புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
32 Posts - 51%
heezulia
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
74 Posts - 57%
heezulia
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_m10சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 11:21 am

சிலர் தமிழர்களாகப் பிறந்தும் அவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து வாழ்ந்து வருவது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் பேசுவதை இழிவாக நினைத்து வாழ்கின்றனர். இவ்வாறு நினைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில காரணங்கள் நியாயமானதாகவும், அதே வேளை குருட்டுத் தனமாகவும் உள்ளன.

என்ன தான் காரணம்?

௧) உலகமெங்கும் ஆங்கிலம் தான் மிகுதியாகப் பேசப்படுகிறது என்ற தவறான எண்ணம். உலகமெங்கும் மிகுதியாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி) ஆகும்.

௨) தமிழ் மொழி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்றால் தமிழில் பேச இயலாது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது என்று 'குண்டு சட்டியில் கழுதை மேய்க்கிறார்கள்'. நினைவில் கொள்க, தமிழ் மொழியானது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது, தமிழ் ஈழம், கடார நாடு (மலேசியா), சிங்கை (சிங்கப்பூர்), மொரிசியசு போன்ற பல நாடுகளில் பேசப்படுகிறது.


௩) ஏழை நாடுகளில் பேசப்படும் ஏழைகளின் மொழி தான் தமிழ் என்ற குருட்டு தனமான எண்ணம். 'பணக்காரர்களின் மொழி ஆங்கிலம், ஏழைகளின் மொழி தமிழ்'. இதற்கு முதல் காரணம், தமிழ் மிகுதியாகப் பேசப்படும் நாடான இந்தியா வறுமை நாடுகளில் ஒன்றாக இருப்பதே ஆகும். அமெரிக்காவில் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில் பேசினால், படித்த பிச்சைக்காரன் என்று மனதுக்குள் வருந்தும் நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை 'மானமுள்ள பிச்சைக்காரன், பிச்சை எடுத்தாலும் தாய் மொழியில் பேசுகிறான்' என்று.

௪) உலகில் நிறைய கல்வி சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் ஆங்கிலத்திலே பயன்படுத்துப்படுவதால். ஆம் உண்மையே, ஆங்கில மொழி உலகில் மிகுதியான நாடுகளில்/இடங்களில் பேசப்படுகிறது. இதற்கு முதல் காரணம் ஆங்கில மொழி மிக இலகுவாக இருப்பதே ஆகும். மேலும் பல மொழிகளின் கலப்பே ஆங்கிலம். ஆங்கிலம் என்ற ஒரு மொழியிலேயே நாம் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். இருப்பினும், ஆங்கிலம் ஒன்றை வைத்துக் கொண்டு நாம் பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து விடலாம் என்பது தவறாகும். சீனா/ ஜப்பான்/ கொரியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. மேலும், அமெரிக்கா என்றால் ஆங்கிலம் என்று எண்ணி வாழ்கின்றனர் நம் அப்பாவி தமிழர்கள். உண்மை நிலை என்னவென்றால், அமெரிக்கா நாடுகளில் ஆங்கிலம் தெரியாத நாடுகளும் நிறைய உள்ளன. மேலும், அமெரிக்காவில் பல இடங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு நாம் சென்று வாழ இயலாது. உலகிலேயே வேறு தாய்மொழிகளைக் கொண்டும், மிகுதியாக ஆங்கிலத்தைப் பேசும் நாடு எனும் 'பெருமை'யைப் பெற்ற நாடு இந்திய நாடே ஆகும்.

சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? 57713554713716531913816

௫) அடுத்து மிக முக்கியமான காரணம். ஆதிக்காலத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வாழ்வதையே விரும்பும் நம் தமிழர்கள். 'வெளி நாடுகளுக்குச் சென்றால் ஆங்கிலம் கைக்கொடுக்கும்.' பிற நாடுகளுக்குச் சென்று உழைத்து ஊதியம் சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பிற நாடுகளுக்குச் செல்லும் முன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு செல்கின்றனர். பிறகு தான் அவர்கள் உணர்கின்றனர், ஆங்கிலம் மட்டும் போதாது என்று. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வேலை தேடி வரும் தமிழ் உறவுகள். மலேசியா என்றால் மலாய் மொழி தான் மிகுதியாகப் பேசப்படுகிறது. மலாய் மொழி, தமிழ், சமஸ்கிருதம், போர்த்துக்கீசியம், அரபு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்பில் தோன்றிய மொழியாகும். எழுத்து வடிவம் இல்லாத மொழி, எனவே இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படுகிறது. சிங்கப்பூர் என்றால் சீன மொழி தெரிந்திருத்தல் சிறப்பு.
கொடுமையிலும் பெருங்கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் சுத்தமாகப் படிக்கத் தெரியாதவர்களுக்காக மட்டுமே தமிழில் பெயர்ப்பலகை எழுதப்படுகிறதே தவிர யாரும் இங்கு மொழிப் பற்றோடு தமிழில் பெயர்ப்பலகைகள் இடவில்லை. எடுத்துக்காட்டாக, “சிவா டிராவல்ஸ், கவிதா டெக்ஸ்டைல்ஸ்” என்றெல்லாம் பெயர்ப்பலகைகள். இதற்கு பெயர் மொழி பற்றா? இதற்கு பெயர் “மொழிச்சிதைவு”. ஆங்கிலம் படிக்க தெரியாதாம். ஆனால், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் என்று கொடுமையாக ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரே சொல்லில் போட்டுக் கொன்று புதைத்து எழுதினால் படித்து புரிந்து கொள்வார்களாம். ஆங்கிலம் மோகம் தலைவிரித்து ஆடினால், ஆங்கிலத்தில் எழுதி அதையே படித்துக் கொள்ள வேண்டியது தானே? மொழிப்பற்று என்ற தோல் போர்த்தி ஏன் இந்த நாடகம்? கொஞ்சமாவது உணரப் பாருங்கள்.

ஒன்று கூறிக் கொள்ள விருப்பப்படுகிறோம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. நம் ஐயன் வள்ளுவன் அன்றே,

'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவது அறிவு'

என்று மொழிந்தார்.. அதாவது உலக வாழ் மக்கள் எத்தோடு ஒட்டி வாழ்கிறார்களோ, அத்தோடு நாம் இணைந்து வாழ்வது சிறப்பு. எனினும், தமிழ் நம் தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது. ஆங்கிலத்தையும் செவ்வனே கற்றுக் கொண்டு, ஆங்கிலத்தின் வழி தமிழையும் உலகமெங்கும் பரப்ப வேண்டும். வெறும் தமிழைக் கொண்டு, தமிழை உலகமெல்லாம் பரவ இயலாது. ஆங்கிலத்தின் தோள் மேல் தமிழை ஏற்றி தான் தமிழைக் கரை சேர்க்க இயலும். அதற்காக, ஆங்கிலத்தைத் தமிழிலும், தமிழை ஆங்கிலத்திலும் கலந்து மொழிச்சிதைவு செய்ய வேண்டாம். தமிழில் சிறப்புகளை எல்லாம் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள். தமிழில் இருக்கும் பல அரிய நூல்களை எல்லாம் மொழிப்பெயர்ப்புச் செய்யுங்கள். எந்தவொரு மதத்தையும் தனித்தே கூறாமல், பொதுமறையாகத் திகழும் திருக்குறளின் உண்மையை ஆங்கிலத்தின் மூலம் உலகிற்குக் கொண்டு செல்லுங்கள். இவ்வளவு பொருள் கொண்ட திருக்குறள் எந்த மொழிக்குச் சொந்தம் என்று அறிந்து, அனைவரும் தமிழ் மீது ஆர்வம் கொள்வார்கள். அதுவே தமிழை உலகமெங்கும் பரப்பும் முதற்படியாகும். வெளிநாடுகளும் அவர்கள் தயாரிக்கும் தொழிநுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்த ஆர்வம் செலுத்துவார்கள். ஆனால், நம் தமிழர்கள் என்னவோ ஆங்கிலத்தை தலையில் ஏற்றிக் கொண்டு தமிழை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.

தமிழர்களிடம் ஒரு சிறந்த பண்பு உள்ளது, அதாவது சாலையில் செல்லும், வழியில் சந்திக்கும் முதுமைப் பெண்களைக் கண்டால் 'அம்மா' என்றழைப்பது. அம்மா என்று ஒரு நற்பண்போடு, மரியாதையாக அழைக்கும் தமிழர்கள். தன்னை ஈன்றவள் தான் உண்மையான அம்மா என்று மறப்பதில்லை. அதுபோல, பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள், அதற்காகத் தமிழை மறந்து விடாதீர்கள்.

முகனூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 12:22 pm

நல்ல சிந்தனை - தாய் மொழியை போற்றுவோம் மற்ற மொழிகளை கற்போம்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 12:26 pm

இதற்கு பெயர் “மொழிச்சிதைவு”. ஆங்கிலம் படிக்க தெரியாதாம். ஆனால், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் என்று கொடுமையாக ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரே சொல்லில் போட்டுக் கொன்று புதைத்து எழுதினால் படித்து புரிந்து கொள்வார்களாம். ஆங்கிலம் மோகம் தலைவிரித்து ஆடினால், ஆங்கிலத்தில் எழுதி அதையே படித்துக் கொள்ள வேண்டியது தானே? மொழிப்பற்று என்ற தோல் போர்த்தி ஏன் இந்த நாடகம்? கொஞ்சமாவது உணரப் பாருங்கள்.
நல்ல சிந்தனை அண்ணே அப்படியே இந்த பஸ் ஸ்டாப் ஆடோ ஸ்டாண்ட் , வொர்க்ஷாப் போன்றவையும் தமிழாகி பலகாலம் ஆகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 21, 2013 12:30 pm

அருமையான கட்டுரை , தாய்மொழியை போற்றுவோம்

பகிர்வுக்கு நன்றி ராஜு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக