புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
85 Posts - 51%
heezulia
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
7 Posts - 4%
prajai
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
127 Posts - 54%
heezulia
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
9 Posts - 4%
prajai
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_m10 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 7:23 am



சென்னை: "செய்வீங்களா, செய்வீங்களா" என்று நான் கேட்க மாட்டேன். "செய்வீர்களா", தயவு செய்து செய்வீர்களா" என்று வாக்காளர்களை சென்னையில் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டி கேட்டுக் கொண்டார்.

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அண்ணா நகர் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்றிரவு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கருணாநிதி பேசியதாவது:

நேற்றைக்கு எனக்கு உடல்நலமில்லை. வீட்டிலே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இன்றைக்கும் எனக்குப் பாதுகாப்பாக வந்திருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் எல்லாம் இருக்கும்போதே என்னை நேற்றைய கூட்டத்திற்கு அழைப்பதற்கு ஆவடி பகுதியிலே இருந்து நண்பர்களெல்லாம் வந்தார்கள். அவர்கள் என்னுடைய உடல்நிலையைப் பார்த்தார்கள். டாக்டர்களைக் கேட்டார்கள். இன்றைக்கு அவர் வரக்கூடாது இந்தக் கூட்டத்திற்கு. அவர் விரும்பினால் அழைத்துப் போங்கள் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். என்னை அந்த நண்பர்கள் அணுகி ஒரு பெரிய கூட்டம், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலே ஆவடியிலே கூடியிருக்கின்றார்கள் உங்கள் வருகையை எதிர்பார்த்து. நீங்கள் வந்து பேசக் கூட வேண்டாம். வந்து முகத்தைக் காட்டினால் போதும் என்றார்கள். நான் எப்படிய்யா முகத்தை மட்டும் எடுத்து நான் தனியாக அனுப்ப முடியும்? நான் என்ன பெரிய சினிமா ஸ்டாரா? முகத்தை மாத்திரம் காட்டி விட்டுப் போக என்று சொல்லியும் கூட அவர்கள், நீங்கள் வந்து அந்த மைதானத்தை மிதித்து விட்டுப் போனால் போதும் என்றார்கள். நான் எப்பொழுதும் எனக்கென்று வீடு, வாசல், நில புலங்கள் இருந்தாலுங்கூட, கட்சித் தொண்டன் தான் எனக்கு எஜமானன். அவன் சொல்லி என்றைக்கும் நான் மீறியதில்லை. அவனுடைய எண்ணத்திற்கு மாறாக என்றைக்கும் நான் நடந்ததில்லை. அவனுடைய மனம் புண்படும்படி நான் நடந்து கொண்டதில்லை. ஆகவே, வருகிறேன் என்று சொல்லி, உடனே காரிலே ஏறி ஆவடி கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசி விட்டு, சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் அங்கே குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தெரிவித்து விட்டு, இரவு 12 மணிக்கு தூங்கச் சென்றேன். இதுதான் நேற்றை தினம் என்னுடைய நிலை.

இன்றைக்கு வந்திருக்கின்றேன். எத்தனை மணிக்குப் போய் தூங்குவேன் என்பது எனக்குத் தெரியாது. ஏன் இப்படி ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட வேண்டும், பாடுபட வேண்டும் என்றால், எனக்காக அல்ல. என் குடும்பத்திற்காக அல்ல, குடும்பம் என்று ஒன்று இருப்பதையே நான் நினைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்பதற்காக நான் என்னை ஒப்படைத்துக் கொண்டதில்லை. ஆனால், நான் குடும்பம் என்று கருதுவது என் எதிரிலே வீற்றிருக்கின்றீர்களே உங்களைத்தான் என்னுடைய குடும்பம் என்று கருதுகின்றேன். அப்படிப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத்தான் இந்தத் தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் இருக்கிறார். அவர் பல வெற்றிகளைப் பெற வேண்டும். அவர் பெறுகின்ற வெற்றி நாட்டிற்குப் பயன்படக்கூடிய வெற்றியாகும். அவர் புரிகின்ற சாதனை இந்த நாட்டுக்கு, இந்தச் சமுதாயத்திற்கு, தமிழர்களுக்கு உரிய சாதனையாக இருந்தால்தான் நான் அவரை ஆதரியுங்கள், அவரை தேர்ந்தெடுங்கள், அவருக்கு உங்களுடைய அன்பான வாக்குகளை வழங்குங்கள், அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள உதயசூரியன் சின்னம். அந்தச் சின்னத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்ள, என்னுடைய கடமையை நிறைவேற்ற இங்கே வந்திருக்கின்றேன் என்பதைக் கூற விரும்புகின்றேன்.

ஆனால், நாட்டிலே இருக்கின்ற சங்கடங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா? நாட்டிலே இருக்கின்ற கஷ்டங்களை, நீங்கள் படுகின்ற வேதனைகளை நான் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அப்படி பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சியாகத்தான் இந்தக் கூட்டத்தை நான் கருதுகின்றேன். நாம் உண்மையிலேயே இந்த இயக்கத்திற்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் வைத்திருக்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழகம் - தி.மு.க.. தி.மு.க.வும், முஸ்லிம் சமுதாயத்திலே உள்ள இயக்கங்களும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களும், வேறு பல புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட இயக்கங்களும் ஒன்றுகூடி அமைத்திருக்கின்ற இந்த முன்னணிக்குப் பெயர்தான் ``ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’’ ஆகும். ஆகவே இந்தக் கூட்டணியின் வெற்றி இந்திய நாட்டிலே எதிர்காலத்திலே மிகப் பிரகாசமான வெற்றிகளையெல்லாம் குவிக்கக் கூடிய வெற்றி என்பதை நான் உங்களுக்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 7:23 am



நேற்றைய தினம் நான் பேசும்போது ஒரு கூட்டத்தில்; ஒருசில நீதிமன்றங்கள் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்ற நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றன என்று எடுத்துச் சொன்னேன். நீதிபதிகள் யாருக்கும் கட்டுப்பட வேண்டாதவர்கள். தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, எது நியாயம் என்று படுகிறதோ, எது நீதி என்று படுகிறதோ, எது குற்றம், எது குற்றம் இல்லை என்று தெரிகிறதோ அதன்படி தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் நீதிபதிகள்.

ஆனால், இன்றைக்கு எல்லாம் கெட்டு விட்டது. நீதியும் சேர்ந்து கெட்டு விட்டது. நீதியைப் பெற என்ன விலை? என்று கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தனக்குத் தேவையான ஒரு தீர்ப்பைப் பெற எவ்வளவு ஆயிரம் ரூபாய் செலவாகும், எத்தனை லட்சம் செலவாகும், எவ்வளவு கோடியில் இந்தத் தீர்ப்பைப் பெறலாம் என்று பேசுகிற காலம் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நாமெல்லாம் எண்ணிப் பார்க்கவே முடியாத போதாத காலம்தான். இந்தப் போதாத காலத்தை தொடர்ந்து இருக்க விடலாமா, அல்லது தடுத்து நிறுத்த வேண்டாமா என்ற இந்தக் கேள்விக்குத்தான் நாம் பதில் அளிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

நீதியே சாய்ந்தது என்று தெரிந்தவுடன், நெடுஞ்செழிய பாண்டியன், நான் அந்த நெடுஞ்செழியனை சொல்லுகிறேன். பாண்டிய நாட்டை ஆண்ட நெடுஞ்செழியன், அந்தக் காலத்திலே நாம் நீதி தவறி விட்டோம், அவசரப்பட்டு கோவலன் மீது குற்றம் சாட்டி விட்டோம் என்று கண்ணகி எடுத்துரைத்ததும் உயிர் விட்டான் என்பது சிலப்பதிகாரம். அந்தச் சிலப்பதிகார இலக்கியத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம். நம்முடைய காலத்திலே சிலப்பதிகார இலக்கியத்தினுடைய சிறப்பை மறந்து விட்டு, நாம் நம்மையே பலி கொடுத்துக் கொள்ளலாமா என்பதற்கு பதிலை தயார் செய்யுங்கள் என்றுதான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். அந்த பதில்தான் இந்தத் தேர்தலிலே நாம் எடுக்க இருக்கின்ற முடிவாகும். அந்த முடிவு நல்ல முடிவாக, நல்ல தீர்ப்பாக அமைய வேண்டும் என்றுதான் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

எது நல்ல தீர்ப்பு? நடக்கின்ற விஷயங்களை நாங்கள் எடுத்துச் சொல்லுகின்றோம். இதிலே எது நியாயம், எது அநியாயம் என்பதை முடிவு செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது. முடிவு செய்ய வேண்டியது நியாயத் தராசே அல்லாமல், கொடுக்கின்ற நூறு ரூபாய், இரு நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் பணம் அல்ல. அதற்கு நீங்கள் உங்களுடைய வாக்குகளை விற்றால் நீங்கள் உங்களுடைய தலைமுறையையே விற்று விடுகிறீர்கள். உங்களுடைய எதிர்காலத்தையே விற்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையையே விற்கிறீர்கள். எனவே அதற்கு இடம் தராமல் நாம் சுயமரியாதைக்காரர்கள். நாம் விலை போக மாட்டோம். யாரும் நம்மை விலை கொடுத்து வாங்க முடியாது. நமக்கு எதிலே நியாயம் என்று படுகிறதோ அந்த நியாயத்தைத்தான் நாம் கடைப்பிடித்து அதன்படி நடந்து கொள்வோம் என்கின்ற அந்த உறுதி ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்டால், பொதுவாக மனிதனுக்கு என்று சொல்லுகின்றேன். இந்த நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டால், அந்தத் தமிழன் தன்மானத்தோடுதான் நடப்பேன் என்று தன்னை தயார்படுத்திக் கொள்வானேயானால், அதன் பிறகு நாம் யாருக்கும் அடிபணியத் தேவையில்லை.

இலங்கையிலே உள்ள போராட்டம் உங்களுக்குத் தெரியும். அந்த இலங்கைப் போராட்டம் அங்குள்ள ஈழத் தமிழர்கள் தங்களுக்கு விடுதலை தேவை என்பதற்காக நடத்துகின்ற போராட்டம். அந்தப் போராட்டத்தின் விளைவாக விடுதலைப் புலிகள் தோன்றி, அப்படி தோன்றிய விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலேயும் பரவி, இங்கே நம்முடைய ஆதரவையெல்லாம் பெற்று, குறிப்பாக என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய ஆதரவையும் பெற்று, அதற்குப் பிறகு தொடர்ந்து நான் முதலமைச்சராக இருந்த நேரத்திலே என்னுடைய ஆதரவையும் பெற்று தமிழ்நாட்டிலே வளர்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 7:23 am



அப்படி வளர்ந்த விடுதலைப் புலிகள் கடுமையான போரிலே ஈடுபட்டார்கள். யாரை எதிர்த்து? இலங்கையிலே இருக்கின்ற கொடுமையாளர்கள் சிங்களவர்களை எதிர்த்து போரிட்டார்கள். அப்படி போர் நடந்தபோது அந்த விடுதலைப் புலிகளாக இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலே சில தலைவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன். நம்மைப் போன்றவர்கள் கொடுத்த ஆதரவால் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலே செல்வாக்கோடு வளர்ந்து, தங்களுடைய பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் அந்த விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும், அவர்கள் இலங்கைக்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அந்தக் கூட்டத்திற்கு தலைமை யார் தெரியுமா? நம்முடைய சாட்சாத் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

அந்த அம்மையார் தன்னுடைய ஆட்சியில் - இப்பொழுதும் அவரது ஆட்சி நடக்கிறது - அப்பொழுது ஒரு தீர்மானம் போட்டார்கள். சட்டசபையிலே தீர்மானம் போட்டார்கள். அதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. சட்டப்பேரவையிலே ஜெயலலிதா போட்ட ஒரு தீர்மானம், ``இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது’’ என்று தீர்மானம் போட்டார்கள்.

எந்த ஜெயலலிதா முதலமைச்சராக வீற்றிருந்தாரோ அந்தச் சட்டமன்றத்திலே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆகா, பிரபாகரன் தமிழர்களுக்காக பாடுபட்டவர், தமிழர்களுக்காக உயிர் கொடுத்தவர் என்று இன்றைக்கு எந்த பிரபாகரனைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறாரோ, அந்தப் பிரபாகரனை உடனடியாகக் கைது செய்து இலங்கை அரசு இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். யாரை? பிரபாகரனை. எந்த பிரபாகரனை? இன்றைக்கு பிரபாகரன் பெரிய ஆள், மாவீரன், அவனை இழந்தது நாம் செய்த தவறு என்று பேசிய இதே ஜெயலலிதா, நீலிக்கண்ணீர் வடிக்கின்ற ஜெயலலிதா, அன்றைக்கு பிரபாகரனை கைது செய்து கொண்டு வாருங்கள், அவர் அங்குள்ள தமிழர்களுக்குத் தலைவராக இருக்கலாம். எனவே இலங்கைப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சாதாரணமான இடத்திலே அல்ல, இந்தச் சட்டப்பேரவை வற்புறுத்துகிறது என்று சட்டப்பேரவையிலே தீர்மானம் போட்ட அம்மையார்தான், இன்றைக்குப் போலிக் கண்ணீர் வடிக்கிறார். இன்றைக்கு இலங்கையிலே உள்ள விடுதலைப் புலிகளுக்காக நான் வாதாடுவேன், போராடுவேன் என்றெல்லாம் கதை கட்டுகிறார். அத்தனையும் பொய். அத்தனையும் மாய்மாலம். அத்தனையும் மக்களை ஏமாற்றுகின்ற தந்திரம்.

நான் தமிழனுக்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல்லுகின்ற பொய் மூட்டை, புளுகு மூட்டை. எந்தப் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னாரோ, அந்தப் பிரபாகரனை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்த விடுதலைப் புலிகள் யாராக இருந்தாலும், அவர்களில் யார் ஒருவரையும் இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் - யார்? ஜெயலலிதா கொடுத்த சர்ட்டிபிகேட் - ஒரு முதலமைச்சர் அன்றைக்கு விடுதலைப்புலிகளைப் பற்றி சொல்லி "இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் இந்த மண்ணில் காலூன்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட கூடாது, அனுமதிக்கப்படக்கூடாது" என்று தீர்மானம் எழுதி சட்டசபையிலே நிறைவேற்றப்பட்டு, ஆஹா! ஜெயலலிதா அல்லவா இவ்வளவு பெரிய வீராங்கனை! என்று பேரும் புகழும் பெற்றவர். அவர் நிறைவேற்றிய தீர்மானம்தான் இது. அவரை தமிழ் மக்களுக்குக் காவலர் , தமிழ் மக்களின் பாதுகாப்பாளர், தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்றெல்லாம் இங்கே உள்ள தமிழர்களும் இன்றைக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய கபடநாடகம், அந்த கபட நாடகத்தை நம்பி ஏமாந்து போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் சொல்லுகிறார் ஜெயலலிதா அந்த தீர்மானத்தில். "ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால் ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசு உதவிக்கு அனுப்பி, நம்ப ராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறைப் பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது" இந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் சாட்சாத் இதே ஜெயலலிதாதான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 7:24 am



இது மாத்திரமல்ல; ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்த போது இதே ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? 17-1-2009 அன்று அவர் விடுத்த அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். இலங்கையில் இப்போது என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று விடுதலைப் புலிகளைப் "பயங்கரவாதிகளைப் போல" உருவகப்படுத்தி, அவர்கள் மீது பழியைப் போட்டவர்தான் இந்த ஜெயலலிதா என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இன்றைக்கு இலங்கையிலே யுத்தம் முடிந்து பிரபாகரன் மாண்டு, ஆயிரக்கணக்கான தளபதிகளும், லட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் வீரர்களும் மாண்டொழிந்து, அங்கே மீண்டும் சுதந்திரக் காற்று வீசாதா? விடுதலைப் புயல் கிளம்பாதா? என்று இலங்கைத் தமிழ் மக்கள் வாடிக்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்காகப் போராடியவர்கள் தாங்கள் தான் என்று விளம்பரப் படுத்திக் கொள்ள ஜெயலலிதாவுக்கு அதைச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? பிரபாகரனைப் பிடித்து சிறையிலே போடு, உன்னால் முடியாவிட்டால் இந்தியாவிலே உள்ள ராணுவத்தை அனுப்பச் சொல்லி, அவனை கைது செய் என்று சொன்ன ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டியவர் என்று யாரோ சில பேர் சொல்லுவதும், அதைச் சில பேர் நம்பி ஏமாறுவதும் கடைந்தெடுத்த கோழைத்தனம், ஏமாளித்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதற்காகத்தான் இந்த பழைய கால நிகழ்வை இப்போது உங்கள் முன்னால் வைத்தேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வளிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. "டெசோ" என்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்த அமைப்பின் மூலமாக நம்முடைய தீர்மானங்களையெல்லாம் உலக அரங்குக்கு எடுத்துச் சென்று, அதை வலியுறுத்தி இன்றைக்கு உலக அரங்கில் இலங்கைப் பிரச்சினையை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற அளவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கைப் போருக்கும் என்ன சம்மந்தம் என்று யாராவது கேட்டால், அந்த இலங்கைப் போரிலே உயிர் நீத்த உத்தமர்கள், பிரபாகரன் போன்றவர்கள், அவர்களெல்லாம் பட்ட பாட்டிற்கு, அவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுக்கு நாம் சிந்திய கண்ணீர் பரிகாரம். நாம் விடுத்த பெருமூச்சு, அந்த மக்களுக்காக நாம் விட்ட மூச்சு என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழன் இலங்கையிலே இன்னுமும் வாடிக் கொண்டிருக்கின்றான். இலங்கையிலே இன்னமும் அவனை நசுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட தமிழனைக் காப்பாற்ற நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அவனைக் காப்பாற்ற நம்மைத் தவிர, தமிழகத்திலே வேறு யாரும் நாதியில்லை. மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அங்கே உள்ள தமிழர்களைக் கைவிட்டுவிட்டது. நாம் அதற்காகவே நம்முடைய வெறுப்பைக் காட்ட, நம்முடைய கண்டனத்தைக் காட்ட காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து நம்மை விலக்கிக் கொண்டோம். நாம் இன்றைக்கு தனித்து தமிழகத்திலே ஒரு சில தோழமைக் கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு நாம் போட்டியிடுவதற்குக் காரணமே, காங்கிரஸ் பேரியக்கத்தை நம்மால் நம்ப முடியவில்லை. அவர்கள் தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொண்டார்களே தவிர, நம்முடைய தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த பரிசுத்தமான எண்ணம் அவர்களுக்கு இல்லை.

ஆகவேதான் நம்மை நாம் அந்தக் கட்டை அவிழ்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குரிய சில தோழமைக் கட்சிகளோடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கானாலும், நம்முடைய தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற எந்தக் கட்சியானாலும், அந்தக் கட்சிகளோடு இங்கேயுள்ள இஸ்லாமிய இயக்கங்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு, ஒரு சிறிய கூட்டணிதான்; ஆனாலும், நம்முடைய எண்ணங்கள் சிறியவை அல்ல; பெரியவை. இந்த சிறியக் கூட்டணியின் மூலமாக நம்மை அகில உலகத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற அந்தப் பெருமையோடு, அந்த நினைப்போடு வாழ்ந்தால், அந்த வாழ்க்கைதான் வீர வாழ்க்கை. அந்த வீர வாழ்க்கையை நாம் என்றைக்கும் மறக்கமாட்டோம். அந்த வாழ்க்கையைத் தொடருவதற்காகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நம்முடைய இந்தியத் திருநாட்டிலே நடைபெறுகின்ற இந்தத் தேர்தலைக் கூட நாம் அணுகுகிறோம். நாம் பெரும் பதவிகளிலே அமர வேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடைய எண்ணங்களை வலுப்படுத்த, நம்முடைய குறிக்கோளை வென்றெடுக்க நாம் ஈடுபட்டிருக்கின்ற இந்தக் காரியத்தில் நிச்சயமாக இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் வெற்றி அடைவோம். அந்த வெற்றியின் குறிக்கோள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையிலே ஏதோ சிறு சிறு லாபங்களுக்காக அல்ல, சிறு சிறு பயன்களுக்காக அல்ல. பெரும் பயன். இலங்கையிலே தமிழனுடைய வாழ்க்கை உத்தரவாதம் பெற்று விட்டது என்ற அளவிற்கு இலங்கைத் தமிழர்களை வாழ வைக்கின்ற அந்த நிலையும், அதற்கு இடையூறாக வருகின்ற எந்தச் சக்தியானாலும் அதை முறியடிக்கின்ற நிலையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. நாம் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

ஒருசில நீதி மன்றங்களைப் பற்றி நான் தொடக்கத்திலே சொன்னேன். நீதிமன்றங்கள் கூட ரொம்ப கெட்டு விட்டது. நாடாளுமன்றம் மாத்திரமல்ல, நகராட்சி மன்றங்கள் மாத்திரமல்ல, நீதிமன்றங்களே கூட கெட்டு விட்டது. எங்கே நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோமோ அங்கேயே நீதி கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு நீதிமன்றங்களிலே நீதி கிடைக்கத் தொடங்கினாலும் அதை தாமதப்படுத்தவும், அதை மூடி வைக்கவும், அதை இருட்டடிப்பு செய்யவும், அதற்கான பல முயற்சிகள் அரசாங்க ஆதரவோடு நடைபெறுகின்றன.

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு தயங்கவில்லை என்றும், மக்கள் விரோத திட்டமாக இருந்தால் மட்டுமே அதை முடக்கி வைக்கத் தயங்க மாட்டோம் என்றும் ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கிறார்.

நேரம் ஆகி விட்டது என்பதை என்னுடைய பேரனே என்னிடம் சொல்லுகிறார். நான் சட்டத்தை மீற விரும்பவில்லை. சட்டத்தை என்றைக்கும் மதித்து வருகின்றவன். சட்டத்தின்படி நடக்க பழகியவன். சட்டத்தை யார் மீறினாலும், மீறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரன் என்றைக்கும் மீற மாட்டான் என்ற அந்த உறுதியை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள்.

"செய்வீங்களா, செய்வீங்களா" என்று நான் அப்படி கேட்க மாட்டேன். "செய்வீர்களா", (செய்வோம், செய்வோம்) தயவு செய்து செய்வீர்களா"", (செய்வோம், செய்வோம்) தயவு செய்து வெற்றி பெறச் செய்வீர்களாக (செய்வோம், செய்வோம்) என்று உங்களை கேட்டு தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்யுங்கள். எங்கெங்கே திராவிட முன்னேற்றக் கழக - கூட்டணி வேட்பாளர்கள் நிற்கிறார்களோ அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டு உடல் நலம் இல்லாத நிலையில், மாலை 7 மணி வரையிலே மருத்துவர்களை வைத்து சிகிச்சை பெற்றுக் கொண்டு உங்களையெல்லாம் பார்த்தால் அந்த மருத்துவர்கள் தேவையில்லை, இந்த மருத்துவர்களே போதும் என்று கூறி, என்னுடைய மனம் கோணாமல் என்னுடைய எண்ணத்தை நீங்கள் ஈடேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

[thanks]விகடன்[/thanks]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக