ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Today at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Today at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Today at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Today at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Today at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Today at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Today at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Today at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Today at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Today at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Today at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Today at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Today at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Today at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

Admins Online

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by சாமி on Thu Apr 11, 2013 7:49 am

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.

திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து..(.நன்றி - தினமணி )
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Apr 11, 2013 8:15 am

மிகவும் நன்று சாமி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by chatchi on Thu Apr 11, 2013 1:48 pm

சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே. ஆனால் நம் வள்ளுவருக்கு தொல்காப்பியர் அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை. நன்றி!
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by சாமி on Thu Apr 11, 2013 3:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by பாலாஜி on Thu Apr 11, 2013 4:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!

சூப்பருங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by chatchi on Thu Apr 11, 2013 8:40 pm

பரம்பொருளின் பூரணத்துவத்தை மறுக்கும் எண்ணத்தில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. வள்ளுவருக்கு தொல்காப்பியர் முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பது சேக்கிழாருக்கு சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்தார் என்பதை விடச் சிறந்தது என்று சிறப்பித்துக் கூற விரும்பியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

நன்றி.
சச்சிதானந்தம்
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by raja sekar.v on Thu Apr 11, 2013 9:05 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
மதிப்பீடுகள் : 38

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by M.Jagadeesan on Wed Jun 17, 2015 1:26 pm

திருக்குறளில் , " தமிழ் " என்ற சொல் கையாளப்படவில்லை  என்றாலும் , வள்ளுவர் தம்முடைய தமிழ்ப்பற்றை இலைமறைவு காய்மறைவாக ஆங்காங்கே தெரிவித்துள்ளார் .

முதல் குறட்பா " அ " வில் தொடங்கி , " ன் " னில் முடித்துள்ளார் . இது அனைவருக்கும் தெரியும் .

நம் மொழியின் மூன்று இனப் பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம் , அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளார் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் . ( கடவுள் வாழ்த்து -2 )

இக்குறள், " க " என்ற வல்லின எழுத்தில்  தொடங்கியுள்ளது .

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் . ( கடவுள் வாழ்த்து -3 )

இக்குறள் , " ம " என்னும் மெல்லின எழுத்தில் தொடங்கியுள்ளது .

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல , ( கடவுள் வாழ்த்து - 4 )

இக்குறள் , " வே " என்னும் இடையின எழுத்தில் தொடங்கியுள்ளது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5377
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by ஈகரைச்செல்வி on Wed Jun 17, 2015 7:04 pm

நன்றி சிறந்தபதிவு
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by Preethika Chandrakumar on Fri Jun 19, 2015 10:50 am

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 103459460 வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 1571444738
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Empty Re: வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum