புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 15:39

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
31 Posts - 55%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
17 Posts - 3%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
9 Posts - 1%
jairam
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed 14 May 2014 - 9:03

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed 14 May 2014 - 9:29








         
இனி..... முதல் தொகுதிக்குச் செல்வோமா !






   
  %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






         
    தொகுதி - 1






       
 
     
      " பெற்றால்தான் பிள்ளையா "  (  1966  )


திரைப் படம் எடுத்த கதை !










பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! U8tNaptT8mbQvT4PiSZ5+petral 





    எம். ஜி. ஆர் -இன் 91  ஆவது  படம் :

 " பெற்றால்தான் பிள்ளையா "






   
  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! SzopchGcS1mhQmMasZDU+hqdefault 





எம்ஜிஆரின் இந்த " பெற்றால்தான் பிள்ளையா " படத்திற்கும்  மற்ற எம்ஜிஆர்  படங்களுக்கு  பல

வேற்றுமைகள் உள்ளன !




அவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?



  " அவை தெரிந்தால் ஏன் ஸ்வாமி  உங்கள் கட்டுரையை படிக்கிறோம், சொல்லுங்கய்யா !  "

 என்கிறீர்களா !     நக்கல் நாயகம்
 





 சரிதான், இதோ  சொல்லிவிடுகிறேன் !  





  1.  எம்ஜிஆரின் வழக்கமான  ' டிஷ்யும்' , ' டிஷ்யூம் '  சண்டை ,  கவச்சிகரமான

காதல்  காட்சிகள், 'செண்டிமென் டல் ' டச்,  -   இவைகள் இந்த படத்தில் இல்லை    !  

(  பெயருக்கு  ஒரே  ஒரு சண்டைக் காட்சி  படத்தின் இறுதியில் உண்டு ! )






2. பல வகையான துணி மணிகளை அணிந்து கொண்டு ' ஸ்டைல் ' காட்டி  நடிக்கும் 'மாமூல் ' வேலை

எம்ஜிஆருக்கு இந்த படத்தில் இல்லை !





  3. படம் பூரா  எம்ஜிஆருக்கு  அழுக்கு துணி சட்டை மற்றும் கால் சட்டை  , தொப்பி  - அம்புடுத்தேன் -

அதுவும் படம் நெடுக !    
]]]]





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! 4d26Soe9RWu2ihweNax8+mgrsolo






        4. எம்ஜிஆர்  படங்களில் , பொதுவாக  , அவருக்கும்  இல்லையென்றால் அவரின்

நாயகிக்கும் பாடல்கள் உண்டு !   மற்ற நடிகர்கள் - நடிகைகள், " திருவிளையாடல்"   - ஹேமநாத  பாகவதர்  சொல்வது

போல " யாரும் வாயைத் திறந்து " ( ! )      பாடுவதில்லை !    


ஆனால்  " பெ. பி "    யில்


( அத்தான் - " பெற்றால்தான்

பிள்ளையா"   வில் ! ----- "அத்தான் "  =    அதுதான் !  )


நடிகர்  தங்கவேலு, நடிகை  செளகார் ஜானகி போன்றவர்கள்

ஒரு சில பாடல்களை இந்த படத்தில் பாடுவதாக நடித்தும் உள்னர் !
 





      5. " பாசம் "    படத்திற்குப் பிறகு  மாறுபட்ட, குணசித்திர வேடத்தில்  நடித்த  படம் இது !
 




     
   
 
   இதையும் படியுங்கள் !
 






     6 .  இந்த  படத்திற்கு  அப்புறம்  இந்த மாதிரி  எண்களைப் போட்டு எழுதியது மாதிரி

 மாறுபட்ட  வேடத்தில் நடிக்க எம்ஜிஆர் ஆசைப் படவே இல்லை !
   









   
      எம்ஜிஆர், 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தில் ஏன் நடித்தார் ?





அது  ஒரு சுவையான கதை !  


இந்த படத்தில் கதை வசனம்  எழுதியவர் : பிரபல கதை வசனகர்த்தா : ஆரூர்தாஸ் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! FwqphfCUT8SvA0J0Xo3F+arurdas



இவர் 28  சிவாஜி  படங்களுக்கு  கதை வசனம் எழுதியுள்ளார் !

(  " பாசமலர் " படத்தை  யாரால் மறக்க முடியும் ! ? )



 எம்ஜிஆருக்கு ? 14 படங்கள் !  


 டி எம் எஸ்  அவர்களை அடுத்து  இந்த எம்ஜிஆர் - சிவாஜி என்கிற

இரு துருவங்களை ஒரே காலகட்டத்தில்

இருவரையும் சமாளித்தவர் ! நிறைய  நேரங்களில் இவர்களிடம் ' முழி  பிதுங்கியவர்' கூட !

'மெல்லிசை மன்னர் ' எம் எஸ் விஸ்வநாதனும் , டி எம் எஸ் , ஆரூர்தாஸ் போல்

இவர்களிடம் 'முழி பிதுங்கியவர் !'





ஆரூர்தாஸ்  இடம் " பெற்றால்தான் பிள்ளையா " படத்தின்  கதை வசனம்

அடங்கிய  கோப்பு  ஐ  நடிகர் திலகத்திடம்  முதலில் கொடுத்தாராம்.

இந்த படத்தில்  நடிகர் திலகம் நடித்தால்  நன்றாக இருக்கும் என்பதே  அவருடைய

எண்ணம் !



ஆனால்......... வேலை பளுவோ  , என்ன காரணம் என்று தெரியவில்லை, நடிகர்

திலகம் அந்த கதையை படிக்காமல்  ஆரூர்தாஸிடம் திருப்பிக் கொடுத்து

விட்டார் !




இந்த   நிகழ்ச்சி  நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, எம்ஜிஆர்,

ஆரூர்தாஸை  அழைத்து :


" என்ன  கதை வைத்திருக்கிறீர்கள், ஆசிரியரே ? "


என்று  ' சும்மாங்காட்டி ' கேட்க,   ஆரூர்தாஸ் அவர்களோ  :


" இவர் ( எம்ஜிஆர் )   எங்கே இந்த கதையை  தேர்வு செய்யப் போகிறார்! "


என்று  அவரும் " சும்மாங்காட்டி "    அந்த கதையை  அவரிடம் நீட்ட  எம்ஜிஆரோ

அந்த கதையைப் படித்துப் பார்த்து :


" கதை  நன்றாக இருக்கிறது, இந்த  கதையை  படமாக்கினால்  நான் நடிக்கத்

தயார் ! "



என்று சொல்லிவிட்டார் !





    இப்படித்தான்  " பெற்றால்தான் பிள்ளையா "

எம்ஜிஆரை நடித்து  எடுக்க முடிவானது !





   
  (   " பெற்றால்தான் பிள்ளையா "  வெளியான ஒரே வாரத்தில்

அந்த படம் "ஹிட் " ஆகி, பின்னர் நடிகர் திலகம் ஆரூர்தாஸை அழைத்து :



" எனக்குத் தெரியாமல் என்னிடம் சொன்ன கதையை  எப்படி  அண்ணனிடம்

( எம்ஜிஆர் )  சொல்லி  நடிக்க வைத்தாய் ? "



என்று  அவரிடம் சண்டை போட்டு  அவரிடம் 3 மாதங்கள்  " கா " விட்டது

தனி கதை !

" தெய்வ மகன் " படத்திற்காக  நடிகர் திலகம் ஆர்ருர்தாஸிடம்  " பழம் "

விட்டதும் இன்னொரு கதை  !

இவைகளை பின்னர் பார்ப்போம் !     )  






 
          " பெற்றால்தான் பிள்ளையா "

படத்தின் இயக்குனர் / இயக்குனர்கள்   யார் ?  






     இரட்டை  இயக்குனர்கள் :

கிருஷ்ணன் - பஞ்சு  !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! IaUn7kohSx44CdW1Zlta+Krishnan_Panju







 இவர்கள் இருவரும் எம்ஜிஆருக்கு இணையாக 'சீனியாரிடி'   படைத்தவர்கள்!



எப்படி ?



1935  ஆம் ஆண்டில்  பிரபல்  ஆங்கிலேய  இயக்குனஎ : எல்லீஸ் ஆர்  டங்கன் இயக்கிய



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! NQrBDL4LQ2SmDe7oSWIO+2007092850521601

(  இடுப்பில்  கை  வைத்திருப்பவர்தான் எல்லிஸ்  ஆர் டங்கன் ! )


" சதி லீலாவதி " படத்திற்கு  இணை இயக்குனர் ஆக இருந்தவர் ' முதல்வர் '  கிருஷ்ணன்!

அப்போது  அவரிடம் " COTTON  " இல்லை......அத்தான்   இயக்குனர் பஞ்சு இல்லை !

அதே படத்தில்   ஒரு  10  நிமிடங்கள்  வந்து போகும்   :


" இன்ஸ்பக்டர்   ரங்கையா  நாய்டு "  


ஆக   எம்ஜிஆர்  நடித்தார் !


எம்ஜிஆருக்கு  இந்த " சதி லீலாவதி " தான்  முதல் படம் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! FnsYM1ieSWGCW0SvWUAE+Sathi_leelavathi_1936film




      எம்ஜிஆர் க்கு  எப்படி  இயக்குனர் கிருஷ்ணனுக்கும்

அதன் பின்னர் பஞ்சு வுக்கும் எப்படி நட்பு

ஏற்பட்டது ?  



 
  அது  ஒரு சுவையான  கதை !




 எம் ஜி  ஆர்  , அந்த படத்தில்   நடித்த வேடம்  ' இன்ஸ்பக்டர் ' வேடம் ஆயிற்றே !

'இன்ஸ்பெக்டர் ' வெறுமனே  நடந்து  வந்தால்  'பந்தா' வாகவா இருக்கும்......

'அட்லீஸ்ட்'   மிதி வண்டி - அத்தான் - சைக்கிள்  இல்   வந்தால்தானே  கொஞம் 'கெட் அப் '

ஆக இருக்கும்.....சொல்லுங்கள் !     புன்னகை



எனவே, டங்கன் , எம்ஜிஆரை  அழைத்து :


" இதோ   பார், நீ  என்ன பண்ணுவியோ  எனக்குத் தெரியாது, நீ  இந்த

படத்தில் நடிக்க வேண்டும் என்றால்  ஒரு சைக்கிள்  உடன் வந்தால்தான்
]
ஆயிற்று  




 என்று   சொல்லிவிட்டார் ![/b




      எம் ஜிஆர்  யோசிக்க  ஆரம்பித்தார் !

என்ன  காரணம் ?

அவரிடம்  சைக்கிள்  கிடையாது !

அதுமட்டுமா, அவருக்கு சைக்கிளே ஓட்டத்தெரியாது !




(  'காதலிக்க நேரமில்லை ' படத்தில் அறிமுகமான நடிகர் ரவிசந்திரனுக்கும்

கார் ஓட்டத்தெரியாது. ஆனாலும் அவர் காரை ஓட்டினார் !

'டாப்  கியர்' இல்   10  கி . மி.  வேகத்தில் ரவி  கார் ஓட்டும்போது  கார் 'சருக்கு ' - ' புருக்கு'

என்று  கார் ஓடியதை  ஒரு காமடி  காட்சியாக மாற்றிக்  காடினார் ,  அந்த

படத்தின் இயக்குனர் : ஸ்ரீதர் !     )




பார்த்தார்  இணை இயக்குனர்  கிருஷ்ணன் !   அருகில்  இருந்த புத்தம் புதிய

டைனமோ ' பொருத்தப் பட்ட  சைக்கிளை   எம்ஜிஆரிடம்  கொடுத்து ஓட்டச்

சொல்லி  படமாக்கிவிட்டார் !

சரி, பிரச்சனை தீர்ந்தது என்றா நினைத்தீர்கள்.....இல்லை !

வண்டியின்  சொந்தக் காரர் ஒருவர்  :


" எனக்குத் தெரியாமல்  எப்படி  என் சைக்கிளைத் தொடலாம் ? "


என்று சண்டைக்கு  வந்து வந்து விட்டார் !

எம்ஜிஆர், அவரிடம்  சென்று  :


" ஐயா, இந்த படம்  எனக்கு முதல் படம்.  உங்கள்  சைக்கிளை நான்

பயன்படுத்தியதால்  எனக்கு  என் முதல்  படத்தில் நடிக்க நேர்ந்தது,

நீங்கள்தான்  என்னை  உற்சாகப்  படுத்த வேண்டும் ! "


என்று  சொன்னார் !


அதனைக் கேட்டு  அந்த மனிதரும்  எம்ஜிஆருக்கும் , கிருஷ்ணனுக்கும் போதிய

ஒத்துழைப்பு கொடுத்து  தன் சைக்கிள் அந்த படத்தில்  " நடிக்க "    உதவி

செய்தார் !




     

அந்த மனிதர்தான் இயக்குனர் பஞ்சு !





  இப்படித்தான் இரட்டை  இயக்குனர்களும் எம்ஜிஆரும் 1935  ஆம் ஆண்டில்

இருந்தே   நெருங்கிய  நண்பர்கள் ஆயினர் !





   

         இயக்குனர்கள்  : கிருஷ்ணன் - பஞ்சு :



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! WW6fkxYQxGzxU8EJpmXY+kp=mgr


(   பஞ்சு  - எம்ஜு -  கிருஷ் !   )  


 ' சதிலீலாவதி ' படத்திற்கு  அப்புறம்  இரட்டை இயக்குனர்கள்  இணைந்து படங்களில்

பணியாற்ற  அரம்பிக்கும் போது அவர்களுக்கு  எம்ஜிஆர்க்கும்  அவ்வளவான

தொடர்பு  இல்லை......

எனினும்  மூவரும் படிப்படியாக முன்னேறி  அவரவர் துறைகளில் முன்னுக்கு

வந்து கொண்டிருந்தனர் !




இந்த நிலைமையில்  :


 என்னதான்  எம்ஜிஆர் ' சூபர் ஸ்டார் '    அந்தஸ்து  அடைந்தாலும்

அவருக்கு  நடிப்பு  என்பது  சரியாக இல்லை  என்கிற  பேச்சு   அப்போது

நிலவி வந்தது !
[



இந்த  பேச்சை  முறியடித்து :


" எம்ஜிஆர்க்கு  நடிக்கவும் தெரியும் ! "


என்பதை  நிரூபிக்க   இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு   முடிவு

செய்தார்கள் ![/color]/b]




[b]      விளைவு  ?


" பெற்றாந்தான் பிள்ளையா "  



 சரி,  எம்ஜிஆர்க்கு   என்ன  கதையை  தேர்வு  செய்து  அவரது நடிப்புத் திறமையை

வெளிகொணர்வது ?


யோசித்தார்கள்   இயக்குனர்கள் !

சார்லி  சாப்ளின்   நடித்த  :   "   The   Kid  "    என்கிற   படம்  , ஒரு

ரிக்ஷாக்கரனையும்  , ஒரு அனாதைப்  பையனையும் சுற்றி  வந்த  கதை

அவர்களுக்கு  நினைவு  வந்தது !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! LHmNEcgZReuxLxoYcGdj+kid-gr



அதனை  ஆரூர்தாஸை  விட்டு  " பெற்றால்தான் பிள்ளையா "

ஆக்கிவிட்டார்கள் !



       " பெற்றால்தான் பிள்ளையா " படத்தின்

தயார்ரிப்பாளர் :




படத்தின்  தயாரிப்பாளர்  :

கே  என் என்   வாசு  -   காங்கிரஸ்   காரர் -  புதுக்கோட்டையை சேர்ந்தவர்.

இவர் இயக்குனர் கள்  கிருஷ்ணன் - பஞ்சு  வின் நீண்ட கால நண்பர்.

தனக்காக   ஒரு படம் எடுத்துத்  தர வேண்டும்  என இவர் கேட்க  ,   கிருஷ்ணன் - பஞசு

யோசித்த படம்தான்  " பெற்றால்ல்தான் பிள்ளையா  "




எம்ஜிஆர் ?


இயக்குனர்  பஞ்சு  மூலம்தான்  எம்ஜிஆர்  இந்த படத்தில்    நடித்தார் -  என்னதான்

சொல்லுங்கள் - ஒரு காலத்தில்  பஞ்சு   எம்ஜிஆருக்க்கு  சைக்கிள்  கொடுத்து

'தூக்க்கியவர்'    அல்லவா !




" பைனான்ஸ் "   ?


ஒரு தயாரிப்பாளர்  தன் முழு  பணத்தையும்   போட்டு    படத்தை  எடுப்பதில்ல்லை -

தயாரிப்பாளர்  எம் எம் ஏ   சின்னப்பா  தேவரைத்   தவிர !


 தயாரிப்பாளர் வாசு  வுக்கும்   'பைசா   ' தேவைப்பட்டது!

இதற்கும்  பஞ்சு  உதவி  செய்தார் !

எப்ப்படி ?  



  இந்த  படத்தில் நடிக்க  எம் ஆர்  ராதாவை

ஒப்பந்தம் செய்யப்பட்டார்.   அவரிடமே

இயக்குனர்  பஞ்சு  பணம் கேட்க  எம் ஆர்  ராதாவும்

  ரு.  ஒரு லட்சம்  வரை  படத்திற்கு  பண உதவி  செய்தார்.  




( எம் ஆர் ராதா பண உதவி  செய்து  அதனால்  ஏற்பட்ட  விளைவுகள்

தமிழகத்தையே  அப்போது  ஒரு புரட்டு  புரட்டியது  பற்றி......

.இதோ  இன்னும்   கொஞ்சம்  எழுதிவிட்டு !       பைத்தியம்
)




  தொடரும்.........
[/b]









         " பெற்றால்தான் பிள்ளையா "  (  1966  )


திரைப் படம் எடுத்த கதை !  


......................தொடர்ச்சி  !    





       " பெற்றால்தான் பிள்ளையா "

படப் பிடிப்பில்  நடந்த  பல

சுவையான சம்பவங்கள் !




எம்ஜிஆர், கிருஷ்ணன் பஞ்சு,  எம் ஆர்  ராதா,  சரோஜா தேவி , செளகார்

ஜானகி, கே  ஏ  தங்கவேலு,  அசோகன்,  எம் எஸ்  விஸ்வநாதன் , கவிஞர்

வாலி .........இத்தனை  பெரிய  ஜாம்பவான் கள்     " கூடும் "     இடத்தில்

சுவையான  சம்பவங்களுக்கு  பஞ்சம்  ஏது !


இதோ, எண்கள்  இட்டு !






 படம் 1964  ஆம்  ஆண்டு  ஜூலையில் தொடங்கி

இறுதியில்

1966  ஆம் ஆண்டு  டிசம்பரில்   படம்  'ரிலீஸ்' ஆனது  !






   
    1.  இயக்குனர்கள்  கிருஷ்ணன் - பஞ்சு  

Vs

எம்ஜிஆர் !




இவர்கள்  மூவரும்   சீனியர்கள் , ஒருவருக்கொருவர்  சளைத்தவர்கள்

அல்லர்.  இந்த மூவருக்கும் தனித்தனியே ' ஈகோ '  உண்டு !

அந்த    " நீ   பெரியவனா - நான் பெரியவனா "      - என்கிற  எண்னத்தைத்

துறந்து  அவர்கள்  எப்படி பணியாற்றினார்கள் ?




முதலில், இயக்குனர்கள்  தன்  நண்பர்  வாசுவுக்காக  இந்த படத்திற்கு

எம்ஜிஆரை  ஒப்பந்தம்  செய்த போது  திரை உலகைச் சேர்ந்த

பலர்  இந்த இரட்டையர்களை  எச்சரித்தனர் !



எப்படி ?


1.  எம்ஜிஆர்  உங்களுக்கு  சீனியர்   என்கிற மரியாதை  தரமாட்டார் !   அவர்

படத்தில் / படப் பிடிப்பில்  அவர் வைத்ததே  சட்டம் !



2.  எம்ஜிஆர்  படத்தில்  எல்லாத் துறைகளிலும்  தலையிடுவார். உங்களின்

தனித்தன்மை  அவர் படங்களில்  காட்ட முடியாது !



3. எம்ஜிஆர், தன் படங்களில்  தனது  வழக்கமான  சண்டை , டூயட், காதல் என்று

'மாமூல்' சமாச்சாரங்களில்  ஈடுபடுவார் -  அதனை  உங்களால் தடுக்க

முடியாது !



4. இறுதியாக  , எம்ஜிஆர் தன் படத்தை 'ரிலீஸ்' செய்யக் கூட  அவரின் உத்தரவை

எதிர்ப்பார்க்க வேண்டும் !




 ஆனால்  இயக்குனர்கள்  மேற்கண்ட  எச்சரிக்கைகளைக்

கேட்டு சற்று  ' உதறல் ' ஆனாலும் அவர்களின் திரை உலக அனுபவம்

அவர்களுக்கு  " டானிக் '    தந்தது !


ஆனால்  நடந்தது   என்ன ?


எம்ஜிஆர், அந்த இயக்குனர்களை  மதித்து  நடத்தினார்,  பல வெற்றிப்

படங்களைத் தந்த இந்த இயக்குனர்கள் , தன் படத்தையும்  'சூபர்  ஹிட்'

ஆக்கிக் காடுவார்கள்  என்று  எம்ஜிஆர்  நம்பினார் !

எனவே   எம்ஜிஆர்   படத்தில் தலையிடவே இல்லை !




       எடுத்துக்காட்டுக்கு  இந்த சம்பவம் !




       பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு   இயக்கும்  படத்தின்

'செட்' இல்  நுழைபவர்கள், இயக்குனர்கள்  இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்

பவர்கள்  உட்கார்ந்து  அவர்களுக்காக காத்திருப்பர்.

ஆனால் அவர்கள் "செட்' க்குள்  நுழைவதை கண்டால்  எழுந்து நின்று அந்த

இயக்குனர்களுக்கு மரியாதை  செய்யும் பழக்கம் உண்டு !

ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின்  "செட்'இல்   இரடை  இயக்குனர்களில்

ஒருவரான  கிருஷ்ணனுக்கு  வித்தியாசமான  அனுபவம்  ஏற்பட்டது !




என்ன  ஆச்சு ?



இயக்குனர்  கிருஷ்ணன்  வந்து  படப்பிடிப்பை  கவனித்துக் கொண்டிருக்கும்

சமயத்தில் .....அங்கே    எம்ஜிஆர்    உள்ளே   நுழைந்தார் !

அவ்வளவுதான் !

எல்லோரும்  எழுந்து நின்று  மரியாதை   செலுத்திவிட்டனர் !

இயக்குனர்  கிருஷ்ணன் ?

அவருக்கு  நிற்பதா  அல்லது  உட்கார்ந்து கொண்டே  இருப்பதா  என்று

குழப்பம் !

என்ன பண்றது......

ஒன்றும் தோன்றாமல்  மெதுவாக  எழுந்து  நின்றார் !



எம்ஜிஆர், கிருஷ்னன்  எழுந்து  அவருக்கு  மரியாதை  செலுத்துவதைக்

கொண்டு , பெரும் சினம் கொண்டார் !
[


நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி   வந்தார்......கேட்டார் :




" நீங்கள்  செய்த  காரியம்  உங்களுக்கே  நன்றக இருக்கிறதா ? "


என்று  கோபமாக  கேட்டார் !

எல்லோருக்கும்  எம்ஜிஆர்  கோபம் கொண்டு  பேசியதைப்  பார்த்து

" டென்ஷன்"    ஆயினர் !

" என்ன  நடக்குமோ ! "

என்கிற  அச்சம்  அங்கே நிலவியது !

உடனே  கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம்  ஏதோ  சிரித்தார்,  அதனைக் கேட்டு

எம் ஜிஆர்   பலமாக  சிரித்து விட்டார்......மீண்டும் சிரித்தார் !

எல்லோருக்கும் குழப்பம் !

என்ன  சொன்னார் கிருஷ்னன், எம்ஜிஆர் இடம் ?


இதுதான் :



"  எனக்கு   நானே  மரியாதை  கொடுக்கத்தான்  எழுந்து

நின்றேன் !   "



அதுதான்   எம்ஜிஆர் !         மகிழ்ச்சி





      எம்ஜிஆர்   Vs   சரோஜாதேவி :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! KwGvainR8WPAvkiaLMAF+mgr-saro

   




 " எம்ஜிஆருக்கு  ஜோடி  சரோஜாதேவி தானே ! ? "

அதென்ன   Vs    என்று  போட்டீர்கள்  ? "



என்றா  கேட்டீர்கள் ?



காரணம்  இல்லாமல்  அப்படி  போடுவேனா !


நடிகை  ஜெயலலிதாவுக்கு  அடுத்த  படி   (   26  படங்கள்  ) ,

எம்ஜிஆருடன்   24   படங்களில்  நடித்தவர்   :

" அபிநய சரஸ்வதி " சரோஜாதேவி !



" சரி, அதுக்கென்ன   இப்போ ? "


என்கிறீர்களா !


சொல்கிறேன் !



  எம்ஜிஆருடன்  சரோஜாதேவி  நடித்த

கடைசி  படம் : " பெற்றால்தான் பிள்ளையா ! "



இந்த படத்தின்  படப்பிடிப்பு  நடந்த  காலகட்டத்தில்  எம்ஜிஆர்,

சரோஜாதேவி , கே  ஆர்  விஜயா  நடித்த  " அடிமைப் பெண் '

படத்தை   எடுத்தார்.


ஆனால்  அதன் பின்னர்  அந்த  ( பழைய )    " அடிமைப் பெண் '   படப் பிரதியை

எரித்து விட்டு, ஜெயலலிதா  , ராஜ்யஸ்ரீ   நடித்த -  நாம்  பார்த்த -  " அடிமைப் பெண்'

எடுத்தார் !


" சரி, அதுக்கென்ன இப்போ ? "


என்கிறீர்களா !


சொல்கிறேன் :


" பெற்றால்தான் பிள்ளையா " படப்பிடிப்பு  நடந்த  கால கட்டம்  அனைத்து

நாட்களிலும் ........


எம்ஜிஆரும் சரோஜாதேவியும்  பேசிக்கொள்ளவே இல்லை !  
[



இயக்குனர்கள்  கிருஷ்ணன் - பஞ்சு   :


" நாக்கள்தானம்மா  உங்களுக்கு  புதியவர்கள் !

எம்ஜிஆரும்  நீங்களும்  காலம் காலமாக பழகியவர்கள் !

உங்களுக்கு  நாம்  , எம்ஜிஆரிடம்  பேசி  சொல்லியா  நீங்கள்

அவரிடம்  பேச வேண்டுமா, என்ன ! ?  "



என்று  சொல்லியும்  பலன் இல்லை !



/color]  


ஆனால், கடைசி  வரை  எம்ஜிஆர் - சரோஜாதேவி  இவர்கள்  பேசிக்கொள்ள்

வே இல்லை !



" என்ன  காரணம்  சார் ? "


என்றா  கேட்கிறீகள் ?
[/color]




 
    அதை  நான்  இங்கே   சொன்னால்  நன்றாக

இருக்காது !........

ஆனால் நான்  " கோடு " போடுகிறேன்.......

நீங்கள்  " ரோடு "  போட்டுக்கொள்ளுங்கள் !






[  
   இந்த  படம் முடிந்தவுடன் எம்ஜிஆர்  , எம் ஆர் ராதாவால்

சுடப்பட்டார்......

இதுதான்  சமயம் என்று  சரோr]ஜாதேவி , கர்நாடகா  சென்று  ஹர்ஷவர்த்தனா

என்பவரை   திருமணம்  செய்து  கொண்டார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! QFF8HBLTZuRZ14TuCPl7+SarojaDeviwithherhusband







         அறிஞர்  அண்னாவும்  , கவிஞர்  வாலியும் !



" பெற்றால்தான் பிள்ளையா " படத்தின்  பாடல்களை  அனைத்தையும்

எழுதியவர் : கவிஞர்  வாலி.


அன்று.......


எம்ஜிஆரும் , அறிஞர் அண்ணாவும்  பேசிக்கொண்டு  இருக்கும் போது அங்கே

வாலி  வந்தார், எம்ஜிஆர்  அவரை  பாட்டு  எழுத  வரச் சொன்னார்.

வாலியை உள்ளே  வரச் சொன்னார் எம்ஜிஆர்.



" பெற்றால்தான்  பிள்ளையா  "    படத்தில்  எம்ஜிஆர் - சரோஜாதேவி  பாடும்

ஒரு 'டூயட் ' பாட்டு.


" எங்கே,  வாலி, உங்கள்  பாட்டை பாடிக் காட்டுங்கள் ! "


- சொன்னவர்  எம்ஜிஆர்.



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! JZ9mVHvBQKWE1yshRFfh+vali-mgr



வாலி   , பாடலின் முதல்  அடிகளைப் படித்தார் :





      " சக்கரக் கட்டி     பாப்பாத்தி - என்


மனசெ வெச்சுக்கக்  காப்பாத்தி  !    "




அண்ணாவும் எம்ஜிஆரும்  பாடலை  ரசித்துக் கேட்டு  வாலியை

பாராட்டினார்கள்.


திருப்தி அடைந்த  வாலி  முழுப் பாடலையும்  பாடிக் காட்டினார்.


பாட்டு  ஓ கே  ஆனது !



பின்னர்  வாலி, எம்ஜிஆரைக் கேட்டார் :

" அப்போ  நாளைக்கு  இந்த பாடலை ஒலிப்பதிவு  செய்து

விடலாமா, அண்னே ? "


எம்ஜிஆர், " சரி " என்றார்.



வாலி  கிளம்பும் போது, அப்போது  அண்ணா,  வாலியைப்  பார்த்து :


" எங்கே, கவிஞரே, அந்த பாடலின் முதல்  அடியை  மறுபடியும்

பாடுங்கள் ! "


என்றார்!



வாலி  படித்தக் காட்டினார் :





      " சக்கரக் கட்டி     பாப்பாத்தி - என்


மனசெ வெச்சுக்கக்  காப்பாத்தி  !    "




உடனே , அறிஞர்  அண்ன  குறுக்கிட்டு :


" வாலி, அந்த  "பாப்பாத்தி "      என்கிற  சொல்லை  மாற்றி விடுங்கள் ! "


என்றார்.



வாலி , " சரி ! "   என்றார்.


வாலி  மாற்றிக்காட்டினார், எப்படி ?






      " சக்கரக் கட்டி     ராஜாத்தி - என்


மனசெ வெச்சுக்கக்  காப்பாத்தி  !    "




 அறிஞர்  அண்னா  சொன்னார் :



" தேவையில்லாமல் நாம்  யார் மீதும் கல்லெறிய வேண்டாமே ! "



எம்ஜிஆர் ?


பெருமூச்சு  விட்டார் !







       " பெற்றால்தான் பிள்ளையா "

எம்ஜிஆரின் நடிப்பு :



அனைவராலும்  பாரட்டப்பட்டது !

" கண்னன் பிறந்தான் , எந்தன் கண்ணன் பிறந்தான் "

பாட்டு !

என்னதான், சரோஜாதேவி  எம்ஜிஆரிடம் " மூஞ்சியை  தூக்கி  வைத்திருந்தாலும் "

எம்ஜிஆர், அதனை பெரிது  படுத்தாமல், நிஜமான காதல் ஜோடியைப் போல

சரோஜாதேவியிடம் குழந்தையை  வைத்து நெருங்கி[ ப் பழகி

அற்புதமாக நடித்தார் !


நடிப்பு  என்று  வந்த போது தனது விருப்பு வெறுப்பு - இவைகளை மறந்து

எம்ஜிஆர்  நடித்தார் !



மேற்படி  செய்தியை  " வாலு " படத்திற்காக " மூஞ்சைக் காட்டும் " ஹன்சிகாவுக்காக

நடித்துத் தராமல்  இழுக்கும்  நடிகர்  சிம்பு  விடம் சொல்லவும் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! D7sMHtyxTnmuEcNs3K0l+Vaalu-Promo-Stills-e1339213144314





நீதி மன்ற காட்சி :  



 பொதுவாக  நீதிமன்றக் காட்சியில்  பக்கம் பக்கமாக  வசனங்களை பேச

சொல்லி நடிகர் , நடிகைகளை  " பெண்டு "   எடுப்பதுண்டு !

ஆனால்.....இந்த படத்தில் நீதிமன்ற  காட்சியில் எம்ஜிஆருக்கு  அதிக

வசனம் ஆரூர்தாஸ்  கொடுக்கவில்லை !


முக பாவனை, 'உடல் மொழி ' - உணர்ச்சிப் பிழம்பு - இவைகளை  வைத்தே

எம்ஜிஆர்  அற்புதமாக நடித்தார் !





" செல்லக் கிளியே  மெல்லப் பேசு "


இந்த பாடல் காட்சியில் எம்ஜிஆர் ஏசுவின் சிலை அருகே கண்ணீர் விட்டு

வசனம் பேசி  நடிக்கும்  காட்சியிலும்  எம்ஜிஆர்  திறம்பட நடித்தார் !





     "  பெற்றால்தான் பிள்ளையா "

பாடல்கள்  :

தணிக்கையாளர்களின்  கத்திரியில்  'வெட்டு  - குத்து

பட்ட  இரு பாடல்கள் !



அந்த  காலத்தில்  படங்களில் வரும் பாட்டுக்குக் கூட தணிக்கை

உண்டு !


இன்று ?


" நோ   கம்மெண்ட்ஸ் ! "  அய்யோ, நான் இல்லை




 " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி "


இந்த  பாடலின்  இறுதி  வரிகளைப் படியுங்கள் :




"அறிவுக்கு  இணங்கு  வள்ளுவரைப் போல் ..

அன்புக்கு  வணங்கு  வள்ளலாரைப் போல் ...

கவிதைகள்  வழங்கு பாரதியைப்  போல்....

மேடையில் முழங்கு   அறிஞர் அண்ணா போல் ! ".




  1966  ஆம் ஆண்டில்  காங்கிரஸ்  ஆட்சியில்  "அண்ணா "

என்கிற  பெயரை  திரைப்படப் பாடலில்  வருவதை  அந்த கால தணிக்கைத்

துறை ஒத்துக்கொள்ளவில்லை......



விளைவு  ?



" மேடையில்  முழங்கு  திரு. வி. க . போல் "


என்று மாற்றப்பட்டது !






    இன்னொரு  பாட்டு :


" சக்கரக்  கட்டி  ராஜாத்தி "  !


இந்த பாடலை  அறிஞர்  அண்ணாவே  முதலில்  " தணிக்கை "  

செய்ததைப்  பார்த்தோம் !


இனி  படத்தின்  பாடலில் :





  1 .பாடலின்  முதல்  சரணத்தில்  இப்படி  வருகிறது  : [




"  தோகை  மயிலின்  தோளை  அணைத்துபள்ளி  கொள்வது  சுகமோ ! "



      இந்த   வரிகளில்  " பள்ளி  கொள்வதை "     பள்ளி கொள்ளவிட்டு - அத்தான் - வெட்டிவிட்டு  -  மாற்றச் சொன்னர்கள் !        எப்படி  ?    /color]





    தோகை  மயிலின்  தோளை  அணைத்து   பழகிக் கொள்வது  சுகமோ ! "  







        ஆச்சா  !     அடுத்து  :           2 .. இரண்டாவது   சரணம்  :




" உறவைச்  சொல்லி நான் வரவா,  என் உதட்டில் உள்ளதைத் தரவா ? "    




   இதையும்  மாற்றச் சொன்னார்கள் :  

எப்படி  ?



   " உறவைச் சொல்லி நான் வரவோ  என்  உயிரை உன்னிடம்  தரவா ? "






         அப்புறம் ?


இன்னொண்ணு  !  


3 .  பாடலின்  இறுதியில்  :  


 " காலை  வரையில்  சேலை  நிழலில் கண்கள்  உறங்கிட  வா, வா ! "



இத்தையும் ....மன்னிக்கவும் ......ம்ம்..ம்.... இதனையும்  மாற்றச்சொன்னார்கள் !





எப்படி  ?    



" காலை  வரையில்     சோலை [  நிழலில்  கண்கள்  உறங்கிட  வா வ !/color]








 இப்படி    தணிக்கைத் துறை  பாடல்களில்   மூக்கை  நுழைத்து

பல்லை இளித்து  முழி  பிதுங்கி  உள்ளது !




b]     சரி, அதென்ன  :


" தணிக்கைக்கு  முன் "

மற்றும்

" தணிக்கைக்குப் பின் " ?


அது ஒன்றும் இல்லை, சிம்பிள் !
[/b]



         படம்  வெளிவருவதற்கு முன்னரே படக் கம்பனி

நிர்ணயித்த   பாடல்  இசையமைக்கப் பட்டு  இசைத்தட்டாக  வெளிவந்து விடும் !

அதுதான்  " தணிக்கைக்கு  முன் " !



        படத்தை  வெளியிட்டு  தணிக்கைக்கு அனுப்பும் போது

பாடல்களை  " அவர்களுக்கு  பிடிக்காத "   சொல் / சொற்கள்   இருப்பின்

அவைகளை மாற்றச்  சொல்லி  படக் கம்பனிக்கு  'டார்ச்சர் '

பண்னி,  பின்னர்  இசையமைப்பாளர்  -  Cum -  பாடகர்கள்  மறுபடியும்  வந்து

சொற்களை  மாற்றி  "   பாடு" வார்கள்  !  

மேற்படி  தணிக்கை  " குதறி" ய   பாடல்கள்  படத்தில்  மட்டும் இருக்கும் !

-  அத்தான் -  தணிக்கைக்குப்  பின் !  
   size]





  " சக்கரைக் கட்டி  "   பாடலின்  இரு  வடிவ்வங்களைக்  கேட்க

ஆசையாகா உள்ளதா ?



இதோ :




" சக்கரக்  கட்டி  ராஜாத்தி  !"


இசைத்தட்டு  பாடல்  - தணிக்கைக்கு  முன்னர் :


விரைவில்   தருகிறேன்!





" சக்கரக்கட்டி  ராஜாத்தி "  திரைப்பட  வடிவம் :


தணிக்கைக்குப்  பின் :




http://www.mediafire.com/listen/ubqib7zzyp2r843/sakkaraik_katti_-_A.C..mp3






        எம்கேஆர்சாந்தாராமின்  தணிக்கை பயம் !     என்ன கொடுமை சார் இது




      " இந்த  கட்டுரை இவ்வளவு  பெரிதாகிவிட்டதே.....

நம்ம  சிவா  சார்  இந்த கட்டுரையும் நீளம்  கருதி  தணிக்கை

செய்துவிடுவாரோ !  "      அழுகை


எம்கேஆர் எஸ் !




          " பெற்றால்தான் பிள்ளையா "

படம்  வெற்றியா ?


  படம்  வெற்றி !


படம்  9/12/ 1966  -  அன்று  வெளியானது.

முதலில்  சுமாரான  போன படம் பின்னர்   எம்ஜிஆர்  சுடப்பட்ட பிறகு

" பிக் அப் "   ஆகி  100  நாட்களை கடந்து  ஓடியது !






          " பெற்றால்தான் பிள்ளையா "  வும்

எம்ஜிஆர் சுடப்பட்ட   சம்பவமும் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! WxfRaS1tR5CseC4JXlVd+m-r-radha-569195


    படத் தயாரிப்பாளர்  வாசு  , எம் ஆர்  ராதாவிடம்  ரு ஒரு  லட்சம்

கடன்  வாங்கினார்  என்று முன்னர்  சொன்னேன் அல்லவா !

அதனை   எம் ஆர்   ராதா  திருப்பிக் கேட்க .......

எம் ஆர்  ராதாவும் , வாசுவும்  எம்ஜிஆரிடம்  இது பற்றி பேச.....

அதனால்  விளைந்த   வாய்ச் சண்டையில்  எம் ஆர்  ராதா, எம்ஜிஆர்

ஐ  சுட்டு, தானும் சுட்டுக்கொண்டார் !




" சரி, சரி   , மேலே   சொல்லுங்கள் !  "


என்கிறீர்களா !


வாணாம், ஸ்வாமி  ! கட்டுரை  இப்போவே  பெரிதாகி விட்டது !

இந்த  எம் ஆர்  ராதா - எம்ஜிஆர் - டுமீல்-  டுமீல்  - கட்டுரையை

தனியே  எழுதுகிறேன் !

இந்த  கட்டுரையில்  காமராஜர்  பெயரும்  'அடி படுகிறது ! '

எனவே   விரிவாக  எழுதுகிறேன் , சர்த்தானா !     மீண்டும் சந்திப்போம்







 
       உங்கள்  கருத்துக்களை  எழுதுங்கள் !






  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





 
      அடுத்த  கட்டுரை  :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! MvMcLTuXSxSaNo7EXWFR+TMS_1467454g



" டி  எம் எஸ்      அவர்களின்

'நவரசப்   பாடல்கள் ! '  





எம்கேஆர்சாந்தாராம்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed 14 May 2014 - 13:16

நல்ல பதிவு தொடருங்கள்.
வரிகளுக்கிடையேயான தொலைவை குறைத்துக்கொண்டால்
நீளம் குறையும் என நினைக்கிறேன்.
அருமை அருமை
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 14 May 2014 - 15:22

தமிழ்த் திரை உலகை திரும்பிப் பார்ப்போமா என்றதும் என்னத்த திரும்பிப் பார்க்குறது என்று சற்று சோர்வாக படிக்கத் துவங்கினேன், ஆனால் தங்களின் எழுத்துநடை என்னை நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. சினிமா தகவல்களுக்காகப் படிக்காதவர்கள் கூட உங்களின் எழுத்துநடையை ரசிப்பதற்காக நிச்சயம் இக்கட்டுரையைப் படிப்பார்கள் என்றுதான் தளத்தின் முகப்புப் பக்கத்தில் கட்டுரையின் சுட்டியை இணைத்துள்ளேன். படிக்கும் பொழுது என்னையறியாமல் சிரித்து மகிழ்ந்தேன்.


* பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தகவல்களை தெள்ளத் தெளிவாகத் தந்துள்ளீர்கள். இந்த இரட்டை இயக்குனர்கள் திரு கிருஷ்ணன் மற்றும் திரு பஞ்சு பற்றி இன்றுதான் அறிந்துள்ளேன்.

* ஆரூர்தாஸ் அவர்களின் படத்தைப் பார்த்துவிட்டு ஏன் பாலச்சந்தர் படம் இடம் பெற்றுள்ளது என்று கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு அவரைப் பற்றிய தகவல் ஏதும் இல்லாததால் மீண்டும் படத்தைப் பார்க்கும் பொழுதுதான் அந்தப் படத்தில் ஆரூர்தாஸ் என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன்.

* இடையில் சிம்புவையும், சிவாவையும் வம்புக்கிழுத்துள்ளது ரசிக்க வைத்தது.

* பாடல்களுக்கும் தணிக்கை முறை இருந்துள்ளது என்பது தங்களின் கட்டுரையைப் படித்ததும் தான் அறிந்து கொள்ள முடிந்தது.

* சக்கரக்கட்டி ராஜாத்தி பாடலைத் தரவிறக்கம் செய்து கொண்டேன். தணிக்கை செய்யப்படாத பாடலைக் கேட்க ஆவலாக உள்ளேன்!

* மேலும் தங்களின் கட்டுரைத் தொடர்ச்சி எப்பொழுது வரும் என்று காத்திருக்க வைத்துவிட்டீர்கள்!





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed 14 May 2014 - 18:53

அன்புள்ள டாக்டர் ஐயா, உங்களது தொடக்கமே சூப்பரோ சூப்பர். இவற்றை எல்லாம் அச்சிட்டு எனது நூலகத்தில் வைக்கவிருக்கிறேன். இது முகஸ்துதி அல்ல, மனதிலிருந்து வரும் உண்மை. தொடருங்கள், பலருக்கும் தெரியாத பல அற்புதங்களை அள்ளித் தாருங்கள். நன்றி.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu 15 May 2014 - 18:27

vishwajee wrote:நல்ல பதிவு தொடருங்கள்.
வரிகளுக்கிடையேயான தொலைவை குறைத்துக்கொண்டால்
நீளம் குறையும் என நினைக்கிறேன்.
அருமை அருமை


 திரு. விஷ்வஜீ    அவர்களுக்கு,

தங்களின்  பாராட்டுக்களுக்கு  மிக்க  நன்றி !

தொடர்ந்து  படியும்க்கள்  !




   
    வரிகளுக்கிடையேயான   தொலைவு

மற்றும் ' வண்ணமயமாக '   எழுதுவது  பற்றி

எனக்குத் தெரிந்தவை :




 1.  கட்டுரையில்  வரும் முக்கிய  பிரமுகர்கள்  பேசுவதையும்,

பிரமுகர்களுக்கு  இடையே  பேசிக்கொள்வதையும்

அது மட்டும் இல்லாது ..........

'நான் பேசிக்கொள்வதையும்  '  ( ! )  



     வேறு  படுத்திக் காட்டத்தான்


இந்த  இடை.......வெளி !





   2. இப்படி  இடைவெளி விட்டும்  எழுதினால்  படிப்பவர்களுக்கு

கொஞ்சம்  ' சல்லீசாக '    - அத்தான் -   'ஈஸி' யாக   -  அத்தான் -

எளிதாகவும் -  போட்டிருக்கும் தலைப்பில்  ஆர்வம் இல்லாதவராக

இருந்தாலும் -  ( நம்ம  சிவா  சாரைப் போன்று  !    கண்ணடி    )

படிப்பதற்கு   சுண்டி  இழுப்பதற்கும்

ஈஸியாகவே  இருக்கும் என்பது   எனது  ஐதீகம் !





    3. சில சமயங்களில்  கட்டுரையின்  '  மேட்டர்'   படிப்பதற்கு

மிக  நன்றாக இருப்பினும்  நான் மருத்துவக் கல்லூரியில்  படித்த /

படித்துக்கொண்டிருக்கும் :



"  The   Text  Book   Of   Medicine  "


போன்று  " வள - வள " என்று  

 ஏதோ   ' லெக்  பீஸ்ஸ் '  இல்லாத   " குஸ்கா "   மாதிரி  படிப்பதற்கு

கடுப்படிக்காதா, என்ன !  

மற்றபடி  வேறு காரணங்கள் இல்லையா, ஐயா !

மீண்டும் நன்றியுடன் !
எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu 15 May 2014 - 18:33

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110242-topic#1063578"] அன்புள்ள டாக்டர் ஐயா, உங்களது தொடக்கமே சூப்பரோ சூப்பர். இவற்றை எல்லாம் அச்சிட்டு எனது நூலகத்தில் வைக்கவிருக்கிறேன். இது முகஸ்துதி அல்ல, மனதிலிருந்து வரும் உண்மை. தொடருங்கள், பலருக்கும் தெரியாத பல அற்புதங்களை அள்ளித் தாருங்கள். நன்றி.


அன்ப மிக்க திரு. மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு,


தங்களின் பாராட்டுக்கள் எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது !

தொடர்ந்து படியுங்கள் !


நன்றி ஐயா !!



எம்கேஆர்சாந்தாராம்ம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu 15 May 2014 - 19:12

 அன்புள்ள திரு. சிவா  அவர்களுக்கு,


தங்களின்  பாராட்டுக்களுக்கு   மிக்க  நன்றி !

என்னூடைய  கட்டுரை, உங்களின் ரசனைக்கு  மிகவும் பொருந்தி

இருப்பதை அறிந்து  பெரு மகிழ்ச்ச்சி கொண்டேன்  !

நன்றி , சிவா சார் !





 
      தளத்தில்  முகப்புப் பக்கத்தில்  எனது கட்டுரையின்

சுட்டியை  இணைத்ததற்கு  எனது

நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் !




தொடந்து படியுங்கள், ஐயா .





  உங்களுக்காக  :  திரு  ஆர்ருர்தாஸ்  அவர்களின் இரு இளவதுப் படங்கள் !




  சிவாஜி   கணேசனுடன்ன் :


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! J9qohGepSUiMnSmcLuWG+arur-siva



எம்ஜிஆருடன் :


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! StPxL6V6RnGYXVZFlVXR+arur-mgr






   
       தணிக்கையில்  சிக்கிய   2    பாடல்கள் :


  தணிக்கைக்கு முன்  மற்றும்  தணிக்கைக்குப் பின் :






 " நல்ல  நல்ல  பிள்ளைகளை நம்பி "



தணிக்கைக்கு  முன் :


( ' மேடையில்  முழங்கு  அறிஞர்  அண்ணா போல் "

  என்று  வருவது : )




http://www.mediafire.com/listen/hcv0szdqrd6fflj/one.mp3






" நல்ல  நல்ல  பிள்ளைகளை நம்பி "  

தணிக்கைக்குப் பின் :


( மேடையில் முழங்கு  திரு. வி. க. போல  -  என்று வருவது  )    





http://www.mediafire.com/listen/tw2kgfpz4lpf97w/NALLA__-_A.C.mp3





   தணிக்கைக்குப் பின்  -- விடியோ  :








%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




  " சக்கர்க்கட்டி  ராஜாத்தி "

தணிக்கைக்கு  முன் :



http://www.mediafire.com/listen/gqp69oi6b6frtpz/pp-_duet_-_bc_bc_bc.mp3






  " சக்கர்க்கட்டி  ராஜாத்தி "

தணிக்கைக்கு  பின் :




http://www.mediafire.com/listen/ubqib7zzyp2r843/sakkaraik_katti_-_A.C..mp3





  " சக்கர்க்கட்டி  ராஜாத்தி "

தணிக்கைக்கு  பின்  விடியோ : :









எம்கேஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 15 May 2014 - 20:05

ரொம்ப நல்லா எழுதரீங்க ஐயா புன்னகை தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 May 2014 - 20:29

" சக்கர்க்கட்டி ராஜாத்தி "
தணிக்கைக்கு முன் :

http://www.mediafire.com/listen/gqp69oi6b6frtpz/pp-_duet_-_bc_bc_bc.mp3

இந்தச் சுட்டியிலிருந்து என்னால் பாடலைத் தரவிறக்க முடியவில்லை!

"Chakkara Katti" by P. Susheela may be available for download from Amazon. - இவ்வாறு வருகிறது!




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக