புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
34 Posts - 52%
heezulia
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேசியச் செய்திகள் Poll_c10தேசியச் செய்திகள் Poll_m10தேசியச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:12 am

ஆம் ஆத்மி போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் கடைசி கடிதம்

நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள டெல்லி ஆம் ஆத்மி போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயி இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அவர் முன்பு தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

பொதுமக்களுக்கான பல்வேறு அச்சுறுத்தல்களைத் தன்னகத்தே கொண்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பாராளுமன்றம் அருகேயுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், அரியானா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்துவந்த ஆம் ஆத்மி தொண்டர்களும், விவசாயிகளும் பங்கேற்றனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயியான கஜேந்திரா சிங்(41) என்பவர் மரத்தின் மீது ஏறி கழுத்தில் துண்டினால் சுருக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

குர்தா, வேட்டி, துண்டு இதுதான் அவரது அடையாளம் என்று அவரை பல மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நினைவு கூர்ந்து கண்ணீர் வடிக்கின்றனர். ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரா, கடந்த 2003-ம் ஆண்டு தனது மாவட்டத்தில் நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு 3000 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்து தோற்றார்.

புரட்சி கரமான சிந்தனைகளும் தன்னுடைய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற லட்சியமும் கொண்ட இவர் அனைத்து போராட்டங்களிலும் முன்னிலை வகிப்பவர் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் பொதுமக்கள் மத்தியில் தனது மரண கடிதத்தை தூக்கி எறிந்த கஜேந்திரா அதில் ”பயிர்கள் சேதமடைந்ததால் எனது 3 குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. நான் எங்குதான் செல்வேன்?” என்று எழுதியுள்ள கஜேந்திராவின் முடிவு அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைக்கான மவுன சாட்சி....




தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:12 am

ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.

பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல மாதங்களாக உழைத்து, கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பயிர்கள் நாசமடைந்ததை கண்டு பல விவசாயிகள் மாரடைப்பால் பலியாகினர். அடுத்தடுத்து, அன்றாடம் சில விவசாயிகள் பல்வேறு வழிகளில் தற்கொலை செய்து கொண்டு தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அவ்வகையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரா சிங் என்பவர் மரத்தில் ஏறி தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியில் அவரது உடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் அனுதாப செய்தி வெளியிட்டார். விவசாயிகளுக்கு யாரும் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். அவர்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் கஜேந்திரா சிங் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களுக்குள் ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான ஹர்ஷு யாதவ் என்பவர் ஆல்வார்-மதுரா இடையே சென்ற ரெயிலின் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:13 am

என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்

குழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது.

இங்குள்ள ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின் குடாபாண்டா பகுதியில் மிலன் மித்தி உச்சா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுமியான டுலி ஹெம்ப்ராம் என்பவருக்கு ’பால்ய விவாகம்’ நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இன்று (22-ம் தேதி) அவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் ஏற்பாடு செய்து வந்தனர்.

நான் மேற்கொண்டு படிக்க வேண்டும். எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் அந்த சிறுமி கெஞ்சினாள். ஆனால், அவளது வேதனைக்குரல் பெற்றோரின் காதுகளில் எடுபடாமல் போனது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு மணமகன் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளதால் பின்தங்கிய மாவட்டங்களில் வாழும் பலர் தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சிறுமிகள் ஆறாம் வகுப்பில் சேரும்போதே அந்த பள்ளியின் முதல்வர்களும், தலைமை ஆசிரியர்களும் நான் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவர்களிடம் சத்தியம் செய்யவைத்து, உறுதிமொழி ஏற்றுக் கொள்ளச் செய்கின்றனர்.

திருமண நெருக்கடியில் சிக்கிக் கொண்ட சிறுமி டுலி ஹெம்ப்ராமுக்கு, தனது பள்ளியின் முதல்வரிடம் இதுபோன்ற உறுதிமொழி அளித்தது திடீரென நினைவுக்கு வந்தது. இதையடுத்து, அவராவது இந்த திருமணத்தை தடுத்து, நிறுத்த மாட்டாரா? என்ற நப்பாசையில் அந்த முதல்வருக்கு ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

22-ம் தேதி நடைபெறவுள்ள எனது திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என அந்த கடிதத்தில் டுலி ஹெம்ப்ராம் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று 22-ம் தேதி என்பதால் இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவளது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதா? இல்லை, முடிந்து விட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:14 am

நேபாள பஸ் விபத்தில் பலியான இந்திய யாத்திரிகர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

நேபாள மலைப்பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் பலியான இந்திய யாத்திரிகர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து 45 பேர் காட்மாண்டு அருகில் இருக்கும் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த பசுபதிநாத் கோவிலுக்கு பேருந்தில் யாத்திரை சென்றனர். வழிபாட்டை முடித்துக்கொண்டு இன்று காலையில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காட்மாண்டில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நவ்பீஸ் மலைப்பகுதியில் வந்தபோது, 100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியானர்கள். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிவிடாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தில் காயம் அடந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்தவர்களில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் விபத்து நடந்த பகுதிக்கும், மருத்துவமனைக்கும் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:15 am

பெண் குழந்தைக்கும் தந்தையானார் நடிகர் விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயின் மனைவி பிரியங்காவுக்கு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அட்சய திரிதியை தினமான நேற்று பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே, விவான் வீர் ஒபராய் என்ற 2 வயது ஆண் குழந்தைக்கு தந்தையான விவேக் ஓபராய், இதன் மூலம் தற்போது இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கும் அப்பாவாக மாறியுள்ளார்.

2004-ம் ஆண்டு இந்தியாவை முதன்முறையாக சுனாமி தாக்கியபோது சென்னையில் தங்கியிருந்த விவேக் ஓபராய், அப்போது தமிழக மக்களுக்கு 6 லாரி நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து உதவி செய்தார். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அந்த கிராம மக்களின் புனர்வாழ்வுக்கு ஏராளமான பணத்தை செலவழித்து பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தந்தார்.


புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான உலக சுகாதார மையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றிவரும் விவேக் ஓபராய், தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை மற்றும் மும்பையில் பல்வேறு சமூகச் சேவைகளை செய்து வருகிறார்.

கர்நாடக மாநில மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகளான பிரியங்கா ஆல்வாவை கடந்த 29-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்த தகவலையறிந்து பாலிவுட்டை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கைபேசி, பேஸ்புக், டுவிட்டர் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:21 am

உத்தரகாண்ட்: நாய்க்கடிக்கு நஷ்டஈடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு தடை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவருக்கு நைனிடால் மாநகராட்சி ரூ.1 லட்சமும், மத்திய அரசு ரூ.1 லட்சமும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நைனிடால் நகர மேம்பாட்டு கழகத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் வக்கீல் அமித்குமார் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எல்.தத்துவை கொண்ட அமர்வு, உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:21 am

மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் பாத யாத்திரை செல்ல ராகுல்காந்தி முடிவு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 56 நாள் விடுமுறைக்குப்பின் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

கடந்த 16–ந் தேதி தாய்லாந்து விமானத்தில் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி மறுநாள் தனது தாயார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நாள் முழுவதும் ஆலோசனை நடத்தினார்.

எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். அப்போது ராகுல்காந்திக்கு சோனியா காந்தி பல ஆலோசனைகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் தனது வீட்டில் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

19–ந் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிலம் கையகப்படுத்தும் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக குறை கூறிப்பேசினார்.

தொடர்ந்து பாராளுமன்றத்திலும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். பா.ஜனதா அரசு விவசாயிகளை மறந்து விட்டதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அடுத்த கட்டமாக ராகுல்காந்தி முழு மூச்சாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் பாத யாத்திரையாக சென்று விவசாயிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

முதலில், அவர் மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை ராகுல்காந்தி சந்தித்து குறை கேட்கிறார்.

அப்போது அவர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். கட்சி வளர்ச்சி மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துவது பற்றி அவர்களது கருத்துக்களை கேட்கிறார். விரைவில் அவர் பாத யாத்திரை தொடங்குவார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராகுல்காந்தியின் சமீப கால நடவடிக்கைகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள சோனியாகாந்தி பாராட்டும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நாளை மறுநாள் (24–ந்தேதி) ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்கு செல்கிறார். சமீபத்தில் விடுமுறையில் ஓய்வு எடுத்ததால் ராகுல் காந்தியை காணவில்லை என்று அமேதி தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

எனவேதான் ராகுல்காந்தி தனது பாத யாத்திரைக்கு முன்னதாக அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு நாடு முழுவதும் பாத யாத்திரை தொடங்குகிறார்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:22 am

திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று காலை முதல் இலவச தரிசனத்துக்கு 2 மணி நேரமானது. நடைபாதை பக்தர்கள் மற்றும் ரூ.300 கட்டணத்தில் 1 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்தனர். அறைகளில் யாரும் காத்திருக்கவில்லை.

நேற்று ரூ.1 கோடியே 80 லட்சம் உண்டியல் பணம் வசூலானது.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:23 am

45 இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு: பயிற்சிக்காக மத்திய அரசு நிதி உதவி

2016ம் ஆண்டில் ரியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு வாய்ப்புள்ள திறமைமிக்க வீரர்கள் 45 பேர் விளையாட்டு அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ‘ஒலிம்பிக் பதக்க இலக்கு’ திட்டத்தின்கீழ் நிதி உதவிகள் வழங்கப்படும்.

2016 மற்றும் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கிக் போட்டிக்கான பயிற்சிக்காக மேற்கண்ட வீரர்களுக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சிக்காக சுமார் 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 30 வீரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள என்றும் விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்த சோனாவல் மக்களவையில் தெரிவித்தார்.



தேசியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக