புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
69 Posts - 52%
heezulia
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 11:13 am

காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  LfhQknQGRnieHOYyRZwZ+Tamil_News_large_1357670

சென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர்.

இவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார்.

கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணிக்கு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா, இரவு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற அபிஷேக், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம், மகன் அபிஷேக்கின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அபிஷேக்கின் நண்பர்கள் மற்றும் தன் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதிகாலை, 3:45 மணிக்கு, அபிஷேக்கின் மொபைல் போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்தது. மகன் கிடைத்து விட்டதாக ஆசையாக எடுத்து பேசினார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், 'உங்கள் மகனை கடத்தி உள்ளோம்; இரண்டு மணி நேரத்திற்குள், நாங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு, ஐந்து கோடி ரூபாயுடன் வரவேண்டும். இல்லையெனில், அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது; பிணத்தைத் தான் பார்க்க முடியும்' என, மிரட்டல் விடுத்துள்ளான்.
பின், மற்றொரு மொபைல் போனில் இருந்து, ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பணம் ரெடியா' என, கேட்டுள்ளான்.

அதற்கு அவர், 'உடனடியாக என்னால், ஐந்து கோடி ரூபாய் தயார் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளார். சில நொடிகள் யோசனைக்கு பின், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், அபிஷேக்கை உயிருடன் விட்டு விடுகிறேன்' என, தெரிவித்து உள்ளான்; அதற்கு ரவி சுந்தரம் சம்மதித்துள்ளார்.

அப்போது, மொபைலில் பேசியவன், 'போலீசுக்கு தகவல் தெரிவித்தால், மகனை கொன்று விடுவோம்; பணத்துடன் காசிமேடு பகுதிக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளான். இதுபற்றி, சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவிசுந்தரம் புகார் அளித்தார்.

உடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம், 'மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான்.

ஒரு மணி நேரம் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந்தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான்.

பின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி
செய்தனர்.அவனது, 'மொபைல் போன் டவர் லொகேஷன்' பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது.

உடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி
கூறியுள்ளான்.

பணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர்.ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன.

அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.

இதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், 24, அகமது பெகாத், 27, ரிஸ்வான், 26, ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான்.

காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், 42, என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், 30, மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன்பின், நேற்று முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட, ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேட்மாநகரத்தைச் சேர்ந்த, சையது யாசிப் ஹனிபா, 23, என்பவனை கைது செய்தனர்.

தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 11:14 am

கடத்தல் நடந்தது எப்படி: குர்சித் வாக்குமூலம்

சென்னை: சென்னையில் வாலிபர் அபிஷேக்கை கடத்தி சிக்கிய குர்சித் போலீசாரிடம் அளித்த மூலம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், நான் வசிக்கிறேன்; என் கணவர் காதர் பாட்ஷா. எங்களுக்கு, 16 வயதில் மகள் இருக்கிறாள்.

ரவிசுந்தரத்தின் வீட்டில் வேலை செய்து வந்த, வளசரவாக்கத்தைச் சேர்ந்த மதன், 30, உடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களான, சதாம் உசேன் உள்ளிட்டோரும், எங்கள் வீட்டருகே தான் வாடகைக்கு குடியிருந்தனர்.
மதனுடன் நான் நெருக்கமாக இருந்ததை, சதாம் உசேன் பார்த்து விட்டான். பின், சதாம் உசேனும் எனக்கு நெருக்கமாகி விட்டான். நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டோம். அப்போது, 'என் முதலாளி ரவிசுந்தரம் பெரிய கோடீஸ்வரர்.

அவரது, இரண்டாவது மகன் அபிஷேக் வீட்டில் சும்மா தான் இருக்கிறான். அவனை கடத்தினால், ஐந்து கோடி ரூபாய் தேறும்' என, மதன் கூறினான்.நானும், மதனும் சேர்ந்து, சதி திட்டம் தீட்டினோம். என் மகளின் மொபைல் போனில் இருந்து, அபிஷேக்கின் மொபைல் போனுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க சொன்னோம். அதன்படி என் மகளும் செய்தாள்.

அடுத்த நொடியே அபிஷேக் தொடர்பு கொண்டார்.பின், அடிக்கடி தொடர்பு கொண்டு, என் மகள் காதல் வலை வீசினாள்; அதில் அபிஷேக் விழுந்தார். நள்ளிரவு வரை அவரது காதல் பேச்சு நீளும். என் மகளையும், காமரசத்துடன் பேச வைத்தேன். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும் அபிஷேக், 1,600 எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளார்.

கடந்த, 3ம் தேதி, நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்கு செல்வதாக என் மகளிடம் அபிஷேக் தெரிவித்தார். இதுதான் சமயம் என, இரண்டு கார்களை வாடகைக்கு அமர்த்தி, அதில், என் மகளையும் ஏற்றிக் கொண்டு, அவள் மூலம், அபிஷேக்கை, கோட்டூர் பாலம் அருகே வரவழைத்தோம்.மகளை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு, அபிஷேக்கை, காரில் கடத்தி ஊரப்பாக்கம் கொண்டு சென்றோம்.

பின், கீழ்கட்டளை, பல்லாவரத்திற்கு கொண்டு சென்றோம். அபிஷேக் எங்களை திட்டியதால் அவரை அடித்தோம்; அவர் மயங்கி விட்டார். ரவிசுந்தரத்திடம் பேசி வந்த சதாம் உசேன் சொதப்பி விட்டான்; அதனால் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 11:15 am

மதன் எங்கே?

இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட மதன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதனால், அவர்கள் மூலம், மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இதுவரை....

* கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா நகரில், மூன்று கோடி ரூபாய் கேட்டு, 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். அவனை போலீசார் பத்திரமாக மீட்டு, விஜய், பிரபு என்ற சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.

* இதன்பின், சாலிகிராமம், லோகையா காலனியைச் சேர்ந்த, பிரபல மருத்துவமனை மேலாளரின், 11 வயது
மகன், மர்ம நபர்களால், 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி கொல்லப்பட்டான்.

* தன்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தவரின், நான்கு வயது மகனை கடத்தி கொலை செய்து, சூட்கேசில் வைத்து, பூவரசி என்ற பெண் கோயம்பேட்டில் இருந்து நாகை சென்ற பஸ்சில் அனுப்பி வைத்து சிக்கினார். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

* போரூரில், 50 லட்சம் ரூபாய் கேட்டு, 11 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.எஸ்.பி., மகன் கைது செய்யப்பட்டான்.

* கடந்த மாதம், திருவொற்றியூரில், 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, 16 வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்டான்; இது தொடர்பாக, உறவினர் சுபாஷ் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 11:16 am

ஏதோ கிரைம் படம் பார்த்தது போல இருக்கு..........சூப்பர் போலீஸ் புன்னகை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2015 11:58 am

42 வயசுல கள்ளகாதல் , இதில் திடீர் பணக்காரர்கள் ஆவதற்காக தனது 16 வயது மகளை போன் பேச வைத்துள்ளாள் கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:02 pm

ராஜா wrote:42 வயசுல கள்ளகாதல் , இதில் திடீர் பணக்காரர்கள் ஆவதற்காக தனது 16 வயது மகளை போன் பேச வைத்துள்ளாள் கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1166838

ம்ம்... பாருங்களேன் கேவலம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Oct 06, 2015 12:37 pm

இப்ப எல்லாம் காதலும், கள்ளக் காதலும் இது போன்றதுக்குதான் தேவைப்படுகிறது என்பது புரிய ஆரம்பித்தால் சரிதான்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2015 1:16 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:இப்ப எல்லாம் காதலும், கள்ளக் காதலும் இது போன்றதுக்குதான் தேவைப்படுகிறது என்பது புரிய ஆரம்பித்தால் சரிதான்.
நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 07, 2015 5:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Oct 07, 2015 9:55 am

ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக