புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_c10அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_m10அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_c10அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_m10அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 12:45 pm

பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா, அந்த கட்சி துவங்கியதிலிருந்தே உறுப்பினர் ஆகி, பல்வேறு மாநில பொறுப்புகளை வகித்ததுடன், கட்சியை வளர்த்ததிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். பட்டய கணக்கரான இவர், பல மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர். எதிர்க்கட்சிகளுக்கு ஆணித்தரமாக பதிலளிக்கும், பேச்சாற்றல் மிக்க மிகச்சில பா.ஜ., தலைவர்களில் ஒருவர். வாஜ்பாய், அத்வானி, மோடி என, யார் தமிழகம் வந்தாலும், மேடையில் மொழிபெயர்ப்பாளர் இவரே. தேர்தலில் "பணம் விளையாடும்' என, எதிர்பார்க்கப்படும் சிவகங்கை தொகுதியில், கட்சி மற்றும் கூட்டணிகளின் பலத்தை நம்பி, களம் இறங்கியுள்ள எச்.ராஜா, "தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி:

நிதி அமைச்சர் சிதம்பரம் மகன், முதன் முதலாய் களம் காணும் சிவகங்கையில், உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?

என் வெற்றி உறுதி. முதல் காரணம், நாடு முழுவதும் உள்ள பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவான அலை. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் கூட, மோடி பிரதமராக வேண்டும் என, இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்தியில் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்தும், சிதம்பரமும், அவரது காங்., கட்சியும் தொகுதிக்கு எந்தவொரு நன்மையும் செய்யாதது இரண்டாவது காரணம். சிதம்பரம் மீதான கோபம், எனக்கு ஆதரவாக மாறியுள்ளது. பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஒரு முறை எம்.எல்.ஏ., ஆகவும் இருந்துள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தி உள்ளேன். மக்களுக்கு நன்றாக  அறிமுகமானவன் என்பது, என் "பிளஸ் பாயின்ட்'.

நாடு முழுவதும் பா.ஜ.,விற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை உள்ளதா? அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு எப்படி உள்ளது?

தமிழகத்தில் முதலில், அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு, கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஏற்கனவே, பா.ஜ., கூட்டணிக்கு இரண்டு இடங்கள் மட்டும் கிடைக்கும் என்றனர். தற்போது, எட்டு கிடைக்கும்
என்கின்றனர். என்னை பொறுத்தவரையில், மோடி அலையால், தமிழகத்தில் குறைந்தபட்சம் 20 இடங்களை பா.ஜ., கூட்டணி பிடிக்கும். மக்கள், மவுனப்புரட்சி மூலம் பா.ஜ.,விற்கு ஆதரவு கொடுப்பர்.
நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளை, பணம் கொடுத்து மாற்ற முடியாது.

பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என, கூறப்படுகிறதே?

தலைவர்களுக்குள் எந்த பூசலும் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக பிரசாரத்தில் உள்ளனர்.

தேசிய கட்சியான பா.ஜ., தமிழகத்தில் எட்டு தொகுதிகளில் மட்டும் போட்டி இடுவது வருத்தமளிக்கவில்லையா?

1967க்கு பிறகு, தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் உள்ளன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, இந்த கூட்டணி வராது என்ற எண்ணம் இருந்தது. இந்த தேர்தலில், விட்டுக் கொடுத்தாவது கூட்டணி அமைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதிக தொகுதிகளில் நிற்காவிட்டாலும் கூட, திராவிட கட்சிகளுக்கு மாற்று அணி வர வேண்டும் என, முடிவு செய்தபடி, எட்டு தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளில், பா.ஜ., சின்னத்தில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

அப்படி என்றால் 10 தொகுதி. 40 தொகுதிகளில் போட்டியிட்டு, எட்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதை விட, எட்டில் போட்டியிட்டு, எட்டிலும் வெற்றி பெறுவது நல்லது இல்லையா?

தேர்தலுக்கு பிறகு, பா.ஜ.,வை அ.தி.மு.க., ஆதரிக்கும் என, தகவல்கள் வெளியாகிறதே...

தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும். 300 இடங்களை கைப்பற்றும். எனவே, பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி என்ற கேள்வி எழாது. மத்தியில் ஆட்சி அமைக்க யார் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது.

பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கு பதில், மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படுகிறதே...

பா.ஜ., தான், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மோடிக்கு நல்ல பெயர் உள்ளது. இளைஞர்கள், அவர் பிரதமராக வேண்டும் என, பேரார்வத்தோடு உள்ளனர். மோடி பிரதமராக ஓட்டளிக்குமாறு, பெற்றோர்களை கூட, இளைஞர்கள் வலியுறுத்தும் நிலை உள்ளது. எனவே, அவரை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதில் தவறில்லை.

உங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள், மாற்று கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை என, கூறப்படுகிறதே...

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அனைத்து தொகுதிகளுக்கும் சென்று வருகிறார். தமிழகத்தில் பிரசாரத்திற்கு வரும் மோடி, கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார். பா.ம.க., ராமதாஸ் தே.மு.தி.க., வேட்பாளர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். திருமணம் என்ற பேச்சு எழும்போது, சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் பேசி முடித்த பிறகு, திருமணத்தை நன்றாக நடத்துவதில் தான் அனைவரின் கவனமும் இருக்கும். அதுபோல தான், தேர்தல் வெற்றியை மனதில் வைத்து, கூட்டணி தலைவர்கள் தற்போது இணக்கமாக செயல்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கி இருப்பதற்கான காரணம் என்ன?

கடந்த, 25 ஆண்டுகளாக, சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக இருக்கிறார். ஒருமுறை, அவரது
கட்சியை சேர்ந்த ஒருவர் எம்.பி.,யாக இருந்துள்ளார். 1984 முதல் 2014 வரை சிதம்பரம் எம்.பி., மற்றும் அமைச்சராக இருக்கிறார். மாவட்டங்களின் நிலை குறித்து மத்திய அரசு வகைப்பாடு செய்ததில், 1984ல் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தன. 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்த மாவட்டங்கள் அதேநிலையில் தான் உள்ளன. தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, சிதம்பரம் எண்ணியதே இல்லை. மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம், திருச்சியில் ஐந்து ரயில்வே மேம்பாலங்களை கொண்டு வந்தார். அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமாரிடம், "என் துறை சார்பில் உங்கள் தொகுதிக்கு திட்டங்கள் செய்து கொடுக்கிறேன்.

என் தொகுதிக்கு, ரயில்வே மேம்பாலங்களை கொண்டு வாருங்கள்' என கேட்டு, பெற்றார். இப்படி, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், ஏதாவது கேட்டுபெற்றாரா?

ஒன்றுபட்ட ராமநாதபுரத்தில் இருந்து, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள், 1984ல் உதயமாயின. இன்று, விருதுநகர் தொழில்ரீதியாக முன்னேறி உள்ளது. ஆனால், சிவகங்கையில் 25 ஆண்டுகளாக எம்.பி.,யாக உள்ள சிதம்பரம், ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்தி உள்ளாரா? தொகுதியை மேம்படுத்தும் எண்ணம் அவருக்கு மனதளவில் கூட இல்லை. அவர் எம்.பி., ஆவதற்கு முன்பு இருந்த தொழிற்சாலைகளும், மூடப்பட்டு விட்டன. அந்த தொழிற்சாலைகளை காப்பாற்றக் கூட, அவர் முன்வரவில்லை.

இந்த தேர்தலில் சிதம்பரம் போட்டியிடாமல், மகனை நிறுத்தியுள்ளாரே...

தோல்வி பயம் தான் காரணம். முதலில் அவருக்கு, மகனை நிறுத்தும் எண்ணமும் இல்லை. ஆனால், இங்கு, சுதர்சன நாச்சியப்பன், அவரது மகனை நிறுத்தி விடக் கூடும் என்பதால், இவர், தன் மகனை நிறுத்தி உள்ளார். அடுத்துவரும் தேர்தல்களில் கூட்டணி அமைந்து, இந்த தொகுதி வேறு யாருக்கும் போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில், இந்தமுறை தோற்றாலும் பரவாயில்லை என, போட்டியிட வைக்கிறார். அவர் தோல்வியுறுவது நிச்சயம். காங்.,க்கு நான்காவது இடம் தான் கிடைக்கும்.

ஆடிட்டரான நீங்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம் என, கருதுகிறீர்கள்?

கடந்த, 2004ல் பா.ஜ., ஆட்சியின் போது, அன்னிய செலாவணி கையிருப்பு 116 பில்லியன் டாலர்
(6.96 லட்சம் கோடி ரூபாய்). வெளிநாட்டு கடன் மதிப்பு 112 பில்லியன் டாலர் (6.72 லட்சம் கோடி ரூபாய்). ஆனால், காங்., ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, அன்னிய செலாவணி கையிருப்பு 262 பில்லியன் டாலராக (15.72 லட்சம் கோடி ரூபாய்) இருக்க, வெளிநாட்டு கடன் மதிப்பு 340 பில்லியன் டாலராக (20.40 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து விட்டது. அதாவது, கையிருப்பை விட கடன் தொகை அதிகம். அப்படிப்பட்ட நிதி நிர்வாகம்.அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் தான், இந்திய தொழில் துறையும் சீரழிந்தது. இந்த கவலைக்கிடமான நிலைக்கும், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கும், சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது.

தேர்தலுக்கு பிறகு பா.ஜ.,வுடன் கருணாநிதி கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக மார்க்சிஸ்ட் செயலர் கூறியுள்ளாரே...

இன்னமும் முதல்வர் ஜெயலலிதாவிடம் "நல்லபெயர்' பெற வேண்டும் என, கருதி, கருணாநிதியை தாக்குகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பொய்யான வாக்குறுதிகளை பா.ஜ., அள்ளி வீசுவதாக சோனியா குற்றம் சாட்டியுள்ளாரே... சோனியா கூறியிருப்பது நகைப்புக்குரியது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அந்த 10 ஆண்டுகளில், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்ததாக கூறுகிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என, காங்., தற்போது அறிவித்துள்ளது. இது சாத்தியமா? இதிலிருந்து, வேலைவாய்ப்பை அவர்கள் கொடுக்காதது தெரிகிறது. அப்போது, யார் பொய்யான வாக்குறுதி தருகிறார்கள் என, மக்கள் முடிவு செய்யட்டும்.

வெற்றி பெற்றால், தொகுதிக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

காரைக்குடி - மேலூர் - மதுரைக்கு அகல ரயில் பாதை அமைக்கப்படும்
சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் கொண்டு வரப்படும்
நிலத்தடி நீர் வளம் மிகுந்த சிவகங்கை மாவட்டத்தில், தரிசு நில மேம்பாட்டு திட்டங்கள் மூலம், தோட்டப்பயிர்கள் பயிரிட்டு, விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்யப்படும்.
கிராபைட் தொழிற்சாலை விரைந்து செயல்படுத்தப்படும். துணை தொழில்களும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்

காரைக்குடியில் மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி துவக்கப்படும்

கிராபைட் தொழிற்சாலை அமையாததற்கு, மாநில அரசு தான் காரணம் என, சிதம்பரம் கூறுகிறாரே... 

இப்படி கூறுவது அவருக்கு வாடிக்கையானது.  மாநில அரசை வலியுறுத்தி, அவர் கொண்டு வந்திருக்கலாமே.

மோடி, மதவாதி என செய்யப்படும் பிரசாரம் குறித்து...

குஜராத் மாநிலம் சலையா நகராட்சியில், மொத்தமுள்ள 28 சீட்டுகளில் 24 இடங்களில் பா.ஜ., சார்பில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். நான்கு இடங்களில் இந்துக்களும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த பகுதி, முழுக்க முழுக்க இஸ்லாமியர் வாழும் பகுதி. இப்படியும் சொல்லி புரியவில்லை என்றால், அவர்கள் தான் மதவாதிகள்.

காங்., துணை தலைவர் ராகுல், இளைஞர்களின் "நம்பிக்கை நட்சத்திரம்' என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...

எம்.பி.,யாக இருக்கும் ராகுல், இளைஞர்கள் நலனுக்காக இதுவரை, லோக்சபாவில் ஒருமுறை கூட வாயை திறக்கவில்லை. இளைஞர்களை பாதிக்கும் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் குறித்து இதுவரை, அவர் கருத்து சொல்லவில்லை. கடந்த 10 நாட்களாக, பிரசாரத்தில் ராகுல் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படும்படியான செய்திகள் வெளியாகின்றன. நாட்டை பற்றியும், நாட்டு பிரச்னைகளை பற்றியும் அனுமானம் கூட அவருக்கு கிடையாது.

காவிரி பிரச்னை குறித்து, பா.ஜ., வாய் திறக்கவில்லையே...

கடந்த, 2004ல் நதிநீர் இணைப்பு சாத்தியம் என, நிபுணர் சுரேஷ்பிரபு குழு பரிந்துரை செய்தது. அதன்படி 2004 ஆக., 15ல், 30 தேசிய நதிகள் இணைக்கப்படும் என, பா.ஜ., அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான அரசு, நர்மதை, சபர்மதி நதிகளை இணைத்தது. இதனுடன், வற்றிப்போன 17 நதிகளையும் இணைத்ததால், அங்கு நீர் பாசன பிரச்னை எழவேயில்லை. நான்கு வழிச்சாலை திட்டம் போல, மோடி பிரதமர் ஆனால், நதிநீர் இணைப்பு திட்டம் கட்டாயமாக செயல்படுத்தப்படும். அப்போது தமிழகத்தில் காவிரி பிரச்னை தீர்க்கப்படும், தண்ணீர் பஞ்சமும் தீரும்!

#எச்.ராஜா #பா.ஜ.க #அதிமுக #மோடி

[thanks]தினமலர் [/thanks]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 14, 2014 1:17 pm

மோடி, மதவாதி என செய்யப்படும் பிரசாரம் குறித்து...

குஜராத் மாநிலம் சலையா நகராட்சியில், மொத்தமுள்ள 28 சீட்டுகளில் 24 இடங்களில் பா.ஜ., சார்பில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். நான்கு இடங்களில் இந்துக்களும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த பகுதி, முழுக்க முழுக்க இஸ்லாமியர் வாழும் பகுதி. இப்படியும் சொல்லி புரியவில்லை என்றால், அவர்கள் தான் மதவாதிகள்.
நல்ல உதாரணம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 14, 2014 5:52 pm

ஆதரவு சரிகிறது என்றும் சொல்லலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 6:15 pm

அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா 8oKMOf6CQWTzfS9uC6MP+19-chidambaram-sp-300
-
சொந்த தொகுதியில் ப.சி
பேசிய கூட்டத்துக்கு திரண்ட மக்கள்..!!
-

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Apr 14, 2014 6:19 pm

ayyasamy ram wrote:[link="/t109412-topic#1058377"]அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா 8oKMOf6CQWTzfS9uC6MP+19-chidambaram-sp-300
-
சொந்த தொகுதியில் ப.சி
பேசிய கூட்டத்துக்கு திரண்ட மக்கள்..!!
-
அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக