புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
26 Posts - 39%
prajai
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
2 Posts - 3%
Jenila
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
6 Posts - 5%
prajai
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
5 Posts - 4%
Rutu
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
3 Posts - 2%
Jenila
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_m10 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:55 am



இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் முதல்வர்கள் மாநாடு தில்லியில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதற்கு முன்பு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டின்போது தனது பேச்சிற்கு இடையே பிரதமர் குறுக்கிட்டு மணியடித்துப் பேச்சை முடிக்குமாறு தெரிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது நடைபெற்ற மாநாட்டிலும் தான் கலந்து கொள்ளாமல் மூத்த அமைச்சர்களில் ஒருவரான முனுசாமியை அனுப்பி வைத்தார்.

இந்திய அரசியலில் புதிய சிக்கல் ஒன்றினை இந்நிகழ்ச்சி தோற்றுவித்திருக்கிறது. பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப் போகிறது என்பதில் ஐயமில்லை.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் பிரதமர் நேருவின் மறைவிற்குப் பிறகு ஜனநாயக ரீதியில் அடுத்தடுத்து இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவரின் இணையற்ற ராஜதந்திரத்தை உலகமே பாராட்டியது. அப்போது அவர் புதிய ஆனால், எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத முன்மாதிரி ஒன்றினைத் தோற்றுவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் மாநில முதல்வர்களும் பெரும் பங்கு வகிக்க வேண்டும், மாநிலங்கள் இல்லையேல் இந்தியாவும் இல்லை என்ற உண்மையை முதன்முதலாக அனைவருக்கும் உணர்த்தி மாநில முதல்வர்களின் துணையோடு இரண்டு பிரதமர்களை வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டினார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிரதமர் யார் என்பது குறித்து எவ்வித சர்ச்சையும் எழவில்லை. நேரு, வல்லபபாய் படேல், இராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்ற பல மூத்த தலைவர்கள் அந்தப் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தேசத் தந்தையான காந்தியடிகள் தனது வாரிசாக நேருவை அறிவித்ததன் மூலம் முதல் பிரதமர் யார் என்பதை நாட்டிற்குச் சுட்டிக்காட்டிவிட்டார். நேருவைவிட மேலே குறிப்பிடப்பட்ட பல தலைவர்கள் வயதாலும் அனுபவத்தாலும் மூத்தவர்கள்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்பவர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து அந்தப் பதவியை வகித்தால்தான் நிர்வாகத்தில் சிக்கல் இல்லாமலும் வளர்ச்சித் திட்டங்கள் தங்குதடையில்லாமல் நிறைவேறுவதற்கும் வழி ஏற்படும் என்ற காரணத்தினாலும் மற்றும் பல முக்கியக் காரணங்களாலும் மேற்கண்ட தலைவர்களில் இளையவரான நேருவை காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். தொலைநோக்குடன் அவர் மேற்கொண்ட அந்தச் செயலின் விளைவாக 17 ஆண்டுகாலம் நேரு பிரதமராகத் தொடர்ந்து பதவி வகித்து 3 ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி நாடு வளமான பாதையில் அடியெடுத்து வைக்க உதவினார். மற்ற தலைவர்கள் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தனர்.

600-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து மாபெரும் சாதனை புரிந்தார் வல்லபபாய் படேல். அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிகளுக்குப் பெருமை தேடித் தந்தார் ராஜேந்திர பிரசாத். அன்னிய கல்வி முறையில் சிக்குண்டு கிடந்த நாட்டை அதிலிருந்து மீட்டு நமது நாட்டிற்கு ஏற்ற கல்வி முறையைக்கொண்டு வருவதில் ஆசாத் வகித்த பாத்திரம் சிறப்பானது.

அதைப் போலவே மாநிலங்களின் முதல்வர்களாகப் பதவி வகித்த மூத்த தலைவர்களும் நேருவின் பல திட்டங்கள் நிறைவேறப் பேருதவியாக இருந்தார்கள். மொழிவழியாக மாநிலங்கள் அப்போது பிரிக்கப்படவில்லை. பல மொழி மாநிலங்களை உள்ளடக்கிய பெரும் மாகாணங்கள் இருந்தன. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இராஜாஜி, மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பி.சி. ராய். பம்பாய் மாநிலத்தின் முதலமைச்சராக பி.ஜி.கெர்,மத்திய மாகாண முதல்வராக ரவிசங்கர் சுக்லா, ஐக்கிய மாகாண முதலமைச்சராக பண்டித கோவிந்த வல்லப பந்த் போன்ற மூத்த தலைவர்கள் பதவி வகித்தனர். அவர்களின் ஆலோசனைகளை நேரு பெரிதும் மதித்தார்.

நாடு பிரிவினை ஆகும்போது 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள். இவர்களின் மறுவாழ்வு என்பது மாபெரும் பிரச்னையாக வடிவெடுத்தது. ஆனால், மாநில முதல்வர்களின் உதவியுடன் 1950-ஆம் ஆண்டிற்குள் இப்பிரச்னைக்குப் பிரதமர் நேரு தீர்வு கண்டார்.




 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:55 am


இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில் இன்னமும் அகதிகள் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 1950-இல் இந்தியா குடியரசான பிறகு 1952-ஆம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகப் பரிசோதனை நடந்தது. வயது வந்தவர்கள் யாராக இருந்தாலும் படித்தவர்கள் ஆனாலும் படிக்காதவர்கள் ஆனாலும் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டபோது இது வெற்றிபெறுமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்பினார்கள். ஆனால், அந்த ஜனநாயகப் பரிசோதனை மாபெரும் வெற்றிபெற்றது. நாட்டில் ஜனநாயகம் வேரூன்றுவதற்கு அது வழிவகுத்தது. இதற்கெல்லாம் காரணம் மாநில நிர்வாகங்கள் அளித்த பரிபூரண ஒத்துழைப்பு என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

எனவேதான் பிரதமர் நேரு மாநில முதல்வர்களை அடிக்கடி அழைத்து ஆலோசனை நடத்தும் முறையைக் கொண்டுவந்தார். அந்தக் கூட்டங்களில் அந்தந்த மாநிலங்களின் பிரச்னைகளை மட்டுமல்ல தேசத்தின் பொதுவான பிரச்னைகள் குறித்தும் முதல்வர்களின் கருத்தினைப் பிரதமர் நேரு அறிந்துகொண்டார். அதைப்போல சர்வதேச அரங்கில் இந்தியா எடுத்துள்ள பல்வேறு நிலைப்பாடுகள் குறித்தும் மாநில முதல்வர்களுக்கு நேரு விளக்கினார்.

மாநில முதல்வர்களின் கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு சர்வதேச, தேசப் பிரச்னைகள் குறித்து கடிதங்கள் எழுத நேரு தவறவில்லை. வலிமையான மத்திய அரசு அமைய வேண்டும் என்று சொன்னால் வலிமையற்ற மாநிலங்கள் இருக்க வேண்டும் என்று கருதுவது தவறானது என நேரு ஒருமுறை சுட்டிக்காட்டினார்.

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு ஏற்க மறுத்தார். ஆனால், மக்கள் போராட்டங்கள் அதற்கு ஆதரவாக வெடித்த பிறகு ஜனநாயக ரீதியில் அதை ஏற்றுக்கொண்டு மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைக்க அவர் முன்வந்தார். அவரின் இறுதிக் காலத்தில் அந்தக் கடமையையும் அவர் நிறைவேற்றினார்.

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னால் 1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அதற்குப் பொருந்துவதற்கு மறுக்கிறது. பலமான மத்திய அரசு என்ற கோட்பாட்டில் வகுக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அரசிடமே குவித்துள்ளது. ஆனால், நேருவிற்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்றவர்கள் இந்த உண்மையை உணரவில்லை. நேரு அமர்ந்திருந்த பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டதனாலேயே தங்களையும் அவருக்குச் சமமாக மதித்துக்கொள்கிறார்கள்.

மொழிவழியாக நாடு பிரிக்கப்பட்ட பிறகு மொழிவழி மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டாக வேண்டும். மாநிலங்களின் இறைமை துச்சமாக மதிக்கப்படுகிறது. ஒரு நாடு பெற்றிருக்கும் ஆணையிடும் அதிகாரமே இறைமை எனப்படும்.கூட்டாட்சி நாட்டின் இறைமை அதிகாரங்கள் நாட்டில் உள்ள மாநிலங்களில் வாழும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்தியா அரைகுறையான ஒரு கூட்டாட்சி நாடு. இறைமை அதிகாரங்கள் முழுவதும் மத்திய அரசிடமே குவிந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.




 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:56 am


மொழிவழியாக அமைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையானதைச் செய்வதற்குக் கூடுதல் அதிகாரங்களை எதிர்பார்த்துப் போராடுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள். அதை மதிக்க மத்திய அரசு மறுக்கும்போது மத்திய - மாநில மோதல்கள் மூளுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது இடைமறிக்கப்பட்டு தொடர்ந்து பேச விடாமல் தடுக்கப்பட்ட நிகழ்ச்சி மாநிலங்களின் இறைமைக்கு விடப்பட்ட அறைகூவலாகும்.

ஏற்கெனவே அதிக அதிகாரங்கள் கேட்டு பல்வேறு மாநிலங்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றின் மூலம் மாநில அரசுகளுக்கு இறைமை இல்லை என்பது இறுதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் நிலக்கரிச் சுரங்கங்களை கையகப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1957-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் கொண்டுவந்தபோது அதை மாநில அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 1962-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்ந்து அளித்த தீர்ப்பின் மூலம், மாநில அரசுகளுக்கு இறைமை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு மாநில அரசின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பாராவ் மட்டும் அளித்த தனித் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கு இறைமை உண்டு என்று சுட்டிக்காட்டினார்.

1962-ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் } மொழிவழியாக நாடு பிரிக்கப்பட்டது என்ற உண்மையை கருத்தில் எடுத்துக்கொண்டு இப்பிரச்னையை அணுகினால், உச்ச நீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பு தற்போதைய யதார்த்த சூழ்நிலைக்கும் உண்மைக்கும் பொருந்தாது என்பது தெளிவாகும். எனவே இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். மாநிலங்களின் இறைமை ஏற்கப்படா விட்டால் நாட்டின் எதிர்காலம் இருள்சூழ்ந்து விடும் என்பதில் ஐயமில்லை.

நாட்டு மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர்களால் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் தலைவராக இன்றையப் பிரதமர் மன்மோகன் சிங் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவரிடம் உண்மையில் எந்த அதிகாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி அமர்ந்திருக்கிறார். மத்திய அமைச்சர்கள் பிரதமரின் ஆணையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. மாறாக சோனியா காந்தியின் உத்தரவுகளை நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள்.

"2ஜி ஊழல்' போன்ற மிகப்பெரிய ஊழல்களைச் செய்த மத்திய அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து நீக்குவதற்கு மன்மோகன் சிங்கினால் முடியவில்லை. ஊழல் அமைச்சர்களுக்கு யார் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதை நாடு அறியும். ஆனால் நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தது.

இதற்கிடையில் சோனியாவிற்கும் மன்மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவதால் நிர்வாகமும் சீர்கேடடைந்துள்ளது. மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளன.

கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு நம்பகமான ஒரு மாணவனை சட்டாம் பிள்ளையாக நியமித்து தாங்கள் இல்லாத நேரங்களில் பிற மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளச் செய்வார்கள். உண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் வெறும் சட்டாம்பிள்ளையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சொந்த மாநிலமான பஞ்சாபிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலைமையில் உள்ள அவர் பெருவாரியான மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களை அவமதிப்பதும், அடக்கி வைக்க முற்படுவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை உணர வேண்டும்.

கட்டுரையாளர்: தமிழர் தேசிய இயக்கத் தலைவர்.



 பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக