புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
3 Posts - 12%
Geethmuru
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
148 Posts - 57%
heezulia
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
86 Posts - 33%
T.N.Balasubramanian
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_m10சிலப்பதிகாரம் அறிவோம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலப்பதிகாரம் அறிவோம்!


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Mon Sep 07, 2020 6:11 pm

சிலப்பதிகாரம் அறிவோம்!



1.முன்னுரை


தமிழ் இலக்கியத்தில் போற்றிப் புகழப்பட வேண்டிய நூல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று சிலப்பதிகாரம் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள். சேர நாட்டு மன்னன் செங்குட்டுவனின் தம்பியான இவர் இளவரசர் பட்டத்தை துறந்து துறவியானவர். ஆனாலும், சிலப்பதிகாரம் நூலில் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும், துன்பங்களையும் சித்தரித்துள்ளார்.

இலக்கியம் பயில விரும்பும் அனைவரும் பயில வேண்டிய முதல் நூல் இதுவாகும். சிலப்பதிகாரத்தை நான் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். சிலப்பதிகாரத்தின் சுவை குறையாமல் உரையை தரும் நூல் ‘‘சிலப்பதிகாரம் மூலமும் உரையும்’’ என்ற நூலாகும். வ.த. இராமசுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. அதில் நான் படித்து மகிழ்ந்த பகுதிகளை உங்களுக்காக வழங்குகிறேன். படித்து மகிழுங்கள்.


தமிழ் இலக்கியத்தில் ஐந்து பெருங்காப்பிய நூல்கள் உள்ளன. இவை சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இரட்டைக்காப்பியங்களாகும். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைவது மணிமேகலை எனலாம். மணிமேகலை என்னும் காவியத்தில் நாயகியாக வரும் மணிமேகலை என்பவள் மாதவி பெற்ற மகளாவாள். இவளைப் பற்றிய செய்தி சிலப்பதிகாரக் காப்பியத்தில் வருதலையும் காணலாம். முக்கியமாக மணிமேகலை துறவறம் மேற்கொண்டதற்குரிய காரணத்தைச் சேரன் செங்குட்டுவன் அறிய விரும்பியது தனிச் சிறப்புத் தன்மையுடையது எனலாம்.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் இந்திய நாடு முழுமையும் தொடர்பு கொள்ளும் அரிய காப்பியமாகத் திகழ்வதாகும் . இக்காப்பியத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர்களைப் பற்றிய செய்திகளோடு கொங்கர், மாளுவவேந்தர், கலிங்கர் முதலானோரும், மற்றும் மன்னர்களான நூற்றுவர் கன்னர், கனகவிசயர் ஆகியவர்களைப் பற்றிய செய்திகளும் வருவனவாம். இமயத்திலிருந்து கல்கொண்டு வந்து கண்ணகிக்குத் திருச்செங்குன்றத்தில் சிலையமைத்து நிறுவி வழிபாடு செய்யப்படும் முறையானது சமுதாய இணக்கத்திற்கும் ஒருமை உணர்வுக்கும் சான்றாகக்கூறலாம்.

இந்நூல் சமயக்கருத்துகள் யாவும் ஒன்றினையொன்று ஏத்தப் போற்றும் வகையில் அமைதலையும் கருதத்தக்கது. சமணத்துறவியாகிய கவுந்தியடிகளின் பெருமையும், இருமால் வழிபாடாகிய ஆய்ச்சியர் குரவையும், கொற்றவை வழிபாடு புரியும் வேட்டுவ வரியும் பின்பு வேடுவர் சாற்றும் குன்றக் குரவையும் இனிது ஏத்துதற்கு உரியன.

முத்தமிழும் விரவப் பெறும் சிறப்பானது அரங்கேற்று காதை, இந்திர விழா ஊர் எடுத்த காதை ஆகியவற்றில் தனிப்பெரும் சிறப்புடன் விளங்குவது உணரத்தக்கது. இல்லறத் தலைவியான கண்ணகி தன்கணவன்பால் குறை காணாது கற்பின் பால் ஒழுகிய திறம் புகார்க் காண்டத்தில் இனிது விளங்க, அவளது வியத்தகு ஆற்றல் கற்பின் வயத்தால் மதுரைக் காண்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது எனலாம். அடுத்து வஞ்சிக் காண்டத்தில் தெய்வ நிலையடைந்து தன் கணவனோடு வானுலகம் சென்றனன்.

இவளது வழிபாடு நன்மை தருவது என்னும் வகையில் சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வந்து செங்குன்றத்தில் சிலை அமைத்துக் கோயில் எழுப்பி நித்திய வழிபாட்டுக்கும் வழி அமைத்தனன். அத்தன்மையில் கண்ணகி தெய்வத்தன்மையுடன் விளங்கி, அனைவருக்கும் நலம் புரியும் நாயக நங்கை ஆயினள் . இக்காப்பியத்தில் நல்லறக் கருத்துகள் பல சாற்றப்பட்டுள்ளன. மாடல் மறையோன் வாயிலாகச் சேரன்செங்குட்டுவனுக்குச் சாற்றப்படும் அற நெறிகள் யாவும் நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படும் அறிவுரைகள் எனலாம் . இதனினும் மேலாக இக்காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகளுக்குத் தெய்வக் கண்ணகி உரைத்த செய்தியை ஆசிரியர் தன்னிலைக் கூற்றாகச் சாற்றப்படுதலும் நோக்கத்தக்கது.

முப்பெரும் உண்மைகளை உணர்த்தும் வகையில் இந்நூல் 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். 2. உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் 3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று சாற்றும் நீதி நூலாக இருந்தாலும், தமிழ்நாட்டின் ஐந்திணை மருங்கின் அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றை இனிது விளக்குவதாகும்.



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2020 6:24 pm

நல்ல தகவல். சிலப்பதிகாரம் அறிவோம்! 1571444738 


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2020 7:04 pm

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் .

என்றிருக்க வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Mon Sep 07, 2020 8:04 pm

1. புகார்க்காண்டம்


[You must be registered and logged in to see this link.]



இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டு விளங்குவது.
காண்டம் என்பது பகுதியை உணர்த்தும் சொல்லாயிற்று. இங்கு
இக்காப்பியத்தில் பூம்புகார் என்று சொல்லப்படும் காவிரிப்பூம்
பட்டினத்தில் நடைபெற்ற செய்திகளை உரைக்கும் தன்மையில்
புகார்க் காண்டம்எனப்பட்டது. இக்காண்டத்தில் பத்துக்காதைகள்
அமைந்துள்ளன



1. மங்கல வாழ்த்துப்பாடல்

இது சிலப்பதிகாரக் காப்பியத்திற்குக் கடவுள்வாழ்த்து
முதலாகத் தொடங்கி நகர்வளம், கோவலன், கண்ணகி முதலியோர்
சிறப்பு. திருமணக்காட்சி, வாழ்த்துரைகள் முதலியன சாற்றப்
படுவதாயிற்று. இக்காப்பியமானது மங்கலக்காட்சியில் தொடங்கு
தலும் இறுதியில் மக்கள் நலமுடன் வாழ்வதற்குண்டான வரங்
களைத் தருதலுமாக அமைக்கப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது.

இதன்வாயிலாக மக்கள்
மங்கலம் நிரம்பிய வகையில்
மகிழ்வுடன் நல்வரங்களைப் பெற்று வாழ்தலின் வகையானது
எடத்தோதுதல் சிறப்புடைத்தமையாகச் சாற்றப்படுதலாம்.

1. கடவுள்வாழ்த்து

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு
அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்தலான்.
ஞாயிற்று போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன்திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்.

[img(640px,320px)][You must be registered and logged in to see this link.]

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்கு நீர்வேலி உலகிற்கு அவன் குலத்தொடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

தெளிவுரை:

சந்திரனைப் போற்றுவோமாக/ இச்சந்திரன் தேன்விளங்கும்
மலர்மாலைசூடிய சோழ மன்னனின் குளிர்ச்சி பொருந்திய வெண்
கொற்றக்குடை போன்று விளங்க, இந்த அழகிய இடத்தை
யுடைய உலகத்திற்குத்தண்மை அளிப்பவன்ஆவன்.
சூரியனைப்போற்றுவோமாக/ இது சோழ மன்னனது
ஆட்சியுரிமை போன்று பொன்மலையாகிய மேருமலையை வலம்
வருதலை உடையது.

பெருமை விளங்கும் மழையைப் போற்றுவோமாக இஃது
அச்சத்தைத் தருமாறு விளங்கும் பெரிய கடலை வேலியாக உள்ள
கடலால் சூழப்பட்டுள்ள இவ்வுலகத்திற்கு மன்னவன் பேரன்பு
விளங்குதலைப் போன்று வானத்திலிருந்து தானே சுரந்து வளத்தைச்
சேர்க்கும் எழில் உடையது.

அழகிய புகார் நகரத்தைப் போற்றுவோமாக இது விரிந்த நீர்
விளங்கும் உடலை எல்லையாகக் கொண்டு உலகத்திற்கு அரசனின்
குலச்சிறப்பு ஓங்கப் பெருமையையும் புகழையும் ஈட்டுதலாகின்றது.

சிறப்புரை:

இக்காப்பியத்தில் முதற்கண்சந்திரன், சூரியன், மாமழை,
பூம்புகார் நகரம் என நான்கும் போற்றப்படுகின்றது. இது கடவுள்
வாழ்த்தாதலும் காண்க. இக்காப்பியத்தில் சைவம், வைணவம்,
சமணம் முதலான சமயங்களைப் பற்றிச் சாற்றப்படும் தன்மைகள்
இருப்பினும் உலகத்தில் உள்ளவர்களுக்கு எக்காலத்திலும்
பொதுவாக விளங்கி நலன்களைப் புரிந்து வரும் சந்திரன் சூரியன்,
மாமழை ஆகியனவற்றைப் போற்றிப் பாடுதல் நோக்கத்தக்கது.
இது தனிப் பெருஞ்சிறப்புடையதாகும். இங்குச் சந்திரன் குளிர்ச்சித்
தன்மையுடையது. இஃது அமுதகலைகளுடன் விளங்குவது.
எனவே இதனைத் தண்மையும், உயிர்த்தன்மையும், நித்தியப்
பொருண்மையும் உடையது எனலாம். இதனை இங்குத் தேய்பிறை
மற்றும் வளர்பிறை என இல்லாது முழு நிலவைக் கொண்டு
நிற்றலை உணர்த்தும் வகையில் அரசனது வெண்கொற்றக்
குடைக்கு உவமை சாற்றுதலாயிற்று. இச்சந்திரன் சிவபெரு
மானுக்கு இடக்கண்ணென விளங்குவதாகப் புராண வரலாறு
சாற்றும். மற்றும் இது சிவபெருமான் தன்சடை முடியில்
தரித்துள்ள சிறப்பினையும் பகரும். இது தெய்வத்தன்மையும்
அருள்நோக்கும் உடைமையை உணர்த்துதலும் ஆம்.

அரசர்கள் இத்தன்மையில் வெண்கொற்றக்குடையுடன்
விளங்குவதற்குக் காரணம் யாதெனக் கூறும் வகையில்
புறநானூற்றுப் பாடல்எண் 60-இல், புலவர் உறையூர் மருத்துவன்
தாமோதரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா
வளவனைப் பற்றிப் பாடும் போது சோழனின் வெண்கொற்றக்
குடையானது முழு நிலவைப்போன்று வணக்கத்திற்கு உரியது
எனவும் தண்மையுடைய அது வெயிலை மறைப்பதற்கு என்று
அமைவது அன்று எனவும்சாற்றுதல் காண்க. இதன்வழி திங்
களைப் போற்றுதலானது வணக்கம் புரிதலைச் சாற்றுதலாம் என்க.

சூரியனைப் போற்றுதலானது ௮ஃது உலகம் முழுவதிலும்
பரந்து விரிந்து தனது ஒளியைத்தருதல் போன்று, சோழ மன்னனது
ஆணையானது எல்லா இடங்களிலும் பரந்து விரிந்துள்ளமையைப்
புலப்படுத்துதலாயிற்று.

மழை என்பது உலகத்தில் தண்மையினை விளங்கச் செய்வ
தாகும். இதனை அன்பின் தன்மையினைக் குறிக்கும் வகையில்
அளி எனச் சாற்றப்படுதலும் காண்க. மழையை வான்சிறப்பு
என்னுமாறு திருவள்ளுவர் சாற்றிய வகையில் ௮ஃது அமிழ்த
மாகக் கருதப்படுதலாலும் ௮ம்மழையானது தானம்தவம் ஆகிய
இரண்டின் நிலைபேற்றுக்கும் காரணமாதலாலும், நீர்இன்றி
உலகம் அமையாமையாலும் இதன் சிறப்பினை நன்கு கருத்தில்
கொண்டு போற்றப்படுதலாயிற்று. இதனால் இயற்கையின்
எழிலாகத் திகழும்மழை போற்றப்பட்டது.

மற்றும் பூம்புகார் என்பது ஓர் ஊரைத் தெளிவாகக் குறிப்பிடும்
தன்மையில் அது நாட்டின் சிறப்பினை எடுத்து ஓதுதற்குரிய
உறுப்பாயிற்று. தமிழைத் தாய்த்தமிழ் என்று சாற்றி மொழியை
முன்னிலைப் படுத்தி வணங்குதல் போன்று நாட்டினைத் தாயாகக்
கொண்டு தாய்நாடு, தாயகம்என்று ஏத்தும் பாங்கில் பூம்புகார்
நகரமானது ஈண்டு ஏத்தப்பட்டது. மேலும் காப்பியத்திற்கு
முதற்காண்டமாக இப்புகார்க்காண்டம் இகழ்தலும், காப்பியத்
தலைவியாகிய கண்ணகி தெய்வமாக வணங்கப்படும் நிலையில்
அவளது பிறந்த பூமியின்சிறப்பினை இனிது காட்டும் வகையில்,
பூம்புகாரை ஏத்தும் வண்ணமும் ஆயிற்று." />



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக