புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_m10ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 5:47 pm

"ஞாபக சக்தி" ஒரு மனிதனின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.வெற்றி பெற்ற மனிதர்களை எல்லாம் கணக்கில் எடுங்கள்! அபாரமான ஞாபக சக்தி உடையவர்களாக அத்துணை பேரும் இருப்பார்கள். செயல் தீரமிக்கவர்களுக்கு இந்த நினைவாற்றல்தான் அவர்களை மேலே தூக்கி விடுகின்ற நெம்புகோலாக இருக்கிறது. நினைவாற்றல் நமது செயல்களுக்கு தீவிரத்தையும், உந்து சக்தியையும் விளைவிக்கிறது. எப்படியெனில் எந்த செயலையும் துரிதமாக முடிக்கவும், திட்ட மிடவும் இதனால் முடிகின்றது.

ஞாபக சக்தி என்றவுடன் பள்ளியில் படிக்கும், கல்லூரியில் படிக்கும மாணவர்களுக்கு மட்டும்தான் தேவையானது என்று பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். மனிதர்கள் அத்துணை பேருக்கும் இந்த ஆற்றல் மிகப்பொலிவுடன் இருக்க வேண்டியது அவசியமே.

ஞாபக சக்திக்கு என்ன செய்யலாம்? என்பதுதான் இன்றைய கேள்வி. எனினும் இந்த கேள்விக்குள் நாம் துருவி ஆழமாக போக வேண்டியுள்ளது.

அந்த பழம் எங்கு கிடைக்கும்? உனது பெயர் என்ன? ராமனின் மனைவி யார்? என்று கேட்கப்படும் கேள்வி மாதிரி அல்ல- இது. சட்டென்று ஒற்றைவார்த்தையில் பதில் சொல்லிவிட்டுப் போக. இவை எல்லாவற்றையும் மேற்கொண்டால் உடனடியாக உங்களுக்கு ஞாபக சக்தி வந்து விடும் என்று சிலவற்றை பட்டியல் போட்டு விட முடியாது. அப்படி எல்லாம் செய்தால் நிச்சயம் ஞாபகசக்தி வந்துவிடாது. ஏனெனில்- ஞாபகசக்தி என்பது- ஒரு ஆறு மாதத்திலேயோ, ஒரு வருடத்திலேயோ வந்து விடக்கூடிய ஒரு எளிமையான விசயம் அல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. ஞாபக சக்திக்கு ஒரு விதமான பயிற்சியினை ஆரம்பம் முதல் அதாவது இளம் பிராயம் முதல் செய்து வர வேண்டும். அது ஒரு மனப்பயிற்சி.

இளம் பிராயமே... சரியான பருவம்:

பல பெற்றோர்களை பார்த்திருக்கிறேன். தங்கள் பிள்ளைகளின் தேர்வு சமயத்தில் வந்து என் மகன் (அ) மகளுக்கு படித்தது அவ்வளவாக ஞாபகத்தில் நிற்கவில்லை. என்ன செய்யலாம்? என்று வந்து நிற்பார்கள். இப்படி வந்து நிற்பவர்களுக்கு ஒரே ஒரு நாளில் மருந்தோ, ஆலோசனையோ வழங்கி அவர்களின் ஞாபக சக்தியை அபரிமிதமாக்கி விட முடியாது. அப்படி முடியுமெனில் இன்று எல்லோருமே ஞாபகசக்தியை அதிகரித்துக் கொண்டு புத்திசாலிகளாக அல்லவா மாறிவிடுவோம்.

ஞாபக சக்தி என்பதை விஞ்ஞானப் பூர்வமாக பார்ப்போம். அப்போது தான் ஞாபக சக்தி என்பது- எத்தன்மை கொண்டது அதனை ஒரு நாளில் உண்டாக்கி விட முடியாது என்பதெல்லாம் புரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 6:16 pm

ஞாபக சக்தி எதை சார்ந்தது?

ஞாபக சக்தி என்பது ஒரு தன்மை. அது மூன்று நிலைகளில் ஒவ்வொருவருக்கும் உள்ளடங்கி இருக்கும்.

1. பரம்பரை தன்மையின் காரணமாக: இதில் பெற்றோர்கள், ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கும் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். நடைமுறையில் நாம் யாரையாவது இவன் அப்பா மாதிரி, தாத்தா மாதிரி என்று சொல்வோம் அல்லவா... அதுப்போலத்தான்.

2. தனக்கு தானே உண்டாக்கிக் கொள்ளுதல்: மன வலிமை காரணமாக தனக்குத் தானே நினைவாற்றல் கொண்டிருப்பது அல்லது நினைவாற்றலை வளர்த்து கொள்வதை பொருத்தும் ஞாபக சக்தி ஒருவருக்கு அமையும்.

3. சுற்றுப்புற சூழல்: பள்ளி, கல்லூரி, படிப்பு போன்ற புறச்சூழலும் ஒருவருக்கு ஞாபக சக்தியை நிர்ணயிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இப்படி பரம்பரை
தன்மையால் வருகின்ற நினைவாற்றலை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றம் செய்யவோ நம்மால் முடியாது. ஆனால் நமக்கு நாமே நினைவு ஆற்றலை வளர்த்துக் கொள்வது, புற சூழலை நல்ல மாதிரியாக அமைத்துக் கொள்ளல் போன்றவற்றின் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

ஞாபக சக்திக்கு என்ன வேண்டும்?

ரிஜிஸ்ட்ரேஷன்: ஞாபக சக்திக்கு முதலில்- பதிவு செய்தல் முக்கியமானது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது மாதிரி... நமது மூளையில் எவ்வளவு செய்திகளை, சம்பவங்களை, பாடங்களை, நாம் நமது மூளையில் பதிவு செய்கிறோமோ அந்த அளவுக்கு ஞாபக சக்தியின் தன்மையும் நிர்ணயிக்கப்படும். தொடர்ந்து பதிவு செய்தல் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இருத்தி வைத்தல்: இரண்டாவதாக பதிவு செய்த விசயங்களை சேமித்து வைப்பது, இருத்தி வைப்பது மிக மிக முக்கியமானது ஆகும். மூளையில் பதிவு செய்த விசயங்களை, அதாவது படித்த விசயங்களை, கேட்ட செய்திகளை, அறிந்தவைகளை சேமித்து வைப்பது ஞாபகத்துக்கு அவசியமான ஒன்று.

எடுத்து கையாளுதல்: மூன்றாவதாக ஞாபக சக்திக்குத் தேவையானது- அடிக்கடி எடுத்து கையாளும் தன்மையாகும். நாம் நமது மூளையில் பதிவு செய்து சேமித்து வைத்திருக்கும் பாடத்தை, செய்தியை, தகவல்களை அடிக்கடி ஞாபகமூட்டி, நினைவில் கொண்டு வந்து கொண்டிருப்பது அவசியம்.

இந்த- ரிஜிஸ்ட்ரேஷன், ரிடன்சன், ரி-கால் மூன்றின் அடிப்படையில்தான் ஒருவரின் ஞாபக சக்தியின் ஆற்றல் தீர்மானிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும்- இந்த முதல் நிகழ்வான பதிவு செய்தலில்தான் பிரச்சினை ஏற்படும். வயதானவர்களுக்கு முதுமை காரணமாக மூன்றாவது நிகழ்வான எடுத்து கையாளுதலில் தான் பிரச்சினை ஏற்படும். மனம்பாதிக்கப்பட்ட மன நோயாளிகளுக்கு மூன்றுநிலைகளிலுமே பிரச்சினை இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 6:24 pm

ஞாபக சக்திக்கு மாத்திரைகளா?

ஞாபக சக்தி பெருக்கும் என்று இன்று விற்கப்படுகின்ற அனைத்து வகையான மாத்திரைகளும், டானிக்குகளும் விஞ்ஞானப் பூர்வமாக, மருத்துவப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவைகள் ஆகும். வல்லாரை கீரை ஞாபக சக்திக்கு சிறந்த மருந்து என்று நமது மூதாதையர்கள் காலத்தில் இருந்துகூறப்பட்டு வருகின்றது. வல்லாரை ஞாபக சக்திக்கு ஒரு சப்போர்ட்டாக அமையுமே தவிர அதுவே ஞாபக சக்தியை உண்டாக்கி விடாது.

ஞாபக மறதியும் அவசியம்தான்:

மனசுக்கு பிடிக்காதவற்றை நாம் மறக்க முயற்சிக்கிறோம். அதில் பெரிதும் வெற்றியும் பெற்று விடுகிறோம். சில சமயம்தான் வேண்டாதது திரும்பத்திரும்ப ஞாபகத்தில் எட்டிப் பார்க்கும். அதையும் காலம் மறக்கடித்து விடும். மறக்கப்பட வேண்டியது மறந்து போய் கொண்டுதான் இருக்கும். மறதி என்பது மனிதனுக்கு கிடைத்த வரம். நேற்றைய துக்கம், கவலையை இன்று மறந்து போனால்தான் மறுநாள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

அமைதியான சூழல் அவசியம்:

படிக்க அமைதியான சூழலும் அவசியமே. அப்போதுதான் படித்தது ஞாபகத்தில் இருக்கும். அவசர வாழ்க்கை தற்காலிக மறதியை உண்டாக்கலாம். பெற்றோர்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை வளர்க்கும்வகையில் அவர்களுக்கு படிக்கும் பொழுது நல்ல புறச்சூழ்நிலையை உருவாக்கி தரவேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், ஞாபக சக்தி என்பதற்கு அவ்வளவாக வேலை இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது. மனித மூளையில் இதுநாள் வரை பதிவு செய்து வைத்திருந்த செய்திகள், புள்ளி விவரங்கள் கணக்குகள் போன்றவற்றை கம்ப்யூட்டர் கால்குலேட்டரில் பதிவு செய்யும் காலம் வந்துவிட்டதினால், ஞாபக சக்திக்கு வேலை குறைந்து கொண்டு வருவதாக தெரிகிறது.

அதிகாலை படிப்பு அவசியம்:

நல்ல தூக்கத்திற்குப் பிறகு மூளை நன்றாக ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு படிப்பது என்பது ஞாபக சக்திக்கு வழிவகுக்கும் ஒரு செயலாகும். நான்கு அல்லது ஐந்து மணி நேர நல்ல தூக்கத்திற்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மூளையில் கிரகிக்கும் தன்மையும் அதிகமாக இருக்கும். மேலும், அதிகாலை சூழ்நிலையும் அமைதியை ஏற்படுத்தித் தருவதால் அதிகாலையில் தூங்கி எழுந்து படிப்பதும் ஞாபக சக்திக்குநல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 6:25 pm

நினைவாற்றல்

சில மாணவர்கள் எப்போதும் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணமென்ன? இத்தகையவர்கள் ஞாபக சக்தி குறைவானவர்களாக இருப்பார்கள். அதுதான் காரணம். நினைவாற்றல் என்பது ஒரு கலை. இது எல்லோருக்கும் கைவர பெறாது. நினைவாற்றலுக்கும், பரம்பரை பண்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது. பெற்றோரின் ஞாபகசக்தி அபரிமிதமாக இருந்தால் குழந்தைகளின் நினைவாற்றலும் நன்றாக இருக்கும்.

நினைவாற்றலின் எதிர் செயல்தான் ஞாபக மறதி. இந்த ஞாபக மறதியை இரண்டு வகையாக பிரிக்கலாம். படித்திருக்கிறேன் இப்போது நினைவுக்கு வரவில்லை என்கிற நிலை சில நேரம் இருக்கும். சிறிது நேரம் கழித்து மூழ்கிய பந்து மாதிரி அந்த விடையோ, சொல்லோ, பதமோ நினைவுக்குவந்து விடும். இந்த ஞாபக மறதி தற்காலிகமானது, பொதுவானது. இதற்கு ரிக்கால் அம்னீசியா என்று பெயர். எப்பொதுமே ஞாபகத்திற்கு வராதது "ரிடன்ஸன் அம்னீசியா" என்று பெயர். இந்த நிலை இருக்கும் மாணவர்கள் எது படித்தாலும் ஞாபகத்தில் இருக்காது. இவர்கள் இதனை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள் எனபதை பொருத்தும் அவர்களின் நினைவாற்றல் அமையும். படிப்பதற்கு முன்பு திட்டமிடல் அவசியம். என்ன தேர்வு? எவ்வளவு பாடங்கள்? எந்த மாதிரியான தேர்வு? எப்படி விடையளிக்க வேண்டும்? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு படித்தால் அந்தப்பாடம் நினைவில் நிற்க ஏதுவாக அமையும். பாடங்கள் படிப்பதை மேலோட்டமாக படித்தல், ஆழமாக படித்தல் என்று இருவகையாக பிரிக்கலாம். தேர்வுக்கு படிக்கின்ற போது ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்கவேண்டிய அப்ஜக்டிவ் டைப் தேர்வுக்கு மேலோட்டமாக படித்தால் போதும். விரிவான விடையளிக்க வேண்டிய தேர்விற்கு ஆழமாக படிக்க வேண்டியது அவசியம். கேள்வி கேட்டால் முழு விடையும் ஞாபகத்திற்கு வந்தால் "பங்க்சனல் மெமரி" என்று பெயர். இத்தகைய நினைவாற்றலை பெற ஆழமாக படிக்க வேண்டும். இது சப்ஜக்டிவ் டைப் தேர்வுக்கு பயன்படும். சில விடைகளை கொடுத்து கேள்வி கேட்டால் விடையை சரியாக சொல்லத் தெரிந்தால் அதற்கு "ரெககனைசன் மெமரி என்று பெயர். இதற்கு மேலோட்டாக படித்தால் போதும். இந்நினைவாற்றல் அப்ஜக்டிவ் டைப் தேர்வுக்கு பயன்படும். இப்படி படித்தால் நினைவாற்றலுடன் நேரமும் மிச்சமாவதுடன, தேவையற்றதை படித்து அநாவசிய குழப்பங்களை தவிர்க்கலாம்.

நினைவாற்றலை பொறுத்தவரையில் ஒரு செய்தியை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதை உற்று நோக்கினால் நமக்கு தெளிவாக ஒன்று புலப்படும். அதாவது நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பது புலப்படும். ஆக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவற்றை விருப்பத்துடன் படித்தால் போதும். வேறெதுவும் செய்ய வேண்டாம் நினைவாற்றலை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள- படித்ததை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்தல், படித்ததை ஒரு தடவை பார்க்காமல் எழுதி பார்த்தல், பிறரிடம் ஒப்புவித்தல் போன்றவை கை கொடுக்கும். ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக படிப்பது நினைவில் அவ்வளவாக நிற்காமல் போகலாம். எனவே அன்றைய பாடத்தை அன்றன்று படித்தால் நினைவில் கூடுதலான பாடங்களை சேகரித்து வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நினைவாற்றலை வளர்க்கும் என்று சொல்லி இன்று விதவிதமான மாத்திரைகள் விற்பனை செய்யப்படு கின்றன. இவையெல்லாம் நினைவாற்றலுக்கு எந்த வகையிலும் பயன்படாது.

படிக்கும் காலத்தில் பிறவற்றில் கவனம் செலுத்தினால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்பட்டு ஞாபக சக்தியை பாதிக்கலாம். புற சூழல் கவனத்தை சிதைக்காமல் இருக்கும் வகையில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். சத்தமில்லாத அறை, நல்ல வெளிச்சம், காற்றோட்டமுள்ள இடம், தொலைக் காட்சி தொந்தரவின்மை போன்றவைகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக