புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
306 Posts - 42%
heezulia
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
6 Posts - 1%
prajai
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
5 Posts - 1%
manikavi
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_m10புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 02, 2018 7:05 pm

வயது ஆக ஆக ஆண்கள் பலருக்கும் பகலில் சிறுநீர்
செல்வது குறைந்து, இரவில் அதிகமாகச் செல்லத்
தொடங்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அதில், புராஸ்டேட் சுரப்பி வீங்குவது ஒரு முக்கியக்
காரணம்.
-
எது புராஸ்டேட் சுரப்பி?
-
அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி
தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச்
சுற்றித் தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது.
அதற்குப் புராஸ்டேட் சுரப்பி என்று பெயர்.
-
ஒரு வாதுமைக்கொட்டை அளவில் அதிகபட்சமாக 16 கிராம்
எடையே உள்ள இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.
-
இது முழுக்க முழுக்க ஒரு பாலியல் சுரப்பியாகும்.
இளமைப் பருவம் வந்தவுடன் இதன் முக்கியத்துவம்
அதிகரித்து விடுகிறது. இதில் புரதம் மற்றும் என்சைம்கள்
கலந்த திரவம் சுரக்கிறது.
-
இது விந்தணுவுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. விந்தணுவின்
அளவு, இயக்கம் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான்
உள்ளன. பாலுறவு தொடர்பான உணர்ச்சிகளை ஊக்குவிப்பதும்,
பாலுறவின்போது பெண்ணுறுப்புக்கு விந்துவைச் சுமந்து
செல்வதும் இந்தத் திரவம்தான்.
-
ஆகவே புராஸ்டேட் சுரப்பிக்கு ‘ஆண்மை சுரப்பி’ என்று
ஒரு காரணப் பெயரும் உண்டு.
-
புராஸ்டேட் சுரப்பி வீக்கம்
-
பொதுவாக, வாலிபப் பருவத்தில் இது ஆரோக்கியமாகவே
இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும்.
‘பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’
(Benign prostatic hyperplasia - BPH) என்று இதற்குப்
பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம்
ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான்.

முதுமையில் தலைமுடி நரைப்பதைப் போல இதுவும்
முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்பட்டாலும்,
பலருக்கு இது ஒரு நோயாகத் தலையிடும்போது,
இதைப் பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதுவதுண்டு.
முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை
அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை
உருவாக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 02, 2018 7:06 pm



அறிகுறிகள்

* சிறுகச் சிறுகச் சிறுநீர் கழித்தல்.

* சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது.

* சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுதல்.

* இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

* சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளது
போன்று உணர்தல். மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற
உணர்வு தோன்றுதல்.

* கடைசியில் சொட்டுச்சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல்.

இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ காணப்படுமானால்,
அந்த நபருக்குப் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளதாகச்
சந்தேகப்படலாம். பொதுவாக, இந்த வீக்கத்துக்குப் பயப்படத்
தேவையில்லை. ஆரம்ப நிலையில் இதை மருந்துகள் மூலமே
சமாளித்துவிடலாம்.

முடியாதபோது, ‘டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக்ஷன் ஆஃப்
புராஸ்டேட்’ (TURP) எனும் அறுவை சிகிச்சை மூலம் அல்லது
இப்போது வந்துள்ள நவீன முறையான லேசர் சிகிச்சையின்
மூலம் புராஸ்டேட் வீக்கத்தைக் குறைத்துவிடலாம்.

புராஸ்டேட் புற்றுநோய்

இந்த வீக்கத்துக்குப் புற்றுநோய் காரணமாக இருந்தால்தான்
ஆபத்து. இதன் அறிகுறிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்:

* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் வரலாம்.

* விரைப்பைக்கு அடியிலோ, விரைகளிலோ வலி
உண்டாகலாம்.

* சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதற்குச் சிரமம்
ஏற்படலாம்.
-
சிறுநீர் செல்லும்போது வேகம் குறையலாம்.

* சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் முழுமையாக வெளியேறாமல்,
ஓரளவுக்கு மீதம் இருக்குமானால், மீண்டும் மீண்டும் சிறுநீர்
கழிக்கத் தோன்றுவதுண்டு.

* பொதுவாகச் சொன்னால் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்குச்
சொல்லப்பட்ட எல்லா அறிகுறிகளும் இதிலும் காணப்படும்.
அத்தோடு சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.

இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துச் சிகிச்சை பெற்றுக்
கொண்டால் நல்லது. இல்லையென்றால், பின்னாளில் நிணநீர்
மூலம் உடலில் பல இடங்களில் இது பரவிவிடும். குறிப்பாக,
இது முதுகெலும்புக்குப் பரவத் தொடங்கும்.

அப்போது முதுகெலும்பில் வலி ஏற்படும். இந்த நேரத்தில் நோய்
கடுமையாகிவிடும்.
-
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சுமார் 14 சதவீதம்
பேருக்குப் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே,
இந்த வயதில் உள்ள ஆண்கள் அனைவரும் தங்கள் புராஸ்டேட்
சுரப்பியின் நிலைமையைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள
வேண்டும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 02, 2018 7:07 pm


என்ன பரிசோதனை?

1. ஆசனவாய் விரல் பரிசோதனை
(Digital Rectal Examination DRE)

நோயாளியின் ஆசனவாயில் மருத்துவர்கள் விரலை நுழைத்துப்
பரிசோதிப்பார்கள். அப்போது புராஸ்டேட் சுரப்பி
வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை ஓரளவுக்கு மருத்துவரால்
உணர முடியும்.

இதில் வீக்கமுள்ளது எனத் தெரிந்த பின்னர், அதை உறுதி
செய்யும் விதமாக வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு
உட்படுத்தப் பரிந்துரைப்பார்கள்.

2. வயிறு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
-
இந்தப் பரிசோதனையில் புராஸ்டேட் சுரப்பி எந்த அளவுக்கு
வீக்கமடைந்துள்ளது என்பது தெரியும். விரல் பரிசோதனையில்
தெரியாத மிதமான வீக்கமும் இதில் தெரிந்துவிடும்.

மேலும் இந்த வீக்கம் எந்த அளவுக்குச் சிறுநீர்ப்பையை
அடைத்துள்ளது என்பதையும், ஒருமுறை சிறுநீர் கழித்த
பின்னர் சிறுநீர்ப் பையில் எவ்வளவு சிறுநீர் தங்குகிறது
என்பதையும் கண்டுகொள்ளலாம்.

இதை வைத்து நோயை மருந்தால் குணப்படுத்துவதா,
அறுவை சிகிச்சை அவசியமா என்பது போன்ற விவரங்களைச்
சொல்லமுடியும்.
-
3. ‘பி.எஸ்.ஏ.’ (PSA) ரத்தப் பரிசோதனை:

* புராஸ்டேட் பிரச்சினைகளுக்குச் செய்யப்படுகிற மிக
முக்கியமான ரத்தப் பரிசோதனை இது. எளிய
பரிசோதனையும்கூட. செலவு குறைவு. முடிவு உடனே
தெரிந்துவிடும்.

* பி.எஸ்.ஏ. என்பது ‘புராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்’
(Prostate Specific Antigen PSA) என்பதைக் குறிப்பது.

* இது ஒரு புரதப் பொருள்; புராஸ்டேட் சுரப்பி செல்கள் இதைச்
சுரக்கின்றன.

* இது ரத்தத்தில் தனித்ததாகவும் (Free PSA) வேறு சில
புரதச் சுமப்பான்களுடன் இணைந்ததாகவும் (Bound PSA)
இரண்டு விதமாகக் கலந்திருக்கும்.

* இந்த அளவை அளப்பதுதான், இந்தப் பரிசோதனையின்
நோக்கம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 02, 2018 7:08 pm


* பி.எஸ்.ஏ. அளவு ஒரு மில்லி ரத்தத்தில் நான்கு நானோகிராமுக்குக்
கீழ் இருந்தால் புராஸ்டேட் வீக்கம் சாதாரணமானது.

* இது நான்கு நானோகிராமுக்கு மேல் தாண்டிவிட்டால்,
புற்றுநோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்.

* மேலும் Free PSA சதவீதத்தை அளந்தும் புராஸ்டேட் வீக்கம்
சாதாரணமானதா, புற்றுநோயைச் சேர்ந்ததா எனத் தெரிந்து
கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து சிறுநீர்ப் பையை சிஸ்டாஸ்கோப்பி மூலம்
நேரடியாகப் பரிசோதிப்பது, மலக்குடலை ‘டிரான்ஸ்ரெக்டல்
அல்ட்ரா சோனோகிராம்’ பரிசோதனை செய்வது, வயிற்றை
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்வது போன்றவற்றின்
மூலம், இந்தப் புற்றுநோயைத் திட்டவட்டமாக உறுதி செய்ய
முடியும்.

பி.எஸ்.ஏ. பரிசோதனையை யார், எப்போது செய்துகொள்வது?

* 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறை
பி.எஸ்.ஏ. பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

* குடும்பத்தில் எவருக்காவது புராஸ்டேட் புற்றுநோய்
வந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆண்கள்
40 வயதிலிருந்தே ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்யத்
தொடங்கிவிட வேண்டும்.

திசுப் பரிசோதனை

புராஸ்டேட் சுரப்பியிலிருந்து சிறிதளவு திசுவை ஊசி மூலம்
உறிஞ்சியெடுத்துப் பரிசோதனை (Needle Biopsy)
செய்வதன் மூலம், புற்றுநோயின் வகையையும் நிலையையும்
(Cancer stage) தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையைப் பொறுத்து
நோயாளிக்குத் தேவைப்படுவது அறுவை சிகிச்சையா,
கதிர்வீச்சு சிகிச்சையா எனத் தீர்மானிக்கப்படும்.

முக்கியக் குறிப்பு

புராஸ்டேட்டில் சீழ் பிடித்து வீக்கம் ஏற்பட்டாலும் (Prostatitis)
பி.எஸ்.ஏ. அளவு அதிகரிக்கும். முக்கியமாக நீரிழிவு
நோயாளிகளுக்கு இப்படி ஏற்படுவது இயல்பு. உடனே
இவர்களுக்குப் புராஸ்டேட் புற்றுநோய் வந்துவிட்டதாகப்
பயப்படக்கூடாது.

சிறு அறுவைசிகிச்சை மூலம் புராஸ்டேட் சுரப்பியிலிருந்து
சீழை வெளியேற்றிவிட்டால், பி.எஸ்.ஏ. அளவு இயல்பு நிலைக்குத்
திரும்பிவிடும்
-
--------------------------------

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
\
நன்றி- தி இந்து


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 02, 2018 7:10 pm

புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 103459460
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 8:33 pm

புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 
  புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:42 pm

அருமையான தகவல்கள் அற்புதம் நிச்சயம் ஆண்களுக்கு உதவக்கூடியது.
நன்றி ஐயா
புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 103459460 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 103459460 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 3838410834 புராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை? 103459460
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக