புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_m10ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 20, 2021 12:08 am

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம்.) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. (விக்கிபீடியா)

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Thaipusam_1-2

தண்ணீர்மலை - பினாங் மலேசியா

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Bala2

தமிழின் இளமையும் இசைத் தமிழின் இனிமையும் கூடிய பாடல்கள்
மகதி பாடும் வள்ளலார் பாடலுடன்…...



பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
 நமச்சிவாயத்தை நான் மறவேனே

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே



avatar
Guest
Guest

PostGuest Wed Jan 20, 2021 12:13 am

ஆறுபடைவீடு -திருப்பரங்குன்றம்

இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது.

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  1024px-Tirupparamkunram_Murugan_Temple

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும்வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே. 

பாடியது -பி.சம்பந்தம் குருக்கள்




avatar
Guest
Guest

PostGuest Wed Jan 20, 2021 12:16 am

ஆறுபடைவீடு - திருச்செந்தூர் 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Thiruchendur%2Bmurugan%2Btemple%2B20

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
லைவா யுகந்த பெருமாளே.

வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.

* மன்மதனின் ஐந்து மலர்க்கணைகள்: தாமரை, முல்லை, மாம்பூ, அசோகம், நீலோற்பலம்.

பாடியது - S ஜானகி



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 21, 2021 12:14 am

ஆறுபடைவீடு - திருவாவினன்குடி
 திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Palani



நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.

லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, மலைகளுக்கெல்லாம் அரசனே, திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி,

பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழு உலகங்களிலுள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே, வயலூருக்குத் தலைவா, தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

* இது 'திருக்கற்குடி' அல்லது 'உய்யக்கொண்டான்' என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் 'ஆதி உலா' என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். - பெரிய புராணம்.

பாடியது - சுதா ரகுநாதன்.



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 21, 2021 12:20 am

ஆறுபடைவீடு - சுவாமிமலை(திருவேரகம் )
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Swamimalai

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.


திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெற்றருளிய குமாரக் கடவுளே!
வஜ்ர கடகங்களை அணிந்துள்ள புயங்களின் மீது, இரத்தினங்கள் இழைத்த திருவாபரணங்களையும், பொன் மாலைகளையும், வெட்சி மலர் மாலையையும் தரித்துக் கொண்டிருப்பவரே!
நெய் பூசப் பெற்றதும் கூர்மையுடையதுமாகிய வேற்படையை உடையவரே!
சிவந்த இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற தேவரீருடைய திருவடிகளை நாள்தோறும் நாவாரத் துதிக்க அருமையான செந்தமிழ்ப் புலமையை தந்தருளிய மயில் வாகனத்தை உடையவரே!
பற்பல அதிசயங்களையுடைய பழநிமலைமேல் அருட்கோலங்கொண்டு விளங்கும் கட்டழகுடையவரே!
திருவேரகம் என்னும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

  தாமரைக்கு நிகரானதும் ஆன்மாக்கள் ஒடுங்குமிடமு மாகிய தேவரீருடைய திருவடியை, அரை நிமிஷ நேரமாகிலும் ஒரு முகப்பட்டு புலன்களையடக்கி தவ முறைப்படி தியானஞ் செய்யுந் தன்மை யுணராதவனும், அறிவில்லாதவனும், குற்றமுடையவனும், மூடனும், மட்டியும், பிறவிக்குக் காரணமாகிய தீவினையால் பிறந்துழலுபவனுமாகிய அடியேன் அருட்செல்வமற்ற வறுமையால் மயக்கத்தையடைந்து துன்புறுவது முறையோ? கருணைக் கடலாகிய தேவரீர் அடியேன் மீது கருணை செய்யாம லிருப்பதற்குக் காரணம்-என்மீதுள்ள குற்றம்-யாது? இந்த வேளையில் திருவாய் மலர்ந்தருள்வீர் ஐயா. திருவருள் புரிவதற்கு இது நல்ல தருணம்; மிகுந்த பெருமையுடைய, இறுதியற்ற பேரின்பத்தையும், எல்லா வகையான செல்வங்களுடன் கூடிய பெருவாழ்வையும்,  தகுதியையும்,  பதியறிவையும், பிறவாப் பெற்றியாகிய மோட்ச நலத்தையும் தேவரீர் தந்தருளி உதவி புரிந்தருள்வீர்.

பாடியது -கே.பி.சுந்தராம்பாள்



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 21, 2021 11:54 pm

ஆறுபடைவீடு - திருத்தணி 

 வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  Tiruttani+temple

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.


இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாடியது தேஜஸ்வினி



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 21, 2021 11:59 pm

ஆறுபடைவீடு -பழமுதிர்சோலை
 
 மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது.

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  800px-Pazhamudhircholai_Koil

அகரமுமாகி  அதிபனுமாகி  அதிகமுமாகி ...... அகமாகி
     அயனெனவாகி  அரியெனவாகி  அரனெனவாகி ...... அவர்மேலாய்
இகரமுமாகி  எவைகளுமாகி  இனிமையுமாகி ...... வருவோனே
    இருநிலமீதில் எளியனும் வாழ எனதுமுனோடி ...... வரவேணும்

மகபதியாகி  மருவும் வலாரி மகிழ்களிகூரும் ...... வடிவோனே
     வனமுறை வேடன்  அருளிய பூஜை மகிழ்கதிர்காமம்  ...... உடையோனே
செககணசேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
    திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே.

* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடியது பெங்களூர் ரமணி அம்மாள்



(நன்றி-பாடல் தெரிவு திருப்புகழ் மாமி/மற்றும் இணையம்)

இந்தப் பாடல் ’அன்னை அபிராமி’ படத்தில் பி.சுசீலா பாடியது.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  103459460 ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக