புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_m10தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 3:46 pm

சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது தே.மு.தி.க. இந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தேர்தல் தோல்வி குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மாவட்டம் வாரியாக கட்சியின் ஒவ்வொரு அணியில் இருந்தும் நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

தே.மு.தி.க. மாநில மாணவர் அணி துணைச் செயலரும் வழக்கறிஞருமான லயன் எஸ்.சங்கர், நேற்று தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த குன்றத்தூர் ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேஷ் கோபு, குன்றத்தூர் பேரூர் முன்னாள் செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சூரியமூர்த்தி, பீர்க்கன்கரணை பேரூர்ச் செயலாளர் ஜி.பி.ராமு, பல்லாவரம் நகர துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, பல்லாவரம் நகரம், 33வது வட்டச்செயலாளர் திருவேங்கடம், குன்றத்தூர் ஒன்றியம், ஓரத்தூர் ஊராட்சி செயலாளர் முரளி, திருபெரும்புதூர் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சி செயலாளர் சரவணன், பல்லாவரம் நகர முன்னாள் பொருளாளர் குலசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தே.மு.தி.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் தற்போது விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கட்சி தொடங்கியது முதல் இதுவரையில் நடந்த முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு, மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்),

எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை), ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில், ''உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் நாங்கள் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும், யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம்... தே.மு.தி.க. பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தே.மு.தி.க. இருக்கிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009-ல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா?

2005-ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தே.மு.தி.க. என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தே.மு.தி.க. மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும், மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க.வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வை எதிர்த்தோம்.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-ல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக தி.மு.க.வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தே.மு.தி.க. டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா?.

தே.மு.தி.க. கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா, அதன் விளைவு 10½ சதவீதம் இருந்த வாக்கு 2½ சதவீதமாகி போனது.

தி.மு.க. நம்மால் தோற்று விட்டதல்லவா, தி.மு.க.வால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தே.மு.தி.க.வில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க. கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம்"


நன்றி விகடன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 27, 2016 5:04 pm

மக்களின் நாடித்துடிப்பை விஜயகாந்த் கணிக்கத் தவறிவிட்டார் என்று சொல்லமுடியாது . சிறு குழந்தைக்கு கூடத் தெரியும் ; ம .ந . கூ என்பது ஆண்டிகளின் மடம் என்று . அது வெற்றி பெறாது என்று .வைகோ ஒரு மாய வலையை விரித்தார் ; அதில் வசமாக கேப்டன் சிக்கிக் கொண்டார் . தனக்கு யாரோ கொடுத்த பணியை வைகோ கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார் . தான் தோற்கப் போகிறோம் என்று கேப்டனுக்கு நன்றாகவே தெரியும் ; ஆனாலும் கோடிகளை அவரால் விடமுடியவில்லை .

DMK  ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை . எப்படி கவிழ்த்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்துவிடும் . தோல்வி அதற்குப் புதிதல்ல !ஆனால் கேப்டன் கட்சி  கலகலத்து விட்டதே ! இனி சினிமாவுக்கும் போகமுடியாது ! என்ன செய்வாரோ ?
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 27, 2016 10:26 pm

ஒரு ஆணின் தோல்விக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று நிரூபித்ததைத் தவிர ஒன்றும் சாதிக்கவில்லை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 1:59 am

தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் BQVqj6HSH23331ZaOEXV+25_2907060a

மீண்டும் முதலில் இருந்தா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 2:45 am

யினியவன் wrote:ஒரு ஆணின் தோல்விக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று நிரூபித்ததைத் தவிர ஒன்றும் சாதிக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1212894
-
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 9:02 am

யினியவன் wrote:ஒரு ஆணின் தோல்விக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று நிரூபித்ததைத் தவிர ஒன்றும் சாதிக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1212894

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் பணம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக