூட, அந்தந்த பிராந்திய மொழிக்குதான் முதலிடம்.எல்லா மொழிகளும் கலந்து உறவாடுற இடமா கருதப்படுற பெங்களூருல கூட (நான் தற்போது வசிப்பது அங்கதான்) தமிழ், கன்னடம் இரண்டுக்கும் அப்புறமா மூணாவது இடத்துலதான் ஹிந்தி இருக்கு. அநேகமா எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான். அதுக்காக எல்லா மாநில மொழிகளையும் படிச்சு வச்சுக்க முடியுமா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் பன்னிரண்டு மொழிகள்ல பேச முடியுறதுக்கு இரண்டு முக்கிய காரன்கங்கள் இருக்க முடியும். ஒண்ணு: பல மொழிகளைக் கத்துக்க ஆர்வம், ரெண்டு: பல இடங்கள்ல பணி செய்த அனுபவம். இதுக்கும் சாதாரண மனிதனுடைய மொழி அறிவுக்கும் தொடர்பு படுத்துவது அபத்தம்.

"நீ எத்தனை மொழிகளைப் பேசுகிறாயோ, அத்தனை மனிதர்களாக மாறுகிறாய்" என்பது ஒரு பொன்மொழி. அப்படி ஆவதற்கும் ஒவ்வொருவரது சுற்றுச்சூழலும் வாய்ப்புகளும் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாகத் தேவை. பெங்களூருலையே ஆறு வருஷத்துக்கு மேல இருந்தும், "வா, போ, தா, செய், சாப்பிடு" ங்குற ஐந்து வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் கன்னடத்துல தெரியாத் மூணு பேரு (பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க; நம்ம ஊருகாரவங்க) என் கூட வேலை பாக்குறாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க?

*********************************

என் கருத்து;

என்னை பொறுத்தவரை ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றாலே நாம் எங்கும் பணி செய்யலாம். மற்ற மாநிலங்கலங்களுக்கு நாம் வேலைக்கு போகும் போது அவர்களுக்கு தெரிந்த ஹிந்தியும் , ஆங்கிலமும் நமக்கு தெரியாத போது தான் அவன் சூடாகி நம்மை திட்டுகிறான். ஆங்கிலம் நல்ல பேச தெரிந்தவர்கள் இது போன்று பதிக்கப்பட்டது இல்லை. அதே போல் வளைகுடா நாடுகளில் மட்டும் தான் ஹிந்தி சற்று தேவை படும். அதுவும் அங்கு சென்ற 3 வாரங்களில் சமாளிக்கும் அளவிற்கு ஹிந்தியை கற்றுகொள்ளலாம். என்னதான் மண்ணில் நிச்சல் பழகினாலும் பயனளிக்காது. தண்ணியில் நிச்சல் பழகினால் தான் பயனளிக்கும். பொதுவாக ஹிந்தியை நாம் புத்தகத்தில் உள்ளது போல் பேச முடியாது. அவ்வாறு பேசினால் அது அவர்களுக்கு நகைப்புக்குரிய விசயமாக தெரியும். எனவே மும்பையில் வேலை கிடைத்தாலும் டில்லியில் வேலை கிடைத்தாலும் ஹிந்தி தெரியவில்லை என்று தாழ்வுமனப்பன்மை கொள்ள வேண்டாம். ஒரு மதத்தில் சமாளிக்கும் அளவிற்கு தானாகவே வந்து விடும்.

ஆனால் அரசாங்க வேலை என்று போகும் போது தான் ஹிந்தி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழனை ஒரு வகையில் பாராட்டவேண்டும், மகாராஷ்டிராகாரன், பீகார்காரன், பெங்காலிகாரன் தன் தாய்மொழியில் விட்டில் கூட பேசுவது இல்லை, ஹிந்தியில் தான் எல்லாமே. நாம் தமிழை இந்தளவிற்கு பயன்படுகிறோம். உண்மையில் நமிடம் அவர்கள் படம் எடுத்துகொள்ளவேண்டும்.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 08, 2013 12:19 am

என் கருத்து
ஹிந்தி படித்தால் இன்னும் ஒரு மொழி கூடுதலாக தெரியும் இந்திய பெரிய வட மாநிலங்களில் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் பேச பழக வசதியாய் இருக்கும் .. வெளி நாட்டிற்கும் இந்திக்கும் சம்மந்தம் இல்லை ...ஐரோப்போவில் குறைந்தது குழைந்தைகள் 4 மொழி படிக்கிறார்கள் ... கற்று கொள்வதானால் தவறு ஒன்றும் இல்லை நம்பிக்கை வளரும் ... தமிழ் மொழி மட்டுமே படிப்பது குறைந்த அளவு தமிழ் தெரிந்தவர்களிடம் மட்டுமே பேச முடியும் பழக முடியும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு ) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக