புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
30 Posts - 70%
heezulia
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
12 Posts - 28%
mohamed nizamudeen
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
72 Posts - 65%
heezulia
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
33 Posts - 30%
mohamed nizamudeen
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_m10வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 29, 2018 10:08 am


சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் சித்ரா பவுர்ணமி
நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது
நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.
-
வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி 201804281526023842_Chitra-Pournami-worship_SECVPF
-
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில்
வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக
சிறப்பைப் பெறுகிறது.

மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன்,
சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக
அருகில் தோன்றும்.

சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில்,
நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத்
தரும் என்பது ஐதீகம்.

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து
அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின்
அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை
நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின்
உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள்.

சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள்
விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி,
பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை
சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல
ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி
மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன்,
அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும்,
தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள்
அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின்
ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது.

அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற,
அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக்
காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த
குழந்தை உயிர்பெற்று வந்தது.

சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில்
இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று
ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங் களைப் பெற்று
வளர்ந்தது.

கல்வி வேள்விகளில் சிறந்தவன் ஆன சித்ரகுப்தனை தகுந்த
வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய
கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி
செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.

‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’
என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும்
பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின்
புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார்
சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 29, 2018 10:20 am

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி 201804281526023842_1_Chitra-Pournami._L_styvpf
-

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக
இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்
போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம்.

நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும்
தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின்
படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில்
எழுதுவதாக நம்பிக்கை.

ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும்
கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற
வேண்டுகின்றனர்.

சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து,
சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால்
அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து,
பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன்
இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப்
படைக்க வேண்டும்.

ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய
எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப
தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.

சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின்
அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில்
மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த
‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து,
நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே
ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம்
பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும்,
பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி ப
க்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்பு
மிக்க வைபவமாகிறது.

கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன்
மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி
பெற்றதாக இருக்கிறது.

இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை
அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில்
நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி
சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம்,
வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா,
அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப்
படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து
புண்ணியம் பெறலாம்.
-
-------------------------------------
மாலை மலர்

_________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக