புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
11 Posts - 4%
prajai
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
2 Posts - 1%
jairam
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேம்பு! Poll_c10வேம்பு! Poll_m10வேம்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேம்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 11:49 pm


ஆலமரம், அரசமரம் போல பல ஆண்டுகள் வளரக்கூடியது வேப்பமரம். இது சாதாரணமாக 30 அடி முதல் 40 அடி உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். பொதுவாக வேப்ப மரத்தை பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும் மன அமைதி கிடைக்கும்.

வேம்பு என்பதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்பு பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக விளங்குகிறது. வேம்பின் பூர்வீகம் இந்தியாவும் பாகிஸ்தானும் தான். பின்னர் உலகம் முழுவதும் பரவியது. வேம்பிற்கான காப்புரிமையை இந்தியா போராடி பெற்றது. நம் அனைவருக்குள்ளும் எப்போதும் கேன்சர் செல்கள் இருக்கின்றன. அது ஒரு அளவு தாண்டும்போது நோயாக அறியப்படுகிறது. வேம்புக்கு கேன்சர் செல்களையே அழிக்கும் சக்தி இருக்கிறது. தினமும் அதிகாலையில் ஒரு சிறிய அளவு வேப்பிலையும் அதே அளவு மஞ்சள் உருண்டையும் வெதுவெதுப்பான நீருடன் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.

இது நாள் முழுக்க அளவான உஷ்ணத்தையும் துடிப்பையும் உடலில் தக்க வைத்திருக்கும். இது நம் உடலைச் சுத்தம் செய்கிறது. உணவுப்பாதை முழுக்க சிறிய அளவிலான தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. வேம்பு அதிகமாக எடுத்துக்கொள்வதால் எந்தக் கெடுதலும் கிடையாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேவையான உஷ்ணத்தையும் வேம்பு கொடுக்கும். எந்த வகையான அலர்ஜி, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் இது அருமருந்து. ஏராளமான ஆராய்ச்சிகள் மூலம் வேம்பு ஒரு அதிசயமான மரம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் தெய்வீகமாகக் கருதியதற்கும் அம்மனின் வெளிப்பாடாக இதைப் போற்றியதற்கும் ஆங்காங்கே வேப்ப மரத்தை கோயிலாக கும்பிட்டதற்கும் காரணம் இதன் அற்புதமான மருத்துவக் காரணங்கள்தான்.

பயன்கள்

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்து அதன் சாறு குடித்தால் பித்தம் தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியா காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ ஜூஸ் குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடும். வேப்பங்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்து புரையோடிய புண்கள் மீது பூசி வர குணமாகும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வர தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்பம் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், பல்பம், சாக்குகட்டிகள் சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். வேப்பம் பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.

வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும். பசும்பால் 200 மி.லி. தேங்காய்ப்பால் 200 மி.லி. வேப்பம்பூ அரைத்த விழுது 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து லேகியமாக கிளறி தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் தெரியும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

வேப்ப மரக்காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது. வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்னை மற்றும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்னை, புண், ஈறுகளில் ரத்தம் போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும். பெரியவர்கள் அதிகாலையில் வேப்பங் கொழுந்தை சிறிது பறித்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்னைகள் தீரும். வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கஷாயத்தை தினம் இருவேளை கொடுத்து வந்தால் நாள்பட்ட பேதி, சீதபேதி குணமாகும்



வேம்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக