புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
32 Posts - 51%
heezulia
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
74 Posts - 57%
heezulia
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_m10கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 15, 2023 8:48 pm

காங்கிரஸ் கதவைத் தட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!


காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது

கர்நாடக அரசியலில், பா.ஜ.க தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியைத் தேடிப் படையெடுத்துவருவது பா.ஜ.க மேலிடத்துக்கு, தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!

தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகா, வருகிற மே 10-ம் தேதி தேர்தலைச் சந்திக்கிறது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும், ‘காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெறும்’ என்றே சொல்கின்றன.

இந்த நிலையில், பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதேபோல், ஹிரகேரூர் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ–வாக இருந்த யூ.பி.பங்கார், பா.ஜ.க-வை உதறிவிட்டு, காங்கிரஸில் இணைந்துவிட்டார். இவரைப்போலவே, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ-க்களான வி.எஸ்.பட்டீல், ஜி.என்.நஞ்சுண்டசுவாமி, எம்.எல்.சி-க்களான பாபுராவ், புட்டண்ணா, மோகன் லிம்பிகாய் மற்றும் சில தலைவர்களும் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில், சுமார் 50-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான லட்சுமண் சவதி பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டார். முன்னாள் முதல்வரும், தொடர்ந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருப்பவருமான ஜெகதீஷ் ஷெட்டரும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருப்பதால், பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ‘‘பா.ஜ.க-விலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து சிட்டிங் எம்.எல்.ஏ சிவலிங்க கவுடா, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது’’ என்கின்றனர்.

கர்நாடக தேர்தல்இந்த நிலையில், கர்நாடகா மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கணேஷ் கார்னிக்கிடம் ‘பா.ஜ.க பலத்தை இழந்துவருகிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ‘‘பா.ஜ.க-வில் இத்தனை ஆண்டுகளாக எம்.எல்.ஏ-க்களாகவும், எம்.எல்.சி-க்களாகவும் இருந்தவர்கள், வரும் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். ‘தேர்தலில் சீட் கிடைக்கவில்லை’ என்ற ஒற்றைக் காரணத்துக்காக சிலர் வெளியேறியதால், பா.ஜ.க வலுவிழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. நாங்கள் கடந்த தேர்தலைவிட இப்போது வலுவாகவே இருக்கிறோம்’’ என்றார் சமாளிப்பாக.

கர்நாடக அரசியலில் அரங்கேறிவரும் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டங்களையெல்லாம் பார்த்தபடியே, ஒரு கணக்கோடு தேர்தலுக்குக் காத்திருக்கிறார்கள் மக்கள்!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 15, 2023 8:49 pm

3ஆவது வேட்பாளா் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!


கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடக்கூடிய 43 போ் கொண்ட 3 ஆவது வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது, மூன்றாவது கட்டமாக 43 வேட்பாளா்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

224 தொகுதிகளில் இதுவரை 209 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சில் இணைந்த லட்சுமண் சவடிக்கு அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகர்கள் அதிகயளவில் உள்ள கோலார் தொகுதியில் கோத்தூர் ஜி.மஞ்சுநாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 12:41 am

நந்தினி Vs அமுல்... கர்நாடகாவில் நடைபெறும் ‘பால் பாலிடிக்ஸ்’ - யாருக்குச் சாதகம்?!


கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று முக்கியக் கட்சிகள் களமிறங்கியிருக்க, அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கோலாரில் கடந்த வாரம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை, அனைவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும்” என்று வாக்குறுதிகளை அள்ளிவீசினார் ராகுல் காந்தி. காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் கர்நாடக மக்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

கோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதை கார்கேவுக்கும், ராகுல் காந்திக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, “தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போல, கர்நாடகா தேர்தலிலும் மோடியின் மாயை பலிக்காது” என்று கூறியிருக்கிறார்.

கர்நாடகா தேர்தல் களம் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கும் சூழலில், ‘கர்நாடகாவின் நந்தினியா... குஜராத்தின் அமுலா’ என்கிற சர்ச்சை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, “கன்னடர்களின் வங்கி, துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றைத் திருடிவிட்டீர்கள். இப்போது நந்தினியைத் திருட முயல்கிறீர்கள்” என்று பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார். மோடியை சித்தராமையா விமர்சித்தாலும், இந்த சர்ச்சைக்கு வித்திட்டவர் அமித் ஷா.

மாண்டியாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கர்நாடகாவில் மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திலும் முதன்மை பால் பண்ணைகளை அமைக்க அமுல், நந்தினி ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் என்று பேசினார். அதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் சார்பாக ‘நந்தினி’ என்ற பெயரில் பால், பால் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆவின், குஜராத்தில் அமுல்போல, கர்நாடகாவில் நந்தினி இருக்கிறது. இது, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பாகும். பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக நந்தினி விளங்கிவருகிறது.

இந்த நிலையில்தான், குஜாரத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பால், பால் பொருள்கள் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனத்தை அழித்துவிட்டு குஜராத்தின் அமுல் நிறுவனம் கர்நாடகாவில் கோலோச்சப் போகிறது என்ற அச்சம் கர்நாடகா விவசாயிகளிடம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

கர்நாடகா விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னட அமைப்புகள் இறங்கியிருக்கின்றன. நந்தினிக்குத்தான் தங்கள் ஆதரவு என்று கர்நாடகா உணவகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘நந்தினியைக் காப்பாற்றுவோம்’ என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இன்னொருபுறம், அமுல் வருவதால் நந்தினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சொல்லி பா.ஜ.க சமாளித்துவருகிறது.

நிலைமை மோசமாவதை அறிந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “எப்போதுமே நந்தினி தனது தனித்த அடையாளத்துடன் இருக்கும். அமுலுடன் நந்தினி இணைக்கப்படும் என்பது கற்பனையானது” என்று கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க-வினர் அளித்துவரும் விளக்கத்தை யாரும் ஏற்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அமுல் நிறுவனத்துடன் பிற மாநிலங்களின் பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புகளை இணைப்பது குறித்த செய்திகள் ஏற்கெனவே வெளிவந்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் மாண்டியாவில் பேசுவதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதம் இது குறித்து சிக்கிமில் பேசியிருக்கிறார் அமித் ஷா. அப்போது, அமுலுடன் மேலும் ஐந்து கூட்டுறவு சொசைட்டிகள் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில், கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் போராட்டக்களத்தில் இறங்கியிருக்கின்றன. நந்தினி விற்பனை மையத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நந்தினிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதன் தயாரிப்புப் பொருட்களை வாங்கிச் சென்றார். “அமுல் பொருள்களை வாங்க மாட்டோம் என்று அனைத்துக் கன்னடர்களும் உறுதியேற்க வேண்டும்” என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

“இந்தி மொழியைத் திணிப்பதைப்போல, தற்போது வெளிமாநில பால் நிறுவனத்தை கர்நாடகாவுக்குள் திணிப்பதன் மூலம் நந்தினி நிறுவனத்தை மூடிவிட்டு, பா.ஜ.க அரசு கர்நாடகா விவசாயிகளுக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறது” என்று காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும் அமுல் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அமுல் வருகைக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இறங்கி அடிக்கின்றன. வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், வரும் தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 6:25 pm

மூட்டை மூட்டையாக பணம்: காங்., புகாருக்கு அண்ணாமலை மறுப்பு


பெங்களூரு: கர்நாடக தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்., வேட்பாளர் வினய்குமார் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு வினய் குமார் விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு விமர்ச்சிக்கிறார் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம்:



கர்நாடகா சட்டசபை தேர்தலில் 86 தொகுதிகளின் பொறுப்பு தமிழக பா.ஜ., தலைவரும்; கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்தொகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை வளைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை கர்நாடகாவில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழக பாஜ.,தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.

மூட்டை மூட்டையாக பணம்:



அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவர் ‛ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறேன். தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

அண்ணாமலை பதில்:



இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், ‛ நான் சாமானியன். எங்களது கொள்கை வேறு. அவர்களது கொள்கை வேறு. கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரத்தை குறைக்க ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறோம்.

எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். வினய் குமார் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

சோதனை



இதனிடையே, அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில், தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 7:37 pm

கர்நாடக தேர்தல்: காங்கிரஸில் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் என்ன குழப்பம்?



கர்நாடக காங்கிரஸில் இருக்கும் முக்கிய பிரச்சனை தொடர்பாக அம்மாநில தலைவர்களை வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.

மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் யார் முதலமைச்சர் என்பது குறித்து கர்நாடகாவில் உள்ள தலைவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், அதற்கு பதிலாக 150-160 இடங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸில் தற்போது முதலமைச்சர் கனவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் இந்த மழுப்பலான கருத்தை மல்லிகார்ஜுன கார்கே வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழப்பதற்கு காரணமான மோதி பெயர் குறித்த கருத்துகளை உதிர்த்த அதே கோலார் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் மல்லிகார்ஜுன கார்கே , இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

“உங்கள் அனைவருக்கும் இதை நான் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். யார் முதலமைச்சர் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், இந்திரா உணவகம், மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பிற திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமே என் முக்கிய கவலையாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், மேலிடம் ஆகியோரின் எண்ணப்படி முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். நீங்கள் மக்களை பற்றி நினைத்துப்பாருங்கள், அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள், மற்றவற்றையெல்லாம் எங்களிடம் விட்டுவிடுங்கள்” என்று கார்கே கூட்டத்தில் பேசினார்.

கர்நாடகாவில் உள்ள தலைமைப் பூசல் குறித்து கார்கே, அதுவும் பொதுவெளியில் பேசுவது இதுவே முதல் முறை. 1962 ஆம் ஆண்டு அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை (இந்தியாவின் 6-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர்) போலல்லாமல், தாம் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியதும் இதுவே முதல் முறை.

அனைவருக்குமான செய்தி


தன்னை விட பல ஆண்டுகள் மூத்தவரான கார்கேவின் கீழ் வேலை செய்வதை தான் மிகவும் விரும்புகிறேன் என்று கடந்த வாரம் ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்ட சிவக்குமாருக்கான பதிலாகவும் கார்கேவின் பேச்சு அமைந்துள்ளது.

அந்த சந்திப்பின்போது, கார்கேவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவர் என்னுடைய தலைவர் மட்டுமல்ல அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்கூட. அவருக்கு கீழ் வேலை செய்வதை நான் விரும்புகிறேன். நம்முடைய மாநிலத்துக்கும், நாட்டுக்கும் அவர் முக்கிய சொத்து. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அவர் என்னைவிட 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். நான் சட்டப்பேரவைக்குள் 1985ல் நுழைந்தேன், அவர் 1972லேயே வந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சிவக்குமார், “காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியை நள்ளிரவில் ராஜினாமா செய்தவர் கார்கே( தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி மேலிடம் கேட்டுகொண்டதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியை சித்தராமையா 2009ல் ஏற்றார்.) கட்சியில் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அகில இந்திய தலைவராக உயர்ந்துள்ளார், இது வேறு எந்த கட்சியிலும் சாத்தியமில்லாதது. அவர் அகில இந்திய தலைவரான பின்னர் கர்நாடக காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. எனவே, அவருடைய விருப்பதற்கு எதிராக நான் செயல்பட மாட்டேன் ” என்றும் குறிப்பிட்டார்.

தலைமை தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளும் என்று பொதுவெளியில் சித்தராமையா கூறிய சில நாட்களிலேயே சிவக்குமார் தனது கருத்துகளை கூறியிருந்தார்.

முதலமைச்சராகும் வாய்ப்பை கார்கே மூன்று முறை தவறவிட்டுள்ளார். முதன்முதலாக, 1999-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவை கட்சி மேலிடம் முதலமைச்சராக நியமித்தது. 2004இல், காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை தரம் சிங் வழிநடத்த , தேவகவுடா விரும்பியதால் 2-ஆவது முறையாக முதலமைச்சர் வாய்ப்பை கார்கே இழந்தார். மூன்றாவது முறை 2013ல், சித்தராமையா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து லாபி செய்து முதலமைச்சர் பதவியை பெற்றதால் தவறவிட்டார்.

காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களால் மட்டுமே முடியும்


முதலமைச்சர் பதவி தொடர்பான போட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது முதல், சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் பொதுவெளியிலும், கட்சிக்குள்ளும்இது குறித்து பேசி வருகின்றனர். இந்த போக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையா போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ. ஒருவர் பெங்களூரு நகரில் தனது தொகுதியை விட்டுக்கொடுக்கவும் முன்வந்தார்.

சில எம்.எல்.ஏ.க்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள், கட்சி தலைமை கடிவாளம் போட்டது. பொதுவெளியில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துவிட வேண்டாம் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒரு காலத்தில் கார்கேவின் பெயர் கூட முதலமைச்சர் பதவி தொடர்பான பேச்சில் இடம்பெற்றது. சித்தராமையா, சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே நடந்த அறிக்கைப் போர் 2012இல் தாவணகேரேயில் நடந்த கட்சித் தலைவர்கள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசிய புகழ்பெற்ற வாசகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும் நிலையை ஏற்படுத்தியது.

அந்த கூட்டத்தில், “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் யாராலும் தோற்கடிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

கோலாரில் நடைபெற்ற கூட்டத்தில் கார்கே பேசும்போது, “உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஒற்றுமையாக இருங்கள். நான் இலக்கு நிர்ணயித்த இடங்களை வெல்வது என்பது முடியாத காரியமல்ல. கடந்த காலங்களில் 130 மற்றும் அதற்கு அதிகமான இடங்களை நாம் வென்றுள்ளோம். ”என்றும் அவர் தெரிவித்திருந்தார். (1989 தேர்தலில் 177 தொகுதிகளில் வெற்றிபெற்றதே காங்கிரஸின் அதிகபட்சம் ஆகும்)

முதல் அமைச்சர் பதவி தொடர்பான சச்சரவு


மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் பாஜக வெற்றி பெற்றாலும் தற்போதைய முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மைதான் மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. சித்தராமையாவும் சிவக்குமாரும் மாநிலம் முழுவதும் முதல் சுற்று பிரசாரத்தை இணைந்து முடித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் அவர்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் வடக்கு, மத்திய மற்றும் கடலோர பகுதிகளில் சித்தராமையாஅ பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், அவர் பிறந்த சமூகமான வொக்கலிகா மக்கள் அதிகமுள்ள தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளார்.

நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர், 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் சித்தராமையா, சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களது பரிந்துரைகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், பெரும்பான்மையான இடங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அகில இந்திய தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவை கர்நாடக தேர்தலுக்கான பொறுப்பாளராக கட்சி நியமித்துள்ளது. கட்சி நடவடிக்கையாக உன்னிப்பாக கவனிப்பது, கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்வது போன்றவற்றை அவர் கவனிப்பார்.

கர்நாடக முதலமைச்சராக கார்கே தேர்வு செய்யப்படக் கூடுமா?


கார்கேவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

“ முதலமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் ஒருகாலத்தில் அவருக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் முதலமைச்சர் பதவிக்கும் மேலே உயர்ந்துள்ளார். எனவே, அவர் அதைவிட்டு கிழே இறங்க மாட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தையும், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபலையும் சந்திக்க கார்கே காத்திருக்கும் காலம் இருந்தது. இன்று, அவரைச் சந்திக்க பலர் காத்திருக்கின்றனர்,” என அரசியல் விமர்சகர் டி.உமாபதி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனதை உதாரணம் காட்டி, அவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். நீலம் சஞ்சீவ ரெட்டி, 1960 முதல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆனார், 1962 வரை அந்தப் பதவியில் நீலம் சஞ்சீவ ரெட்டி இருந்தார்.

அதன் பின்னர், மீண்டும் 1962 முதல் 1964 வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர், மத்திய அமைச்சரவையில் இணைந்து மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்த அவர், பின்னர் இந்திய குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்.

அரசியல் ஆய்வாளரும் மைசூர் பல்கலைக் கழகத்தின் கலைத் துறையின் தலைவருமான பேராசிரியர் முசாபர் அசாதி பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “இன்றைய சூழலில், கார்கே மாநில அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்தால், அது மாநில காங்கிரஸின் ஒற்றுமையைப் பாதிக்கும். தற்போது தேசிய அளவில் தலைவராகவும், பாஜகவை எதிர்க்கும் குரலாகவும் கார்கே வலம் வருகிறார். அவர் கர்நாடக அரசியலுக்கு திரும்ப முடிவு செய்யும் தருணம், அது தவறான சமிக்ஞையை அனுப்பும். தற்போது தேசிய அளவில் முக்கிய தலீத் தலைவராக அவர் உள்ளார் என்பதையும் அவரது புகழ் தலித் வாக்குகளை பெற உதவும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ”என்று குறிப்பிட்டார்.

மேலும், “அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினால், அந்த பதவிக்கு அவருக்கு பதிலாக வேறு யார் தேர்ந்தெடுப்படுவார் என்ற கேள்வியும் எழும்” எனவும் பேராசிரியர் அசாதி கூறினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 8:24 pm

கர்நாடகா மாநில தேர்தல் : அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எடப்பாடி பழனிசாமி செல்வது என்ன?



'அ.தி.மு.க. என்பது ஒன்றுதான் என்று தெளிவான விடை கிடைத்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அ.தி.மு.க. என்பது ஒன்றுதான் என்பதற்கான தெளிவு கிடைத்துள்ளது. மற்றவர்களைப் பற்றிப் பேசி நாங்கள் எங்கள் நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

எங்களை பொறுத்தவரை, அ.தி.மு.கவுக்கு ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக உள்ளோம். நான் குறிப்பிடுவது, அந்த ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும். அதற்குள் நான் உள்ளே செல்ல விரும்பவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கிறது. எனவே, தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும் என்றால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் தமிழகம் முன்னேறும். எனவே, தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்களது லட்சியம்.

தி.மு.கவை எதிர்க்க வலுவான கட்சி என்றால் அது அ.தி.மு.க. மட்டுமே. இனிமேல் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படும். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அந்த அளவு வலிமையோடு உள்ளது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்தவரை எங்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 9:10 pm

கர்நாடகா தேர்தல்: 3 தொகுதிகளில் ஓ.பி.எஸ் அணி போட்டி



கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கோலார் தொகுதி உள்பட 3 தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர்கள் இன்று (ஏப்ரல் 20) அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ.கவும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் சிலர் கட்சியில் இருந்து விலகினர். ஆதரவாளர்கள் போராட்டம், அதிருப்தி என பா.ஜ.கவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அ.தி.மு.க சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அ.தி.மு.க சார்பில் கர்நாடகாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி நகர் பகுதியில் டி. அன்பரன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அன்பரன் கர்நாடக மாநில அ.தி.மு.க அவைத் தலைவராக உள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கர்நாடகாவில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும், கோலார் தங்க வயல் பகுதியில் அனந்த ராஜ் என்பவரும், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலிருந்து அ.தி.மு.க கட்சியும், நிர்வாகிகளும் அங்கு உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 12:48 am

பறக்கும் படையால் 40 கிலோ தங்கம் பறிமுதல்


சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் 40 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி போன்றவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதிலும், அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிரடியாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று (ஏப்ரல் 20) ரூ.23.51 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 29 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்று வரை மத்திய விசாரணை அமைப்புகள் ரூ.240 கோடி மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்துள்ளன.

இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியதாவது: இதுவரை மொத்தமாக ரூ.239.52 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் பணம் (80 கோடி), மதுபானம் (48 கோடி), தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் ( 78 கோடி), இலவசங்கள் (19 கோடி) மற்றும் போதைப் பொருள்கள் (16 கோடி) மதிப்பிலானவை ஆகும். இந்தப் பறிமுதல் தொடர்பாக 1,714 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளன. தேர்தல் தேதிக்கு முன்னதாக ரூ.58 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 12:49 am

முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு மறுப்பு


எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவித்திருந்தது. 224 தொகுதிகளில் இதுவரை 222 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக வெளியிட்டிருந்தது.

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நிறைவடையவிருந்த நிலையில், எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. ஆனால், இந்த பட்டியலில் பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மகன் கே.இ.காந்தேஷுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா போட்டியிட்டு வந்த சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளராக சென்னபசப்பா நிறுத்தப்பட்டிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை மேலிடத்தலைவர்களின் வாயிலாக தெரிந்து கொண்ட கே.எஸ்.ஈஸ்வரப்பா, தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அளிக்குமாறு கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் கே.எஸ்.ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ள பாஜக மேலிடம், சிவமொக்கா தொகுதிக்கு சென்னபசப்பாவை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த பாஜக எம்.எல்.சி. ஆயனூர் மஞ்சுநாத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்த ஆயனூர் மஞ்சுநாத், மஜதவில் இணைந்தார்.

இதை தொடர்ந்து, சிவமொக்கா தொகுதியின் மஜதவேட்பாளராக ஆயனூர் மஞ்சுநாத் நிறுத்தப்பட்டிருக்கிறார். பழங்குடியினர் போட்டியிடக்கூடிய மான்வி தொகுதிக்கு பி.வி.நாயக்கை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக வெளியிட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 21, 2023 12:32 pm

கட்டுக்கட்டாகப் பணம், கட்டிகட்டியாகத் தங்கம் - தேர்தலில் விளையாடக் காண்கிறோம்!
தேர்தல் ஆணையம் என்ற ஒன்று .........................................!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக