புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
18 Posts - 95%
Geethmuru
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
145 Posts - 57%
heezulia
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
9 Posts - 4%
prajai
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அல்லாஹ் மகத்தானவன் Poll_c10அல்லாஹ் மகத்தானவன் Poll_m10அல்லாஹ் மகத்தானவன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ் மகத்தானவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:41 am



'அல்லாஹ் அவன் எத்தகைய மகத்துவமுடையவன் என்றால், அவனைத்தவிர வணக்கத்திற்கு தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் மரணமில்லா உயிருள்ளவன், என்றும் நிலையானவன், அவன் மிக உயர்ந்தவன்' (திருக்குர்ஆன் 2:255).


'அல்லாஹ்' என்ற மகத்தான பெயர் அவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர். இதுவரை அதன் முழுமையான அர்த்தத்தையோ, அதன் ஆழத்தையோ எந்த அறிஞராலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. அதன் 'அலிப்', 'லாம்', 'ஹே' என்ற ஒவ்வொரு எழுத்தும் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அந்த பதத்திற்கு பன்மையில்லை, பாலினம் இல்லை, அதற்கு ஒப்பாக, உவமையாக, ஈடு இணையாக ஒன்றுமே இல்லை என்கின்ற தன்மைகளில் இருந்து அதன் மேலாண்மையை ஓரளவிற்கு புரிந்து கொள்ளமுடியும்.

திருக்குர்ஆனில் அவன் தன் தனித்தன்மையைப் பற்றி விளக்கும் போது 'அவன் தான் மெய்யான அரசன். பரிசுத்தமானவன் சாந்தியும் சமாதானமும் அளிப்பவன், அபயமளிப்பவன், பாதுகாவலன் (அனைவரையும்) மிகைத்தவன், அடக்கி ஆளுபவன், பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணைதுணைகளை விட்டு அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்' (59:23) என்று ஒரு சின்ன வரையறைத் தான் கூறுகின்றான்.

ஏனென்றால் அதையும் தாண்டி நம் சிறிய அறிவுக்கு அதன் உண்மையான, ஆழமான அர்த்தங்களை அறிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தான். 'அல்லாஹ்' என்று சொன்னாலே அது ஏற்படுத்தும் அதிர்வு அலைகள் மிக பிரமாண்டமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நாவின் மூலம் உச்சரிக்கப்படுகின்ற அந்த பதத்தின் முழு அழுத்தமும், சக்தியும், மேலாண்மையும், மகத்துவமும் ஒரு சேர வெளிப்பட வேண்டுமெனில் அந்த நாவு பொய் அறியா, கோள் சொல்லாத புனிதமிகு நாவாய் இருந்தால் நிச்சயமாக அது சொல்வது நிறைவேறியே தீரும்.

அருமைத் தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களோடு நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜ்ரத் செய்து மதீனாவை நோக்கிச் சென்றார்கள். எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக 'தவ்ர்' குகையில் அவர்கள் இருவரும் அடைக்கலம் புகுந்தார்கள். இருவரின் கால் தடங்களை பின்பற்றி எதிரிகளும் குகை வாசல் வரை வந்து விட்டார்கள். குனிந்து பார்ப்பார்களேயானால் அகப்பட்டு கொள்வார்கள் இருவரும். அபுபக்கர் சித்தீக் அச்சம் மேலோங்கியவர்களாக 'ரஸ§லே! எதிரிகள் நம்மை சூழ்ந்து விட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மை கைப்பற்றி விடுவார்கள் என்ன செய்வது?' என்றார்கள்.

'அபூபக்கரே! அச்சம் வேண்டாம். நாம் இருவர் மட்டும் இங்கில்லை, நம்மோடு அல்லாஹ்வும் இருக்கின்றான்'. உறுதியாய் உதிர்த்த அந்த வார்த்தைகள் சொல்லி முடிக்கப்படவில்லை குகையின் வாயிலைச்சுற்றி சிலந்தி வலை பின்னியது, எங்கிருந்தோ வந்த புறாக்கள் இரண்டு கூடு கட்டி அடைகாத்தது. எதிரிகள் ஏமாந்து திரும்பிச் சென்றனர்.

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து நாவினைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக பொருந்திக் கொள்வான். ஒரு முறை அபுல்ஹசன் கிர்மாஹி (ரஹ்) என்ற மார்க்க அறிஞர் மக்கள் மத்தியில் நல்லுபதேசம் செய்து கொண்டிருந்தார்கள். அரேபியத் துணைக் கண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலை சிறந்த ஹக்கீம் அபு அசீனா என்ற மருத்துவரும் அங்கிருந்தார்கள். மார்க்க அறிஞர் அல்லாஹ்வின் மகிமையைப்பற்றிச் சொல்லி வரும்போது, 'அல்லாஹ்'வின் பெயரைச் சொல்லி துஆ செய்தோமேயானால் ஒருவனுடைய தீராத வியாதியும் கூட வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடும் என்று சொன்னார்கள். அந்த குறிப்பை ஒப்புக்கொள்ள மறுத்த மருத்துவர் அபுஅசீனா அவர்கள் 'அது எப்படி எந்தவித மருந்துகளும் இன்றி நோய்கள் குணமாக முடியும்? வார்த்தைகள் எப்படி உடலில் ஏற்படும் மாற்றுத் தன்மைகளின் நிலையை மாற்றமுடியும்?' என்று வினவினார்கள்.

'அட கழுதையே! இவ்வளவு பெரிய மருத்துவராயிருந்தும் இது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?' என்றார்கள்.

அபுல் ஹசன் கிர்மாஹி (ரஹ்) அவர்கள் கழுதை என்ற வார்த்தையை கேட்டதும், அதுவும் இத்தனை பேர் மத்தியில், அபு அசீனாவுக்கு கோபம் தலைக்கேறியது. உடலில் சூடு பரவியது, வியர்த்து கொட்டியது, மனம் பதைபதைத்தது, நிலை தடுமாறினார் அபு அசீனா.

மருத்துவரே என்னை மன்னிக்க வேண்டும். 'கழுதை' என்ற அருகதையற்ற ஓர் வார்த்தை, தங்கள் உடலில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றால், அகிலத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவன் 'அல்லாஹ்' என்ற வார்த்தை, அற்புதங்களை விளைவிக்காதா?' நபிமார்கள், நல்லடியார்கள், சஹாபாக்கள் வரலாற்றைச் சற்று ஆய்வு செய்யுங்கள் அத்தனை உண்மைகளையும் புரிந்து கொள்வீர்கள், என்றார்கள்.

அபு அசீனா அல்லாஹ்வின் அற்புதத்தை அறிந்து கொள்ள அச்சம்பவம் அச்சாரமிட்டது.

'அந்த அல்லாஹ் தான் படைப்பவன். அவனே படைப்புகளை ஒழுங்கு செய்பவன். அவனே படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக ஞானமுடையவன்'. (திருக்குர்ஆன் 59:24).

மரங்கள், செடி கொடிகள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி திக்ர் (துதி) செய்யவில்லை என்றால் அது உயிரிழந்து காய்ந்து அழிந்து போகும். தாவூது நபியவர்களோடு கற்பாறைகளும், மலைகளும் கூட திக்ர் செய்தன என்ற வரலாற்று குறிப்பு அதனை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. கூடு விட்டுச் செல்லும் பறவைகள் அல்லாஹ்வை துதிப்பதால் வயிறு புடைக்க தின்று தன் குஞ்சுகளுக்கும் இரை கொண்டு வரும் அதிசயம் ஒருபுறம் இருக்க, கண்டம் விட்டு கண்டம் வரும் பறவைகளைப் பார்த்திருக்கிறோம், அதற்கு எந்த திசைக்காட்டி இருக்கிறது? இளைப்பாறாமல் ஒரே மூச்சில் அத்தனைத் தூரத்தை எப்படி கடந்து வருகிறது?, சக்தி கொடுத்தது யார்? இங்கே தண்ணீர் இருப்பதை அங்கே அதற்கு அறிவிப்பது யார்? இதற்கெல்லாம் மேலாக இங்கு வந்துதான் இனப்பெருக்கம் செய்ய வேண்டுமா? இயற்கையில் நடைபெறும் ஒரு நிகழ்வுக்கு இடப்பெயர்தல் அவசியமா? இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

இறைவன் சொல்கிறான்: 'அவை எல்லாம் என் பெயரைச் சொல்லி என்னைப் புகழ்கின்றன. நான் அருள் கிருபை செய்கிறேன்'.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு அத்துணை மகத்துவம் இருக்கின்றது. அதனை உணர்ந்து கொள்வோம், புரிந்து கொள்வோம். எல்லா நிலைகளிலும் நாவினைப் பேணி அல்லாஹ்வை திக்ர் செய்வோம், ஈடேற்றம் பெறுவோம், ஏனெனில் அல்லாஹ் மகத்தானவன்.



அல்லாஹ் மகத்தானவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக