புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தழும்பு! Poll_c10தழும்பு! Poll_m10தழும்பு! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தழும்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 1:08 pm


விடிந்தது. 
அப்பாடா... சூரியனின் முதல் மஞ்சள் கதிர்களை இவ்வளவு ஆசையுடன் அவள் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்ததில்லை. உள்ளே நுழைந்த நர்ஸ் மாதவி, ''என்ன மேடம்... எப்ப விடியும்ன்னு கத்திட்டிருந்தீங்க போலிருக்கு,'' என்ற அவள் குரலிலும் உற்சாகம்.


லேசாக... ஆனால், மகிழ்ச்சியாக சிரித்தாள் நந்தினி. இனி, ஆஸ்பத்திரி வாடையை பிடித்து துாங்க வேண்டாம். நோயாளிகளின் முனகல்கள் கேட்காமல், மருந்துகளின் நெடி இல்லாமல், நர்சுகளின் இரவு நேர, 'செக் -- அப்' தொல்லை இல்லாமல், ஆரோக்கியமான சூழலில் குடும்பத்துடன் வாழலாம். நேற்றே, 'டிஸ்சார்ஜ் ஷீட்' பூர்த்தி செய்து கொடுத்து, பில்லும் கட்டி விட்டான், வாசு. அவனுடைய, கார் காலை, 8:00 மணிக்கு வரும். 


''இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு... உங்க கணவர் வர... காபி கொண்டு வரட்டுமா... சூடான இட்லியும், கேன்டீனில் ரெடியாகி இருக்கும்.''


''நன்றி சிஸ்டர்... இப்ப எதுவும் சாப்பிடத் தோணலை... வீட்டுக்குப் போயே சாப்பிட்டுக்கறேன். நீங்க ரொம்ப நல்லா கவனிச்சதாலே தான் சீக்கிரமா எனக்கு குணமானது.''


நந்தினி, நன்றியுடன் மாதவியைப் பார்க்க, அவள் முகம் மலர்ந்தது. சிஸ்டர் கையில் ஆயிரம் ரூபாயை திணித்தாள். 


மாதவியின் முகம் மாறியது, ''பார்த்தீங்களா... உடனே விலை பேசிட்டீங்களே... வேண்டாம், உங்க குழந்தைகளுக்கு குடுங்க... நீங்க ஸ்பெஷல்... அதான்...'' என்று ஒரு டஜன் ஆப்பிள்களை மேஜையில் வைத்தாள்.


மாதவியின் மனம் நோகக் கூடாதென்று வாங்கிக் கொண்டாள் நந்தினி. மாதவி, சின்னப் பெண் தான். மிஞ்சிப் போனால், வயது, 23 இருக்கலாம். சிரித்த முகமாக, அக்கறையுடன் அவள் கவனித்தது அபூர்வமான விஷயம்.


''மேடம்... கண்ணாடி தரட்டுமா... உங்க காயம் ஆறிவிட்டது. தழும்பு மறைய, இன்னும் நாளாகும்...'' கண்ணாடியை நீட்டினாள். இதுவரை இருந்த உற்சாகம் சடாரென்று மாறிப்போனதை உணர்ந்தாள், நந்தினி. கண்ணாடியை அவள் மடியில் வைத்து, அடுத்த நோயாளியைப் பார்க்கப் போய் விட்டாள், மாதவி. 


பயத்துடனும் கண்ணீர் முட்டும் மனதுடனும் கண்ணாடியையே வெறித்துப் பார்த்தாள் நந்தினி. முகத்தை பார்க்க வேண்டும் போல் ஆசை குதி போட்டது. ஆனால், பயம் அந்த ஆசையை அடக்கியது. அவள் முகம், கலவரம் நடந்த இடம் போல் பார்ப்பதற்கு அருகதை அற்று இருக்குமோ... அவமானமும், தாழ்வு மனப்பான்மையும் அவள் தைரியத்தை தின்று, வேடிக்கை பார்த்தது. 


வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் அவள் இந்த நிஜத்தை சந்திப்பதை ஒத்திப் போட்டிருந்தாள். மாதவி நினைவுப்படுத்தி விட்டாள். அவள் முகம் பயங்கரமாக, தழும்புகளுடன், அருவருப்பாக காட்சி தருகிறதா... 


யாரிடம் கேட்பது, கண்ணாடியிடம் கேட்கலாமா... அவளுக்கு சிரிப்பு வந்தது. இந்த தழும்பு வருவதற்கு முன், அவள் கண்ணாடியுடன் பேசி இருக்கிறாள்.


'ஸ்நோ வைட்' கதையில் வரும், 'ஸ்டெப் மதர்' காரெக்டர், 'இந்த உலகில் என்னை விட அழகான முகம் உண்டா?' என்று கேட்பாளாம். கண்ணாடி, 'இல்லவே இல்லை... உன்னை மிஞ்ச யாருமில்லை...' என்று பதில் சொல்லுமாம்.


அப்படித்தானே அவளும் கண்ணாடியிடம் கேட்டிருக்கிறாள். கண்ணாடி பதில் சொல்லாது. ஆனால், அவள் மனம் சொல்லும், 'இல்லவே இல்லை... என் முக அழகை மிஞ்ச யாருமே இல்லை...' அந்த திமிருக்கா அல்லது கர்வத்துக்கா இப்படி ஒரு தண்டனை... அழகாய் இருந்தோம், கேட்டோம். இப்போ அவலட்சணமாய் ஆகிவிட்டோம். 


'என்னை விட அவலட்சணமான முகம் உண்டா இந்த பூமியில்...' என்று கண்ணாடியிடம் கேட்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. அதற்காக அவள் வருத்தப்படவில்லை. 


ஆனால், வாசு இதை எப்படி எடுத்துக் கொள்வான்... திருமணம் ஆன புதிதில், அவன் சொல்லி இருக்கிறான், 'நந்தினி... எனக்கு அழகான முகம் கொண்ட பெண் தான் வேண்டும்... நிலா மாதிரி... ரோஜா மாதிரி... கொஞ்சம் குண்டா இருந்தால் கூடப் பரவாயில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தான். 


'அய்யோ... நான் குண்டா இல்லையே... அப்ப எப்படி ஒத்துக்கிட்டீங்க?'
'லுாசு... நான் ஆசைப்பட்டதுக்கும் மேலே இருக்கே... உன் முகம், குறிப்பா, கன்னங்கள் வழு, வழுன்னு வெல்வெட் மாதிரி, துாள் டீ...' 


அய்யோ... அப்போ எவ்வளவு பெருமையாக இருந்தது. இப்போ என்ன எண்ணுவான்... பாலைவனத்தை பார்ப்பது போல் கடுப்புடன் பார்ப்பானோ... கல்யாணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எட்டு வயதில் மகன் அர்ஜுன், நாலு வயதில் மகள் கவிதா. அவர்கள் என்னைப் பார்த்து பயந்து விட்டால்... மளுக் என்று உள்ளுக்குள் எதுவோ உடைந்த மாதிரி இருந்தது. 
அவளுக்கு, 'டென்ஷ'னாக இருந்தது. பிரம்மன் தந்த அழகை, நெருப்பு அவித்து விட்டுப் போய்விட்டது. 


ஆயிற்று, வாசு வரும் நேரம்...



தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 1:09 pm


''மேடம்... சூடா வடையும், பொங்கலும் சாப்பிடுங்க,'' என்றபடி வந்தாள், மாதவி. அப்போது தான் தனக்கு பசிப்பதை உணர்ந்தாள், நந்தினி.

''பரவாயில்லை... இப்ப என் கணவர் வந்து விடுவார்... வீட்டுக்குப் போய்...''
''சாப்பிடுங்க மேடம்... இன்று, என்னோடு சாப்பிடுங்க... 'பிகு' பண்ணாதீங்க,'' சிரித்தாள், நந்தினி. 


''விடமாட்ட போலிருக்கே... சரி... கொடு,'' இலையில் ஒரு ஓரம் கிழித்து, அதில் சிறிது பொங்கலும், ஒரு வடையும் வைத்துக் கொடுத்தாள்... திறந்து விட்ட குழாய் போல் சளசளவென்று பேசிக்கொண்டே இருந்தாள், மாதவி. 
அவள் சாப்பிட்டு முடித்ததும், இலையை பிடுங்கிக்கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள். 


''மேடம்... உங்க கார் வந்து விட்டது... யப்பா, சந்தோஷமா... சார், உங்களை கூட்டிப் போக எவ்வளவு ஆவலா இருக்கார் தெரியுமா... நேத்து டாக்டர்கிட்ட, எவ்வளவு அக்கறையா பேசினார் தெரியுமா? மேடம்... சீக்கிரம் போயிடுங்க... திரும்ப ஆஸ்பத்திரிக்கு வந்துடாதீங்க... ஏன் தெரியுமா?'' அவளை வியப்புடன் பார்த்தாள், நந்தினி. 


''ஏன் தெரியுமா... திரும்ப வந்தீங்கன்னா, உங்க கணவரை நான், 'அபேஸ்' பண்ணிட்டு போயிடுவேன். அவ்ளோ அன்பானவர், கணவரா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.போயிட்டு வாங்க,'' என்று வழியனுப்பினாள், மாதவி. 


வாசுவின் காலடி சத்தம் கேட்டது. அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. ''ரெடியா நந்தினி... கிளம்பலாமா?'' அவன் கேட்ட விதம், அவளை நெகிழ வைத்தது. 


தயங்கியபடி கேட்டாள், ''வாசு... உண்மையா சொல்லணும்...'' சாமான்கள் நிறைந்த பையை எடுத்தபடி கேட்டான், ''என்ன, உண்மையா சொல்லணும்... என்றைக்கு நான் பொய் சொல்லியிருக்கேன்.''


''ஒண்ணுமில்லை... வந்து...''


''முகம் பார்க்க கோரமாகி விட்டதா... அதானே கேக்கப் போறே... நந்தினி நிலவு தேய்ந்தாலும் அழகு தான்... உனக்கு இதில் என்ன சந்தேகம்?''


கார் அருகே வந்து விட்டனர். அவன் கதவு திறந்து, அவளை ஏறிக்கொள்ளச் சொன்னான். 


''அதில்லை... நான் இன்னும் கண்ணாடி பார்க்கவில்லை... ஒரு வேளை...'' 
மனைவியை அர்த்தத்துடன் பார்த்தான், வாசு. தீர்க்கமாக கூறினான்...


''என் கண்களைப் பார்... அது தான் உனக்கு கண்ணாடி... இப்ப தான் நீ முன்னை விட அழகா இருக்கே... அர்ஜுன் முகத்தில் இடம் பிடிக்க வேண்டிய நெருப்புக் காயம்... உன் மேல் பட்டு, அவனை நீ காப்பாற்றி விட்டாய்... அதற்காகவே உன்னை இன்னும் அதிகம் நேசிக்கிறேன்... எப்பவும் போல் இரு... உன் முகத்திற்கு எந்த குறையும் இல்லை... சரியா?'' 


வார்த்தைகள் ஆறுதலாக வந்து விழுந்தன.


நெருப்பு பட்ட அந்த நாள் அவளுக்குள் ஓடியது. தீபாவளி பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டு, புஸ்வாணத்தை கொளுத்தச் சென்றான், அர்ஜுன். தடுத்தாள், நந்தினி. புஸ்வாணம் செயல்படாமல் உட்கார்ந்திருந்தது. 



'திரியை நிமிண்டி விட்டு பற்ற வை அர்ஜுன்...' என்று, வாசு சொல்ல, புஸ்வாணம் அருகே சென்று, அர்ஜுன் குனிந்து பார்த்த நேரம், புஸ்வாணம் தீப்பொறிகளை லேசாக வெளிப்படுத்தியது. சடாரென்று ஓடிச்சென்று அர்ஜுனைத் தள்ளி விட்டாள், நந்தினி. முழு வேகத்துடன் புஸ்வாணம் செயல்பட, தீப்பொறிகள் நந்தினியின் முகத்தை பதம் பார்த்தது. 

மகனை காப்பாற்றும் வேகத்தில், அவள் தன் முகத்தை ரணமாக்கிக் கொண்டாள். வலியும், எரிச்சலுமாக சில காலம் ஆஸ்பத்திரி வாசம். குணமாகி, இதோ வீடு வருகிறாள்.



தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 1:11 pm


பயந்தது போல், குழந்தைகள் அவளை கண்டு பயந்து ஒதுங்கவில்லை; ஓடி வந்து கட்டிக் கொண்டனர். நந்தினிக்கு நிறையவே தைரியம் கொடுத்துப் பேசினான், வாசு. பேசப் பேச அவனின் களங்கமில்லாத மனதைக் கண்டு வியந்தாள், நந்தினி...

'எப்பேர்பட்ட மனசு... இப்படி இந்த முகத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ள அவனால் எப்படி முடிகிறது... அது மிகப் பெரிய விஷயம் இல்லையா... 


'நர்ஸ், மாதவி சொன்னது போல், அவள் கொடுத்து வைத்தவள் தான். கம்பீரமும், ஆண்மையும், இளமை ததும்பும் எழிலும் உடைய ஒரு ஆண், மனைவியின் இந்த குன்றிப் போன முகத்தை பொருட்படுத்தாமல், சந்தோஷமாக இருப்பது... 'ஓ ஹி இஸ் கிரேட்...' நாம் தான் இவருக்கு தகுதி இல்லாமல் போய் விட்டோம்...' என்ற குற்ற உணர்வு அவளை ஆட்கொண்டது.


தன் கணவனுடைய அழகான மனசுக்கு இந்த முகம் தானா... கண்ணாடி பார்த்தாள். முகத்தில், வலது கண் ஓரத்திலிருந்து வாயின் வலது பக்கம் வரை பிறை நிலா வடிவத்தில் கறுப்பான தழும்பு அவளை ஏளனம் செய்வது போல் இருந்தது. 


'நோ... வாசு, 'யூ டிசர்வ் தி பெஸ்ட்...' என்ன செய்யப் போகிறேன்? சிண்ட்ரல்லாவின் காட் மதர் மாதிரி, ஒரு, 'மேஜிக்' கோலை அசைத்தால், இந்த தழும்பு மறையுமா...' இந்தக் கனவை விட நிஜத்தை சிந்திக்க ஆரம்பித்தாள். ஒரு வழி பிறந்தது. 


'ஸ்கின் க்ராப்டிங்' செய்தால் தழும்பு மறைந்து, பழைய முகத்தின் வசீகரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. டாக்டர் கிரிபிரசாத்திடம் பேசி, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொள்ள முடிவு செய்து, தேதி வாங்கினாள், நந்தினி.

 
'வாசு... உன் அழகான மனசுக்கு தான் இந்த பரிகாரம்... என் அழகான முகத்தை திரும்பத் தரப் போகிறேன்... உனக்கு, 'ப்ளசன்ட் சர்ப்பிரைஸ்...' இந்த முடிவிற்குப் பின், அவள் மனதின் குற்ற உணர்வு மறைந்தது. பிரம்மன் படைத்த அழகை, அக்னி தேவன் தின்றான். கிரிபிரசாத் என்ற மானுட பிரம்மன், அதை சரி செய்யப் போகிறார்.


அர்ஜுனின் பிறந்த நாள் வந்தது. வீடு விழாக் கோலம் பூண்டது. அர்ஜுனின் நண்பர்கள் குழுமி இருந்தனர். உற்சாக கூக்குரல்கள் வீட்டை நிறைத்தது.
தன் தோழன் விக்ரமிடம், அர்ஜுன் சொன்னன்...


''விக்கி... எங்கம்மா முகத்திலே இருக்கிற தழும்பு, வீரத் தழும்புடா... அந்த காலத்திலே போர் களத்திலே போரிட்டு மார்பில் குத்து படுவாங்களாம்... அந்த விழுப்புண் பார்த்து பெருமிதப் படுவாங்களாம்... 


''என்னைக் காப்பாத்த, அம்மாவுக்கு ஏற்பட்ட விழுப்புண் பார்த்து எங்க குடும்பமே பெருமிதப்படுகிறது,'' மகன் சொல்வதை, நந்தினி கண்ணில் நீர் தளும்ப பார்க்க... ''சரியா சொன்ன, அர்ஜுன், உங்க அம்மா, இப்பதான் ரொம்ப அழகா இருக்காங்க, இல்லையா பசங்களா...'' என்றான், வாசு. 


''எஸ்...'' என்ற கூக்குரல்கள் எழ... கைத்தட்டல்கள், ஹாலை குலுக்கிற்று. வானத்தில் மிதந்தாள், நந்தினி. 


எவ்வளவு பெரிய குடுப்பினை! 'வாசு... இருங்க, உங்களுக்கு நான் கொடுக்கப் போற பரிசை...' உயர்ந்த மனசுக்கு நான் தரும் சிறிய காணிக்கை.


கொண்டாட்டங்கள் முடிந்து, அனைவரும் சென்றிட, வீட்டை நந்தினி ஒழுங்குபடுத்தி படுக்க, இரவு, 11:30 தாண்டி விட்டது. கண் மூடினாள். அவள் கண் மூடி படுத்திப்பதைப் பார்த்து, குனிந்து தலையை கோதி விட்டான், வாசு.



தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 1:12 pm




'ம்ம்... சிரி நந்தினி... உனக்கு என் சங்கடம் புரியாது... உன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு... காலம் பூரா இதைப் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா... என்ன செய்வது, என் தலை எழுத்து... பட், அதுக்காக உன்னை விலக்கி விட முடியுமா... நான் உன்னை கைவிடவே மாட்டேன். அது, என் பெருந்தன்மை... ஓகே... நீ துாங்கு... என் ஏமாற்றம் உனக்குத் தெரிய வேண்டாம்...' வாய் விட்டு சொல்லி, சென்றான். 

நந்தினி துாங்குவதாக நினைத்து, அவன் புலம்பியது, அவளுக்கு அட்சரம் பிசகாமல் கேட்டது. அவள் துாங்குவதாகவே தொடர்ந்து நடித்தாள்.


மறுநாள் - 


பத்து மணி எப்ப அடிக்கும் என்று காத்திருந்தாள், நந்தினி. பின், டாக்டர் கிரிபிரசாத்துக்கு போன் செய்தாள். சர்ஜரிக்கு அவசியம் இல்லை என்று, 'கேன்சல்' செய்தாள்.


அவசரமாக வந்தான், வாசு. ''சீக்கிரம் டிபன் வை... நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டது,'' என்று பரபரத்தான். 'அவ்வளவு அவசரமா... அப்படி என்ன நிகழ்ச்சி?''
''வேலையில் சேர்வதற்கு, 'தோற்றப் பொலிவும் தேவை என்று நினைப்பது அபத்தம். திறமை மட்டுமே போதும்...' என்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளேன். படிப்பு முடிந்து, வேலையில் சேர இருக்கும் இளைஞர்களுக்கு, ஊக்க சொற்பொழிவு நிகழ்த்த கல்லுாரி ஒன்று அழைத்திருக்கிறது...'' என்றான்.


''அப்படியே குடும்பம் நடத்த, 'தோற்றப் பொலிவு தேவை இல்லை'ன்னு எங்க, 'லேடீஸ் கிளப்'பிலும் ஒரு சொற்பொழிவு நடத்திடுங்க... நீங்க தான் அதற்கு பொருத்தமான நபர்.'' 


அவள் மனதில் தழும்பு விழுந்து விட்டதை உணர்ந்தான். அவளைப் பார்க்க திராணி இன்றி வேறு பக்கம் பார்த்து, ''நான் வரேன்!'' என்றான். தன் மனதுக்கு அவன் போட்டிருந்த, 'மேக் - அப்' கலைந்து விட்டது என்று உணர்ந்தான். 



'பிளாஸ்டிக் சர்ஜரி' உடலுக்கான சிகிச்சை... மனசுக்கான சர்ஜரி... அவள் வார்த்தைகள் இப்போது, அவன் மனதில் தழும்பாக விழுந்தது.

சங்கரி அப்பன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக