புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
306 Posts - 42%
heezulia
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
6 Posts - 1%
prajai
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கல்லுக்குள் ஈரம் !  Poll_c10கல்லுக்குள் ஈரம் !  Poll_m10கல்லுக்குள் ஈரம் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்குள் ஈரம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 1:06 am

இன்று அப்பாவின் பத்தாவது நாள்; வீட்டின் எல்லா இடங்களிலும், அவரின் அடையாளங்கள் மற்றும் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருப்பதைப் போன்று பிரமை. நண்பர்களும், உறவினர்களும் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் எல்லார் வாழ்க்கையிலும் அப்பாவின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்க வேண்டும்.

காரணம் இல்லாமல் அப்பாவிற்கு கோபம் வருவதில்லை என்றாலும், எங்களை பொறுத்தவரை, அவர் கோபக்காரர். அவருக்கு கோபம் வரும்போது, எதிரில் நிற்கவோ, பதில் பேசவோ, எங்களுக்கு தைரியம் வந்ததில்லை. இதைத் தவிர, அவருக்கு வேறு முகமும் உண்டு என்பதை நாங்கள் அறியவில்லை. ஒருக்கால், அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம்.

துக்கம் கேட்க வந்தவர்களில் ஒருவர், அப்பாவின் போட்டோ அருகில் சென்று, ''சார்... என்னை மன்னிச்சுடுங்க... நீங்க இருக்கற போதே, உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சேன்; அதுக்கு கொடுத்து வைக்கல...''என, தேம்பித் தேம்பி அழுதார். பின், அம்மாவிடம் சென்று, ''நீங்களாவது என்னை மன்னிச்சிடுங்க; உங்களப் பாக்கற அருகதை கூட எனக்கு இல்லை...'' என்றார்.

''அவர், உங்கள என்னிக்கோ மன்னிச்சுட்டார். இப்ப, தெய்வம் ஆகிட்டார். எப்பவும் அவர் தெய்வ குணத்தோட தான் இருந்தார்ங்கிறது ரொம்ப பேருக்கு தெரியாது,'' என்றாள் அம்மா.

அம்மாவின் வார்த்தைகள், அவருக்கு ஆறுதல் தர, கண்களை துடைத்தபடி சென்று விட்டார். அவர் பெயர் ராமச்சந்திரன் என்பதும், அப்பா வேலை பார்த்த மின் நிறுவனத்தில், ஜெனரல் மேனேஜர் என்பது தெரிந்ததும், எங்கள் எல்லார் முகங்களிலும் ஆச்சரியக்குறி!
அதை குறிப்பால் உணர்ந்த அம்மா, ''சுபத்தன்னிக்கு சொல்றேன்,''என்றாள்.

பதிமூன்றாம் நாள்; சாஸ்திரிகள் சடங்குகளை செய்து முடித்த பின், அப்பாவைப் பற்றி, உணர்ச்சி பூர்வமாக சொன்னார். அவர் அப்பாவின் நண்பர் என்பதால், அவருக்கும், இது தனிப்பட்ட இழப்பே!
அன்று மாலை, அம்மாவைச் சுற்றி, எல்லாரும் உட்கார்ந்து இருந்தோம். எங்களுக்கு நிமிடங்கள் நீண்டு கொண்டே போக, அம்மா கடந்த காலத்தில் மூழ்கி இருந்தவள், நினைவுக்கு வந்தவளாக, கூறத் துவங்கினாள்...

''அப்ப, உங்க அஞ்சு பேருக்கும் அதிகம் விவரம் புரியாத வயசு. பள்ளிக் கூடம், படிப்புத் தவிர வீட்டுச் சூழல் எதுவும் தெரியாது. பெரியவ, ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கும் போது, கடைசிகாரன் கைக்குழந்தை. அந்த சமயத்துல, உங்க அப்பாவுக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்னை...'' என்றவளின் நினைவுகளில், கணவன் தன்னிடம் பகிர்ந்து கொண்ட அந்த சம்பவம் நினைவிலாடியது.

திருச்சியில் மின் வினியோகம் செய்யும் கம்பனியில், சாதாரண லயன்மேனாக, தினம் பத்தணா கூலியில், வேலைக்கு சேர்ந்தவர் சீனிவாசன். ரொம்ப கஷ்டப்பட்டு சூப்பர்வைசர் ஆனார். அதுக்கே, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஒரு வருஷத்தில, ஜூனியர் இன்ஜினியர் புரொமோஷன் கிடைக்கலாம் என்ற நிலையில், அந்த சம்பவம் நடந்தது.

மின்சாரத் திருட்டு, பெரிய பிரச்னை ஆகி, கம்பெனியோட வருமானம் ரொம்பவும் பாதித்ததால், திருட்டைக் கண்டுபிடிக்க, எல்லாருக்கும், ஏரியாவை பிரித்து தரப்பட்ட போது, சீனிவாசனுக்கு அரியமங்கலம் ஏரியாவை ஒதுக்கினர். சக பணியாளர்களுடன் இணைந்து, ஒவ்வொரு மின் இணைப்பையும் சோதித்து வந்தார் சீனிவாசன். அப்போது, ரைஸ் மில் ஓனர் ஒருவர், மின்சாரம் திருடுவதை கண்டுபிடித்து, அபராதத்துடன், பெரிய தொகை கட்ட சொன்ன போது, ரைஸ் மில் ஓனர், லஞ்சம் கொடுக்க முனைந்துள்ளார்.

ஆனால், சீனிவாசனோ, 'என் கை சுத்தமா இருக்கறதால தான், நிம்மதியா தூங்கறேன்; மின்சாரம் திருடுனதுக்கான நோட்டீஸ் உங்களுக்கு வரும்; நீங்க எங்க மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிக்கங்க...' என்று கூறவும், 'நோட்டீஸ் அனுப்ப வேணாம்; அபராதம் கட்டிடுறேன்'னு சொல்லி, அபராதம் கட்டினார். இதனால, மில் ஓனர், சீனிவாசனை எப்படியாவது பழி வாங்கணும் என்று காத்திருந்தார்.

அச்சமயத்தில் தான், ஜூனியர் இன்ஜினியராக வேலையில் சேர்ந்தார் ராமச்சந்திரன். எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் வாங்கிய அவர், தனக்கு கீழ் வேலை பார்க்கும், அதிகம் படிக்காதவரான சீனிவாசனை அவ்வளவாக மதிப்பதில்லை.

அக்காலத்தில், மாதம் ஒரு முறை பராமரிப்பு வேலைகள் நடக்கும். ஏரியா ஏரியாவாக பிரித்து, அந்தப் பகுதிகளில், முன்னறிவிப்பு தண்டோரா போட்டு, மின் தடையை அறிவிப்பர்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 1:07 am

சீனிவாசனுக்கு அரியமங்கலம் ரைஸ் மில் அருகில் இருந்த 'டிரான்ஸ்பார்மர்' ஒதுக்கினர். மதியம், 3:00 மணிக்கு பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில், இரண்டு இடங்களில் மட்டும் மின் கம்பிகள் மீது, மரக்கிளைகள் உரசியபடி இருப்பதை பார்த்து, அதை வெட்டுவதற்காக இரண்டு லைன் மேன்கள் மரத்தில் ஏறினர். ஒருத்தர் வேலையை முடித்து திரும்பி விட்டார். மற்றொருவரான ராசு மட்டும், கிளைகளை, வெட்டிக் கொண்டிருந்தார். கீழே, 'டிரான்ஸ்பார்மர்'க்கு காவலுக்கு நின்றிருந்த லைன்மேன் முருகன், டீ குடிக்க சென்று விட்டான்.

மறுபடியும், மின் இணைப்பு கொடுப்பதற்காகவும், அந்தப் பகுதியில் நடந்த பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும், சீனிவாசனும், அவர் குழுவினரும் சென்றனர்.

அச்சமயம், இன்ஜினியர் ராமச்சந்திரன் அங்கு வர, பராமரிப்பு பணி முடிந்துள்ள நிலையில், மின் இணைப்பு கொடுக்காததைப் பார்த்து, 'ஏன் இன்னும் இணைப்பு கொடுக்கல?' என்று கேட்டார்.

அப்போது அங்கு வந்த ரைஸ் மில் ஓனர், இதுதான் சீனிவாசனை பழிவாங்க ஏற்ற சமயம் என, 'சார்... வேலை முடிஞ்சு ஒரு மணி நேரம் ஆச்சு; வேணும்ன்னே, 'டிலே' செய்றாங்க. காரணமே இல்லாம, கரன்ட்டை, 'கட்' பண்ணிடுறாங்க. தீபாவளி, பொங்கலுக்கு கவனிக்கலன்னு பழி வாங்கறாங்க...' என்றார்.

உடனே, ராமச்சந்திரன் தானே மின் இணைப்பு கொடுக்க டிரான்ஸ்பார்மர் அருகில் போனார். சற்று தொலைவில் மர உச்சியில் இருந்த ராசு, அதைப் பார்த்து, இணைப்பு கொடுத்தால் உயிர் போய்விடுமே என பயந்து, கீழே குதித்து விட்டார். இதில், அவரது வலது கால் முறிந்தது.

இதனால், கோபமடைந்த ராமச்சந்திரன், சீனிவாசனின் வயதுக்கு கூட மரியாதை தராமல், எல்லார் எதிரிலும் திட்டினார். சீனிவாசன் விளக்கம் கொடுக்க முயன்ற போது, கேட்க மறுத்து, 'நாளைக்கு ஆபிசில் பேசிக்கலாம்...' என சொல்லி, ஜீப்பில் ஏறிப் போய்விட்டார்.

மறுநாள், எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் முன்னிலையில் விசாரணை நடந்த போது, காவலுக்கு நின்ற முருகன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், பர்மிஷனில் போய்விட்டதாகவும் பொய் சொன்னான். அவன் முரடன்; அவனை யாரும் மறுத்துப் பேசவில்லை.

'பணியாளர்கள் அனைவரும் வரும் வரை, 'டிரான்ஸ்பார்மர்' அருகில் சீனிவாசன் இருந்திருக்க வேண்டும்...' என்றும், 'அவர் கவனக் குறைவால் தான் மின் இணைப்பு கொடுப்பதில் தாமதமானதுடன், ராசுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. 'கஸ்டமர் சர்வீஸ்' பாதிக்கப்பட்டது...' என, வக்கீல் போல் வாதாடினார் ராமச்சந்திரன்.
எதுவும் பேசாமல் மவுனமாகவே நின்றிருந்த சீனிவாசன், 'உங்க முடிவுக்கு கட்டுப்படறேன்'னு சொன்னாரே தவிர, விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. இதைப் பார்த்த சக பணியாளர்களுக்கு ஆச்சரியம்.
சீனிவாசனுக்கு ஆறு மாச சஸ்பென்ஷன்.

ராசுவின் மருத்துவ செலவுகளை கம்பெனி ஏற்றுக்கொண்டது. சீனிவாசன் தவறு செய்திருக்க மாட்டார் என நினைத்தார், எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.அதனால், அவரே ஒரு நாள் வீட்டுக்கு வந்து, 'சீனிவாசா... அன்னிக்கி கேட்ட கேள்விகளுக்கு நீ எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக இருந்துட்டே... இப்ப கேட்குறேன் பதில் சொல்லு. உன்னோட அந்த மவுனத்துக்கு காரணம் என்ன?' என்று கேட்டார்.

'சார் இதுக்கு நான் பதில் சொல்லணும்ன்னா, நீங்க எனக்கு விதிச்ச தற்காலிக பதவி நீக்கத்தை குறைக்கவோ, நீக்கவோ கூடாது. ஏன்னா, அப்படி நீங்க செய்தீங்கன்னா, யார் என்ன வேணும்ன்னாலும் செய்துட்டு, மேலதிகாரிட்ட பேசி தப்பிக்கலாம் என்ற எண்ணம் வந்து, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதோட, ராமச்சந்திரனுக்கும் தலைக்குனிவு ஏற்படும்.

அப்புறம், அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. அவர் மேல் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது...' என்று கண்டிஷன் போட்டு, அன்று நடந்த விஷயங்களைக் கூறியவர், ரைஸ் மில் ஓனரின் கோபம், ராமச்சந்திரன் தன்னை மதிக்காதது மட்டும் இல்லாமல், மட்டம் தட்டவும் முயற்சி செய்தது என, எல்லாவற்றையும் கூறினார்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 1:08 am

உன் பேர்ல தப்பே இல்லாத போது அன்றைக்கு ஏன் எந்த விளக்கமும் கொடுக்கல...' என, கேட்டார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

'லைன்மேன்கள் எல்லாம் ஏழைகள்; போஸ்ட் ஏறி, ரிஸ்க் எடுத்து, வேலை செய்யறவங்க. முருகன் செய்தது தப்பு தான்; அவன் முரடனே தவிர, நல்ல வேலைக்காரன். அவன மாதிரி வேலையாள் கிடைக்க மாட்டாங்க. ஏதோ அன்னிக்கு தப்பு செய்துட்டான். நான் தான் அவனை அப்படி பேச சொன்னேன். என், 'டீம்' ஆட்களை, நான் விட்டு கொடுக்க மாட்டேன். அதுக்காகத் தான், மவுனமா இருந்து, நான் தான், பொறுப்புன்னு சொல்லாம சொன்னேன்...' என்றார்.

'சரி அதவிடுங்க... ராமச்சந்திரன் தான் மின் இணைப்பு கொடுக்கப் போனார்ன்னு சொல்லியிருக்கலாம்லே...' என்றார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர். 'நான் அப்படி சொல்லியிருக்கலாம் தான்; ஆனால், இந்தக் காலத்துல வேலை கிடைக்குறதே குதிரைக் கொம்பா இருக்கு. ராமச்சந்திரனுக்கு தகுதி அடிப்படையில தான் இந்த வேலையே கிடைச்சிருக்கு.

ஏழைக் குடும்பம்; சின்ன வயசுலேயே தகப்பன இழந்த அவர, அவரோட அம்மா தான், சமையல் வேலை செஞ்சு, படாத கஷ்டமெல்லாம் பட்டு படிக்க வச்சாங்க. இப்ப தான் கஷ்டமில்லாம இருக்காங்க. அவர் தான் தப்பு செய்தார்ன்னு நிரூபிச்சா, அது, அவருக்கு, 'ப்ளாக் மார்க்' ஆயிடும். இதனால், எதிர்காலம் பாதிக்கப்படலாம். வேற வேலை கிடைக்கறதும் கஷ்டம்.

'கொஞ்ச நாள்ல அவருக்கே உண்மை தெரியும். அப்ப, அவர் மனசாட்சிக்கு பதில் சொல்லியே ஆகணும். இனிமேலாவது, அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். தப்பும் செய்ய மாட்டார்...' என்றார்.
'சீனிவாசா உன்ன மாதிரி ஆளை, இந்த உலகத்தில பாக்க முடியாதுப்பா... நீ கேட்காமல் இருந்தா கூட, உன் பதவி உயர்வுக்கு ஏதும் பிரச்னை வராம பாத்துக்கிறேன்...' என்று சொல்லி, காபி குடித்து விட்டுக் கிளம்பினார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

ஆறு மாதம் குடும்பம் கஷ்டப்பட்டது. ஏழு வயிறுகள்; ரசம் சாதம், அப்பளம், நீர் மோர் மட்டும் தான். அம்மாவின் நகைகள் அடகு கடைக்கு சென்றன. இருப்பினும் அவர்கள் தங்கள் கஷ்டத்தை வெளியில் சொல்லிக் கொள்ளவே இல்லை.

அதன்பின், கட்டுமானப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சீனிவாசன். ராமச்சந்திரன் ஒன்றும் பேசவே இல்லை. வறட்டு கவுரவம், வீண் ஜம்பம், மன்னிப்பு கேட்பதை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த மன உறுத்தல் அவருக்குள் இருந்தது.

சீனிவாசன் இறந்த பின்னரே, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டு, தன் கறையை கழுவிக்கொண்டார், ராமச்சந்திரன். அம்மா சொல்லி முடித்த போது, எல்லார் கண்களிலும் கண்ணீர்!

பல்வேறு சமயங்களில், அப்பா எங்களிடம் கண்டிப்பு காட்டியது, கோபித்தது என, எல்லாவற்றுக்கும் இப்போது, புதுப் புது அர்த்தங்கள் கிடைத்தன. கல்லுக்குள் ஈரம் என்பது போல், அவருக்குள் நிறைந்திருந்த மனித தன்மையை நினைத்த போது, அவரை தந்தையாக அடைந்ததை எண்ணி, பெருமையடைந்தோம்!

எஸ்.கோபாலகிருஷ்ணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 18, 2016 5:22 am

கல்லுக்குள் தேரை போன்று , கல்லுக்குள் ஈரமோ>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 18, 2016 5:56 am

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எதையுமே முற்றிலும் நல்லது என்றோ ,முற்றிலும் தீயது என்றோ நம்மால் சொல்ல முடியாது.இன்று நல்லது என்று படுவது நாளைக்கு தீமையாக படலாம். ஒருவனுக்கு துன்பத்தை அளிக்கின்ற அதே பொருள் மற்றொருவனுக்கு இன்பத்தை அளிக்கலாம். ஒரு குழந்தையை எரித்து கொல்லும் அதே நெருப்பு , பட்டினியால் வாடும் ஒருவனுக்கு நல்ல உணவை சமைத்து கொடுக்கலாம்.................தீமை செய்யாமல் நன்மை செய்ய முடியாது என்பதும், இன்பத்தை உண்டாக்க முயலும்போது துன்பமும் கூடவே தோன்றும் என்பதும் உண்மையானால் நல்ல காரியங்களை செய்வதால் என்ன பயன் ? என்று கேட்கலாம்,முதலாவதாக நாம் இன்பமாகிருப்பதற்கு ஒரே வழி துன்பத்தை குறைப்பதற்கு பாடு படுவதே. இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் புரிந்து கொள்கிறோம். அறிவாளிகள் சீக்கிரமாகவும் மந்தமானவர்கள் தாமதமாகவும் புரிந்து கொள்கிறார்கள். மந்தமானவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்த பின்னர் உணர்கிறார்கள்.அறிவாளிகள் அவ்வளவு கஷ்ட படாமலேயே உணர்கிறார்கள். இரண்டாவதாக நாம் நம் கடமைகளை செய்ய வேண்டும். அதுதான் இந்த முரண்பாடான வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி>>> சுவாமி விவே கானந்தர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:50 am

P.S.T.Rajan wrote:கல்லுக்குள் தேரை போன்று  , கல்லுக்குள் ஈரமோ>>>>

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:52 am

P.S.T.Rajan wrote:இந்த பிரபஞ்சத்தில் உள்ள எதையுமே முற்றிலும் நல்லது என்றோ ,முற்றிலும் தீயது என்றோ நம்மால் சொல்ல முடியாது.இன்று நல்லது என்று படுவது நாளைக்கு தீமையாக படலாம்.

ஒருவனுக்கு துன்பத்தை அளிக்கின்ற அதே பொருள் மற்றொருவனுக்கு இன்பத்தை அளிக்கலாம். ஒரு குழந்தையை எரித்து கொல்லும் அதே நெருப்பு , பட்டினியால் வாடும் ஒருவனுக்கு நல்ல உணவை சமைத்து கொடுக்கலாம்.................

தீமை செய்யாமல் நன்மை செய்ய முடியாது என்பதும், இன்பத்தை உண்டாக்க முயலும்போது துன்பமும் கூடவே தோன்றும் என்பதும் உண்மையானால் நல்ல காரியங்களை செய்வதால் என்ன பயன் ? என்று கேட்கலாம்,

முதலாவதாக நாம் இன்பமாகிருப்பதற்கு ஒரே வழி துன்பத்தை குறைப்பதற்கு பாடு படுவதே. இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் புரிந்து கொள்கிறோம். அறிவாளிகள் சீக்கிரமாகவும் மந்தமானவர்கள் தாமதமாகவும் புரிந்து கொள்கிறார்கள்.

மந்தமானவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்த பின்னர் உணர்கிறார்கள்.அறிவாளிகள் அவ்வளவு கஷ்ட படாமலேயே உணர்கிறார்கள். இரண்டாவதாக நாம் நம் கடமைகளை செய்ய வேண்டும்.

அதுதான் இந்த முரண்பாடான வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி>>>

சுவாமி விவேகானந்தர்.

மேற்கோள் செய்த பதிவு: 1203376

அருமையான பகிர்வு ராஜன் அண்ணா புன்னகை........... கல்லுக்குள் ஈரம் !  3838410834 கல்லுக்குள் ஈரம் !  3838410834 கல்லுக்குள் ஈரம் !  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக