புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_m10குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:07 am

அல்லாஹ் கூறுகிறான்:

''இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற் குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபை யையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 30:21)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண்,பெண் அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசால மானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன் 24:32)

இமாம் இப்னு கªர் கூறுகிறார்: ''இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.'' அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.

''இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதா கவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற் கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னுமஸ்வுத்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.

''அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.'' (அல்குர்ஆன் 24:32)

அபூபக்கர்(ரழி) கூறியதாகக் கூறப்படுகிறது: ''திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.''

அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)

''திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்'' என இப்னு மஸ்வுத்(ரழி) கூறுகிறார். (தஃப்ªர் இப்னுகªர் 5ழூ ழூ94,95)

இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32ழூ ழூ90 ல் குறிப்பிடுகிறார்.

இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை யும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப் பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம். விவாகரத்துச் செய்யப் பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திரும ணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. யூதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப் பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாக ரத்து என்பது கிடையாது. யூதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டை யுமே அனுமதித்துள்ளான்.

'அல்ஹத்யுன் நபவிய்யு' என்ற நூலில் 3ழூ ழூ149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.

திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானதான உடலுறவு கொள்வதைப் பற்றி விளக்கும்போது, உடலுறவு என்பது மூன்று விஷயங்களுக்காக உள்ளது.

1. சந்ததிகளைப் பாதுகாப்பது. மனிதவர்க்கம் நிலைத்தி ருக்க வேண்டும், எத்தனை மனிதர்கள் வெளியாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமோ, அதுவரைத் தொடரும்.

2. மனித உடலில் தேங்கி நின்று இடையூறு கொடுக்கும் இந்திரியத்தை வெளியாக்குவது.

3. ஆசையை நிறைவேற்றி இன்பம் அடைவது. அல்லாஹ் கொடுத்த சுகபாக்கியத்தை அனுபவிப்பது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:07 am

திருமணத்தால் பலவிதமான நன்மைகள் உள்ளன. அவை: விபச்சாரத்திலிருந்து பாதுகாக்கிறது. தடுக்கப்பட் டுள்ளதை பார்ப்பதை விட்டும் தடுக்கிறது. இனப்பெருக்க மும், குடும்பப் பாதுகாப்பும் ஏற்படுகிறது. கணவன் மனைவியரிடையில் ஒத்துழைப்பு நிலவுகிறது இஸ்லாமிய சமூகத்தின் அடிக்கல்லாக இருக்கின்ற நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் கணவன் மனைவியின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கணவன் தன் மனைவியின் அனைத்துப் பொறுப்புக் களையும் ஏற்று அவளைப் பாதுகாக்கின்ற நிலையும், மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கின்ற நிலையும், வாழ்க்கையில் ஒரு பெண் தன் உண்மையான கடமையை நிறைவேற்றுகின்ற நிலையும் உருவாகிறது.

பெண் இனத்தின் எதிரிகளும் சமூகவிரோதிகளும் வாதாடுவது போன்று வீட்டுக்கு வெளியே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றவேண்டும் என்று கூறி பெண்களை தங்கள் வீட்டை விட்டும் வெளியேற்றி விட்டார்களே அதைப்போன்று அல்ல. இவர்கள் பெண் களை வீட்டை விட்டும் வெளியேற்றியது மட்டு மல்லாமல் அவள் செய்யவேண்டிய சரியான கடமையை விட்டும் அவளைத் தனிமைப்படுத்தி விட்டனர். மற்றவர்கள் செய்யவேண்டிய வேலையை அவளிடம் ஒப்படைத்து விட்டனர். இதனால் குடும்ப ஒழுங்குமுறை கெட்டுப் போய்விட்டது. கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது. வெறுப்புடன் கணவனோடு வாழ வேண்டிய நிலை உருவாகிறது.

ஷேக் முஹம்மத் அமீன் »ன்கீதீ தம் 'அள்வாவுல் பயான்' என்ற தஃப்ªரில் 3ழூ ழூ422 ல் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ் என்னையும் உன்னையும் அவன் விரும்பி நேசிக்கின்றவற்றில் செலுத்துவானாக! அறிந்து கொள்!

ஆணையும் பெண்ணையும் எல்லாச் சட்டங்களிலும் சமம் எனக்கூறுவது அல்லாஹ்வின் செய்திக்கும் அறிவுக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது இறைமறுப் பாளர்களின் தவறான சிந்தனையாகும். படைத்த இறை வனின் சட்டத்திற்கு மாற்றமானதாகும். மனித சமுதாய ஒழுங்குமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் குழப்ப மான பல விஷயங்கள் உள்ளன. அகக்கண்கள் குருடானவர்களைத் தவிர மற்றவர்கள் இத்தீங்குகளை நன்கு புரிந்து கொள்வர்.

பெண்களுக்கென சில தனித்தன்மைகளைக் கொண்டு அவர்கள் மனித சமுதாயத்தை உருவாக்குவதில் பலவகையில் பங்கு வம்க்கின்றார்கள். பெண்களுக்கென உள்ள கற்பம் தரித்தல், பிரசவித்தல், பாலூட்டுதல், குழந்தை வளர்த்தல், வீட்டுப் பணிவிடை செய்தல், மேலும் வீட்டுவேலைகளான சமையல், மாவு குளைத்தல், வீடு சுத்தம் செய்தல் இது போன்ற பணிகளை மனித சமுதாயத் திற்கு தன் வீட்டிற்குள் திரைமறைவில் பாதுகாப்பாகவும், பத்தினி தனத்துடனும் இருந்து தன் கன்னியம் மரியாதை தன் உயர்வு இவற்றைப் பாதுகாத்து செய்வதினால், ஆண்கள் செய்யும் பணிகளிலிருந்து குறைந்தது எனக்கூற முடியாது.

இறைமறுப்பாளர்களும் அவர்களைப் பின்பற்று கின்ற அறிவீனர்களும், ஆண்கள் செய்வது போன்ற பணிகளை வீட்டின் வெளியே பெண்களும் செய்வதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது எனக் கருதுகின்றனர். ஆனால் ஒரு பெண் தான் கற்பமுற்றிருக்கும் போதும், குழந்தைக்கு பால் கொடுக்கும்போதும், பிரசவத்தீட்டின் போதும் கடினமான எந்த வேலையும் செய்யமுடியாது. இதை நேரடியாகப் பார்த்து வருகின்றோம். ஓர் ஆணும் அவருடைய மனைவியும் வெளியே வேலைக்குச் செல்வார் களானால் வீட்டில் குழந்தைகளுக்கு பால் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தல், வேலையிலிருந்து வரும் கணவருக்கு உணவு கொடுத்தல் போன்ற பணிகள் பாழாம் விடும். கூலிக்கு ஒருவரை வேலைக்கு நியமிப்பாளானால் அந்த வீட்டில் பெண் வெளியே செல்வதால் எந்த இழப்பை அவன் சந்தித்தாளோ அதே இழைப்பைத் தான் அவள் தன் வீட்டில் இப்போதும் சந்திக்க வேண்டியது ஏற்படுகிறது. இதிலிருந்து திட்டவட்டமாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண் வெளியே வேலைக் குச் செல்வதால் அவளிடம் மென்மையான குனம் போய் விடுகிறது மார்க்கத்திற்கும் இழப்பு ஏற்படுகிறது.

இஸ்லாமிய பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மயக்குகின்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதே! இதுபோன்ற விளம்பரங்களால் ஏமாற்ற மடைந்த பெண்களின் நிலை, அவர்கள் கெட்டுப்போன தற்கும், தோல்வியைக் கண்டதற்கும் மிகச் சிறந்த ஆதார மாக இருக்கிறது. இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு திருமண வயது வந்ததும் விரைவாக திருமணம் செய்து கொள்! படிப்பைத் தொடரவேண்டும், வேலையில் சேரவேண்டும் என்ற காரணங்களையெல்லாம் கூறி திருமணத்தைப் பிற்படுத்தாதே! வெற்றிகரமான திருமணம் உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நிம்மதியைத் தருகிறது. அனைத்து படிப்புகளுக்கும், உத்தியோகங் களுக்கும் பகரமாக திருமணம் அமைந்துள்ளது. திருமணத்திற்கு பகரமாக எதுவும் அமையாது.

இஸ்லாமியப் பெண்ணே! உன்னுடைய வீட்டு வேலைகளை முறையாகக் கவனித்ததுக் கொள்! உன்னு டைய குழந்தைகளை ஒழுங்காக வளர்த்துக் கொள்! இது தான் உன்னுடைய வாழ்க்கையில் லாபகரமான அடிப் படை வேலையாகும். அதற்குப் பகரமாக வேறு எதையும் ஆக்கிக் கொள்ளாதே! ஏனெனில் இதற்குப் பகரமாக எதுவும் ஆகமுடியாது. ஒரு நல்ல கணவனைத் தேர்ந் தெடுத்து திருமணம் செய்யத் தவறிவிடாதே!

''யாரிடத்தில் மார்க்கப் பற்றும் நல்ல குணமும் இருக்கக் காண்கிறீர்களோ அப்படிப்பட்ட ஆண் வந்தால் அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். அப்படி செய்ய வில்லையானால் பூமியில் குழப்பமும் சோதனைகளும் ஏற்பட்டு விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:08 am

திருமணம் முடிக்கப்பட வேண்டிய பெண்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். ஒன்று, அவள் சிறிய வயது டையவளாக இருக்க வேண்டும். அல்லது பருவ மடைந்த கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டும். அல்லது விதவைப் பெண்ணாக இருக்கவேண்டும். இவர்கள் ஒவ்வொரு வருக்கும் தனிச்சட்டம் உள்ளது.

1. பருவமடையாத சிறிய கன்னிப்பெண்ணைப் பொறுத்த வரை அவளின் அனுமதியின்றி அவளின் தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது கிடையாது.

''அபூபக்கர்(ரழி) தன் மகள் ஆறு வயதாக இருந்த போது நபி(ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் தம்முடைய ஒன்பதாவது வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இமாம் ஷவ்கானி அவர்கள் தன் நைலுல் அவ்தார் 6ழூ ழூ128, 129 ல் குறிப்பிடுகிறார்கள்.

தந்தை தன் மகளை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. வயது அதிகமான வருக்கு வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

முக்னி என்ற நூல் 6ழூ ழூ487 ல் கூறப்படுகிறது. இப்னுல் முன்திர் கூறுகிறார்கள்.

நாம் தெரிந்த மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஏகோபித்துக் கூறுவது என்னவென்றால் பொருத்தமான மாப்பிள்ளைக்கு ஒரு தகப்பன் வயது குறைந்த தன் பெண் ணைத் திருமணம் செய்து கொடுப்பது அனுமதிக்கப் பட்டது தான்.

தன் மகள் ஆயிஷா(ரழி), ஆறு வயதாக இருந்த போது அபூபக்கர்(ரழி) அவர்கள் நபிகள் நாயகத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்ற செய்தி வயது அதிகமான ஆண்களுக்கு வயது குறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்பவர்களுக்கு மிகப்பெரிய மறுப்பாக உள்ளது. தங்கள் அறியாமையின் காரணத் தினால் தான் இதை அவர்கள் வெறுத்து மறுக்கவேண்டும். அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கவேண்டும்.

2. வயது வந்த கன்னிப்பெண் அவளுடைய அனுமதி யோடு தான் திருமணம் செய்யப்படவேண்டும், அவள் அமைதியாக இருப்பதுதான் அவளுடைய அனுமதி, கன்னிப் பெண்ணின் அனுமதியின்றி அவள் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! அவளுடைய அனுமதியை எப்படிப் பெறுவது? என நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'அவள் வாய் மூடி இருப்பதுதான் அவளுடைய அனுமதி.' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

அவளைத் திருமணம் செய்து கொடுப்பது அவளு டைய தந்தையாக இருந்தாலும் சரிதான் அவளுடைய அனுமதி அவசியம் தேவை என்று அறிஞர்களின் சரியான கூற்று தெரிவிக்கிறது.

இப்னுல் கையிம் அவர்கள் 'அல்ஹதிய்யு' என்ற நூலில் 5ழூ ழூ96 குறிப்பிடுகிறார்கள். ''இதுவே சென்றுபோன நல்லோருடைய ஏகோபித்த முடிவாகும். இவ்வாறே இமாம் அபூஹனீபா இமாம் அஹ்மத் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர், அல்லாஹ்விற்காக இதே கருத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அதைத் தவிர வேறு கருத்தை ஏற்க மாட்டோம், அதுவே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளைக்கு ஏற்றதாக உள்ளது.''

3. கன்னித் தன்மையை இழந்தவளின் அனுமதியின்றி அவளைத் திருமணம் செய்து வைப்பது கூடாது. அவளுடைய அனுமதியை வாயினால் சொல்லிக் காட்டவேண்டும். கன்னிப் பெண்ணைப் போன்று மவுனமாக இருப்பது போதுமாகாது.

முக்னி என்ற நூலில் 6ழூ ழூ493 ல் சொல்லப்படுகிறது

கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரை அவள் வாயினால் சப்தமிட்டு பதில் கொடுத்தால்தான் அவள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவது நாவாக இருக்குகிறது. அனுமதி வேண்டும் என்று எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நாவினால் மொழியவேண்டும் என்பதும் கவனிக்கப்படும்.

'மஜ்மூவு ஃபதாவா' என்ற நூலில் 32ழூ ழூ39,40 ல் ஷேகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெண்ணின் அனுமதியின்றி அவளை யாரும் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஒரு பெண் திருமணத்தை வெறுத்தால் சிறிய பெண் நீங்களாக அவளை நிர்பந்தப்படுத்தக்கூடாது. சிறிய பெண்களைப் பொறுத்த வரையில் அவளுடைய தந்தை அவளைத் திருமணம் செய்து வைப்பார். அவளிட மிருந்து அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. தந்தையாக இருந் தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கன்னித் தன்மையை இழந்த பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏகோபித்த கருத்துப்படி அவளுடைய அனுமதி அவசியமாகும்.

இதுபோன்றே பருவமடைந்த கன்னிப்பெண்ணை யும் அவளுடைய அனுமதியுடன் தான் தந்தை, பாட்டன் அல்லாதவர்கள் மணம் முடித்து வைக்கவேண்டும். தந்தையோ, பாட்டனோ மணம் முடித்து வைப்பார்களா னால் அவளிடம் அனுமதி கேட்கவேண்டும். அனுமதி கேட்பது கட்டாயமா இல்லையா என்பதில் கருத்துவேறு பாடு உள்ளது. சரியான கருத்து என்னவென்றால் அனுமதி கேட்பது கட்டாயமானதாகும்.

பெண்களின் அதிகாரியாக இருப்பவர் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பதில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளவேண்டும். பெண்ணை மணம் முடிப்பவன் பொருத்தமானவனா? என்பதையும் கவனிக்கவேண்டும். காரணம் பெண்ணுடைய நலனுக்காகவே மணம் முடிக்கப்படுகிறதே தவிர அவனுடைய நலனுக்காக அல்ல,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:09 am

ஒரு பெண்ணிற்கு பொருத்தமான கணவனைத் தேர்வு செய்கின்ற அதிகாரத்தை அவளுக்குக் கொடுப்பது என்பது அவள் விரும்புகின்ற யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதனால் அவளுடைய சொந்தக்காரர் களுக்கும் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டாலும் சரிதான் என்ற பொதுவான அனுமதி அவளுக்கு இல்லை. ஆனால் அவளை கண்காணித்து அவளுக்கு அவளுடைய அதிகாரி வழிகாட்டும் விதத்தில் அவளுடைய தேர்வு இருக்கவேண்டும். அவர்தான் அவளுடைய திருமண ஒப்பந்ததை நடத்திவைக்கவேண்டும். அவள் தானாக நடத்திக் கொள்ள முடியாது. அப்படியே அவள் தானாக நடத்திக் கொண்டால் அத்திருமணம் செல்லாது.

''எந்தப்பெண், அதிகாரி இன்றி தன் திருமணத்தை நடத்திக் கொள்கிறாளோ அத்திருமணம் செல்லாது! செல்லாது!! செல்லாது!!!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)

மேலும்' ஒரு ஹதீஸ், ''அதிகாரியின்றி எந்த திருமணமும் செல்லுபடியாவதில்லை.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: நஸயீ, அபூதாவுத்)

அதிகாரி இல்லாமல் திருமணம் செய்வது கூடாது, என்பதை இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கின்றன. கூடாது என்று ஹதீஸில் வந்திருப்பதன் பொருள். திருமணம் செல்லுபடியாகாது என்பதாகும்.

இமாம் திர்மிதி கூறுகிறார்: இதன் அடிப்படையில் தான் உமர், அலீ, இப்னு அப்பாஸ், அபூஹுரைரா (ரழி)போன்ற நபித்தோழர்களிலுள்ளஅறிஞர்கள் செயல் பட்டுள்ளனர். இவ்வாறே தாபியீன்களில் உள்ள அறிஞர் களும் ''அதிகாரியின்றி திருமணம் இல்லை'' என்று கூறினார்கள். இதுவே இமாம் ஷாஃபியீ, இமாம் அஹ்மதின் கருத்துமாகும். (முக்னி 6:449)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:09 am

திருமணத்தைப் பகிரங்கப்படுத்த பெண்கள் முரசு அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கிடையில் மட்டுமே செய்யவேண்டும். மியூசிக் இருக்கக்கூடாது. இச்சையைத் தூண்டுகின்ற சப்தங்களோ அதற்குரிய கருவிகளோ பயன்படுத்தக்கூடாது. ஆண்கள் கேட்காத அளவில் பெண்கள் கவிபாடுவதில் தவறில்லை.

''திருமணத்தில் அனுமதிக்கப்பட்டதற்கும் அனுமதிக்கப்படாததற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது முரசு அடிப்பதும் சப்தம் எழுப்புவதும்தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)

இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் 6ழூ ழூ200 என்ற நூலில் குறிப்பிடுகிறார்: திருமணத்தின் போது 'தஃப்' என்ற முரசு அடிப்பதும், உங்களிடத்தில் வந்தோம், உங்களிடத்தில் வந்தோம், என்பது போன்ற சிறிது பாடல்களை சப்தம் உயர்த்தி கூறுவதற்கும் இதில் ஆதாரம் உள்ளது. தவறுகளை தூண்டுகின்ற பாடல்களோ, கெட்டவைகளையும், அழகையும், மதுபானங்களையும் வர்ணிக்கின்ற வர்ணனைகள் அடங்கிய பாடல்கள் கூடாது. சாதாரண நேரத்தில் இவை தடுக்கப்பட்டது போன்று திருமணத்திலும் தடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறே மற்ற எல்லா தடுக்கப்பட்ட கேலிக்கைகளும் கூடாது.

முஸ்லிம் பெண்ணே! திருமணத்தின் போது நகைகள், ஆடைகள் வாங்குவதில் வீண் விரயம் செய்யாதே. இது அல்லா தடுத்துள்ள வீண் விரயமாகும். வீன்விரயம் செய்யக்கூடியவர்களை நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.

''நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.'' (அல்குர்ஆன் 6:141)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:10 am

பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவதன் அவசியமும், அவனுக்கு மாறு செய்வதின் விலக்கலும்

முஸ்லிம் பெண்ணே நல்ல விஷயங்களில் உன்னுடைய கணவனுக்கு நீ கட்டுப்பட்டு நடப்பது உன்மீது கடமையாகும். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ''ஒரு பெண் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ரமளான் மாதம் நோன்பு நோற்று, தன் கற்பை பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாளானால், அவள் விரும்பிய சுவர்க்கத்தின் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழைவாள்.'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு ஹிப்பான்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

தன்னுடைய கணவன் ஊரில் தன்முன் இருக்க அவனது அனுமதியின்றி ஒரு பெண் நோன்பு நோர்ப்பது கூடாது, அவனுடைய அனுமதியின்றி தன் வீட்டில் யாரையும் அவள் அனுமதிப்பதும் கூடாது''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் செல்லவில்லையானால், அதற்காக அவன் அவள் மீது கோபமான நிலையில் இரவைக் கழிப்பானா யின் காலை வரை வானவர்கள் அவளைச் சபித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில் ''என் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு கணவன் தன்மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது மனைவி அதை மறுத்தால், அதனால் அவள் மீது அவன் திருப்தியாகும் வரை வானத்தில் உள்ள அல்லாஹ் கோபமடைகிறான்.''

மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவனுடைய வீட்டை கவனிக்க வேண்டும். அவனுடைய அனுமதியின்றி வெளியில் செல்லக்கூடாது.

''மனைவி தன் கணவனின் வீட்டை கண்காணிக்கக் கூடியவளாக இருக்கிறாள். தனக்கு கீழே உள்ளவர்களைப் பற்றி அவள் (மறுமையில்) விசாரிக்கப்படுவாள்' என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

மேலும், அவள் வீட்டுவேலைகளைக் கவனிக்க வேண்டும். வேலைக்காரியை வைப்பதற்கான தேவையை கணவனுக்கு ஏற்படுத்தாது இருக்கவேண்டும். இதனால் அவனுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:10 am

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா ஃபத்வா தொகுப்பில் 32ழூ ழூ260 ல் கூறுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மாரிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத சமயத்தில் பாதுகாக் கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 4:34)

மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, பயணத் தின்போது உடன் செல்வது உள்ளிட்ட அனைத்திலும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவள் மீது கடமை யாகும் என்பதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் இதையே அறிவிக்கிறது.

அல்ஹத்யு என்ற நூல் 5ழூ ழூ188 ல் இமாம் இப்ன}ல் கையிம் கூறுகிறார்கள். கணவனுக்கு மனைவி பணிவிடை செய்வது கடமை என்று கூறுபவர்கள் தங்களுக்கு ஆதார மாக அல்லாஹ் எந்த சமுதாயத்தவர்களிடம் சம்பாசனை செய்தானோ அந்த சமுதாயத்திடத்தில் இப்படித்தான் அறியப்பட்டிருந்தது, என்பதைக் காட்டுகின்றனர். பெண் கள் ஆடம்பரமாக இருப்பதும், கணவன் அவளுக்கு வேலை செய்து கொடுப்பதும், வீடு கூட்டுவது, மாவு அரைப்பது துணி துவைப்பது விரிப்பு விரிப்பது, வீட்டின் இதரப்பணிகளைச் செய்வது விரும்பத்தக்கதல்ல.

அல்லாஹ் கூறுகிறான்: கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.'' (அல்குர்ஆன் 2:228)

''ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். ''

''(ஆண், பெண் இருபாலரில்) அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.'' (அல்குர்ஆன் 4:34)

மனைவி கணவனுக்கு பணிவிடைச் செய்ய வில்லை யானால் அவன் பணிவிடைச் செய்யக்கூடியவனாக ஆம்விடுவான். இதுதான் கணவனுக்கு அவள் மீதுள்ள அதிகாரமாகும்.

மனைவிக்கு செலவு, ஆடை, வசிக்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதை கணவனின் மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் என்றால் அது அவன் அவளிடமிருந்து இன்பம் அனுபவிப்பதற்காகவும் அவனுக்கு பணிவிடை செய்கிறாள் என்பதற்காகவும், பொதுவாக கணவன் மனைவியரிடையே வழக்கத்தில் உள்ள ஒன்றிற்காகவும்தான்.

நிபந்தனையற்ற பொதுவான திருமண ஒப்பந்தங் களை பொறுத்தவரையில் நடைமுறையில் என்ன இருக்கிறதோ அந்த சட்டம் தான் அமுல்படுத்தப்படும். திருமணத்தைப் பொறுத்தவரையில் மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, வீட்டின் உள்ளே உள்ள நலன்களைக் கவனிப்பது. இது தான் நடைமுறையில் உள்ளதாகும். இவ்விஷயத்தில் கண்ணியமானவள், தாழ்ந் தவள் என்றோ பணக்காரி, ஏழை என்றோ வேறு படுத்துவது கூடாது. உலகப் பெண்களில் சிறந்தவரான ஃபாத்திமா(ரழி) அவர்கள் தம் கணவனுக்கு பணி விடை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, தாம் பணிவிடை செய்வதைப் பற்றி முறையிட்டார். அதை நபி(ஸல்) அவர்கள் குறை யாகக் கருதவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:11 am

அல்லாஹ் கூறுகிறான்: ''தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ ஒரு பெண் பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. (அல்குர்ஆன் 4:128)

''தன் கணவன் தன்னைவிட்டும் ஓடிவிடுவான் என்றோ, தன்னை புறக்கணிக்கிறான் என்றோ மனைவி அஞ்சுவாளானால், இந்நிலையில் மனைவி தன் உரிமை களில் செலவு, ஆடை, இரவுநேரத்தில் தங்குதல் போன்ற சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம், இதை கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவனுக்காக அவள் இதைச் செய்வதில் எந்த குற்றமும் இல்லை, கணவன் இதை ஏற்றுக் கொள்வதிலும் குற்றமில்லை என இப்னு கªர் விளக்கம் அளிக்கிறார்.ம்

அல்லாஹ் கூறுகிறான்: ''கணவன் மனைவியான இருவரும் தங்களுக்குள் சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (அல்குர்ஆன் 4:128)

அதாவது இருவருக்கும் இடையே சேர்த்து வைப்பது சிறந்ததாகும்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி சவ்தா(ரழி) அவர்கள் வயதானபோது அவளைப் பிரிந்து வாழ நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது 'தன்னை வைத் துக் கொள்ளுமாறும் தன்னுடைய நாளை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாகவும் கூறி, நபி(ஸல்) அவர்களோடு சமாதானமாம்க் கொண்டார்கள். இதை நபி(ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். (இப்னுகªர் 2ழூ ழூ406)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:11 am

''எந்த ஒரு பெண் தன் கணவனிடத்தில் தக்க காரணமின்றி விவாகரத்து கேட்கிறாளோ அவள் மீது சுவர்க்கத்தின் வாடை தடை செய்யப்பட்டுள்ளது'' என ஸவ்பான் (ரழி) அறிவிக்கிறார். (நூல்:அபூதாவுத், திர்மதி)

காரணம் அல்லாஹ்விடத்தில் மிகவும் கோபத்தோடு அனுமதிக்கப்பட்ட ஒன்று(தான்) விவாகரத்து சொல்லுத லாகும். அவசியத் தேவை ஏற்படும்போது தான் அதைப் பயன்படுத்த வேண்டும். அவசியமின்றி விவாகரத்துச் செய்வது வெறுக்கப்பட்டது. அதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. கணவனுடன் வாழ முடியாது என்ற அளவிற்கு அவன் மீதுள்ள கடமையை நிறைவேற்றத் தவறும்போதுதான் மனைவி கணவனிடமிருந்து தலாக் கைத் தேட வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''முறைப்படி கணவன் மனைவி யாகச் சேர்ந்துவாழலாம். அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்.'' (அல்குர்ஆன்: 2:229)

''தங்கள் மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டு விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே அதற்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்ப வனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். ஆனால் அவர்கள் விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன்: 2:226,227)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 2:12 am

கணவன் மனைவி இடையில் பிரிவு ஏற்படுவது இரண்டு வகையில் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது ஏற்படுவது. இரண்டு மரணத்திற்குப் பின் ஏற்படு வது. இந்த இரண்டு நிலையிலும் மனைவியின் மீது இத்தா கடமையாகிறது. குறிப்பிட்ட சில நாட்கள் காத்திருப்பது தான் 'இத்தா' என்பதாகும். இத்தா இருப்பதன் நோக்கம் அவளுடைய திருமண உறவு முடிந்து விட்டதனால் அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். மேலும் கற்பம் தரித்திருக்கிறாளா என்பதை அறிவதற்காக வும்தான் இந்த இத்தா. இந்த காலத்திற்கு முன் யாராவது அவளிடம் உடலுறவு கொண்டு விடுவாளானால், அதன் மூலம் பிறக்கும் குழந்தை யாருடையது என்பதைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும். முந்தைய திருமண ஒப்பந்தத்தை மதிப்ப தாகவும் அமையும். மேலும், பிரிந்து போன கணவனை கண்ணியப்படுத்துவதாகவும் உள்ளது. அவனை பிரிந்த துயரத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக