புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
78 Posts - 60%
heezulia
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
120 Posts - 61%
heezulia
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_m10யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 2:24 pm

முதன்முதலாக யானைகள் ஆராய்ச்சிக்காக காட்டுக்குச் சென்றார் அறிவழகன். துணைக்கு ஒரு வழிகாட்டி, அவருக்கு காடுகள் குறித்து மிக நன்றாகத் தெரியும். முதல்முறையாக யானைகளைக் கணக்கெடுக்கச் செல்கிறோம் என்கிற ஆர்வமும், யானைகளைப் படம் பிடிக்கப்போகிறோம் என்கிற த்ரில்லுமாக அன்றையப் பொழுது விடிந்தது.

வெறும் வயிற்றில் ஒரு டீயை மட்டும் குடித்துவிட்டு கையில் ஒரு பாட்டில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு உற்சாகத்தோடு காட்டுக்குக் கிளம்பினார் அறிவழகன்.

கூட்டம் கூட்டமாக நகரும் யானைகள். ஆடி அசைந்து அவை செல்லச் செல்ல ஒவ்வொன்றாக தன்னுடைய நீண்ட லென்ஸ்கள் கொண்ட கேமராவில் படம் பிடிக்க வேண்டும். அதுதான் அறிவழகனின் பணி. கூடவே வழிகாட்டி.

ஒரு யானைக் கூட்டத்தைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே யானைக் கூட்டத்திலிருந்து மத்திய வயது (பத்து அல்லது பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க) யானை ஒன்று இவர்களைக் கண்டு விரட்டத் தொடங்கியது. பதறிப் போனார் அறிவழகன். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு நப்பாசை... விரட்டும் யானையை தன் கேமராவால் படம் பிடிக்க முயல்கிறார். பிடறிமேல் ஓர் அடி பொத்தென்று விழுகிறது. ‘ஓடுயா... யானை கிட்ட சிக்கிச் சாகணுமா?’ என்று வழிகாட்டி திட்டிக்கொண்டு ஓட்டமெடுக்க...

வழிகாட்டியின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். யானை விடாமல் விரட்டியது. ஒற்றை யானை விரட்ட விரட்ட... புதர்கள் மண்டிய காட்டுப் பகுதியில் ஓடி ஓடி ஓந்து, ஒரு சரிவான பள்ளத்தாக்கில் இறங்கி ஒளிந்துகொண்டனர் இருவரும். பின்னாலேயே வந்த யானை நின்றுவிட்டது. அதனால், இந்த இரண்டு மனிதர்களையும் மோப்பம் பிடிக்க முடியவில்லை.

தன்னுடைய தும்பிக்கையால் வானத்தைச் சுற்றி ஒரு துழாவு துழாவிவிட்டு வெறுத்துப்போய் ஒரு பிளிறலைப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டது.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து வெளியேற எத்தனித்தால்... சுற்றிலும் வெவ்வேறு யானைக் கூட்டங்கள். ஒற்றை யானை கொடுத்த பிளிறல் கதறலைக் கேட்டு கூடியிருக்கின்றன.

எல்லாமே ஐம்பது அறுபது மீட்டர் இடைவெளியில் காத்திருக்கின்றன. கண்ணில் சிக்கினால் அதோகதிதான்! என்னசெய்வது? மீண்டும் ஓட்டம். அந்தக் கூட்டமான யானைகளிடமிருந்து தப்பி, காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து மூச்சுவிட்டபின்... அப்பாடா... தப்பிச்சிட்டோம்ஜி" என்று வழிகாட்டியிடம் புன்னகைத்தார் அறிவழகன்.

ஆனால், அந்தப் புன்னகை அதிக நேரம் நீடிக்கவில்லை. பத்து மரங்களுக்கு அப்பால் முதலில் துரத்திய அந்த ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அதுவும் மெதுமெதுவாக அவர்களை நோக்கி வர... அறிவழகன் என்ன செய்வதென்று தெரியாமல் ஓட... பின்னாலேயே வழிகாட்டியும் ஓட... இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓட ஆரம்பித்துவிட்டனர். அறிவழகன் ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து ஒளிந்துகொண்டார்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. வானம் இருட்டவும் தொடங்கிவிட்டது. பசித்தது. காலையில் சாப்பிட்ட ஒரு டீதான். தண்ணீரும் இல்லை. மெதுவாக வழிகாட்டிக்குக் குரல் கொடுத்தார் அறிவழகன்.

அடர்ந்த காட்டிலிருந்து பதிலேதும் இல்லை. ஆனாலும் முயற்சிகளைக் கைவிடாமல் தொடர்ந்து வழிகாட்டியை அழைத்து அழைத்து... அவருக்கு எப்படியோ குரல் கேட்டு திரும்பி வந்தபின்தான் அறிவழகனுக்கு உயிரே வந்ததாம்.

யானைகள் ஆராய்ச்சிக்கென வந்த முதல்நாளே இப்படி ஓர் அனுபவம் கிடைத்தால் நாம் என்ன செய்வோம்? ராவோடு ராவாக மூட்டை முடிச்சுகளோடு ஊரைப் பார்க்கப் போய்விடுவோம்தானே? ஆனால், அறிவழகன் தன்னை சரிசெய்துகொள்ள தீர்மானித்தார். யானைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அவற்றை சந்திக்கும்போதோ விரட்டும்போதோ என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முதலில் கற்றுக்கொள்ள தீர்மானித்தார்.

இதோ இப்போது காட்டு யானைகள் ஆராய்ச்சியில் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார். அவரது முதல்நாள் அனுபவங்கள் நமக்கு சிலிர்ப்பூட்டிக் கொண்டிருக்க... அறிவழகனோ சிரித்தபடியே இருக்கிறார்.

90-களின் துவக்கத்தில் உயிரியலில் பட்டப்படிப்பை முடித்தவர், தொடர்ந்து காட்டுயிர்களின் உயிரியல் படிப்பில் தன்னுடைய பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கிற தெங்குமரகடா பகுதியில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை வேட்டையாடுவது குறித்த காரணிகளை ஆராயும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் இவருடைய ஆராய்ச்சிகளைப் பார்த்து பெங்களூருவின் சூழலியல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் சுகுமாரன், யானைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தார். அதற்குப் பிறகு எப்போதும் யானைகளால் நிறைந்துவிட்டது அறிவழகனின் வாழ்க்கை.

யானைகள்தான் நம் காடுகளில் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் ஆதார உயிரினமாக இருக்கிறது. அவற்றின் பாதைகள் மற்ற விலங்குகளுக்கான பாதைகளாக உள்ளன. தண்ணீரைக் கண்டுபிடிப்பதிலும் இயற்கையான தண்ணீர் ஊற்றுகளைத் தோண்டி உருவாக்குவதிலும் யானைகள் தேர்ந்தவை. இது மற்ற விலங்குகளுக்கும் பயன்படும். அவற்றின் சாணம் ஆயிரக்கணக்கான சின்னச் சின்ன உயிரினங்களுக்கு உணவாகும். இப்படி இன்னும் நிறைய உதவிகளை செய்வதின் மூலம் நம்முடைய காட்டுயிர்களின் உற்றதோழனாக யானைகள் விளங்குகின்றன, அவற்றின் அழிவு ஒட்டுமொத்தக் காட்டின் அழிவாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்" என்கிறார் அறிவழகன்.

மேலும் யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது, அபூர்வமாகத்தான் இரண்டு யானைகள் இணை சேர்வதை நம்மால் பார்க்க முடியும். அப்படி ஒரு முறை பார்க்கக் கிடைத்தது. யானைகள் இரண்டும் இணை சேர்ந்து முடித்தபின் ஆண் யானை அகன்றுவிட, பெண் யானையை அக்கூட்டத்தின் மற்ற பெண் யானைகள் சூழ்ந்துகொண்டு தடவிக் கொடுத்ததையும் கொஞ்சி விளையாடியதையும் பார்க்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அதோடு பெண் யானைகள் கர்ப்பம் தரித்து பிரசவமாகும்போது, மற்ற பெண் யானைகள் கர்ப்பமான யானைக்கு உதவுவதைப் பார்க்கலாம்" என்று யானைகளைப் பற்றி சிலாகிக்கிறார்.

தற்போது அரசின் வனத்துறையில் ஆலோசகராக இருக்கிறார் அறிவழகன். காட்டுயிர் கணக்கெடுப்பு தொடங்கி பல்வேறு விதங்களில் வனங்களைக் காப்பதில் பங்காற்றி வருகிறார். காட்டுயிர்களைப் பாதுகாப்பதென்பது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட விலங்கினத்தை குறிவைத்துக் காப்பதென்பது ஒட்டுமொத்தக் காட்டையும் மீட்கிற சமாச்சாரம்.

காஜூராங்காவில் காண்டாமிருகங்களைக் காப்பதின் மூலம் யானைகள் காப்பாற்றப்பட்டன. இங்கே களக்காடு முண்டந்துறையில் புலிகளைக் காப்பதின் மூலம் யானைகள் காப்பாற்றப்பட்டன. இயற்கையின் அமைப்பே அப்படித்தானே. ஒன்று மகிழ்ச்சியாக வாழும்போது அதைப் பிடித்துக்கொண்டு மேலும் பல உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழும்! நம்முடைய பயோ டைவர்சிட்டி அப்படித்தான் இயங்குகின்றது" என்று புன்னகைக்கிறார்.

சரி... யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து நாசம் விளைவிக்கின்றனவே, அதற்கு என்ன பண்ணலாம் என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

யானைகள் காட்டுக்குள் உணவு தேடி கூட்டம் கூட்டமாக 700 முதல் 800 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் சுற்றக் கூடியவை, அப்படி இயற்கையாக அமைந்த வாழிடங்கள் அழிந்துபோகும்போதுதான் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான பிரச்சினை ஆரம்பமாகிறது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை நம்மால் முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால், கணிசமாகக் குறைக்கலாம்.

யானைகள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க வருவதில்லை. அது காலங்காலமாக கடந்து செல்கிற அதன் இயற்கையான வழித்தடங்களில்தான் செல்கின்றன என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக தனியார் நிறுவனங்கள்தான் பணம் சம்பாதிப்பதற்காக அவற்றின் வழித்தடங்களில் பல்வேறு நிறுவனங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கி அவற்றின் வழித்தடத்தை மாற்றியமைக்கின்றனர். இதனால்தான் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் தொடர்ந்து மக்கள் வாழும் பகுதிக்குள் இவை படையெடுக்க நேர்கிறது. யானையின் வழித்தடங்களில் உள்ள நிறுவனங்களை அகற்றுவதைத்தவிர வேறு உபாயங்களே கிடையாது இதற்கு!" என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் அறிவழகன்.

இந்த முயற்சிகளை அரசு எடுக்கும் பட்சத்தில் நிச்சயம் யானைகளிடமிருந்து மனிதர்களையும் மனிதர்களிடமிருந்து யானைகளையும் காப்பாற்ற முடியும்" என்று உறுதியாகக் கூறுகிறார், இந்த யானைகளின் நண்பன்.

அதிஷா-நன்றி-புதிய தலைமுறை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக