புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
3 Posts - 3%
prajai
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
2 Posts - 2%
manikavi
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
2 Posts - 2%
Pampu
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
1 Post - 1%
KristLowry
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
214 Posts - 42%
heezulia
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
6 Posts - 1%
prajai
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_m10சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:01 pm

சுவையான சிறுதானிய ரெசிப்பி
க.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தீ.கெளதீஸ்


சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், திருச்சியில் சென்ற மாதம் எட்டு நாட்களுக்குப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் குதிரைவாலி பிரியாணி, ராகி அடை, ராகி பர்கர், சிறுதானிய அடை, ராகி பீட்சா, சிறுதானிய கட்லெட், சாமை சாம்பார் சாதம், வரகு தயிர் சாதம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விதமாக, சிறுதானிய உணவுகளை சுவையாக சமைத்து அசத்தியிருந்தனர் சமையல் வல்லுநர்கள். திருவிழாவில் செய்து காட்டிய சில சிறுதானிய உணவுகளின் ரெசிப்பிகள் இங்கே...



குதிரைவாலி பிரியாணி

தேவையானவை: குதிரைவாலி அரிசி 4 கப், பீன்ஸ், கேரட் 300 கிராம், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி தலா 100 கிராம், பூண்டு 5 பல், இஞ்சி ஒரு துண்டு, கொத்த

மல்லித்தழை, புதினா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, நெய், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  P24
செய்முறை: பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃப்ளவர், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை சேர்த்து, பிறகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து காய்கறிகளைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டி கிளறி ஏழரை கப் தண்ணீர் சேர்த்து கொத்த மல்லி, புதினா சேர்த்து கிளறி குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். இது மலச் சிக்கலைத் தடுத்து, கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

சாமை சாம்பார் சாதம்

தேவையானவை: சாமை அரிசி 4 கப், பீன்ஸ், காரட் 250 கிராம், கத்திரிக்காய், தக்காளி தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் 8, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா ஒரு கப், சின்ன வெங்காயம் 10, முருங்கைக்காய் 2, உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தேவையான அளவு, சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் சிறிதளவு.
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  P24a
செய்முறை: சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.

சிறுதானிய கார அடை

தேவையானவை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி கால் கிலோ, முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை 4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு.
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  P24b
செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும்.

பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

வரகு தயிர் சாதம்

தேவையானவை: வரகு அரிசி, தயிர் தலா 4 கப், பால் 100 மி.லி, பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் ஒரு கப், பச்சை மிளகாய் 7, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் தேவையான அளவு.
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  P24c
செய்முறை: வரகு அரிசியைக் கழுவி வேகவைக் கவும். சாதம் சூடாக இருக்கும்போது, தயிர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும். இதில், நறுக்கிய மிளகாய் வதக்கி, துருவிய கேரட் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் ஃபோலிக் ஆசிட், கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் சீரான எடையைக் குறைப்பதற்கும், மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தாக இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 10:26 pm

அருமையான குறிப்புகள் புன்னகை நன்றி நேசன் .....நான் குதிரை வாலி இல் உப்புமா மற்றும் தயிற் சாதம் செய்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Sep 22, 2014 1:31 pm

சாமைப் பொங்கல்!
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24g
தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 300 கிராம்
பாசிப் பருப்பு - 150 கிராம்
சீரகம் - 10 கிராம்
மிளகு - 5 கிராம்
இஞ்சி - 10 கிராம்
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


குக்கரில் நெய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு, வாசம் வரும் வரை நன்றாக வறுத்து பிறகு, முந்திரி, இஞ்சி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். 1/4 மணி நேரம் ஊற வைத்த அரிசி, பாசிப் பருப்புடன், மூன்று பங்கு நீரையும் சேர்த்து, உப்பு போட்டு, குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வரும்வரை அடுப்பை 'சிம்’மில் வைத்திருந்து இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி முடக்கற்றான் சூப்!
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24f
தேவையான பொருட்கள் :

கேரட், பீட்ரூட், குடை மிளகாய், தக்காளி - தலா 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
(கார்ன் ஃப்ளார்)உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளையும் கீரையையும் சேர்த்து வேக வைக்கவும். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து, வாணலியில் இட்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும். கரம் மசாலாவைச் சேர்க்கவும். பிறகு, வேகவைத்த காய்கறிக் கலவையுடன் வதக்கிய மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, மக்காச்சோள மாவு (கார்ன் ஃப்ளார்) போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கினால், சுவையான சூப் ரெடி.

கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்!
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24b
தேவையான பொருட்கள்:

கம்பு, சோளம், தினை, வரகு, அரிசி - தலா 250 கிராம்
உளுந்து - கைப்பிடி
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கருப்பட்டி - 1 உருண்டை
வெல்லம் - 1 உருண்டை

செய்முறை:


தானியங்கள் அனைத்தையும் நன்றாக ஊற வைத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியையும் வெல்லத்தையும் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, மாவில் ஊற்றிக் கலந்து பணியாரச் சட்டியில் ஊற்றி எடுத்தால், சுவைமிக்க சிறுதானிய இனிப்புப் பணியாரம் தயார்.

2 கேரட், 5 சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிது இஞ்சி, 3 பல் பூண்டு ஆகியவற்றை நறுக்கி, அரைத்த மாவுடன் கலந்து ஊற்றி, காரப் பணியாரமும் செய்யலாம். இதற்கு கருப்பட்டி, வெல்லம் சேர்க்கக் கூடாது.

கம்பு அடை!

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24a
தேவையான பொருட்கள்:

கம்பு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 டீ ஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறுதுண்டு

செய்முறை:

கம்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அவை, அரைபட்டுக் கொண்டிருக்கும் போதே காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு கலந்து, 2 மணி நேரம் வைத்திருந்து, அடையாக ஊற்றவும்.

கேழ்வரகு இட்லி!
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24c
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 250 கிராம்
கேழ்வரகு - 250 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வரகரிசி, கேழ்வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்து, தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து... தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, நான்கு மணி நேரம் வைத்திருந்து இட்லியாக அவிக்கவும்.

தினை - முள்முருங்கை தோசை!
சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24d
தேவையான பொருட்கள்:

ஆய்ந்த முள்முருங்கைக் கீரை (கல்யாண முருங்கைக் கீரை) - ஒரு கைப்பிடி
தினை - 200 கிராம்
அரிசி - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்

செய்முறை:

தினை, அரிசி இரண்டையும் ஊற வைத்து, அவற்றுடன் உளுந்தைச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். முள்முருங்கைக் கீரையைத் தனியாக அரைத்து, மாவில் கலந்து தோசையாகச் சுட்டெடுத்தால் மணக்கும் முள்முருங்கைக் கீரை தோசை தயார்.

முடக்கற்றான் கீரை-சோள தோசை!

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  Pv24e
தேவையான பொருட்கள்:

ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
நாட்டுச் சோளம் - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:


நாட்டுச் சோளத்தையும் உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையைச் சேர்த்து நன்கு கலந்து, தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊற்றி எடுத்தால், மூட்டுவலிகளை விரட்டும் முடக்கற்றான் கீரை தோசை தயார்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Sep 22, 2014 2:38 pm

ருசியான தகவல் பகிர்வுக்கு நன்றி
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 12:02 am

இரண்டு பதிவுகளையும் இணைத்து விட்டேன் நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக