புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
சிவா
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
bala_t
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
297 Posts - 42%
heezulia
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
6 Posts - 1%
prajai
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:45 pm

பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Jinna2ஒற்றைப்படையாக பாகிஸ்தானை உருவாக்கியவர் என்று மட்டுமே நம்மால் அறியப்படுகிற ஜின்னா சுவையான முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் இல்லை. மது அருந்துவார்,உருது ஒழுங்காக பேச வராது அவரே உண்மையில் குஜராத்தி ! காந்தி படித்த அதே சட்டக்கல்லூரியில் தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும் சாப்பிடுவார் என்பார்கள்; ''தொழுகை எல்லாம் பெரும்பாலும் செய்யவே மாட்டார்.“குரானில் ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !” என்று காந்தி சொல்கிற அளவுக்கு தான் மதத்தின் மீது அவருக்கு இருந்த பற்று.

ஜின்னா ஷியா முஸ்லீம் குடும்பத்தில் குஜராத்தில் வணிகக்குடும்பத்தில் பிறந்தார். லிங்கன்ஸ் இன்னில் சட்டம் படித்துவிட்டு மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞராக மாறினார் அவர். பாம்பேவில் நடந்த முதல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். கோகலே மற்றும் தாதாபாய் நவ்ரோஜி எனும் இருவரின் கவனத்தையும் ஈர்த்தார். தேசியத்தை தூக்கிப்பிடித்த ஜின்னா முஸ்லீம் லீகில் ஆரம்ப காலங்களில் சேரவில்லை. அதன் மதவாத போக்கை உண்மையில் கண்டித்தார் அவர். திலகருக்கு எதிராக ஆங்கிலேய அரசு தொடுத்த வழக்கில் ஆஜராகி அவருக்காக சிறப்பாக வாதாடினார்.‘முஸ்லீம் கோகலே !’ என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரின் பணிகள் இருந்தன. “இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்கான தூதர்” என்று சரோஜினி நாயுடு போற்றுகிற அளவுக்கு செயல்பட்டார் .

மின்டோ-மார்லி சீர்த்திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இம்பீரியல் சட்ட கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே காந்தியின் தென் ஆப்ரிக்க போராட்டத்தை ஆதரித்து பேசினார். முஸ்லீம் லீக் கட்சியின் மதவாத போக்கை எதிர்த்து தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் வசம் கட்சி வந்திருந்தது ; ஜின்னா அதனால் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தார்.

ஹோம் ரூல் இயக்கத்தின் போராட்டங்களில் தளபதியாக செயல்பட்டார். தனித்தனி தொகுதிகள் என்பதை எதிர்த்தார் ஜின்னா ,இந்துக்களும்,இஸ்லாமியர்களும் தனித்தனி அங்கங்கள் இல்லை என்று தெளிவாக பேசினார். ஆனால்,காங்கிரஸ் மற்றும் லீக் ஒப்பந்தம் லக்னோவில் கையெழுத்து ஆன பொழுது தனித்தொகுதிகள்,மத ரீதியான இட ஒதுக்கீடு ஆகியவற்றை காங்கிரஸ் ஏற்க செய்தார். காந்தி, காங்கிரசின் போராட்ட முறையை அமைதி வழிக்கு திருப்பியதை ஜின்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ரீதியான போராட்டம் தேவை என்று அவர் சொன்னார்; சட்டத்தை உடைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். நாக்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மேடையை விட்டு அவரைத்தள்ளியது அவரைக்காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.

இதுவரை இஸ்லாமியர்களும்,இந்துக்களும் இணைந்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்த ஜின்னா இஸ்லாமியர்கள் தங்களை கூட்டாக இணைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். சுயராஜ்ய கட்சியோடு இணைந்து கொண்டு ஆங்கிலேய அரசாங்கத்தை சட்ட சபைகளில் எதிர்த்தார்.1925இல் ஒரு இஸ்லாமிய இளைஞன்,”நான் முதலில் ஒரு இஸ்லாமியன் !” என்ற பொழுது அவனைக்கண்டித்து,”நீ முதலில் இந்தியன்;பிறகு தான் முஸ்லீம் !” என்றார். சைமன் கமிஷனை புறக்கணித்த காங்கிரசின் போராட்டத்தை ஆதரித்தார்,ஆனால்,அதில் பங்குபெறவில்லை.

சைமன் கமிஷனுக்கு போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளை கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல்,வட கிழக்கு மாகாணத்தை தனி மாகாணமாக நடத்துதல்,மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல்,இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித்தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார் இதற்கு இணையாக காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பது தான் அது ! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள். இன்னொரு புறம் ஹிந்து மகா சபை,சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஜின்னா தோல்வி முகத்தை தாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து போய் அங்கிருந்தபடியே வட்ட மேசை மாநாடுகளில் பங்குகொண்டார். நான்கு வருடங்கள் கழித்து முஸ்லீம் லீகின் தலைவர் பதவியை ஏற்க அவரை அழைத்தார்கள். ஜின்னா இந்த்முறை காயங்களை ஆற்றிக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு வந்திருந்தார். இந்திய அரசு சட்டம் மீண்டும் தேர்தல்களை கொண்டு வந்திருந்தது. தேர்தல்களில் போட்டியிட்டார்.
ஏற்கனவே பதினான்கு புள்ளி அறிக்கைகளில் இருந்த எல்லா கோரிக்கைகளையும் ஆங்கிலேய அரசு நிறைவேற்றியிருந்தது.

அடுத்த நடந்த தேர்தலில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமிய தொகுதிகளையே லீக் வென்றிருந்தது. காங்கிரசுடன் பேச வேண்டும் என்றால் காங்கிரஸ் தன்னை ஒரு ஹிந்து கட்சி என்று அறிவித்துக்கொண்டு பேசவரட்டும் என்று லடாய் போட்டார். இனிமேல் சமூக மாற்றம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்துகொண்டு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைத்தார்,பல்வேறு மாகணங்களில் பயணம் செய்து மதவாதத்தை பரப்பினார்.

காங்கிரஸ் அரசுகள் உருதுக்கு பதிலாக ஹிந்தியை மாகாண மொழியாக அறிவித்தது,வந்தே மாதரம் பாடலை பாடியது, பசுவதையை எதிர்த்து சட்டங்கள் இயற்றப்பட்டது எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக ஜின்னா மாற்றிக்கொண்டார். அல்லா மற்றும் குரானின் பெயரால் இயங்குங்கள்; இந்து அரசை அமைக்க பார்க்கும் காஃபிர்களின் சதிக்கு பலியாகாதீர்கள் ! என்று முழங்க ஆரம்பித்தார். லாகூர் மாநாட்டில் சிறுபான்மை என்பதை தனி நாடு என்று மாற்றிக்கொண்டார் . பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தது.

உலகப்போர் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவு தந்தார் ஜின்னா. அப்பொழுது பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். வெள்ளையனே வெளியேறு என்றது காங்கிரஸ் ,”வெட்டிவிட்டு வெளியேறு !” என்று சொன்னார் ஜின்னா. காந்தியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்,ஆனால்,ஒரு இம்மிகூட நகராமல் தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிற்பார் அவர்.

“இஸ்லாமை காப்பாற்ற ஒரே வழி பாகிஸ்தான் தான் ! நாத்திகவாதிகளுக்கும்,இஸ்லாமின் பாதுகாவலர்களுக்குமான போராட்டம் இது” என்று அழுத்தி சொன்னார். நம்மையும் ஹிந்துக்கள் ஆக்கிவிடுவார்கள் என்று சொல்லி தேர்தல்களை சந்தித்தார். முஸ்லீம் தொகுதிகளை அப்படியே அள்ளியது லீக். எண்பத்தி எட்டு சதவிகித இஸ்லாமிய ஓட்டுக்களை பெற்றிருந்தது லீக். பஞ்சாப் மற்றும் வங்கத்தில் இருந்த 207 தொகுதிகளில்188 தொகுதிகளை வென்று மிரட்டியது.

கேபினெட் மிஷன் பாகிஸ்தான் என்கிற கோரிக்கையை நிராகரித்து மூன்று பிரிவாக மாகாணங்களை பிரித்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது. அதை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரஸ் மற்றும் லீக் இரண்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . மாகாண அரசுகளிடம் முக்கியமான எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டுமே என்று கேட்டார் ஜின்னா. முடியாது என்று காங்கிரஸ் மறுத்தது.

நேரடி நாள் என்று அறிவித்து பாகிஸ்தானுக்கு போராட சொன்னார் மக்களை. மதக்கலவரங்கள் வெடித்தன. வங்கம், பஞ்சாப், பீகார் எல்லாம் ரத்தமயமானது. நிலைமை கைமீறி போவதை பார்த்தார்கள்; காந்தி ஜின்னாவையே நாட்டின் தலைவர் ஆக்கிவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்தார். நேருவும்,படேலும் கேட்கிற மனநிலையில் இல்லை. பிரிவினையை மவுன்ட்பேட்டன் முடித்துவைத்தார்.

ஜின்னா ஒரே ஒரு ஸ்டெனோ, டைப்ரைட்டரை வைத்து தன்னுடைய தேசத்தை சாதித்தார். அதற்கு பிறகு பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற தேசமாக கனவு கண்டார்,”இங்கே அரசு ஒரு மதத்துக்காக இயங்காது. பாகிஸ்தான் மதச்சார்பற்ற தேசமாகவே இருக்கும் !” என்று சொன்னார் அவர். ஆனால்,அவரின் மரணத்துக்கு பிறகு அவர் வளர்த்த மதவாதம் பாகிஸ்தானை இஸ்லாமிய தேசமாக்கியது. மும்பையில் தனக்கிருந்த வீட்டை ஜின்னா விற்கவில்லை; இந்த பிரிவினை நிரந்தரமானதில்லை என்றே அவர் நம்பினார். ஆனால்,அது காலத்துக்குமான பிரிவுக்கோடாக ஆகிப்போனது !

[thanks]விகடன்[/thanks]

பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக