புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
32 Posts - 51%
heezulia
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
74 Posts - 57%
heezulia
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_m10 பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jul 13, 2013 10:24 pm



ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய வீக்கத்திலே உயர் நோக்கத்திலே காக்கத்திறல் கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு'' என்றார் மகாகவி பாரதி.

உலகிலேயே எளியோரும், வலியோரும் ஒரே நிலையில் பாதுகாப்புடன் வாழத் தகுதிவாய்ந்த தர்ம தேசமாக பாரதம் விளங்குவதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதையே விவேகானந்தரும் "உலகுக்கு பாரதம் வழிகாட்டும்' என முன்மொழிந்துசென்றார்.

ஆனால், நமது தேசம் தற்போது சந்தித்துவரும் பிரச்னைகளை ஆராய்ந்தால் நாம் நமது முன்னோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயல்படுகிறோமா என்ற கேள்வியே எழுகிறது.

தமிழகத்தின் வறட்சிப் பகுதியை மத்திய குழு பார்வையிட்டுச் சென்ற நேரத்தில்தான் உத்தரகண்டில் மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து போகிறார்கள்.

நீலகிரியில் மழை வெள்ளத்துக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நேரத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுதந்திரமடைந்து இத்தனை காலமாகியும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூட அனைவரும் சமமாகப் பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், நமது நிர்வாகத் திறனை என்னவென்று சொல்வது?

நாட்டில் ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, சுத்தமாக்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், விவசாயத்துக்கான நீரை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை. ஆனால், நடப்பது என்ன? "தேசிய நீர்க் கொள்கை' எனும் பெயரில் உள்ளாட்சியின் குடிநீர் விநியோகத்தைக் கூட தனியாருக்குத் தாரை வார்க்கத்தானே நமது மத்திய அரசு துடிக்கிறது? இப்படிப்பட்டோருக்கு இயற்கை நீரின் அழிவைத் தடுத்து அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் சிந்தனை எப்படி ஏற்படும்?

ஒவ்வொரு விஷயத்திலும் அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் தனியார்மயத்தை அதிகரித்துவருவது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. குடும்பத் தலைவர் தனது வருவாயில் தனது குழந்தைகள் நலனுக்கு, தானே செலவழித்து மகிழ்வதுதானே அழகு? நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருப்போர், மக்களுக்கான நலத் திட்டத்தை தனியார் பொறுப்பில் செயல்படுத்துவது சரியா என்பதே இப்போதைய கேள்வி.

நாட்டு மக்களுக்கு உணவு, உடை, குடிநீர், வசிப்பிடம் ஆகிய அத்தியாவசியத் தேவையை அரசே வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம். கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்திய மகாத்மா வழிவந்ததாகக் கூறுவோர், கிராமப்புறங்களைக் கூட நகர நாகரீகங்களுக்கு அடிமையாக்கி, வர்த்தக நோக்கில் லாபம் கிடைக்கும் தளங்களாக அல்லவா மாற்றி வருகிறார்கள்? அதன் விளைவே விவசாய நிலங்கள் கூட வீட்டு மனைகளாகின்றன.

உணவையும், இருப்பிடத்தையும் கூட தமது அரசியல் பதவிகளைப் பிடிக்கும் தேர்தல் நேர உத்திகளாகவே அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். அதனால் அரசின் கடமை கூட இலவசங்களாகவே தொடர்கிறது.

நாட்டில் மாதம் மும்மாரிப் (மழை) பெய்து வந்தது; அப்படிப் பெய்த நீரை சேகரிக்க ஏரிகள், கண்மாய்களை அமைப்பது மன்னர்காலத்து அரசின் செயல்பாடாக இருந்துள்ளது. ஆனால், தங்களை சரித்திரப் புருஷர்களாக பாவிக்கும் ஜனநாயகத் தலைவர்களோ, ஏரிகளையும், குளங்களையும்கூட விட்டுவைக்காமல் குடியிருப்புகளாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். கடலில் கால்வாய் அமைக்கப் போராடுவோர், நிலத்தில் நீர் தேங்கிட இடமின்றிச் செய்ததை மறந்துவிட்டனரோ!

நாட்டில் மழை பெய்வதில் மரங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல. மரங்கள் மறைமுகமாக நீரின் சேமிப்புக் கிடங்குகளாகவும் இருந்து வந்துள்ளன. மரங்களிலிருந்து பூமியில் விழும் இலைகள் மண்ணின் மீது படர்ந்து செயற்கையான படலத்தை ஏற்படுத்தும். இப் படலம் அடர்ந்த மலைக் காடுகளில் அரையடிக்கும் மேலாக இருக்கும்.

மழையாக பூமியில் இறங்கும் நீரானது மண்ணிற்குள் பாதியும், மக்கிப் போன இலைகளுக்குள் மீதியும் ஒளிந்திருக்கும். இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் நீர் சிறுகச்சிறுக வெளியேறுவதால் ஓடைகள் உருவாகும். அந்த ஓடைகள் ஒருங்கிணைந்தால் ஆறாகும்.

மழைப் பிரதேசங்களில் பாறைகளுக்கு மேலாக உள்ள மண் எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே நீரைச் சேமிக்கும் தன்மையில் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்த மண்மீது படிந்த இலைப் படலமே நீரைப் பஞ்சுபோல சேமித்து மலைதேசத்து மண்ணைப் பாதுகாக்கும் என்கிறார்கள் தாவரவியல் ஆய்வாளர்கள்.

ஆனால், சமீப காலமாக மலைப் பிரேதசங்களில் தொழில் வளர்ச்சி எனும் பெயரில் மரங்களை வெட்டிவிட்டோம். இதனால் மழைக் காலத்தில் தண்ணீரைத் தாங்கி பூமியைக் காக்கும் இலைப்படலம் இல்லாமலேயே போய்விட்டது. இலைகளுக்குள் தேங்க இடமின்றி மழை நீர் முழுதும் மலை மண்ணின் மீதே தேங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் அதிகப்படியான நீரைத் தேக்கிவைக்க இயலாமல் மண் சரிவு ஏற்படுகிறது. மண் சரியும்போது அதைச் சார்ந்திருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, தவறிழைக்காத மரங்களும் கூட சரிந்துவிடுகின்றன.

மக்கள் நலனுக்காக பெரு நதியின் போக்கை திசை மாற்றுகிறது சீனா. ஆனால் நாமோ, இயற்கை தரும் நீர் வளத்தை மக்கள் நலனுக்காக இணைக்கும் திட்டத்தைக் கூட செயல்படுத்திட யோசிக்கிறோம்.

குடிமக்களாகிய நாம் இயற்கையின் பேரிடரைத் தவிர்க்க நமது சுயநலத்தால் செய்த தவறை உணர்ந்து அதை வருங்காலங்களில் தவிர்க்க முன்வருவது அவசியம். அப்படிச் செய்தாலே "மழை பெய்தால் அழிவு...பொய்த்தால் அவதி...இதுதான் எங்கள் தலைவிதி' என்ற புலம்பல் நிற்கும். இல்லாவிடில், அவலங்கள் தொடர்கதையாகி அது பேரழிவுக்கே வழிவகுக்கும்!
.
Dinamani






நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 10:37 pm

நல்ல பகிர்வு புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jul 13, 2013 10:41 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 
நன்றி 



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக