புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_m10டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:01 pm

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 1596285315343

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள்,
நகைச்சுவைக் கலைஞர்கள், வில்லன் நடிகர்கள்
என்பவர்களுக்குக் கிடைக்கும் புகழும் நட்சத்திர
அந்தஸ்தும் துணை நடிகர்களுக்குக் கிடைப்பதில்லை.

ஆனால், ஒரு திரைப்படம் முழுமையடைவதற்கும்
மக்களால் ரசிக்கப்படுவதற்கும் அவர்களும் முக்கியப்
பங்கு வகிக்கிறார்கள். இவர்களில் சிலர் மிக நீண்ட
காலம் நடிப்புத் துறையில் கோலோச்சி வெற்றி
பெறுவதோடு மக்கள் மனதோடு மிகவும் நெருக்கமாகி
விடுகிறார்கள்.

திரையில் கற்பனாவாதம் சார்ந்த எந்த சிறப்பு சக்திகளும்
இல்லாத தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாகவே
துணை நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதால் துணை
நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இயல்பான பிணைப்பு
உண்டாகிவிடுகிறது.

இப்படி பல பத்தாண்டுகளாகத் துணை நடிகராக நடித்துப்
புகழ்பெற்று மக்கள் மனங்களிலும் அவர்கள் குடும்ப
உறுப்பினரைப் போல் நிலைத்துவிட்டவர்களில் இன்று
(ஆகஸ்ட் 1) பிறந்த நாள் கொண்டாடும் டெல்லி கணேஷ்
முக்கியமானவர்.

1976-ல் வெளியான ‘பட்டணப் பிரவேசம்’ படத்தில்
நடிகராகத் திரைத் துறைக்கு அறிமுகமானார் டெல்லி கணேஷ்.
ஆம், இயக்குநர் சிகரம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய
அசாத்திய திறமையாளர்களில், சாதனையாளர்களில்
ஒருவர்தான் டெல்லி கணேஷ்.

1979இல் துரை இயக்கத்தில் வெளியான ‘பசி’ படம் தமிழ்
சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. இரண்டு தேசிய
விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற அந்தப் படத்தில்
டெல்லி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

அதேபோல் 1985-ல் பாலசந்தர் இயக்கி காவிய அந்தஸ்தைப்
பெற்றுவிட்ட ‘சிந்து பைரவி’ படத்தில் குடிப்பழக்கத்துக்கு
ஆட்பட்ட மிருதங்கக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்து
அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:03 pm

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 567699
-
1980-களில் தொடர்ந்து பல படங்களில் பல வகையான
துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். பாலசந்தரிடம்
உதவி இயக்குநராக இருந்த விசுவின் படங்களில் டெல்லி
கணேஷுக்கு குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்கள்
அமைந்தன.

ரஜினி, கமல் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார்.
1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்று உலக
அளவில் புகழ்பெற்றிருக்கும் ‘நாயகன்’ திரைப்படத்தில் மும்பை
தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி
மொழிபெயர்ப்பாளராக நடித்துப் பரவலான பாராட்டுகளைப்
பெற்றார்.

இப்போதும் தலைமுறை ரசிகர்களும் ‘நாயகன்’ படத்தைப்
பார்த்தால் அதில் டெல்லி கணேஷின் யதார்த்தமான நடிப்பை
வியக்காமல் இருக்க முடியாது.

பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலின் பொறுப்பற்ற
அதே நேரம் குற்ற உணர்வு மிக்க தந்தையாக உணர்வுபூர்வமான
நடிப்பை வெளிப்படுத்தினார்.


தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தவர்
1981இல் வெளியான ‘எங்கம்மா மகராணி’ என்ற படத்தில்
கதாநாயகனாக நடித்தார். விசுவின் ‘சிதம்பர ரகசியம்’,
கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில
படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் காமேஸ்வரன் கமலுக்கு
சமையல்காரத் தந்தையாக பாலக்காட்டுத் தமிழ் பேசி
நகைச்சுவையிலும் பட்டையைக் கிளப்பினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:04 pm

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 1596285335343
-
கமல் – கிரேசி மோகன் கூட்டணியில் அமைந்த ‘அவ்வை சண்முகி’
படத்தில் கமல், ஜெமினி கணேசன்,. நாகேஷ், எல்லோரையும் தாண்டி
சுயநலமும் குயுக்தியும் நிறைந்த நபராக டெல்லி கணேஷின்
நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது.

அந்தப் படத்திலும் அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் விலா
நோகச் சிரிக்கவைப்பவை. 1990-களில் எல்லா முன்னணி
நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் பணியாற்றினார்.

2000-க்குப் பின் தந்தை, தாத்தா போன்ற முதிய வேடங்களில்
நடிக்கத் தொடங்கினார். அவருடைய நிஜ வயதும் அதற்குத்
தோதாக அமைந்தது. இந்தக் காலகட்டத்திலும் பல படங்களில்
மனதைக் கனிய வைக்கும் உணர்வுபூர்வமான நடிப்பையும்
விஜய்யுடன் நடித்த ‘தமிழன்’ போன்ற படங்களில் அசத்தலான
நகைச்சுவை நடிப்பையும் தொடர்ந்து வழங்கி வந்தார்.
-
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 1596285378343
கடந்த ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தந்தையாக ஒரு சில காட்சிகளில்
மட்டுமே வந்தாலும் மகளின் கையறு நிலையை மாற்ற எதுவும்
செய்ய முடியாத தந்தையின் தவிப்பை வசனமே இல்லாமல்
மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார்.

600-க்கு மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து இன்றுவரை
வெற்றிகரமாகத் தொடர்கிறது டெல்லி கணேஷின் நடிப்புப்
பயணம்.

ஆரவாரமில்லாமல் சற்று அடங்கிய தொனியில் அதே நேரம்
அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடிப்பதில்
டெல்லி கணேஷுக்கு ஒரு தனித்திறமை இருந்தது.

அது தமிழ்த் துணை நடிகர்களில் வெகு சிலருக்கே வாய்க்கப்
பெற்ற பண்பு. நடிப்புத் திறமை மட்டுமல்லாமல் எளிமை,
அப்பாவித்தனம், நட்பார்ந்த பாவம் ஆகியவற்றை முன்னிறுத்தும்
முகமும் தோற்றமும்கூட டெல்லி கணேஷை மக்கள் மனதுக்கு
மிகவும் நெருக்கமாக்கிவிட்டன.

தமிழக அரசின் விருதையும் கலைமாமணி விருதையும்
வென்றிருக்கிறார். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து
இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று
மனதார வாழ்த்துவோம்.
-
-------------------------
எஸ்.கோபாலகிருஷ்ணன்—இந்து தமிழ் திசை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 03, 2020 11:06 am

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 3838410834 டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 1:47 am

05.08.2020
டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் E75Z0hh2QnmxmWAGcHzW+delliganesh
டெல்லி கணேஷ் 1976லே இருந்து இப்போ வரைக்கும் 600 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். தட்சிண பாரத நாடக சபா னு தில்லி நாடக குழூல மெம்பராக இருந்தார். சினிமாக்கு வர்றதுக்கு முன்னால 1964 - 1974 இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்துல வேல செஞ்சார்.
மத்திய அரசு வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டாரே.
டெல்லில இருந்து வந்ததால டெல்லி கணேஷ்ன்னு பாலசந்தர்தான் பேர் வச்சாராம்.
ரேடியோ & TV சீரியல் நடிகரா இருந்தார்.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்கணேஷ் கூட இந்த டெல்லி கணேஷ்.
1982ல தணியாத தாகம் படத்ல ஹீரோ.
இதே வருஷத்ல எங்கேயோ கேட்ட குரல் படத்ல அம்பிகா, ராதாவுக்கு அப்பா
1998ல காதலா காதலா படத்தில வீட்டு உரிமையாளர்
2004ல எதிரி படத்ல கிட்டத்தட்ட ரெண்டாவது ஹீரோ
அப்டீ இப்டீன்னு இப்பவும் நடிச்சிட்டுதான் இருக்கார்.

இது மட்டுமில்ல. டப்பிங் குரலும் கொடுத்திருக்கார்.
மழலைப் பட்டாளம் 1980 - விஷ்ணுவர்தனுக்கு
47 நாட்கள் 1981 - சிரஞ்சீவிக்கு
குடும்பம் ஒரு கதம்பம் 1981 - ப்ரதாப் போத்தனுக்கு
மால்குடி டேஸ்னு ஹிந்தி சீரியல். தமிழ் டப்பிங்ல கிரிஷ் கர்னாட்ங்கிறவருக்கு டப்பிங் செஞ்சிருக்கார்
தங்கமகன் 1983 - ரவீந்திரனுக்கு


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக