புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
34 Posts - 52%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
17 Posts - 2%
prajai
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
9 Posts - 1%
jairam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Page 1 of 28 1, 2, 3 ... 14 ... 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:01 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். YYrQ2m1T4mMyWnxi1D9Q+GarudaVisnuji(1)

கடவுள் நமக்கு இந்தப்பிறவியை மனித ஜென்மமாய் கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மத்தில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும்.

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் குவியலாகி விடும்.

ஒருவன், ஏதோ ஒரு இடத்தில், ஒரு கிரவுண்டு வாங்கிப் போடுகிறான். நாலைந்து வருஷம் கழித்து, வீடு கட்டலாம் என்று அங்கே போய் பார்க்கிறான். இவனுடைய கிரவுண்டில், ஆள் உயரத்துக்கு ஒரு புற்று உண்டாகியிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது? கரையான், ஒவ்வொரு மணலாக, கொஞ்சம் கொஞ்சமாக, இந்தப் புற்றைக் கட்டி விட்டது.

இப்போது, இதை இடிக்க வேண்டுமானால், நாலு ஆள், கடப்பாரை எல்லாம் வேண்டும். இடித்த மண்ணை அப்புறப்படுத்த ஒரு லாரியே வேண்டியிருக்கும். கரையான் சுலபமாக இவ்வளவு பெரிய புற்றை கட்டி விட்டது ஆச்சரியமாக இல்லையா?

இதே போலத் தான் மனிதனும், வாழ்நாளில் சிறுசிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரி... அடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும்.

ஒருவன் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறான் என்றால், "அவனுக்கென்ன, பூர்வஜென்ம புண்ணியம்... இப்போ அனுபவிக்கிறான்...' என்று சொல்கின்றனர் அல்லவா? அந்த பூர்வஜென்ம புண்ணியம், இப்போது அவனுக்கு உதவுகிறது. பாவம் செய்திருந்தால் அதற்குண்டான வேதனையை அனுபவிக்கிறான். இரண்டையும் நாமே தான் சம்பாதித்துக் கொள்கிறோம்.

பரலோகத்தில் யம தர்மனிடம் கொண்டு போய் நிறுத்துவர். அங்கே பொய் சொல்ல முடியாது; சிபாரிசு கடிதம் செல்லுபடியாகாது. இவன் செய்த பாவ, புண்ணியங்கள் தான் முன்னால் வந்து நிற்கும்.

சேர்த்து வைத்த பணமோ, நகை நட்டோ, கார், பங்களாவோ, மனைவி, மக்களோ யாரும் உதவ முடியாது. அவைகளெல்லாம் இந்த உலகத்தோடு சரி.

அதனால், வாழ்க்கை என்பதில் கடமைகள் என்பதும் உண்டு. தனக்காக, பரலோக சுகத்துக்காக செய்து கொள்ளும் புண்ணியங்களும் உண்டு. வீடு, மனைவி, மக்கள் என்றே எப்போதும் சொல்லிக் கொண்டு உயிரை விட்டால் மனித பிறவியே வீண் தான்.

கூடவே தர்மம், தானம் என்பதிலும் சிரத்தை இருக்க வேண்டும். "அடடா... இவ்வளவு சம்பாதித்தோமே... இவ்வளவு சேர்த்து வைத்தோமே... ஒரு தானம் செய்தோமா? ஒரு தர்மம் செய்தோமா? ஒரு கோவிலுக்குப் போனோமா? ஒரு அதிதிக்கு சாப்பாடு போட்டோமா?' என்று பரிதாபப்பட வேண்டும். அவ்வப்போது எது முடியுமோ அந்த புண்ணியத்தை சேர்த்து விட வேண்டும். இப்படி சேர்த்த புண்ணியம் நம்மை கை தூக்கி விடும்; காப்பாற்றும்.

இப்படி சேர்த்த புண்ணியத்தில் மனைவியோ, மக்களோ, பந்துக்களோ, நண்பர்களோ பங்கு கேட்க முடியாது; யாராலும் அபகரிக்க முடியாது. அவனவன் சம்பாதித்த புண்ணியம் அவனுக்குத் தான். அது மட்டுமல்ல... அவன் செய்த புண்ணியத்தின் பலனை அவனது சந்ததியினர் அனுபவிக்க முடியும். "தாத்தா செய்த புண்ணியம், அப்பா செய்த புண்ணியம் ஏதோ சவுக்கியமாக இருக்கிறேன்...' என்று பேரனும், பிள்ளையும் சொல்வர்.

அதனால், ஏதாவது புண்ணிய காரியம் செய்து, புண்ணியத்தைச் சேர்த்து வைக்க வேண்டாமா? இது தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும். அப்போது தான் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரும் சவுக்கியமாக இருக்க முடியும். "ஏமாந்து விடாதே தர்மம் செய், புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொள்...' என்றனர். யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:03 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். VYlo0KvRwuUoHMRbJKMQ+shri_narayana_on_shesha_venerated_by_garuda_wj19

சரி. இப்போது கருடபுராணம் என்றால் என்ன? அதை யாரால், யாருக்கு சொல்லப்பட்டது? என்பதை பார்ப்போம்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:05 am

தினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம். எழுதியவர் வியாசர்.
இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.

அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்!  இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.

வைணவ புராணமான இதில்  மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். இப்புராணத்தில், நரகத்தை நிச்சயிக்கும் பாவங்களைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீளவும் வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போதும், வியாதிகள் வரும்போதும், இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதும் தான் கடவுளின் நினைப்பு நமகெல்லாம் வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை என்பதையும் இப்புராணம் நமக்கு உணர்த்துகிறது.

கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்புராணம் படித்துப் பயப்படுவதற்காக மட்டுமல்ல அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவும் தான்.

பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம். தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும். மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன?

எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது? என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

இனி, கருடபுராணத்தை தொடர தொடர்ந்து வாருங்கள்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:14 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். IvFY5MHRoevqxLArt25h+13-mahalaya-paksha300

வ்வொரு உயிரின் எண்ண உணர்வதிர்வுகள் அந்த ஜீவனை கட்டு படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் நீக்கி அவை விடுபட்டு செல்ல இந்த சிரார்த்தம் வழிவகை செய்கிறது. இதன் விளைவாக உடலை விட்ட உயிரானது எல்லாவகை உணர்வு பிணைப்புகளில் இருந்தும், அதிர்வுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தக்க உலகத்தை சென்றடையும்.

வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை மகாளயபட்சம், மாதப்பிரப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தந்தை இறந்த பிறகே தர்ப்பணம் செய்யும் உரிமை மகனுக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அப்படி செய்யப்படும் தர்ப்பணங்கள் தந்தை வழியில் முன் தோன்றிய முன்னோர்கள் ஆறு பேருக்கும், தாய் வழியில் முன் தோன்றிய ஆறு பேருக்கும் சேர்த்து, மொத்தம் பன்னிரண்டு பேருக்கு செய்யவேண்டும். அதாவது மூன்று தலைமுறைகளுக்கு செய்யவேண்டும்.

காசி, கயா, பத்ரிநாத், இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் பிரம்மகுண்டத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்த கர்மங்களை செய்துவிட்டால் பிறகு வருடந்தோறும் வீட்டில் அவர்கள் இறந்த திதியில் கர்ம காரியங்கள் செய்யவேண்டியதில்லை என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது தவறு. புண்ணிய தளங்களில் செய்வதால் அதிக புண்ணியமும், பலனும் கிடைக்கும். அதனால், தொடர்ந்து வருடா வருடம் தவறாமல் பிதுர் காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.

கருடபுராணத்தை படிக்க துவங்குவதற்கு முன், மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

இப்புராணமானது பகவான், கருடனுக்கு கூறும் கேள்வி – பதில் பாணியில்  அமைந்துள்ளது.

இனி, வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருட புராணத்தை பகவானை வணங்கி படிக்க தொடங்குவோம்......

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:15 am

விமந்தனி wrote:அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

ரொம்ப சந்தோஷம் விமந்தினி.....திரி துவங்கிட்டீங்க....................வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். QCPBMltRYy9WII31jkXo+download(1)

கருட காயத்ரீ :

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்தோ கருடஹ் ப்ரசோதயாத் !!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 31, 2014 10:24 pm

வாழ்த்துக்கள் அக்கா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஒரு பயனுள்ள திரி.... வாழும் வாழ்க்கைக்கும், வாழ்ந்து முடிந்த பின் உள்ள வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் இது இருக்கும் என எண்ணுகிறேன்...

படிக்க ஆவல்.... பதியுங்கள் மேலும்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 01, 2015 12:55 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். MSPP4FTwRhyqPzIhBIZ8+vishnu-lakshmi-IV17_l

1. பெருமாள் திருமாலின் உந்தியில் பிரம்மதேவன் தோன்றி இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார். தவம் புரிவதற்குச் சிறந்த இடமாக ஆரணியங்களுகேல்லாம் அரசாக விளங்குவது நைமிசாரணியம்.

புராணங்களைச் சொல்வதில் வல்லவரான சூதமாமுனிவர் அங்கு வந்து கொண்டிருந்தார். வேத வேதாங்கங்களை ஐயந்திரிபற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ-ஹரிகதா சங்கீர்த்தன சீலர்க்களுமான கவுனகர் முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள்.

சௌனகாதிமுனிவர்கள் எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து உயர்ததொரு ஆசனத்தில் அமரச் செய்து பூஜித்து வணங்கினார்கள்.                       அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகளுக்கு அஞ்சலி செய்து,

“சூதமாமுனிவரே! தங்களிடமிருந்து பல புராணங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆகவே விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

“தாங்களோ பகவானின் அம்சமாக விளங்கும் வேதா வியாச முனிவரின் சீடர். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. தர்மார்த்த கர்ம மோட்சம் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்புருசார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீகமான புராணம் ஒன்றை தேவரீர் கருணை கூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும்.” என்று பணிவோடு கேட்டார்கள்.
             
அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி சூதமாமுனிவர் தம் குருநாதரான வியாச மகரிஷியின் திருவடித் தாமரைகளைத் தமது இருதயத்தில் தியானித்து, பிறகு சிரசின்மேல் தம்மிரு கரங்களையும் குவித்து, சர்வஜெகத்காரணனும், ரட்சகனுமான ஸ்ரீமத் நாராயணனைத் தொழுது வணங்கி பூஜித்து விட்டு, சௌனகாதி முனிவர்களை நோக்கி, “அருந்தவ முனிவர்களே! நீங்கள் நல்லதொரு கேள்வியை கேட்டீர்கள்.

“தேவதேவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழில்களை செய்பவனும், புருசோத்தமனுமான  ஸ்ரீமத் நாராயணனை, முன்பு ஒரு சமயம் பட்சிராஜனான ஸ்ரீ கருடாழ்வான்  பணிந்து, இப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போன்றதொரு கேள்வியை உலக நன்மையின் பொருட்டுக் கேட்டான். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் தக்க விடையளித்தார்.

“அந்தக் கதையை திருமால் கருடனுக்குக் கூறியவாறே நானும் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.” என்று சூதமாமுனிவர் கூற ஆரம்பித்தார்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 01, 2015 12:57 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். XShEX3UHREiQpD334iaR+e05c9257-8f20-4bf3-806a-ac61bdb2f899_S_secvpf

2. இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.  

ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது.

பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 01, 2015 12:59 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். U4WI5DscS9a2nLCYPaiD+garuda-digitalis

3. பறவை வேந்தனான கருடன், ஸ்ரீ பரமாத்மாவை நோக்கி, “ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும்” என்று வேண்டினான்.
                           
ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி  புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
                         
“கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை.

“உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை எவன் ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
                         
“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன.

“ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு.

“வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு.

“சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு.

“அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து,  இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்த பற்றற்றவர்களே பேரறிஞர்களாவர்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 28 1, 2, 3 ... 14 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக