புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
64 Posts - 58%
heezulia
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
106 Posts - 60%
heezulia
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குறட்டை  Poll_c10குறட்டை  Poll_m10குறட்டை  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டை


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 31, 2023 3:47 am


குறட்டை  Ds00297_im01915_ah6a306_thumb_jpg

குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு.

இதற்கு மருத்துவத்தில் வைத்தியம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு சில பஞ்சகர்ம மருத்துவங்கள் மூலமும் உள் மருந்துகள் மூலமும் இவ்வியாதியை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்று தைரியம் கூறி அம்மருந்துகளையும் கொடுத்து அனுப்பிவைத்தேன். அவரும் சுமார் பத்து நாட்கள் நமது மருத்துவமனைக்கு தினமும் வந்து பஞ்சகர்ம சிகிச்சைகள் செய்து கொண்டு ஒரு மூன்று மாத காலம் உள்மருந்துகளும் சாப்பிட்டு இவ்வியாதியிலிருந்து பெரிதும் மீண்டுவிட்டதாக சமீபத்தில் என்னை மீண்டும் சந்தித்து மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார்.

நம் மாரியப்பனைப்போல் பலரும் இந்த குறட்டையினால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கானது இந்த தகவல். கிட்டத்தட்ட அனைவரும் அவ்வப்போது குறட்டை விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இதுவொரு, நாள்பட்ட பிரச்சனையாகவோ, சில சமயங்களில் இது ஒரு தீவிர உடல்நிலையாகவும் இருக்கலாம். கூடுதலாக, குறட்டை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் கூட ஒரு பெரும் தொல்லையாக இருக்கலாம்.

சத்தம் எப்படி ஏற்படுகிறது நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை மூலமாக மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை சேர்கிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்பட்டால் குறட்டை சத்தம் ஏற்படும். இது உங்கள் தொண்டையில் உள்ள தளர்வான திசுக்களை கடந்து காற்று பாயும் போது ஏற்படும் கரகரப்பான அல்லது கடுமையான ஒலியாகும், இதனால் நீங்கள் சுவாசிக்கும்போது திசுக்கள் அதிர்வுறும்.

தூக்கம் நம் உடலுக்கும் மூளைக்கும் மிகவும் தேவையான ஒன்று. குறட்டை விடும் மனிதர்கள் நன்கு உறங்குகின்றார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இது ஆரோக்கியமான தூக்கம் கிடையாது.


ஏன் தூங்கும்போது மட்டும் வருகிறது



நாம் தூங்கும்போது நம் தொண்டைத்தசையானது தளர்வு அடையும். அப்போது மூச்சுப்பாதையின் அளவு குறைகின்றது அந்த குறுகிய பாதையில் செல்லும் சுவாச காற்றானது குறட்டைசத்தமாக வெளிப்படுகிறது.

மேலும் நாம் மல்லாந்து படுக்கும்போது தளர்வு நிலையில் உள்ள நம் நாக்கு சற்று தொண்டைக்குள் இறங்கிவிடும் .இதனால் மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை சத்தம் உருவாகும்.


காரணங்கள்



*மனிதனாக இருப்பதே குறட்டை வருவதற்கு காரணமாக அமையும்.

*பெண்களை விட ஆண்களுக்கு குறட்டை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

*பருமனாக இருத்தல். அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்கள் குறட்டை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

*மது அருந்துதல். ஆல்கஹால் உங்கள் தொண்டை தசைகளை தளர்த்துகிறது, குறட்டை அபாயத்தை அதிகரிக்கிறது.


மற்ற காரணங்கள்



*தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறுகள்

*மரபு வழி

*ஒவ்வாமை

*உடல் பருமன்

*சளி

*மூக்கு அடைப்பு

*தூக்கமின்மை

*மூக்கு இடைச்சுவர் வளைவு (Deviated Nasal Septum)

*குறுகிய காற்றுப்பாதை கொண்டவர்கள்.

*சைனஸ் தொல்லை

*டான்சில் வளர்ச்சி

*தைராய்டு உள்ளவர்கள்

*குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

*புகைபிடித்தல்

*மது அருந்துதல்

*அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வது.

குறட்டை என்பது OSA (Obstructive Sleep Apnea) என்னும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோயின் அறிகுறியாக உள்ளது. குறட்டையானது பெரும்பாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (obstructive Sleep Apnea) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அனைத்து நோயாளிகளுக்கும் OSA இல்லை, ஆனால் குறட்டையானது பின்வரும் அறிகுறிகளுடன் இருந்தால், OSAவாக இருக்கலாம். அதனால் தக்க மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

* உறக்கத்தின் போது திடீர் மூச்சு முட்டுவது,

* அதிக பகல் தூக்கம்

* கவனம் செலுத்துவதில் சிரமம்

* காலை தலைவலி

* எழுந்தவுடன் தொண்டை வலி

* அமைதியற்ற தூக்கம்

* இரவில் மூச்சுத்திணறல்

* உயர் ரத்த அழுத்தம்.

* இரவில் நெஞ்சு வலி

* அடிக்கடி விரக்தி அல்லது கோபம்

* கவனம் செலுத்துவதில் சிரமம்

* தூக்கமின்மையால் மோட்டார் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்.

* குழந்தைகளில், மோசமான கவனம், நடத்தை பிரச்சினைகள் அல்லது பள்ளியில் மோசமான செயல்திறன்.

ஓஎஸ்ஏ பெரும்பாலும் உரத்த குறட்டையாக இருக்கும். இடையில் சுவாசம் திடீரென தடைபடும்போது நோயாளி திடுக்கிட்டு மூச்சுத்திணறி எழுந்திரிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். தூக்கமின்மை காரணமாக நோயாளி ஆழ்ந்த உறக்கத்தினை அடைய சிரமப்படுவார். இந்த சுவாச இடை நிறுத்தங்கள் இரவில் பல முறை மீண்டும் மீண்டும் வரலாம்.

நோய் கண்டறிதல் நோயாளியின் உடலில் எலெக்ட்ரோடுகளைப் பொருத்தி, அதன் மூலம் அவரது மூளை அலைச் செயல்பாடு (Brain waves), இதயத்துடிப்பு (Heart rate), மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை பார்க்க வேண்டும். இதனோடு கண்கள், கால்களின் இயக்கம் ஆகியவையும் ஆய்வுசெய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கு, `தூக்க ஆய்வு’ (Sleep study) என்று பெயர்.தூக்கத்தை ஆய்வு செய்வதற்கான `பாலிசோமோனோகிராபி’ (Polysomnography) என்ற நவீன கருவி உள்ளது.


சிகிச்சை



குறட்டை ஆயுர்வேதத்தில், ஊர்துவஜட்ருகாத ரோகம் எனப்படும் தோள்பட்டைக்கு மேல் வரக்கூடிய நோயாக கருதப்படுகிறது. இது பிராண, உதான வாத இயக்கங்களின் தடையினால் ஏற்படும் நோயாக பார்க்கப்படுகின்றது.


பஞ்சகர்மா முறைகளான அபியங்கம்



(massage), உத்சாதனம்( massage with powders, வமனம் (Therapeutic Emesis), வஸ்தி (enema), நஸ்யம் (inhalation therapy), கண்டூஷம் மற்றும் கவலகிரகம் (Oil Pulling), தூமபானம் மற்றும் க்ஷீரதூமம் (Herbal Smokes) ஆகியவை தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள நல்ல பலனளிக்கும்.


மேலும் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருந்துகளாகிய புனர்நவாதி கஷாயம், லட்சுமி விலாஸ் ரஸ், நெருஞ்சில் சூரணம், கோதந்தி பஸ்மா, சுதர்ஷன் கன வட்டி, சுவாச குடார ரஸம், ஹிங்குவாஸ்டக சூரணம், பிரம்மி நெய், சுவாசனந்த குளிகா, தாளீசபத்ராதி சூர்ணம் ஆகியவை தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள நல்ல பலனளிக்கும். தவிர்க்க வேண்டியவை தூங்கச் செல்வதற்கு முன்னர் துரித உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.


சளி, மூக்கடைப்பு தொந்தரவு



இருந்தால், தூங்கச் செல்வதற்கு முன்னர் சுடுநீரில் ஆவிபிடிப்பது நல்லது. இது மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தற்காலிக அடைப்பை நீக்கி, காற்று எளிதாகச் செல்ல வழிவகுக்கும். உயரமான தலையணையை (கழுத்து வலி ஏற்படாதவாறு) தலைக்கு வைத்துப் படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


வாழ்க்கை முறை மாற்றங்கள்



1. எடை குறைத்தல்



படிப்படியாக எடை அதிகரிப்பது குறட்டைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் கழுத்தில் உள்ள கொழுப்பு திசுக்கள் தூக்கத்தின் போது காற்று சுதந்திரமாக உள்ளே மற்றும் வெளியே வருவதை தடுக்கிறது. எடை அதிகரிப்பு உங்கள் தொண்டை மற்றும் கழுத்துப் பகுதியை பருமனாக்கி அதன் மூலம் மேல் சுவாசப் பாதையில் சுருக்கத்தை உருவாக்குகிறது. அதனால் சிறந்த எடையை பராமரிக்க முயற்சிக்கவும். தினமும் 30 நிமிடம்உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறை மாற்றங்களைச் செய்து, காய்கறிகள் மற்றும் பழங்களின் 5 பகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும் (ஒரு பகுதி ஒரு கைப்பிடிக்கு சமம்).

2. மது அருந்துவதை தவிர்த்தல்



மது அருந்துவது, தூக்கத்தின் போது குறட்டையை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது, ஏனெனில் இது தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களின் தளர்வு மற்றும் சுவாசத்தின் போது ஏற்படும் இடையூறுகளை ஏற்படுத்தும்.

3. புகைப்பதை நிறுத்தல்



புகைபிடித்தல் தொண்டையின் உள் புறத்தில் கடுமையான எரிச்சலுடன் வீக்கம் மற்றும் கண்புரைக்கு வழிவகுக்கும்.மேலும் மேற்கூறிய அனைத்து காரணங்களையும் தவிர்த்தாலே இந்நோயை முற்றிலுமாக தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் சிறந்த வழியாக அமையும்.

நன்றி குங்குமம் தோழி

#குறட்டை #SNORING

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

Code:
நாம் மல்லாந்து படுக்கும்போது தளர்வு நிலையில் உள்ள நம் நாக்கு சற்று தொண்டைக்குள் இறங்கிவிடும் .
இதனால் மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை சத்தம் உருவாகும்.

பக்கவாட்டில் படுத்தால் குறட்டை வருவதில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக