புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
53 Posts - 60%
heezulia
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_m10மந்திரி விஜய பாஸ்கர்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரி விஜய பாஸ்கர்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 1:22 am

மந்திரி விஜய பாஸ்கர்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.

அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் விடாப்பிடி சோதனை நடந்து வருகிறது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா அணியினர், கூவத்துாரில் அடைத்து வைத்திருந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். அப்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது சொத்து குவிப்பு பட்டியலை, பன்னீர் அணியினர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர்.
காலை 6 மணி

தற்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடும், தினகரனின் வலது கரமாக, விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அங்கு நடந்த தாராள பணம் பட்டுவாடாவை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ந்து போய், சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளது.அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு பக்கபலமாக செயல்படும் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர்.
வழக்கத்துக்கு மாறாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் உதவிக்கு, தமிழக போலீசாரும் வந்திருந்தனர்.சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, கெங்கு ரெட்டி தெருவில் உள்ள, விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, திருவொற்றியூரில் உள்ள மற்றொரு சகோதரி வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள, ஐந்து அறைகளிலும் சோதனை நடந்தது. இதில், விஜயபாஸ்கர் அறையில் இருந்து, 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 85 கோடி -----அமைச்சரின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் சீனிவாசன் என்பவரின், வளசரவாக்கம் வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் சிக்கின.இதற்கிடையில், அமைச்சர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை, ஒரு கும்பல், புதுக்கோட்டை நிர்வாகிகள் தங்கியிருந்த, எழும்பூர், கென்னட் லேன், லட்சுமி லாட்ஜிக்கு கடத்தியது. அந்த தகவல் தெரிந்ததும், அந்த லாட்ஜிலும், அதிகாரிகள் புகுந்தனர். அங்கு, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் பட்டியலும், அவர்களுக்கு பணம் தந்ததற்கான ஆவணங்களும் சிக்கின.
இது தவிர, திருவல்லிக்கேணியில் வசிக்கும், அமைச்சருக்கு நெருக்கமான நயினார் முகமது வீட்டில், மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், அமைச்சருக்கு நெருக்கமான தரகர்,
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்பேஷ் ஷா என்பவரின் வீட்டில், 1.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள, தமிழக மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ராஜேந்திரன் வீடு உட்பட,சென்னையில், 26 இடங்களில் சோதனை நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, இரண்டு வீடுகள்; திருவேங்கைவாசல் பகுதியில், பினாமி நிறுவனமான, 'ராசி புளூ மெட்டல்ஸ் குவாரி' ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.மேலும், நச்சாந்துப்பட்டியில் உள்ள, அமைச்சரின் டிரைவர் அப்துல்லா வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அன்னை தெரசா கல்வி நிறுவனங்களிலும், இலுப்பூர் ராசி லாட்ஜிலும் சோதனை நடந்தது.மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மணப்பாறையிலும், நாமக்கல்லில் உள்ள அமைச்சரின் உறவினரான, கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் என, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் சோதனை நடந்தது.இதில், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுவாடா ஆவணங்கள் மற்றும், 4.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையில், சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30 க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.
போட்டுக் கொடுத்த சேகர் ரெட்டி

'அமைச்சர் விஜயபாஸ்கர், என் மறைமுக தொழில் கூட்டாளி' என, சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் தான், அவரது வீட்டில் சோதனை நடத்த காரணமாகி உள்ளது.தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளை நடத்தும் உரிமம் பெற்றிருந்த, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில், 2016 டிசம்பரில் வருமான வரி சோதனை நடந்தது. அதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின், சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக, சேகர் ரெட்டியிடம், டிசம்பர், 8ல் வாக்குமூலம் பெற்றோம். அப்போது, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற மணல், கிரானைட் சாம்ராஜ்ஜியத்தில், நான், சீனிவாசலு, ரத்தினம் ஆகிய மூவருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், சைலன்ட் பார்ட்னராக இருக்கிறார்' என்ற அதிர்ச்சி தகவலை, சேகர் ரெட்டி கூறினார். இந்தத் தகவல், அவரின், பக்க வாக்குமூலத்திலும் இடம் பெற்றுள்ளது.அப்போதிருந்தே விஜயபாஸ்கரை கண்காணித்து வருகிறோம். தேர்தல் பணம் பட்டுவாடாவுக்காக மட்டும், இந்த சோதனை நடைபெறவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மணல் சாம்ராஜ்ஜியம்!அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில், இலுப்பூரில் மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு, ஜல்லி, கிராவல் மண் ஆகியவை எடுக்கப்படுகின்றன. இந்த குவாரி வளாகத்தில், 'கான்கிரீட் மிக்சிங்' நிறுவனத்தை, மனைவி ரம்யா பெயரில், விஜயபாஸ்கர் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனங்களுக்கு, விஜயபாஸ்கரின் குடும்பத்தார் பெயரிலும், அவரின் பினாமிகள் பெயரிலும், நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இங்கு, 100 ஏக்கர் பரப்பில், மலை போல் குவிக்கப்பட்டுள்ள மணல் மற்றும் ஜல்லிகளை பார்த்தால், 10 ஆண்டுக ளுக்கு சப்ளை செய்ய முடியும் என, வருமான வரி அதிகாரிகள் திகைப்புடன் தெரிவித்தனர்.அணி மாற கைமாறிய பணம்!வருமான வரித்துறையினர் கூறியதாவது:நடிகர் சரத்குமாரை, தினகரனுக்கு ஆதரவாக இழுக்க, விஜயபாஸ்கர் கடுமையாக முயன்றுள்ளார். இதில், ஏழுகோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.சரத்குமாரை, தினகரனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்துள்ளார். அதனால், சரத்குமாருக்கு தரப்பட்டதாக கருதப்படும் ரொக்கப் பணத்தை, அவரது வங்கி லாக்கர்களில் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குட்கா அதிபரிடம் பல கோடி மாமூல்!

வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் பான், குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தார். ஆனால், மாநிலம் முழுவதும், அவை தங்கு தடையின்றி விற்பனையாகின. அந்த ஆலை அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர்.அதனால், நாங்கள், 2016 ஜூலை மாதத்தில், சென்னை, திருச்சி மற்றும் ஆந்திராவில் உள்ள, குட்கா ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினோம். அதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆலை அதிபர் மற்றும் கூட்டாளிகளிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 'டைரி' மூலம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில், தடை விதிக்காமல் இருப்பதற்கு, மாமூல் தரப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கீதாலட்சுமி சிக்கியது எப்படி?
தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் அரசு பொது மருத்துவமனை டீன் போன்ற பதவிகளை வகித்தவர்.சில பணி நியமனங்கள் மற்றும் மருந்து கொள்முதல்களுக்கு, விஜயபாஸ்கருக்கு தரகர் போல் செயல்பட்டதால், அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

அரசியல் பழிவாங்கல்!
வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு வந்ததும், அமைச்சர் திடுக்கிட்டார். அப்போது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்ற பணிகள் தொடரட்டும் என, அதிகாரிகள் கூறினர்.ஆனால், தன் மகளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, அமைச்சர் பேட்டி கொடுத்ததால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையில், அமைச்சர் அளித்த பேட்டியில், ''தினகரன் வெற்றியை தடுக்கும் திட்டத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி, அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான், இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதே தவிர, வேறெந்த காரணமும் இல்லை,'' என்றார்.

சரத்குமார் வீட்டில்நடந்த பரபரப்பு
சென்னை, கொட்டிவாக்கத்தில், சரத்குமார் வீடு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி முதல், வருமான வரித்துறையினர், இந்த வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டு வாசலில் நின்ற, இரண்டு பிரசார வாகனத்தை சோதனையிட்டனர்.வீட்டில், சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருந்தனர். சிறிது நேரத்தில், அங்கு கூடிய ரசிகர்கள், மோடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.மாலை, 3:00 மணிக்கு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்களை, போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசார் மற்றும் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சரத்குமார் கூறியதாவது:தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க, என் வீட்டை சோதனையிட்டு உள்ளனர். மனைவி ராதிகா குளித்துக் கொண்டிருந்த போது, குளியலறை கதவை தட்டி, சாவி கேட்டனர். மருந்து வாங்கக் கூட வெளியே அனுப்பவில்லை. அதிகாரிகள், நாகரிகம் இல்லாமல் நடந்தனர்.நான், தினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.
-
நன்றி  நமது சிறப்பு நிருபர தினமலர் -


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 08, 2017 5:49 am

2011ல் வந்த ஒரு கவிதை
-
அரசியல் எனும் புனிதம்
சாக்கடையாகிக் கிடக்கிறது..
துடைப்பவர் யாருமில்லை
சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

மக்கள் எனும் பாமரன்
பசப்பு வார்தைகளில் மதிமயங்கி
குப்பைகளுக்கே முலாம் பூசுகிறான்
வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
புத்திஎனும் இயந்திரம் தனக்கிருந்தும்
அரசியலை சுத்தம் செய்ய
முனைபவர் யாருமில்லை

வாக்கிடும் மனிதா
சற்று சிந்தித்துப்பார்
உன் வாக்கை மட்டும் அடைவதற்காய்
உன் கால்பிடிக்கிறான்
உன்னை உறவு என்கிறான்
அத்தனையும் நீ வாக்கிடும் வரை
உன் வாழ்நாளில் எத்தனை
தடவை ஏமாந்திருப்பாய்
உன்னில் மாற்றம் ஏதுமுண்டா?
சற்று கவனித்துப்பார்

உன்னை ஏணியாக்கி ஏறியவன்
எட்டி உதைத்து விட்டு....
அடுக்கு மாடிகளிலும்
சொகுசுவாகனங்களிலும்
சல்லாப வாழ்க்கையுடன்
வலம் வருகிறான்
தன்குடுப்பத்துக்கும்
தன்சார்ந்தவனுக்கும்
அரசியல் செய்கிறான்
நீ காணவில்லையா?

மீண்டும் உன் காலடி வருவான்
மீண்டும் உன்னிலை அதுதான்
உன் சந்ததிகளுக்கு
நீ செய்தது ஏதுமில்லை
அருகதையற்ற அரசியல் வாதியாகிய
அவன் சந்ததிதான் நாட்டின்
நாளைய தலைமைகள்
சிந்தித்துப்பார்.....

ஒன்று மட்டும் சாத்தியம்
உன்னை வைத்து மூட்டப்படும்
அரசியல் எனும் தீயினால்
உன்னால் மட்டும்
அணைத்து விடவும் முடியும்
பிராகாசிக்கச்செய்யவும் முடியும்
இன்று ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல் சாக்கடை
சமூகமெனும் சமுத்திரத்தை
மாசுறச்செய்யு முன்
நிறுத்தி வடிகட்டி விட
உன்னால் மட்டும் முடியும்
இன்றே விழித்தெழு
இனி உன் கையில்.....
மாறுமா நாளை?
---

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 7:08 am

ஆம் இதுதான் நிதரிசனம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 08, 2017 9:23 am

இனியும் மோடி தாமதித்தால் தமிழ்நாடே கொள்ளைபோய்விடும் . ஆட்சியைக் கலைத்துவிட்டு , தேர்தல் நடத்துவதற்கு ஆவண செய்யவேண்டும் .

சட்டையில் ஒரு கிழிசல் என்றால் தைத்துப் போட்டுக் கொள்ளலாம் . சட்டை முழுவதும் கிழிசல் என்றால் , அதைக் குப்பையில் எறிந்துவிட்டுப் புதிய சட்டை வாங்குவதே மேல் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 08, 2017 8:23 pm

இதையெல்லாம் படிக்கும் போது எப்படிப்பட்ட ஒரு ஊரில் நாம் இருக்கிறோம் என்று விரக்தி தான் மிஞ்சுகிறது.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 10:12 pm

வருமான வரித்துறை சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் கைபற்றப்பட்ட ஆவணங்கள் வெளியீடு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் கைபற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் தற்போது வெளியிட்டனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர்.
இதில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. அந்த ஆவணங்களில் முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களின் பெயர்களும் எம்.எல்.ஏக்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.  85 சதவீதம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவுக்கு ரூ.89.65 கோடி வழங்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் பணம் பெற்றவர்கள் கையொப்பம் இடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
இன்று இரவுக்குள் வருமான வரைத்துறையின் சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்து தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும். 

நன்றி தினமணி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 10:13 pm

இந்த பட்டியலில் பணம் பெற்றவர்கள் கையொப்பம் இடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதல்லவோ நேர்மை !!!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 10:24 pm

ராஜா wrote:இதையெல்லாம் படிக்கும் போது எப்படிப்பட்ட ஒரு ஊரில் நாம் இருக்கிறோம் என்று விரக்தி தான் மிஞ்சுகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1238037

தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப அட் ஜீஸ் பண்ணிக்கொள்பவர்கள் இலவசம் என்று ஒன்றை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருந்தால் போதும். மண்டையில் மசாலா கிடையாது. எந்த ஒரு வியாபாரியும்
அரசியல் வ்யாபாரியையும் சேர்த்தே சொல்கிறேன்: ஒரு ரூபாய் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு 100 ரூபாய் லாபம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும். அதில் நம்முடைய 95 ரூபாய் வாழ்வாதாரம் பறிபோகிறது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 09, 2017 7:00 am

அந்த ஆவணத்தில் நம்பகத்தன்மை இல்லை என்று தினகரன் கூறியிருக்கிறாரே !

இந்த ஆவணத்தைத்தான் தளவாய் சுந்தரம் ரகசியமாக எடுத்துக்கொண்டு வந்து , அமைச்சரின் டிரைவரிடம் கொடுத்தாராம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:34 am

ayyasamy ram wrote:2011ல் வந்த ஒரு கவிதை
-
அரசியல் எனும் புனிதம்
சாக்கடையாகிக் கிடக்கிறது..
துடைப்பவர் யாருமில்லை
சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
கொட்டிக்கிடக்கிறது
அரசியல் ஓடையில்
துடைப்பார் யாருமில்லை

மக்கள் எனும் பாமரன்
பசப்பு வார்தைகளில் மதிமயங்கி
குப்பைகளுக்கே முலாம் பூசுகிறான்
வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
புத்திஎனும் இயந்திரம் தனக்கிருந்தும்
அரசியலை சுத்தம் செய்ய
முனைபவர் யாருமில்லை

வாக்கிடும் மனிதா
சற்று சிந்தித்துப்பார்
உன் வாக்கை மட்டும் அடைவதற்காய்
உன் கால்பிடிக்கிறான்
உன்னை உறவு என்கிறான்
அத்தனையும் நீ வாக்கிடும் வரை
உன் வாழ்நாளில் எத்தனை
தடவை ஏமாந்திருப்பாய்
உன்னில் மாற்றம் ஏதுமுண்டா?
சற்று கவனித்துப்பார்

உன்னை ஏணியாக்கி ஏறியவன்
எட்டி உதைத்து விட்டு....
அடுக்கு மாடிகளிலும்
சொகுசுவாகனங்களிலும்
சல்லாப வாழ்க்கையுடன்
வலம் வருகிறான்
தன்குடுப்பத்துக்கும்
தன்சார்ந்தவனுக்கும்
அரசியல் செய்கிறான்
நீ காணவில்லையா?

மீண்டும் உன் காலடி வருவான்
மீண்டும் உன்னிலை அதுதான்
உன் சந்ததிகளுக்கு
நீ செய்தது ஏதுமில்லை
அருகதையற்ற அரசியல் வாதியாகிய
அவன் சந்ததிதான் நாட்டின்
நாளைய தலைமைகள்
சிந்தித்துப்பார்.....

ஒன்று மட்டும் சாத்தியம்
உன்னை வைத்து மூட்டப்படும்
அரசியல் எனும் தீயினால்
உன்னால் மட்டும்
அணைத்து விடவும் முடியும்
பிராகாசிக்கச்செய்யவும் முடியும்
இன்று ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல் சாக்கடை
சமூகமெனும் சமுத்திரத்தை
மாசுறச்செய்யு முன்
நிறுத்தி வடிகட்டி விட
உன்னால் மட்டும் முடியும்
இன்றே விழித்தெழு
இனி உன் கையில்.....
மாறுமா நாளை?
---

உண்மை உண்மை உண்மை அண்ணா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக