புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கிருஷ்ண லீலா!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:29 pm

சகடா சூரவதம்

குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.

உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:30 pm

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார்.

அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழுவிக்கொண்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:30 pm

நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம்

வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.

குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.

சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:30 pm

பழக்காரிக்கு அனுக்கிரகம்

ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். ~~பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்|| என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள்.

அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்;ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:31 pm

வத்ஸாசுர வதம்

ஒரு நாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின் வடிவை மேற்கொண்டு இரு குழந்தைகளையும் கொல்லும் நோக்கத்தோடு அங்கு வந்தான். கன்றின் வடிவை எடுத்திருந்ததால் அவன் மற்றக் கன்றுகளுடன் சேர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் இதைக் கவனித்து விட்டார். உடனே அரக்கன் வந்திருந்ததை பலராமருக்குத் தெரிவித்தார்.

பின்னர் இரு சகோதரர்களும் ஓசை படாமல் அரக்கனை அணுகினார்கள். கிருஷ்ணர், அரக்கனான கன்றின் இரு பின் கால்களையும் வாலையும் பிடித்து, சுழற்றி அடித்து, ஒரு மரத்தின் மேல் வீசி எறிந்தார். அரக்கன் உயிரிழந்து மரத்தின் உச்சியிலிருந்து தரையில் விழுந்தான்.அரக்கன் தரையில் இறந்து கிடந்ததைக் கண்ட கிருஷ்ணரின் தோழர்கள் அவரைப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமகிழ்ந்து ஆகாயத்திலிருந்து மலர் மாரி பொழிந்தனர். இவ்வாறு, பிரபஞ்சப் படைப்பின் பாதுகாவலர்களான கிருஷ்ணரும் பலராமரும் ஒவ்வொரு நாட் காலையிலும் கன்றுகளை அழைத்துச் சென்று, விருந்தாவனத்தின் இடைச் சிறுவர்களாக, பால்ய லீலைகளில் களித்திருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:31 pm

பகாசுர வதம்

ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும்.

அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது.

உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்க வாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். மலர் மாரியுடன் தாரைகளும் தப்பட்டைகளும், சங்கங்களும் ஒலித்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:31 pm

அகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான்.

உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்டிருந்த அசுரன், தன் உதடுகளை தரையில் இருந்து ஆகாயம் வரை விரியும் படியாக வாயைப் பிளந்தான். அவனின் கீழ் உதடு தரையையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரு பெரிய மலைக் குகையைப் போலவும் பற்கள் மலை உச்சியைப் போலவும், நாக்கு பெரியதொரு ரத வீதியைப் போலவும் காணப்பட்டன. புயல்காற்றைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். கண்கள் நெருப்பைக் கக்கின. சிறுவர்கள், முதலில் அந்த அசுரனை பெரியதொரு சிலை என்று நினைத்தனர். நன்றாக கவனித்த போது, ஒரு பெரிய பாம்பு வாயைப் பிளந்து கொண்டு படு;த்திருக்கிறது என முடிவெடுத்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தங்களை எப்பொழுதும் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் கிருஷ்ணரின் நண்பர்கள் விளையாட்டாக அகாசுரன் என்னும் பாம்பு அரக்கனின் வாயில் பயமின்றி நுழைந்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அசுரனைக் கொன்று கோபாலச் சிறுவர்களையும் கன்றுகளையும் காப்பாற்று வதற்காக தானும் அசுரனின் வாயில் புகுந்தார். அசுரன், கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் நொறுக்க முயற்சித்த போது, கிருஷ்ணர் உடனே அரக்கனின் தொண்டைக்குள் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.அசுரன் மலை அளவிலான உடலைக் கொண்டிருந்த போதிலும் பெரிதாகி வரும் கிருஷ்னரின் உருவத்தால் அவனுக்கு மூச்சு அடைத்தது. கண்கள் பிதுங்கின. உயிர் மூச்சு எவ்வழியிலும் வெளி வரமுடியாமல் போனதால் அவனது தலை வெடித்து உயிர் மூச்சு வெளிப்பட்டது. அசுரன் இறந்து வீழ்ந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தமது திவ்யமான பார்வையை செலுத்தியதும் அவரது நண்பர்களும் கன்றுகளும் உணர்வு பெற்று, அரக்கனின் வாயில் இருந்து வெளி வந்தனர். தேவர்கள் பேருவகை பூத்து முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரின் மேல் மலர்மாரி பொழிந்து அவரை வணங்கினார்கள். வானுலக வாசிகள் மகிழ்ச்சியால் நடனமாடினார்கள். பிராமணர்கள் வேதம் ஓதினார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:32 pm

சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர்.

யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார்

அகாசுரன் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை தேவர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தவரான பிரம்மாவும் அந்த சம்பவத்தை பார்க்க வந்திருந் பிரம்மா, கிருஷ்ணரின் மகிமை மிக்க லீலைகளை மேலும் காணும் விருப்பத்துடன் கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கிருஷ்ணர் எவ்வளவு தேடியும் கன்றுகளைக் கண்டு பிடிக்க முடியவல்லை. அவர் நீண்ட தூரம் சென்றதால் அவரது நண்பாகளுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் முழுமுதற் கடவுளான படியால் சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடி இருந்ததை அறிந்தார். பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் கொண்டு போய் விட்டதால், தான் மட்டும் எப்படி விருந்தாவனம் செல்வது? தாய்மார்கள் கவலைப் படுவார்களே என கிருஷ்ணர் நினைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:33 pm

தன் நண்பர்களின் தாய்மார்களை திருப்திப் படுத்துவதற்காகவும் முழுமுதற் கடவுளின் சக்தியை பிரம்மா உணரும்படி செய்வதற்காகவும் கிருஷ்ணர், உடனடியாகத் தன்னை இடைச் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் தன்னை விரிவு படுத்திக்கொண்டார். அந்த சிறுவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை போன்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயங்கள் கிராம வாசிகளுக்கு தெரியாது. விருந்தாவனத்தை அடைந்த பிறகு, கன்றுகள் எல்லாம் தத்தம் கொட்டிலை அடைந்தன. சுpறுவர்களும் தத்தமது தாய்மார்களிடம் வீட்டிற்குச் சென்றார்கள். சிறுவர்கள் எல்லோரும் தாய், தந்தையருடன் வழக்கம் போலவே பழகினார்கள். அவர்களிடம் எந்தவித வேறுபாடுகளும் காண முடியவில்லை. ஒரு வருடமாக கிருஷ்ணர் இவ்வாறு கன்றுகளாகவும் ஆயர்குலச் சிறுவர்களாகவும் வியாபித்திருந்து மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று வந்தார்

பிரம்மாவின் ஒரு கணம், நமது கணக்குப்படி ஒரு வருடம். பிரம்மா தனது ஒரு கணத்தின் பின், தாம் சிறுவர்களையும், கன்றுகளையும் திருடியதால் ஏற்பட்ட குழப்பத்தை வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பி வந்தார். தான் முதலில் கண்ட படியே கன்றுகளும், சிறுவர்களும் கிருஷ்ணரோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உண்மையில் அவர், அவைகளை எடுத்துக் கொண்டு போய், தன் மந்திர சக்தியால் உறங்க வைத்திருந்தார். பிரம்மாவுக்கு இது பெரிய குழப்பமாக இருந்தது.

அங்கிருந்த பசுக்களும் கன்றுகளும் சிறுவர்களும் உண்மையானவை அல்ல என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காக கிருஷ்ணர், அவற்றை நீல நிற மேனியோடு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை நான்கு கைகளில் வைத்திருக்கும் விஷ்ணு வடிவங்களாக மாறுபடச் செய்தார். பிரம்மா, முழுமுதற்கடவுளின் அற்புதமான சக்தியைக் கண்டு வியந்தார். உடனேயே பிரம்மா தம் வாகனமான ஹம்ஸத்தில் இருந்து இறங்கி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனது பிரார்த்தனையை செலுத்தி விட்டு கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, பிரம்மலோகம் சென்றார்.

பிரம்மா சென்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், கன்றுகளும் சிறுவர்களும் மறைந்த அன்று எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தை உடன் மேற்கொண்டார். யமுனை நதிக்கரையில் உணவருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்களை, அவர் விட்டுச் சென்று சரியாக ஒரு வருடத்தின் பின்பு அங்கு வந்த போதிலும் அவர் ஒரு நிமிடத்தில் திரும்பி விட்டதாக கிருஷ்ணரது நண்பர்கள் நினைத்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

உணவை முடித்து விட்டு கிருஷ்ணரும் நண்பர்களும் கன்றுகளுடன் தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் அகாசுரன் பெரும் பாம்பின் வடிவில் இறந்து கிடந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடினார்கள். சிறுவர்கள், தாம் பயங்கரமான பாம்பின் வாயிலிருந்து தப்பியதை விருந்தாவன வாசிகள் அனைவருக்கும் கூறினார்கள். உண்மையில் அகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வு, பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் திருடியதால் ஒரு வருடத்திற்குப் பின்பே அனைவருக்கும் தெரிய வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 4:33 pm

தேனுகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்களான, ஸ்ரீ தாமா, ஸ{பலா, ஸ்தோக கிருஷ்ணா ஆகியோர் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கூறினார்கள்:அன்பான பலராமரே, நீர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். உமது கைகள் மிகுந்த பலமுடையவை. அன்பான கிருஷ்ணா, தொல்லை தரும் பல வகையான அரக்கர்களைக் கொல்வதில் நீர் வல்லவர். விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் எனும் ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டில் பல ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பெரிய அரக்கனான தேனுகாசுரன் அங்கு இருப்பதால் அங்கு போவது மிகவும் கடினம். அந்த அசுரனும் அவனது நண்பர்களும் கழுதையின் உருவத்தில் அங்கு இருக்கிறார்கள். அதனால் பழங்களை பறிக்க யாரும் அந்த மரங்களை அணுக முடியாது. உங்களைத் தவிர வேறுயாரும் பயமின்றி அங்கு செல்ல முடியாது. அந்த அசுரர்களைக் கொல்லக் கூடியவர்கள் உங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு மிருகங்கள் கூடப் போவதில்லை. பறவைகள் அங்கு உறங்குவதில்லை. அவையெல்லாம் அங்கிருந்து சென்று விட்டன. அந்தப் பழங்களை பறித்து உண்டு அவற்றின் சுவையை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாம் எல்லோரும் அங்கு சென்று பழங்களை உண்டு களிக்கலாம். என்று கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்கள் கூறினார்கள்.

தம் நெருங்கிய நண்பர்கள் புன்னகையுடன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததைக் கேட்ட பலராமரும் கிருஷ்ணரும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, எல்லோரும் காட்டை நோக்கிப் புறப்பட்டர்கள். தாளவனத்தில் நுளைந்ததும் பலராமர் யானையின் பலம் கொண்ட தம் கைகளால் மரங்களைப் பிடித்து உலுக்கினார். அவர் மரங்களை அசைத்த போது பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அங்கு கழுதையின் உருவத்தில் இருந்த தேனுகாசுரன், பழங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டு வெகு வேகமாக அங்கு வந்தான். அவன் அங்கு வந்த வேகத்தில் ஏற்பட்ட அதிர்வால் நிலம் முழுவதும் பூகம்பம் ஏற்பட்டது போல் நடுங்கி, மரங்களெல்லாம் ஆட்டம் கண்டன.

அசுரன் முதலில் பலராமரின் முன்பு வந்து அவரது மார்பில் தன் பின் கால்கள் படும்படியாக உதைத்தான். முதலில் பலராமர் எதுவும் கூறவில்லை. கோபம் கொண்ட அசுரன் மிகுந்த பலம் கொண்டு மேலும் வேகத்தோடு மோதினான். பலராமர் தன் ஒரு கையால் அவனின் பின் கால்களைப் பிடித்து, மூன்று முறை சுழற்றி, அக்கழுதையை ஈச்ச மர உச்சியின் மேல் எறிந்த போது அவன் உயிரிழந்தான். அவனின் பாரத்தைத் தாங்க முடியாமல் அந்த மரம் மற்ற மரங்களின் மேல் சரிந்து பல மரங்கள் கீழே விழுந்தன. கிரகங்களை எல்லாம் தம் கோடிக் கணக்கான தலைகளில் தாங்கி நிற்கும் பலசாலியான அனந்த சேஷன் எனப்படும் முழுமுதற் கடவுளாகிய பலராமர் இவ்வாறு பலப் பிரதர்சனம் செய்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இரண்டு நூல் சரடுகள் நெய்யப்பட்ட துணியைத் தாங்கி நிற்பது போல் பிரபஞ்சத் தோற்றம் முழுவதையும் அவர் தாங்கி நிற்கிறார்.

அசுரன் மரங்களில் வீசி எறியப்பட்ட பின்பு, தேனுகாசுரனின் நண்பர்கள் ஒன்று கூடி பலராமரையும் கிருஷ்ணரையும் மிகுந்த பலத்துடன் தாக்கினார்கள். ஆனால் பலராமரும் கிருஷ்ணரும் முன்பு போலவே கழுதைகளின் பின் கால்களைப் பிடித்து சுழற்றி ஈச்ச மரங்களின் மேல் எறிந்து அவற்றைக் கொன்றார்கள். கழுதைகளின் சடலங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தது வினோதமாக காட்சியளித்தது. பல நிறங்களிலான மேகங்கள் மரங்களில் தங்கியிருப்பது போல் தோன்றியது. இந்த மகத்தான சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தேவர்கள், மேல் நிலைக் கிரகங்களில் இருந்து கிருஷ்ணரின் மீதும் பலராமரின் மீதும் மலர் மாரி பொழிந்து துதி பாடினார்கள். துந்துபிகள் முழங்கின. தேனுகாசுரன் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மக்கள் தாளவனத்துக்கு வந்து பழங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். மிருகங்கள் பயமின்றி வந்து அங்கிருந்த நேர்த்தியான புல்லை மேய்ந்தன.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக