புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
1 Post - 1%
prajai
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
12 Posts - 2%
prajai
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
9 Posts - 2%
jairam
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இலக்கணமும் இனிக்கும் Poll_c10இலக்கணமும் இனிக்கும் Poll_m10இலக்கணமும் இனிக்கும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணமும் இனிக்கும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 6:06 pm

இலக்கணமும் இனிக்கும் IwbrxVDTBKNIFcuKPqNb+Tamil_News_large_1462575
-–
முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்,காந்தி கிராம பல்கலைக்கழகம்
---------------------------------------------------------------------

எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் கண்டுணர்ந்த
உண்மை இது:

மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும்
வரவேற்பு, இலக்கணத்திற்கு கிடைப்பதில்லை. இலக்கணம்
என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக் காயாய்
நினைப்பதும் மாணவர்களின் பொதுவான இயல்பு.

என்றாலும், ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும்
இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும்.
எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைக்
காட்டி, இலக்கணத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க
வைக்க முடியும்;

வகுப்பறையில் பதுமைகளைப் போல் வெறுமனே உட்கார்ந்தே
இருக்காமல், உயிரோட்டமாகவும் மகிழ்ச்சியாகவும்
மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய இயலும்.இலக்கணத்தை
இனிமையாகவும், எளிமையாகவும் கற்பிப்பதற்கு கண்ணதாசனும்,
பட்டுக்கோட்டையாரும், மருதகாசியும் வாலியும் வைரமுத்துவும்,
பெரிதும் கை கொடுப்பர்.

‘பசியட நிற்றல்’ (பசி வருத்தவும் உண்ணாது இருத்தல்),
‘கண்துயில் மறுத்தல்’ (கண்கள் உறங்க மறுத்தல்) எனத்
தொல்காப்பியம் கூறும் களவுக்காலக் காதலை கூட,
கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளைக் கொண்டு
மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்கலாம்:

பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது!’

————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 6:08 pm

அந்தாதி :

அந்தம் ஆதியாக – ஓர் அடியின் முடிவே அடுத்த அடியின் தொடக்கமாக
– தொடுப்பது ‘அந்தாதி’. ‘அந்தம்’ என்றால் முடிவு; ‘ஆதி’; என்றால்
தொடக்கம். ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’
எனத் தொடங்கி ‘பலே பாண்டியா’ படத்திற்காக கண்ணதாசன்
எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள்
அந்தாதி நலம் பொருந்தியவை:
--

‘பார்த்து நடந்தால்
பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால்
கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!’

————–


‘மூன்று முடிச்சு’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
‘வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், நீரலைகள்
மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள், நினைவலைகள்
தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்’ என்ற
முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான
பாடல்.அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும்

‘பாம்புபாம்பு’ என்பது அடுக்குத் தொடர்; ‘பாம்பு’ எனப் பிரித்தாலும்
இது பொருள் தரும். ‘சலசல’ என்பது இரட்டைக் கிளவி; ‘சல’ என்று
பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும்
இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.

இதனைக் கவிஞர் வைரமுத்து ‘ஜீன்ஸ்’ படத்திற்காக எழுதிய பாடல்
ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்
படுத்தியுள்ளார்:’

சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ… தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ஒன்றல்லோ… ரெண்டும் ஒன்றல்லோ?’

——————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 6:09 pm

]size=18]உவமை அணி :[/size]
-
உவமை என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை
கூறுதல். தெரிந்த ஒன்றைக் கொண்டு, தெரியாத ஒன்றை
விளக்கித் தெளிவு-படுத்துவதற்கும், அழகுணர்ச்சி தோன்ற ஒன்றை
எடுத்துரைப்பதற்கும் இலக்கியங்களில் உவமைகள் கையாளப்
படுகின்றன.

‘குடும்பத் தலைவன்’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய
அற்புதமான பாடல்: திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும்
ஊர்வலமாம்!

ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!…
அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்!
ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து
அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக்
காட்டுவார் கண்ணதாசன்:

‘சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! –
நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித்திருப்பாளாம்!…
செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்!
செம்புச் சிலை போல உருண்டுதிரண்டிருப்பாளாம்! –
நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந்திருப்பாளாம்!’


தற்குறிப்பேற்ற அணி இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியில்
கவிஞர் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி.
சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் இதனை காணலாம்.

‘தாயைக் காத்த தனயன்’ படத்திற்காகக் கண்ணதாசன்
படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்..
.’மூடித்திறந்த இமையிரண்டும் ‘பார் பார்!’ என்றன!
முந்தானை காற்றில் ஆடி ‘வா வா!’ என்றது!’

இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு.
இது காதலனைப் ‘பார், பார்’ என்பது போல் இருக்கின்றதாம்.

இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக
நிகழ்வதுதான். இது ‘வா வா’ என்று காதலியை நோக்கி அழைப்பது
போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால்
இது தற்குறிப்பேற்ற அணி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 6:11 pm

ஐய அணி :

கவிஞர் கருதிய ஒரு பொருளின் அழகினை மகிழ்வுடன்
எடுத்துரைக்கும் போது, அதனைக் கற்போர் அதிசயிக்கும் வண்ணம்
சொல்லுவது அதிசய அணி. ‘ஐய அணி’ என்பது அதிசய அணியின்
ஒரு வகை.

‘தெய்வப் பெண்ணோ? மயிலோ?
கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?
என் நெஞ்சம் மயங்குகின்றதே!’ என்னும் பொருளைத் தரும்
திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா, ஐய அணியில்
அமைந்தது.

‘மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? –
இவள்ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?’எனக்
‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி
இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

ஒரு சொல்லை ஒரே பொருளில் பல முறை கையாளுவது
சொற்பின்வரு நிலை அணி. ‘பாசம்’ என்னும் படத்திற்காகக்
கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வணி நயமாக இடம்
பெற்றிருக்கிறது.

ஆண்:
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டுவாடுகிறேன்!…


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்பெ
ண் வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்!…


முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும், பொருளும்
வருவது முரண் அணி.

‘இது குழந்தை பாடும் தாலாட்டுஇது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்இது நதியில்லாத ஓடம்’

என ‘ஒருதலை ராகம்’ படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில்
முரண் அணி இடம் பெற்றது.

தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு;
கவிஞரோ ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ என்கிறார்.
பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ,
‘இது இரவு நேர பூபாளம்’ என்கிறார்.

இதே போல ‘இது மேற்கில் தோன்றும் உதயம்’ என்றும்,
‘நதியில்லாத ஓடம்’ என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்
.இப்படி கருத்து வாய்ந்த திரைப்பாடல்களைக் கையாண்டு,
தமிழ் இலக்கணத்தைக் கற்பித்தால், நம் வகுப்பறைகளில் மகிழ்ச்சி
நிலவும்.

———————————
நன்றி- தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக