புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
46 Posts - 40%
prajai
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 1:24 pm

ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )...
**************************************************************************************
உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்?

சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட மறக்க முடியாத வர்த்தகச்சின்னங்கள் பத்தி தான் இங்கே பார்க்க போறோம்..

1. ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s)

நமக்கு இந்த வண்டி அறிமுகம் ஆனதே எங்க வூட்டுக்கு வர்ற பால்காரர் மூலமாத்தான். அவரு வண்டி கைப்பிடில பூச்சுத்தி வச்சிருப்பாரு. அதனால விவரம் தெரியற வரைக்கும் இதுக்கு பேரு பூவண்டி.

இந்த வண்டில இருந்த வசதியப் பத்தி சொல்லனும்னா, குரங்குப் பெடல் போடலாம், டபுள்ஸ், டிரிபுள்ஸ் போகலாம், என்ன அடி அடிச்சாலும் தாங்கும். எத்தனையோ வீடுகள்ல குழந்தைகள உட்கார வைக்கற அளவுக்கு ஒரு சீட்டும் வச்சிருப்பங்க. இந்த வண்டில விளக்கு எரியலன்னு எங்கூரு காவல் நிலையத்துல பிடிச்சு வைச்சுக்கறது கூட நடக்கும் புன்னகை)

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் HERCULES+BICYCLE

இந்த வண்டியோட செல்வாக்கு ஹீரோ ரேஞ்சர், BSA SLR எல்லாம் வர ஆரம்பிச்சவுடனே குறைய ஆரம்பிச்சிருச்சு.. ஆனாலும் நல்ல நேரம் எம்.ஜி.ஆர்ல ஆரம்பிச்சு, தலைவரோட அண்ணாமலை வரைக்கும் வந்த வண்டிங்கரங்காட்டி இதுக்கு எப்பவுமே நம்ம மனசுல ஒரு இடம் இருக்கத்தாங்க செய்யுது.

"ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது" பாட்டைப் பொது இடங்கள்ல பாடத் தடை செஞ்சிருந்தாங்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் பிரபலமா இருந்ததுங்கறத இப்ப நம்ப முடியுதா?
*********
2. டிவிஎஸ் - 50 ( 1980 - ....)

"நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL", இந்த விளம்பரத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.

இதுக்கு முன்னாடி இருந்த லூனா, சுவேகா மாதிரி வண்டியெல்லாம் என்ன முறுக்கினாலும் 30 கிமி வேகத்தைத் தாண்டாது. அந்த நேரத்துல தான் நம்ம டிவிஎஸ் - 50 வந்ததாம்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Kinetic-luna

நம்ம ஊருக்காரங்களக் கேட்டாத் தெரியும். மூனு சிலிண்டர ஏத்தி வச்சிட்டு, பின்னாடி ஒரு துணிக்கட்டையும் வச்சிட்டு போவாங்க பாருங்க. இப்ப இருக்கற மினிடார் (MINIDOR) செய்யற வேலைய இது செய்யும்.
ஒரு சின்னக் குடும்பத்துல இருக்கற அத்தனை பேரையும் ஏத்திட்டுப் போக முடியும். காலப்போக்குல டிவிஎஸ் - 50, XL SUPERஆ மாறிடிச்சு.

*******
3. பஜாஜ் செடாக் ( 1972 - 2005)

"ஹமாரா பஜாஜ்".. இந்த வாசகத்தக் கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 03_Chetak_silver_small

நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்கனு நினைச்சுட்டு இருந்தேன், நான் ஒருமுறை ஹைதராபாத் போகிற வரைக்கும். நம்ம தமிழகத்தத் தவிர்த்துட்டுப் பார்த்தா மற்ற மாநிலங்கள்ல அதிகமா பார்க்க முடியறது இந்த வண்டி தாங்க.

"ஹமாரா பஜாஜ்"ங்கர வர்த்தக வசனத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு சின்ன குடும்ப முழுக்க இந்த வண்டில சவாரி செய்ய முடியும்..

நம்ம பஜாஜ் பல்சர் மற்றும் இதர 4 STROKE எஞ்சின் வண்டிக வர ஆரம்பித்த பிறகு இந்த வண்டியோட செல்வாக்கு குறைய ஆரம்பித்து விட்டது.

********

4. யெஸ்டி : ( 1961 - 1995 )

ராஜ்தூத், புல்லட் மாதிரி வண்டிகள் இருந்த போது கோலோச்சிய வண்டி தான் "யெஸ்டி". இப்ப ஒரு 40 வயதாகிறவங்களக் கேட்டுப் பாருங்க.. இந்த வண்டி தான் அப்போதைய இளைஞர்கள் விருப்பமாம்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Yezdi

வண்டிய 'ஸ்டார்ட்' பண்ணவே கடினம்னாலும், இந்த வண்டி மேல மிகுந்த மோகமாம். இப்பவும், என் நண்பர் ஒருத்தர் இந்த வண்டிய பயன்படுத்தீட்டு இருக்கிறார்.. ******** 5. இண்ட் சுசுகி ( 1980s - 1990s ) இந்த வண்டி வந்த பிறகு தான் இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அடுத்ததாக வந்த AX-100R வரும் வரை இந்த வண்டி பிரபலமாக இருந்தது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் IND+SUZUKI

ன்னகை மன்னன் படத்தில் கமல், மௌன ராகம் கார்த்திக் என்று இந்த வண்டியும் மிகவும் பிரபலம் தான்.
********
என்ன தான் இப்போது எத்தனையோ இருசக்கர வாகனங்கள் வந்தாலும், மேலே குறிப்பிட்ட வர்த்தக சின்னங்களுக்கு நம் மனதில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.

லெஹர் 7அப் (1992 - ... ), மேங்கோ ஃப்ரூட்டி (1970s - ... ),ஜெம்ஸ் ( 1968 - ... ),நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...)கேம்லின் ( 1931 - ...),ஹீரோ பேனா (1968 - ... ), பிரில் ( 1964 - ..... ), நடராஜ் பென்சில் (1958 - ..)
************************************************************************************
வர்த்தகச் சின்னங்கள் ( பிராண்ட்ஸ்) என்றால் நாம் சிந்திப்பது ஆப்பிள், சாம்சங்க், பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்களின் சின்னங்களைத் தான்.
இந்த அளவிற்குப் பெரிய நிறுவனங்களின் பொருட்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றின் மதிப்பு மட்டும் குறைவதே இல்லை.

அந்த வரிசையில் நாம் காணப்போகும் வர்த்தகச் சின்னங்கள் கீழே..
கேம்லின் ( 1931 - ....... )

கணிதத்தில் வரும் வடிவியல் (ஜியாமெட்ரி) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கேம்லின் தான். எத்தனையோ வர்த்தகச் சின்னங்கள் வந்தாலும் கேம்லினிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Camlin+Geometry+Box

ஹீரோ பேனா - (1968 - ... ):

இன்றைய தேதியில் சீனத் தயாரிப்பு என்றாலே போலியாக இருக்குமோ, தரக்குறைவான பொருளோ என்று பயப்படுகிறோம். ஆனால் ஒரு பொருள் "மே-இன்-சீனா" என்றால் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இருந்தது என்றால் அது கட்டாயமாக ஹீரோ பேனாவாகத்தான் இருக்கும்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Hero+Pen

அதுவும் பள்ளிக்காலத்தில், "ஹீரோ பேனா" வைத்திருப்பது "பார்க்கர் பேனா" வைத்திருப்பது போல. என்ன தான் ஹீரோ பேனாவில் அதிகமாக மையைச் சேர்த்து வைக்க முடியாது என்றாலும் ரெனால்ட்டு -045 போன்ற பேனாக்கள் வந்தாலும் இதன் மதிப்பு மட்டும் குறையவே இல்லை.

********
பிரில் - ( 1964 - ..... ):

பேனாவைப் பற்றிக் கூறிவிட்டு அதில் ஊற்றும் மையைப் பற்றிக் கூறவில்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Bril+India

பேனா மை என்றால் "பிரில்" தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இல்லை என்கிற நிலை, வேற எந்தத் துறையிலாவது இருக்க முடியுமா?
பள்ளிக்கூட இறுதி நாளில், நண்பர்களின் சட்டையில் மையை அடித்ததை நினைத்து பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியில் பிரில்லுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது புன்னகை)
*********
நடராஜ் பென்சில் - (1958 - .....) :

தூர்தர்சன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும், "மூன்று பென்சில்களுக்கான ஓட்டப்பந்தயம் அது, மற்ற பென்சில்களின் முனை உடைந்து விடும், நடராஜ் மற்றும் முன்னேறி வெற்றியடையும்"

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Natarajpencils

இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
********
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )

பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Nutrine+-+superstar

கேட்பரீஸின் எக்ளைர்ஸ், டைரி மில்க் போன்ற மிட்டாய் வகைகள் விலை அதிகமானதால், நியூட்ரின் இனிப்பு வகைகள் எளியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தது.

ஆசை படம் வந்த நேரத்தில் இருந்து இதே நிறுவனத்தின் ஆசை மிட்டாயும் வெகுவாகப் பிரபலமடைந்திருந்தது.
********
ஜெம்ஸ் ( 1968 - .... )
"ஒரு சிறுவன் மைதானத்தில் மட்டையைப் பிடித்துக்கொண்டு இருப்பான். இன்னொரு சிறுவன் பந்தை வீச அது நேராக சிறுவனின் வாயில் போய் விழும். பார்த்தால் அவன் வீசியது ஜெம்ஸ் மிட்டாயை....". தூர்தர்சன் காலத்தில் பார்த்த அழகான விளம்பரம் இது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் GEMS

எப்போதாவது ஜெம்ஸ் மிட்டாய் வாங்கும் அளவிற்கு காசு கிடைப்பதுண்டு. இந்த ஜெம்ஸ் மிட்டாய் விற்பனையில் தான் எத்தனை வர்த்தக உத்திகள். ஒரு முறை பார்த்தால் பொம்மைகளுடன் வரும், சில சமயம் பால்ரச குண்டுடன் வரும். (அது தான் நகர்த்தி நடுவில் சேர்ப்போமே.. )

கண்ணைக் கவரும் நிறத்தில் வருவதால், குழந்தைகள் மத்தியில் ஜெம்ஸிற்கு ஒரு தனி இடம் தான்.

********
லெஹர் 7அப் - (1992 - ... )

இப்பொழுது எப்படி வோடபோன் விளம்பரங்கள் பிரபலமோ, அந்த அளவிற்கு அந்த விளம்பரமும் பிரபலம் தான். பிடோ-டிடோவின் துறுதுறுப்பான வடிவமைப்பே இந்த குளிர்பானத்தை விளம்பரப்படுத்தப் போதுமானதாக இருந்தது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 7UP+FIDO+DIDO

கோல்ட்-ஸ்பாட், டொரினோ போன்ற வர்த்தகச்சின்னங்கள் மந்தமடையத்தொடங்கிய நேரம் தான் இந்த 7அப் குளிர்பான விற்பனை சூடானது.

**********

மேங்கோ ஃப்ரூட்டி - (1970s - ....... )

"மேங்கோ ஃப்ரூட்டி ஃப்ரெஸ் அன் ஜூசி ".. இந்த விளம்பரம் தெரியாதவர்களே இருக்க முடியாது.
மாஸா, ஸ்லைஸ் போன்ற வர்த்தகச்சின்னங்கள் வருவதற்கு முன்பிருந்தே மாம்பழ ருசியுள்ள குளிர்பானம் என்றால் அது ஃப்ரூட்டி தான். கடும்போட்டியை சமாளித்து இன்றும் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Mango+Frooti

நன்றி:- செந்திலின் பக்கங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 02, 2015 1:26 pm

அருமை!அருமை!!அருமை!!!
சூப்பர் அண்ணா!
Preethika Chandrakumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 1:45 pm

மகிழ்ச்சி
அந்த ஹீரோ பேனாவை மறக்க முடியாதுப்பா...........இப்ப ஹீரோ பேனா இல்லை ஜீரோ பேனாதான் இருக்கு
எங்க ஊர்ல எம்.ஜி.ஆர் மிட்டாய் ரொம்ப ஃபேமஸா இருந்தது..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 1:48 pm

சரவணன் wrote: மகிழ்ச்சி
அந்த ஹீரோ பேனாவை மறக்க முடியாதுப்பா...........இப்ப ஹீரோ பேனா இல்லை ஜீரோ பேனாதான் இருக்கு
எங்க ஊர்ல எம்.ஜி.ஆர் மிட்டாய் ரொம்ப ஃபேமஸா இருந்தது..

சரோ தேன் மிட்டாய் சாபிற்றுகின்களா அப்போ 25 பைசா தான் இப்போ நிறையா கிடைப்பதில்லை

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் Images?q=tbn:ANd9GcSpjoPoIGxnbr9YjoG8_ICFSIpzRJP1hvqxBB7UseNLrCqQrjrNpg

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 1:50 pm

அதை மறக்க முடியுமா பாலா... ஜொள்ளு ஜொள்ளு
உங்களுக்கு வேணுமா? ஊருக்கு வருபோது சொல்லுங்க வாங்கி வைக்கிறேன்...!இன்னும் எங்கூர்ல கிடைக்குது..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 1:55 pm

நன்றி சரோ சென்னைல ரொம்ப அரிதாகதான் கிடைக்குது இதுக்கு முன்னாடி கேட்பெரியாவது மண்ணாவது எல்லாம் வெத்துத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 1:57 pm

balakarthik wrote:நன்றி சரோ சென்னைல ரொம்ப அரிதாகதான் கிடைக்குது இதுக்கு முன்னாடி கேட்பெரியாவது மண்ணாவது எல்லாம் வெத்துத்தான்  
சென்னைலிருந்து என் நண்பர்கள் எங்க ஊருக்கு வரும்போதெல்லாம் இதை பாக்கெட் பாக்கெட்டா வாங்கிட்டு போவானுங்க, எலந்த அடை ரோல் ரோலா வாங்கிட்டு  போவானுங்க..........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 1:59 pm

சரவணன் wrote:
balakarthik wrote:நன்றி சரோ சென்னைல ரொம்ப அரிதாகதான் கிடைக்குது இதுக்கு முன்னாடி கேட்பெரியாவது மண்ணாவது எல்லாம் வெத்துத்தான்  
சென்னைலிருந்து என் நண்பர்கள் எங்க ஊருக்கு வரும்போதெல்லாம் இதை பாக்கெட் பாக்கெட்டா வாங்கிட்டு போவானுங்க, எலந்த அடை  ரோல் ரோலா வாங்கிட்டு  போவானுங்க..........

எலந்த ஆடை ஜீரா முறுக்கு எல்லாமே அருமையா இருக்கும் சென்னைல ஜீரா முறுக்கு கிடைக்குது

காதி கிராப்ட் போனா எலந்த அடையும் கிடைக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 02, 2015 2:00 pm

நல்ல ஞாபகங்கள் - தித்திக்கும் சின்னங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 2:12 pm

balakarthik wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:நன்றி சரோ சென்னைல ரொம்ப அரிதாகதான் கிடைக்குது இதுக்கு முன்னாடி கேட்பெரியாவது மண்ணாவது எல்லாம் வெத்துத்தான்  
சென்னைலிருந்து என் நண்பர்கள் எங்க ஊருக்கு வரும்போதெல்லாம் இதை பாக்கெட் பாக்கெட்டா வாங்கிட்டு போவானுங்க, எலந்த அடை  ரோல் ரோலா வாங்கிட்டு  போவானுங்க..........
எலந்த ஆடை ஜீரா முறுக்கு எல்லாமே அருமையா இருக்கும் சென்னைல ஜீரா முறுக்கு கிடைக்குது

காதி கிராப்ட் போனா எலந்த அடையும் கிடைக்கும்
அப்டினா எனக்கு ஒரு ப்ளைட் உரப்படை பார்சல் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் 9k=

Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக