புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
30 Posts - 65%
heezulia
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
72 Posts - 64%
heezulia
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:21 pm

மேஷம்: உண்மைக்காக உரக்க குரல் கொடுக்கும் நீங்கள், அதர்மத்தை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள்.  உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 5ல் அமர்ந்து ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சுக்கிரன் 6ந் தேதி வரை 6ம் வீட்டில் மறைந்து நிற்பதால் கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

7ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் கணவன்மனைவியுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 19ந் தேதி முதல் 4ல் கேந்திர பலம் பெற்று அமர்வது உங்களின் மனோபலத்தை அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், செவ்வாய் நீசமாகி அமர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை இருக்கும். தூக்கம் குறையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும்.

எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது. சகோதர வகையிலும் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கண்டகச்சனி நடைபெறுவதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். குரு 3ம் வீட்டில் மறைந்து நிற்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! உங்கள் கை ஓங்கும். செல்வாக்கு கூடும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். 7ல் சனி நிற்பதால் பங்குதாரர்களிடையே சிறு பிரச்னைகள் வெடிக்கும். அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சிறு அவமானங்கள் வந்து நீங்கும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். வீண் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும்.  கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக மகசூல் பெருகும். மாறுபட்ட அணுகுமுறையாலும் யதார்த்தமான பேச்சாலும் இழந்ததை எட்டிப்பிடிக்கும் மாதமிது.          

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 19, 20, 21, 29, 30, செப்டம்பர் 1, 5, 6, 7, 8, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்:

கரூர் என்கிற தலத்தில் அருளும் கல்யாண பசுபதீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:22 pm

எதிலும் வித்தியாசத்தை விரும்பும் நீங்கள், புள்ளி விவரங்களுடன் பேசுவதில் வல்லவர்கள். காசு பணத்தைவிட, நேசத்தையும் நிஜத்தையும் காதலிப்பவர்கள். உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் சனியும் ராகுவும் அமர்ந்திருப்பதால் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. தடைப்பட்ட விஷயங்களெல்லாம் உடனடியாக முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வெளிமாநிலத்தவர்கள், வேற்றுநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் ராசிநாதனான சுக்கிரன் தொடர்ந்து பலவீனமாக காணப்படுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

சளித் தொந்தரவு, தொண்டை வலி, ஜனன உறுப்புகளில் இன்பெக்ஷன் போன்றவை ஏற்படக்கூடும். மனைவிக்கு அலைச்சல் அதிகமாகும். அவருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வந்து போகும். உங்களின் யோகாதிபதிகளான சூரியனும் புதனும் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள், ரத்தினங்களும் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய காலி மனையை விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

குரு 2ம் வீட்டிலேயே தொடர்வதால் சாதுர்யமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். செவ்வாய் 3ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களே! அனைத்துப் பாடங்களிலும் முன்னேறுவீர்கள். பேச்சு, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரனும் அமையும். திருமணமும் கூடி வரும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தேர்தலில் வெற்றி உண்டு.

மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். போட்டிகளை முறியடித்து கூடுதல் லாபம் ஈட்டுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிரடியான முன்னேற்றம் உண்டு. பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகைமை நீங்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! நீண்ட நாட்களாக தள்ளிப்போன நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். விவசாயிகளே! மரப் பயிர்கள், கரும்பு மூலமாக லாபம் அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 21, 22, 23, 24, 25, 31, செப்டம்பர் 1, 2, 3, 9, 11, 12, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 17, 18 மற்றும் செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் கலந்து கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:25 pm

மரம், செடி, கொடிகளை நேசிக்கும் நீங்கள், மனித நேயம் அதிகமுள்ளவர்கள். கடந்த ஒன்றரை மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை கோபப்படுத்தி, உங்களுக்கு அலைச்சலையும் மன உளைச்சலையும் தூக்கமின்மையையும் கொடுத்து வந்த செவ்வாய் 19ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் விவாதங்கள் குறையும். உங்கள் ராசிநாதனான புதன் வலுவான வீடுகளில் செல்வதால் தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

காரியத் தடைகள் நீங்கும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீள்வீர்கள். 3ம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் 6ந் தேதி வரை பலவீனமாக நீச்சமாகி காணப்படுவதால் பிள்ளை களால் அலைச்சல், அவர்களின் உயர்கல்வி, திருமணம் குறித்து சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். 7ந் தேதி முதல் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் மகனுக்கு நல்ல வரன் அமையும். மாதத்தின் பிற்பகுதியில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு அமையும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அப்ரூவல் வந்து சேரும்.

5ம் வீட்டிலேயே சனியும் ராகுவும் தொடர்வதால் அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துபோகும். குழம்பி விடாதீர்கள். யோகா, தியானம் செய்வது நல்லது. கேது வலுவாக இருப்பதால் புதியவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியரின் அன்பும் பாராட்டும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். அயல்நாட்டில் பணிபுரியும் வரன் வரவும் வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்கள், மறைமுக எதிரிகள் இவர்களிடமிருந்து விடுபட்டு தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்கனவே செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு புதுத்தொழில் தொடங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும். விவசாயிகளே! பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 18, 24, 25, 26, 27, செப்டம்பர் 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 19, 20 மற்றும் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்:

திருச்சி - முசிறிக்கு அருகேயுள்ள திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாளை தரிசித்து வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:25 pm

எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணம் கொண்டவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு உங்களை பாடாய்படுத்திய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி தன ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பணத் தட்டுப்பாடு ஓரளவு குறையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக உறவினர்களிடம் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த சிறு சிறு பிரச்னைகள் விலகும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். கண், காது, மூக்கிலிருந்த பிரச்னைகள் தீரும்.

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். தொலைக்காட்சி, பத்திரிக்கைகளிலும் உங்களுடைய படைப்புகள் இடம் பெறும். கடந்த ஒன்றரை மாத காலமாக உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்திருந்த பிரபல யோகாதிபதியான செவ்வாய் 19ந் தேதி முதல் ராசியில் அமர்வதால் அலைச்சல் குறையும். வீண் விரயங்கள் நீங்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். 2ம் வீட்டிலேயே குரு மறைந்து கிடப்பதால் பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும்.

சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சனியும் ராகுவும் தொடர்வதால் இனந்தெரியாத மனக்கவலைகள் இருக்கும். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களே! அறிவியல், கணிதப் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! மேற்கல்வி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானதுதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுடைய பேச்சிற்கு மரியாதை கூடும். எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்யோக ஸ்தானத்தில் கேது அமர்ந்து உத்யோக ஸ்தானத்தை சனியும் பார்த்துக் கொண்டிருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களைப்பற்றி குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விவசாயிகளே! பூச்சித் தொல்லை அதிகரிக்கும். தக்க நேரத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தத் தவறாதீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 17, 18, 26, 27, 28, 29 செப்டம்பர் 4, 5, 8, 9, 13, 14, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும்.

பரிகாரம்:

சென்னையை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூரில் அருளும் காளஹஸ்தீஸ்வரரை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:26 pm

நல்ல நிர்வாகத் திறமையும் பரந்த அறிவுத் திறனும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்கள். ராஜ கிரகங்களான சனியும் குருவும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிநாதன் சூரியன் 12ல் மறைந்திருந்ததால் அலைச்சலும் காரியத் தடைகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்ப்புகளும் இருந்ததே! ஆனால், தற்சமயம் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எளிதாக எதிலும் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்யம், அழகு கூடும்.

வெளிவட்டாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கோபங்கள் குறையும்.
புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் மதிப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு, மனை அமையும். ஆனால், 19ந் தேதி முதல் உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 12ம் வீட்டில் நீச்சம் பெற்று அமர்வதால் எதிர்பாராத செலவுகளாலும் திடீர் பயணங்களாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதர, சகோதரிகள் தன்னை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

உறவு வகையில் எச்சரிக்கையாகப் பழகுங்கள். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆசிரியர்கள் பாராட்டும்படி அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. நேர்முகத் தேர்வு முடிந்து அப்பாயிண்மென்ட் ஆர்டர் வரும். அரசியல்வாதிகளே! அனைத்துக்கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். ராகு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் தைரியமாக முதலீடு செய்யலாம். கடையை மாற்றுவது, விரிவுபடுத்துவது உங்கள் ஆசைப்படி நிறைவேறும்.

எரிபொருள் வகைகள், உணவு, கட்டிட உதிரி பாகங்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். இடமாற்றமும் சாதகமாகும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். திரையிடாமல் தடைபட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். மகசூல் கூடும். வற்றிய கிணற்றில் நீர் சுரக்கும். திடீர் திருப்பங்களும் யோகங்களும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 19, 20, 21, 22, 29, 30, செப்டம்பர் 1, 8, 9, 10, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 23, 24, 25ந் தேதி நண்பகல் 12 மணி வரை தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.

பரிகாரம்:

கும்பகோணம் - மீன்சுருட்டி பாதையில் அணைக்கரைக்கு அருகேயுள்ள கோடாலி கருப்பூர் எனும் தலத்தில் அருளும் சொக்கநாதரை தரிசியுங்கள். தந்தையை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:27 pm

எறும்புபோல் அயராது உழைத்து தேனீ போல் சேமிக்கும் இயல்புடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 19ந் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு, மனை விற்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். புறநகரிலாவது ஏதேனும் ப்ளாட் வாங்கி விட வேண்டுமென்று யோசிப்பீர்கள். அந்த ஆசை நிறைவேறும்.

சூரியன் 12ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தவிர்க்க முடியாத அத்யாவசியச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப்போய் கொண்டிருந்த கிரகப் பிரவேசம் கோலாகலமாக முடியும். உங்கள் ராசிநாதனான புதன் 1ந் தேதி வரை 12ல் மறைந்து கிடப்பதால் வேலைச்சுமை இருக்கும். 2ந் தேதி முதல் புதன் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்வதால் நிம்மதி கூடும். காது, தொண்டை வலி குறையும். ஏழரைச் சனியின் இறுதிப் பகுதியான பாதச்சனி நடைபெறுவதால் சாலைகளை கடக்கும் போதும் வாகனத்தை இயக்கும்போதும் கவனம் தேவை.

மாணவர்களே! விடைகளை பலமுறை எழுதிப் பாருங்கள். விளையாடும்போது கவனம் தேவை. கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கும். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை அமைய வில்லை என்றாலும் ஓரளவு சம்பளம் தரக் கூடிய வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 2ந் தேதி முதல் நீசபங்க ராஜயோகம் அடைவதாலும், 7ந் தேதி முதல் ஆட்சிபெற்று அமர்வதாலும் மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும்.

லாபம் ரெட்டிப்பாகும். 10ல் குரு அமர்ந்திருப்பதால் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையென அடிக்கடி ஆதங்கப்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களும் உங்களுடைய பெயரை பரிந்துரை செய்வார்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையை விட்டு விட்டு நவீன யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டப்பாருங்கள். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 18, 21, 22, 23, 24, 31, செப்டம்பர் 1, 2, 3, 5, 9, 11, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 25ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பேச்சால் பிரச்னைகள் வந்து போகும்.

பரிகாரம்:

நெல்லை மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அருளும் வைகுண்ட நாதனையும் வைகுண்ட நாயகியையும் தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:28 pm

எல்லையில்லா அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் 6ந் தேதி வரை 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வந்துபோகும். 7ந் தேதி முதல் ராசிநாதனான சுக்கிரன், உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் அழகும் இளமையும் கூடும். பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கும்.

9ம் வீட்டிலேயே கடந்த ஒன்றரை மாதங்களாக உட்கார்ந்து கொண்டு சேமிப்புகளை கரைத்த செவ்வாய், 19ம் தேதி முதல் 10ல் நுழைவதால் செல்வம் சேரும். மனைவி வழியில் நன்மை உண்டு. எதிர்பார்த்த விலைக்கு உங்கள் வீட்டு, மனையை விற்று விட்டு வேறு இடத்தில் வீடு அல்லது மனை வாங்கும் அமைப்பு உருவாகும். சூரியன் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாணவர்களே! ஜென்மச் சனி நடைபெறுவதால் கூடாப் பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்த்து விடுங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள்.

கன்னிப் பெண்களே! ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். குரு 9ம் வீட்டில் நிற்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது முதலீடு செய்வீர்கள். தள்ளுபடி அறிவிப்புகள் மூலம் விற்பனை கூடும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வியாபார ரகசியங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். புது சலுகைகளும் கிடைக்கும். புது வேலையும் கிடைக்கும்.

சம்பள பாக்கியும் கைக்கு வரும். புதுத் தொழில் தொடங்கும் யோசனை வரும். ஆனால், உத்யோகத்தை முழுமையாக விட்டு விட்டு தொழில் தொடங்காமல் வேலையில் இருந்துக் கொண்டே கமிஷன் வகைகளில் சம்பாதிக்க முற்படுவீர்கள். கலைத்துறையினரே! சின்ன வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்தப் பாருங்கள். சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். விவசாயிகளே! மகசூல் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். தொலைநோக்குச் சிந்தனையாலும் புதிய அணுகுமுறையாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 17, 18, 23, 24, 25, செப்டம்பர் 2, 3, 4, 5, 11, 12, 13, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 8 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

கோவில்பட்டி சொர்ணமலை வேல் வடிவில் அருளும் முருகனை தரிசியுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:28 pm

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். தந்தைவழி சொத்துகளைப் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டு. வீண் விவாதங்கள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் எந்த வேலையைத் தொட்டாலும் தாமதமாகித் தான் முடிவடையும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் இருவரும் கலந்து பேசி முடிவுகள் எடுப்பது நல்லது. உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 8ல் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். திடீர் பயணங்களும் செலவுகளும் இருக்கும்.

புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களே! விளையாட்டு, கலைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! இயற்கை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேது வலுவாக இருப்பதால் வியாபாரம் தழைக்கும். பற்று வரவு உயரும். லாபம் குவியும். பங்குதாரர்கள் மதிப்பார்கள். வேலையாட்களிடம் கோபப்படாதீர்கள். உத்யோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மகிழ்ச்சி உண்டு.

தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு புது வேலையும் அமையும். சூரியன் வலுவாக இருப்பதால் மூத்த அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். பழைய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவசாயிகளே! எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். அக்கம்-பக்கம் நிலத்தாருடன் இருந்து வந்த பகை உணர்வு மாறும். ஆளுமைத் திறனும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 17, 19, 20, 21, 25, 26, 27, 28, செப்டம்பர் 5, 7, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 30ந் தேதி காலை 8 மணி முதல் 31 மற்றும் செப்டம்பர் 1ந் தேதி இரவு 7:30 மணி வரை எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

விருத்தாசலம் அருகேயுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை தரிசியுங்கள். அருகிலுள்ள கோயிலில் வேப்பங்கன்று நட்டு பராமரியுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:29 pm

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்படாதவர்கள். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதாலும் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருப்பதாலும் அழகும் இளமையும் கூடும். உங்களின் நிர்வாகத் திறனும் கூடும். தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 19ந் தேதி முதல் 8ல் சென்று மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் உண்டாகும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிய வாய்ப்பிருக்கிறது.

யோகாதிபதி செவ்வாய் 8ல் மறைவதால் குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் வீட்டில் களவு போகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டு செல்வது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை தலை தூக்கும். கடந்த ஒரு மாதகாலமாக 8ல் மறைந்திருந்த சூரியன் இப்போது 9ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி ஆதரவாகப் பேசுவார். உங்களின் புது திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பார். கௌரவப் பதவிகளும் தேடி வரும்.

மாணவர்களே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். சனியும் ராகுவும் லாப வீட்டிலேயே நிற்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். 8ல் செவ்வாய் மறைந்திருப்பதால் புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம்.

புதியவர்களின் ஆலோசனைப்படி முதலீடுகளும் செய்ய வேண்டாம். செல்வாக்குள்ள நபரை பங்குதாரராக சேர்த்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பதவி உயர்விற்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். கரும்பு மற்றும் மரப்பயிர்கள் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 19, 20, 21, 22, 29, 30, செப்டம்பர் 7, 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 1ந் தேதி இரவு 7:30 மணி முதல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும்.

பரிகாரம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலுள்ள தசாவதார சந்நதிகளை தரிசித்துவிட்டு வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 9:30 pm

ஊராரின் தூற்றல்களுக்கு செவி சாய்க்காது வாழ் வின் உயரத்தை நோக்கிச் செல்லும் குணமுடைய நீங்கள், தடைகளையும் படிக்கட்டுகளாக நினைத்து பயணிப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் மாதத்தின் பிற்பகுதியில் வலுவடைவதால் முற்பகுதி போராட்டமாகத்தான் இருக்கும். 19ந் தேதி முதல் செவ்வாயும் 7ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் வந்து நீங்கும். மைத்துனர் வகையில் அலைச்சல் இருக்கும். செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். 8ல் சூரியன் அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். 2ந் தேதி முதல் புதன் 9ல் உச்சம் பெற்று அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். 7ந் தேதி முதல் சுக்கிரன் 10ல் ஆட்சி பெற்று அமர்வதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.

ஷேர் மூலம் பணம் வரும். 6ம் வீட்டில் குரு நிற்பதால் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். புதிதாக அறிமுகமாகும் நண்பர்கள் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
மாணவர்களே! அதிகாலையில் படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கன்னிப் பெண் களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருவதிலும் குறுக்கே நிற்க வேண்டாம். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வேலைப்பளு கூடும். மூத்த அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண்பழிச் சொல்லிலிருந்து விடுபடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 22, 23, 24, 26, 31, செப்டம்பர் 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 4, 5 மற்றும் 6ந் தேதி மாலை 3 மணி வரை வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்:

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தை அடுத்துள்ள அம்மையகரத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திலுள்ள தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். பௌர்ணமியன்று அன்னதானம் செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக