புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:21

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
45 Posts - 58%
heezulia
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
82 Posts - 59%
heezulia
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
50 Posts - 36%
mohamed nizamudeen
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_m10 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82393
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Jan 2018 - 15:12

 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் 23

அக்கா தங்கை உறவு, அம்மா குழந்தை போன்றது.
அக்கா என்பவள் அம்மாவிற்கு சமமானவள். ‘‘அம்மாவிடம்
பரிந்து பேசவும், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக
இருப்பவள் என் அக்கா ஸ்ரீஉஷாதான்...’’ என்கிறார் சிரீஷா.

ஒரே மாதிரியான உடை, அணிகலன், பேச்சு, ஹேர்ஸ்டைல்.
பார்க்க டிவின்ஸ் போல் இருக்கும் இந்த சகோதரிகள்
இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் சகோதரிகள்.

மாண்டலினை பலர் வாசிக்கிறார்கள். ஆனால், அக்கா தங்கை
என இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் வாசிப்பது இவர்கள்
மட்டுமே. ‘‘மாண்டலின் சகோதரிகள்னு எல்லாரும்
அழைக்கிறப்ப பெருமையா இருக்கு...’’ முகமெல்லாம் மலர
பேசத் தொடங்குகிறார் ஸ்ரீஉஷா.

‘‘நாங்க இரட்டையர்கள்னுதான் நினைக்கறாங்க. உண்மைல
சிரீஷாவுக்கும் எனக்கும் ஒன்றரை வருஷ வித்தியாசம். அப்பா
தொலைபேசித் துறைல வேலை பார்க்கறார். அம்மா இல்லத்தரசி.
அப்பாதான் எங்க இசை குரு. அவரைப் பார்த்துதான் எங்களுக்கும்
இசை மேல ஆர்வம் வந்தது.

அப்பா கிட்டார் வாசிப்பார். கர்நாட சங்கீதமும் பாடுவார்.
இரண்டையும் முறைப்படி கத்துக்கிட்டார். வீட்ல அவர் வாசிப்பதை
நானும் சிரீஷாவும் கண்கொட்டாம பார்ப்போம். காது குளிர
கேட்போம். அப்ப எனக்கு அஞ்சு வயசு. சிரீஷாவுக்கு நாலு. அப்பா
வேலைக்குப் போனதும் அவர் கிட்டாரை எடுத்து வாசிப்பேன்.

ராகம், ஸ்வரம் எல்லாம் தெரியாது. இழையை இழுத்தா சத்தம்
வரும். அவ்வளவுதான். என்னைப் பார்த்து சிரீஷாவும் வாசிக்க
ஆரம்பிச்சா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82393
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Jan 2018 - 15:14


ஒருநாள் அப்பா இதை பார்த்துட்டார். திட்டுவார்னு நினைச்சோம்.
ஆனா, அவர் சிரிச்சார். எங்களுக்கு இசையை கத்துக் கொடுக்க
முடிவு செஞ்சார். இப்படித்தான் நாங்க மாண்டலின் கத்துக்க
ஆரம்பிச்சோம்...’’ என ஸ்ரீஉஷா முடிக்க, தொடர்ந்தார் சிரீஷா. இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் 23a
‘‘நாங்க கிட்டார் உயரம் கூட இருக்க மாட்டோம். அதைப் பிடிச்சு
அந்த வயசுல வாசிக்கறது கஷ்டம். எங்க வயசுக்கு ஏத்ததா,
பிடிச்சு வாசிக்க வசதியா இருந்தது மாண்டலின்தான்.
அதனாலதான் அப்பா அதை தேர்வு செஞ்சார். தொடக்கத்துல
அப்பாதான் குருவா இருந்தார்.

அடிப்படைகளை அவர் சொல்லிக் கொடுத்ததும் வித்வான்
ருத்ரராஜு சுப்புராஜுகிட்ட பயிற்சி எடுத்துக்க ஆரம்பிச்சோம்.
இவரேதான், மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கும் குரு. இவர்கிட்ட பயிற்சி
முடிச்சதும் கடந்த 15 வருஷங்களா வித்வான் செங்காலிபுரம்
ராமமூர்த்தி அய்யர்கிட்ட கத்துக்கறோம். இவர் சங்கீத கலாநிதி
முடிகொண்டான் வெங்கடராம அய்யரின் சீடர்...’’ பெருமையாகச்
சொல்கிறார் சிரீஷா.

இந்த சகோதரிகள் பல சபாக்களிலும் கோயில்களிலும் கச்சேரி
செய்திருக்கிறார்கள். ‘‘முதல்ல திருவையாறு தியாகராஜ
ஆராதனைலதான் வாசிச்சோம். எப்படி ஒண்ணா கத்துக்க
ஆரம்பிச்சோமோ அப்படி ஒண்ணாவே வாசிக்கறோம். பயிற்சி கூட
தனித்தனியா எடுத்துக்க மாட்டோம். எங்களோட எல்லா
நிகழ்ச்சிகளையும் யூ டியூப்ல பதிவு செஞ்சிருக்கோம்.
இதைப் பார்த்துட்டு ஐரோப்பிய நாடுகள்ல கூப்பிட்டாங்க.

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன்,
சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரேசில், நார்வே, ஜெர்மனி, சிங்கப்பூர்,
மஸ்கட்னு பல நாடுகள்ல கச்சேரி நடத்தியிருக்கோம்...’’ என்று
சொல்லும் ஸ்ரீஉஷா, கர்நாடக சங்கீதத்தை மட்டுமே தாங்கள்
வாசிப்பதாக அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிடுகிறார்.

‘‘வெஸ்டர்ன் வாசிக்கறதில்லை. வாசிக்கத் தெரியாதுனு இல்லை.
வெளிநாடுகள்ல கூட நம்ம சங்கீதத்தைத்தான் விரும்பறாங்க.
நாங்க வாசிக்கறதுக்கு முன்னாடி அதுகுறித்த குறிப்பை
விளக்குவோம். இதனால நாங்க வாசிக்கும்போது இசை
தெரியாதவங்க கூட மெய்மறந்து ரசிக்க ஆரம்பிப்பாங்க...’’
இந்த மாண்டலின் சகோதரிகள் ஆல்பம் தயாரித்து வருவதுடன்
ஃபியூஷனில் கலக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
=
==============

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82393
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Jan 2018 - 15:18


 இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள் 23b


‘‘கர்நாடக சங்கீதத்தை கத்துக்கிட்டா போதும். எல்லா
இசையையும் வாசிக்கலாம். இப்ப இங்கிலாந்து பாடகரான
அப்பாச்சி இந்தியன் கூட இணைஞ்சு ஓர் ஆல்பம் செய்யறோம்.

போன நவம்பர்ல ‘இண்டிஎர்த் எக்ஸ்சேஞ்ச்’ இசை நிகழ்ச்சி
சென்னைல நடந்தது. பல நாடுகள்லேந்து கலைஞர்கள்
வந்திருந்தாங்க. அதுல பெல்ஜியம் கலைஞர்கள் எங்க கூட
சேர்ந்து ஃபியூஷன் வாசிச்சாங்க. அதாவது அவங்க வெஸ்டர்ன்
வாசிப்பாங்க. நாங்க அவங்க நோட்ஸுல கர்நாடக சங்கீதம்
வாசிப்போம்.

அந்த மூணுநாள் இசை நிகழ்ச்சி எங்களுக்கு பல புரிதலை
கொடுத்திருக்கு...’’ என்கிறார் சிரீஷா.

‘‘இசை, உடைல மட்டுமில்ல... நாங்க படிச்ச பட்டப்படிப்பும்
ஒண்ணுதான். 10வது வரைதான் ஸ்கூல் போனோம். அப்புறம்
ப்ரைவேட்டா படிச்சோம். ஸோ, பள்ளி வட்டாரத்துல நண்பர்கள்னு
எங்களுக்கு பெருசா கிடையாது. ஆனா, இசை வட்டாரத்துல
நிறைய நண்பர்கள் இருக்காங்க. எல்லாத்தையும் விட நாங்க
இரண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஒரே வித்தியாசம்,

அக்கா நல்லா ஓவியம் வரைவாங்க. எனக்கு பெயின்டிங் வராது.
பதிலா உடை அலங்காரம், எம்பிராய்டரி எல்லாம் செய்வேன்.

இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டதில்லை.
கல்யாணம் வரை ஒரே மாதிரியா டிரெஸ் அணிஞ்சோம்.
நைட் டிரெஸ் கூட அப்படித்தான். அக்காக்கு திருமணமாகி
ஒன்றரை வருஷமாகுது. எனக்கு ஆறு மாசமாகுது.

எங்க கணவர்களும் இசைப் பிரியர்கள்தான். அவங்களுக்கு
வாத்தியம் வாசிக்கத் தெரியாது. ஆனா, சிறந்த ரசிகர்கள்.
திருமணத்துக்குப் பிறகும் நாங்க ஒண்ணா இசையமைக்க
அவங்க ஆதரவுதான் காரணம். 10 வயசுல முதல் கச்சேரி
செஞ்சோம்.

இதுவரை 3 ஆயிரம் கச்சேரிகள் வரை செய்திருக்கோம்...’’
என்று சிரீஷா முடிக்க, தங்களுக்கென பிரத்யேகமாக
உருவாக்கப்பட்டிருக்கும் மாண்டலின் குறித்து விவரித்தார்
ஸ்ரீஉஷா.

‘‘மாண்டலின், வெஸ்டர்ன் இசைக்கருவி. அதுல 8 இழைகள்
இருக்கும். கர்நாடக சங்கீதத்தை அதுல வாசிக்க முடியாது.
அதனால எங்க குரு வித்வான் ருத்ரராஜு சுப்புராஜு அவர்களும்
மாண்டலின் ஸ்ரீநிவாசும் இணைஞ்சு கர்நாடக சங்கீதத்துக்கான
மாண்டலினை உருவாக்கினாங்க. இதுல அஞ்சு இழைங்கதான்
இருக்கும்.

இதுல வெஸ்டர்னும் வாசிக்கலாம். பொதுவா வெஸ்டர்ன்
இசைல கமக்காஸ் வாசிக்க முடியாது. அவங்க அதை
வாசிக்கவும் மாட்டாங்க. அவங்களுக்கு சரிகமதான் நோட்.
இதைச் சார்ந்துதான் அவங்க இசை இருக்கும்.

ஆனா, நம்ம கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை கமக்காஸ்
நிறைய பயன்படுத்துவோம். இதை அஞ்சு இழைகளாலான
மாண்டலினில்தான் வாசிக்க முடியும். இசைங்கறது பெரிய
கடல். ஒவ்வொரு கச்சேரி செய்யறப்பவும் எங்க இசையை நாங்க
அப்கிரேட் செய்துக்கறோம்.

இப்ப கச்சேரிகள்லதான் முழு கவனம் செலுத்தறோம்.
சினிமா அல்லது ஜிங்கிள்ல வாசிக்க வாய்ப்பு கிடைச்சா மறுக்க
மாட்டோம்...’’ என்கிறார் ஸ்ரீஉஷா. இந்த மாண்டலின்
சகோதரிகளின் கனவு, இசைஞானி இளையராஜாவிடமும்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடமும் பணிபுரிய வேண்டுமென்பது!
-
--------------------------------------

- ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
குங்குமம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக