புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_m10ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:21 am

அன்புத் தோழி....

நீ நலமா?... அப்படியெனில் நானும் நலம்தான்...

சில நாட்களாய் ... என் இதயத்தின் கரைகளை அரித்துக் கொண்டிருக்கின்றன சில பதில் தெரியாத கேள்வி அலைகள்...

விடைக்குச் சொந்தக்காரி நீ என்பதால் உனக்கு இந்த மடல்.... சில நாட்களாக உன்னிடமிருந்து எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை... நான் அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லை உன்னிடமிருந்து.

ஒவ்வொரு முறையும் செல்பேசி ஒலிக்கும் போதும் அதில் உன் பெயரைத் தேடித்தேடிக் களைத்துப் போய் விட்டன விழிகள் இரண்டும். இனியும் நீ என்னை அழைப்பாய் என்கின்ற நம்பிக்கையும் நசிந்து போனது..

எனக்கென்னவோ நீ என்னைத் தவிர்ப்பதாய்ப் படுகிறது.... ஆனால் காரணம் மட்டும் இப்போதும் புரியவில்லை.... தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லையே... பின் ஏன் இப்படி??

தவறாகப் பேசினாலும் தவிர்ப்பது நட்பிற்கு அழகில்லையே.... பல சமயங்களில்.... நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம் தோழி... ஆனால் நட்பில் வேறுபாடு வரலாமா?

எண்ணங்கள் மாறுபடும்... உணர்வுகள் மாறுபடும்... ரசனைகள் மாறுபடும்...
என்றும் மாறாமல் இருப்பது அன்பும் நட்பும் மட்டும்தானே.....

உன் மெளனம் என்னைக் காயப்படுத்துகிறது தோழி... அதே சமயம் நிறைய யோசிக்கவும் வைக்கிறது....உன்னிடம் என் வலி, சோகம், சந்தோஷம், நட்பு, என் முறிந்த காதல் எல்லாம் பகிர்ந்து கொண்டேனே... எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை???

உலகில் கொடுமையான விஷயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?

1. நட்புக்குள் பொய்
2. காதலுக்குள் பிரிவு
3. எதற்காகத் தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.

இப்போது இந்த மூன்றாவது துன்பத்தை அனுபவிக்கிறேன் உன்னால். அதுவும் மூன்றாவது முறை.

முதல் முறை என்னை நீ தவிர்த்தாய், தவறு நம் புரிதலில்.

இரண்டாம் முறை என்னை நீ தவிர்த்தாய், தவறு உன் புரிதலில்.

மூன்றாம் முறையும் என்னை நீ தவிர்க்கிறாய், தவறு நம் நட்பில்.... இதை சரியாக்க வழி நம் பிரிதலில்... அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று வேண்டுதலில் கழிகின்றன என் நிம்மதியில்லா நிமிடங்கள்....

நான் உடைந்து போகும் போதெல்லாம் உன் நட்பான வார்த்தைகள்தான் என்னை ஒன்று சேர்க்கும்.... தவறவிட்ட கண்ணாடியாய் இப்போது உடைந்து கிடக்கிறேன்; நீயோ அதில் உன் முகம் கூடப் பார்க்காமல் திரும்பி நிற்கிறாய்.

என்னையே என்னால் நம்ப முடியவில்லையே.... உனக்குள் இப்படியும் ஒரு முகமா?? உன் கோபத்தைக்கூட ரசித்திருக்கிறேன், உனக்கே தெரியாமல் பல முறை... ஆனால் தெரிந்தே வெறுக்கிறேன் உனது தவிர்ப்பை...

என் ஒவ்வொரு கவிதைக்கும் நீயே முதல் வாசகி....

இனி யாரிடம் சென்று என் கவிதைகளைக் காண்பிப்பது? அப்படிக் காண்பித்தாலும் தான் என்னவாகிவிடப் போகிறது???

கவிதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது வாசிப்பின் வலி தாங்காமலேயே வாடிப்போகுமே என் கவிதையும்.

என் காதலியை விடவும் உயர்ந்தவள் நீதான் என்றேன் ஒரு நாள்...

"அதெப்படி?" என்றாய் அழகாய்ப் புருவங்கள் உயர்த்தி...

என் காதலி காதலை மட்டும்தான் கற்றுத்தந்தாள்... அது அவளது சுயநலத்திற்காக.... நானும் கற்றுக் கொண்டேன் அது என் சுயநலத்திற்காக... அது தவறில்லை... ஒவ்வொரு காதலுக்குள்ளும் சுயநலம் உண்டு.... அது காதலின் சிறப்பு.

ஆனால் நீ எனக்கு நட்பின் முழு அர்த்தத்தையும் புரிய வைத்தவள்.... எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி... சுயநலமின்றி.... சொல்லப்போனால் நீ என் நட்பைக்கூட எதிர்பார்க்காமல்... என் மீது நட்பு மழையைப் பொழிந்தவள்.... மழையை எப்படி சுயநலம் என்பது - அது பொது நலமல்லவா என்றேன்....

சாரல்களாய்ச் சிரித்தாய், நட்புத் துளிகள் என்னை நனைத்தன அன்று.

புரிந்து கொள்ளாமல் சிலர் புண்படுத்தும்போது மருந்தாய் இருந்தது உன் மயிலிறகு வார்த்தைகள் மட்டும்தான்....இப்போது உன் மெளனம்தான் என் நட்பென்னும் பூவைக் கிள்ளி எறியப் பார்க்கிறது....

ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என்கின்ற பயம் இல்லாமல் நான் பேசுவது தோழி உன்னிடம்தான்.

உன் அம்மாவிடம் நீ என்னை அறிமுகப்படுத்தியது உனக்கு நினைவிருக்கிறதா தோழி? வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்தவனை அதட்டிக் கூட்டிச் சென்றாய் உன் வீட்டிற்கு...



ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:22 am

"அம்மா, பாரும்மா என் ·பிரண்ட் வந்திருக்கான்" என்றதும் சமையலறையில் இருந்து வெளிப்பட்ட உன் அம்மா, "வாப்பா, எப்படிப்பா இருக்க.... வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே... இந்த அம்மாவைப் பார்க்க இஷ்டமில்லையாப்பா?" என்றார்கள்....

சட்டென்று விழியோரம் ஈரமாகிப்போனது எனக்கு....

ஆண்-பெண் நட்பென்றாலே சந்தேகப் பார்வை பார்க்கும் சமுதாயத்தில் உன் அம்மா எனக்கு தெய்வமாய்த் தெரிந்தார்கள்....

அடுத்த நாள் நீ வந்ததும் என்னிடம் கேட்டாய், "ஏண்டா நேத்து எங்க வீட்ல உன் கண்ணுல கண்ணீர் வந்துச்சு?"

"அடிப்பாவி பாத்துட்டியா?.. அது வந்து ... ஆனந்தக் கண்ணீர்" என்றேன் நான்...

"சந்தோஷத்தில் கூட உன் கண்கள் அழக்கூடாது" என்றாய்....

இப்போது கவலையில்கூட என் கண்கள் அழாமல்தான் இருக்கின்றன... ஆனால் என் இதயம்தான் அழுது அழுது சிவக்கிறது....... என்னை விட அதிகம் உன்னிடம் நட்பாய் இருந்தது என் இதயம்தானே....

பூங்காவில் நாம் அமர்ந்திருக்கும் அந்த வேலியோர மூங்கில் மரம், உனக்கு நினைவிருக்கிறதா?

"நான் அதிகம் விரும்புவது இசைதரும் புல்லாங்குழலின் தாயான இந்த மூங்கில் மரத்தைத்தான்" என்று அடிக்கடி சொல்வாய்...

இனி அதுவும் உன்னைப் போல் ஊமைப் புல்லாங்குழலைத்தான் தருமோ?

பிரிவின் வலியை உணர்த்துபவள் காதலி என்பது தெரியும்... தவிர்ப்பின் வலியை உணர்த்துபவள் தோழியோ?

எனக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினாய்.... மொழியுடன் நட்பானேன்.

எனக்குக் கவிதைகளை அறிமுகப்படுத்தினாய்... விருட்சமாக வளர ஆரம்பித்தேன்...

எனக்குத் தூய நட்பினை அறிமுகப்படுத்தினாய்... நண்பனாகத் தோள் தந்தேன்...

இப்போது தவிர்ப்பை அறிமுகப்படுத்துகிறாயே... நான் என்னவாகப் போகிறேன்?

என்னதான் என்னிடம் நீ பேச மறுத்தாலும்... ஒருவகையில் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தோழி....

எனக்கு வைராக்கியத்தின் வைர வலிமையையும் அறிமுகப்படுத்திவிட்டாயே! இனியும் நீ என்னிடம் பேசுவாய் என்கின்ற கடைசிச் சொட்டு நம்பிக்கையும், ஏழை வீட்டுச் சோற்றுப்பானையாய்க் காலியாகிப் போனது...ரிக்ஷா மிதிப்பவனின் இறுகிய கால்தசைகளாய் இறுகிப்போனது என் மெல்லிய இதயம்...

என்றாவது எங்காவது உன்னை நான் சந்திக்க நேர்ந்தால்.... ஊமையான என் புல்லாங்குழலிலும் இசை பிறக்கும்... அதுவும் எனக்குள் இருக்கும் உன்னைப் பற்றித்தான் பாடும்.... அந்த நட்பின் பாடலிலாவது உன் கல்நெஞ்சம் கரையுமா?

நீ முறித்த சிறகுகளுடன்....

நீ தவிர்த்தாலும் உன்

நட்பைத் தேடும்

உன்

தோழன்.
- நிலா ரசிகன்



ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 1:43 am

கண்ணீர் வந்தது சிவா,,,

இது நிலாரசிகனின் அனுபவமா இல்லை ஒவ்வொருகவிஞனின் அனுபவமா என்று வியக்கிறேன்,,,

எனக்கென்னவோ நானே என் கையால் எழுதியதை வாசித்தது போல் உணர்ந்தேன்,,,

உண்மையில் சொல்லவேண்டும் என்றால் பெண்களை மென்மையான இதயம் படைத்தவர்கள் என்று சொல்வதெல்லாம் பொய்தான்,,,

அர்த்தமற்ற ஐயங்கள்.... வீணான புறமுதுகுகாட்டுதல்...
தமக்கென வரும் போது தேடல்கள்,,, ஏன் தவிர்க்கிறோம் என்பது புரியாமலேயே தவிர்த்தல்,,,

எல்லாப்பெண்களும் ஒன்றுதானோ,,,?

மனம் நெகிழ்ந்துவிட்ட கலை....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 2:07 am

கடிதம் இங்கு தன் நட்பை கற்போடு சொன்னது.நட்பின் ஆழமும் நட்போடு பழகிய காலமும் ,இன்று பிரிவின் களமும் கண்டு,காரணம் தேடுகிறது.இந்த பிரிவு ஏன் என்று .அனுபவம் கலந்த உண்மை.
தந்தமைக்கு நன்றி தல.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:50 am

kalaimoon70 wrote:கடிதம் இங்கு தன் நட்பை கற்போடு சொன்னது.நட்பின் ஆழமும் நட்போடு பழகிய காலமும் ,இன்று பிரிவின் களமும் கண்டு,காரணம் தேடுகிறது.இந்த பிரிவு ஏன் என்று .அனுபவம் கலந்த உண்மை.
தந்தமைக்கு நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat Apr 17, 2010 3:45 am

வணக்கம் சகோதரரே !
உங்கள் கடிதம் படித்தேன் என் மனதையும் உருக்கி இதயத்தையும் கனக்கச் செய்தது உங்கள் அன்பு மடல்...நானும் ஒரு பெண் என்பதால் என் அநுபவத்தை வைத்துக்கொண்டு சில கருத்தை பகிரலாம் என்று நினைக்கிறேன்...தவறாக நினைக்காதீர்கள் ...உங்கள் வலிக்கு மருந்தாகலாம்...

எப்பவும் அவசரப்பட்டு பெண்களை தீர்ப்பிட வேண்டாம் சகோதரர்களே..
இறைவன் இவ்வுலகில் பெண்வடிவில் தான் வாழ்கிறார் என்று எனது தனிப்பட்ட அபிப்பிராயம்..கோபம் வேண்டாம் பொறுமை...இவ்வளவு உங்கள் மேல் நேசித்தவங்கள் உங்களைவிட்டு விலகக் காரணம் என்னவாக இருக்க முடியும்...அது காதல் ....உங்கள்மேல் ஏற்பட்டு இருக்கலாம்...இல்லை உங்களுக்கு வந்திடும் என்று பயப்படலாம்...அறிதலும் புரிதலும் இருக்கும் இடத்தில் நட்பு காதலாக மாறலாம்..அந்த காதல் மூலம் நட்பு உடையலாம்....நண்பனின் வாழ்க்கை பாழாகலாம்...தன்னால் எதுக்கு மற்றவங்கள் கஸ்டப்படனும் என்று பிரிவையே முடிவெடுத்து சிரிய வலியைக்கொடுத்துவிட்டு
பெரியவலியில் இருந்து உங்களை காப்பாற்றி இருக்கலாம்..

நண்பர்கள் காதலரகலாம் ஆனால் காதலர்கள் நண்பர்களாகவே முடியாது...அப்படி நடிக்கவும்கூடாது..உண்மையான அன்பில் அது முடியாது சகோதரர்...தண்டனையையும் தவிப்பையும் தனக்கே கொடுத்து வேதனைகளை விழிகளுக்குள் மறைத்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி விலகுவது ஒரு சிறந்த பெண்ணின் குணமாகும்....ஒருவேளை நீங்கள் பாதிப்படையக்கூடாது என்று அவங்க நினைத்து இருக்கலாம்..அவங்களைவிட உங்களை அவங்க நேசிச்சு இருக்கலாம்...மன்னியுங்கள் இப்படி நான் உங்களை சொல்வதற்கு...நீங்கள் தான் அவங்களை இன்னும் புரியவில்லை என்று எண்ணுகிறேன்...
ஒரு பெண் நினைத்தால் எதையும் அடைய முடியும்...!!!
அவள் அழிவை விரும்பாமல் அன்பை மறைத்து ஒதுங்கி இருக்கலாம்.. உங்கள் நலத்துக்காக...!!!ஆசை காட்டி மோசம் செய்வது அவ்வளவு கஸ்டம் இல்லை..அப்படி செய்யாமல் இருப்பது தான் ரொம்ப கஸ்டம்...இவ்வளவு வலிக்கிறதே உங்களுக்கு பாவம் எவ்வளவு வலிக்கும் அவங்களுக்கு...நீங்கள் வலியில் துடிப்பதை கண்டால் அவர்களின் மனத்தைரியம் உடையநேரிடும்...பிரிவென்பது அவ்வளவு இலகுவானதா...?
எல்லா ஆண்களும் அம்புலிமாமா கேட்டு அழும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்...சிலது வாழ்வில் நமக்கு கிடைக்காது..எவ்வளவு ஆசைப்பட்டாலும் தொடமுடியாதது...மௌனமாகவே அழுகின்ற அந்த மனசை ஏன் உங்களால் புரியமுடியவில்லை....???
ஒருவரை உண்மையாக நேசித்தால் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக பிரிவென்னும் ஆயுதத்தை கையில் எடுக்கத்தான் வேண்டும்...இது தான் வாழ்கை !

நீங்கள் அதிஸ்டசாலி சகோதரர் ! இப்படி உங்களை ஒருவர் நேசிக்கவும் அன்ப செய்யவும் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் !!! எனக்கு பொறாமையாக இருக்கிறது...

பொய்யான உறவுகளுக்கு மத்தியில் புரியாத உறவாக இருக்காதீர்கள்...!!!
எனது பார்வையில் உங்கள் இருவரின் பிரிவில் இருவருடைய வாழ்க்கையும் உள்ளது ...!
அடிமேல் அடி போட்டால் அம்மியும் நகரும்...இடைவெளிகளை குறைத்தால் இதயங்களின் சங்கமம் புரியும்..!!! நட்பு காதலாக வேண்டுமா ...வேண்டாமா...??? முடிவெடுத்து செயல்படுங்கள்...வெற்றியில் முடியும் என்றால் மட்டும்..!!!
ஆசைகளுக்கு ஓரம் கட்டிவிட்டு அறிவுக்கு இடம் கொடுத்து செயல்படுங்கள்...
அச்சத்தில் ஒதுங்கும் பெண்களை அவசரப்பட்டு பேசவே கூடாது..ஆண்டவன் அப்புறம் தண்டிப்பான்...!!!

தீயாக மாறி தீன்மை செய்யாது தீபமாக இருந்து வழிகாட்டனும்...
இவ்வுலகில் பெண் பிறருக்காக வாழவேண்டியவள்...
பெற்றவளும் தாய் தான்..!!!தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் அனைவரும் தாய் தான்...உங்கள் பார்வைக்கு அந்த பெண் தவிர்ப்பதால் தவறாக தெரிகிறாள்...என் பார்வைக்குஅவள் தெய்வமாக தெரிகிறாள்...!!!

இழந்துவிடாதீர்கள் அவங்கட உறவை !!அறிந்து தெரிந்து தொடருங்கள்...என்றும் அன்பில் நிலைத்து வாழ வாழ்த்தும் அன்புச்சகோதரி....

தவறாக நினைக்காதீர்கள் என் மனதில் தோன்றியது...உங்கள் கேள்விகளுக்கு சிலசமயம் உதவலாம் என்று தோன்றியது...படித்த எனக்கே வலிக்கிறது...அதை அநுபவிக்கும் உங்களை நினைத்து வருத்தம் இருக்கிறது...
இருவருக்காகவும் இறைவனின் அருளைவேண்டி நிற்கும் உள்ளம்...!!!
என்றும் அன்புடன்

மலைமகள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 9:58 am

kalaimoon70 wrote:கடிதம் இங்கு தன் நட்பை கற்போடு சொன்னது.நட்பின் ஆழமும் நட்போடு பழகிய காலமும் ,இன்று பிரிவின் களமும் கண்டு,காரணம் தேடுகிறது.இந்த பிரிவு ஏன் என்று .அனுபவம் கலந்த உண்மை.
தந்தமைக்கு நன்றி தல.

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 10:10 am

!
ஆசை காட்டி மோசம் செய்வது அவ்வளவு கஸ்டம்
இல்லை..அப்படி செய்யாமல் இருப்பது தான் ரொம்ப கஸ்டம்...இவ்வளவு வலிக்கிறதே
உங்களுக்கு பாவம் எவ்வளவு வலிக்கும் அவங்களுக்கு...நீங்கள் வலியில்
துடிப்பதை கண்டால் அவர்களின் மனத்தைரியம் உடையநேரிடும்...பிரிவென்பது
அவ்வளவு இலகுவானதா...?

எல்லா ஆண்களும்
அம்புலிமாமா கேட்டு அழும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்...சிலது வாழ்வில்
நமக்கு கிடைக்காது..எவ்வளவு ஆசைப்பட்டாலும் தொடமுடியாதது...மௌனமாகவே
அழுகின்ற அந்த மனசை ஏன் உங்களால் புரியமுடியவில்லை....???

ஒருவரை
உண்மையாக நேசித்தால் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக பிரிவென்னும்
ஆயுதத்தை கையில் எடுக்கத்தான் வேண்டும்...இது தான் வாழ்கை !

ஆசை காட்டி மோசம் செய்வது அவ்வளவு கஸ்டம்
இல்லை..அப்படி செய்யாமல் இருப்பது தான் ரொம்ப கஸ்டம்...இவ்வளவு வலிக்கிறதே
உங்களுக்கு பாவம் எவ்வளவு வலிக்கும் அவங்களுக்கு...நீங்கள் வலியில்
துடிப்பதை கண்டால் அவர்களின் மனத்தைரியம் உடையநேரிடும்...பிரிவென்பது
அவ்வளவு இலகுவானதா...?

எல்லா ஆண்களும்
அம்புலிமாமா கேட்டு அழும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்..
.சிலது வாழ்வில்
நமக்கு கிடைக்காது..எவ்வளவு ஆசைப்பட்டாலும் தொடமுடியாதது...மௌனமாகவே
அழுகின்ற அந்த மனசை ஏன் உங்களால் புரியமுடியவில்லை....???

ஒருவரை
உண்மையாக நேசித்தால் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக பிரிவென்னும்
ஆயுதத்தை கையில் எடுக்கத்தான் வேண்டும்...இது தான் வாழ்கை !



அருமையான விளக்கம் மலைமகள்.. பெண்களுக்காக வாதாடும் வக்கில் இருக்கும் போது இனி பெண்கள் சமுதாயம் நிம்மதியாக இருக்கும்.. (குறிப்பு.. மலைமகள் இந்தக் கடிதம் சிவா ரசித்ததுதான்.. அவர் எழுதியது அல்ல..) ஆனாலும் உங்கள் கடிதம் என் நெஞ்சைத் தொட்டது.. வாழ்த்துக்கள் பெண்களுக்காக பேசியதற்கு... இந்த ஆண்கள் எப்பொழுது இயல்பாக வாழ்வார்கள்??
ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Icon_question ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Icon_question ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! 440806



ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Aஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Aஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Tஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Hஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Iஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Rஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Aஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 17, 2010 11:39 am

கலை wrote:கண்ணீர் வந்தது சிவா,,,

இது நிலாரசிகனின் அனுபவமா இல்லை ஒவ்வொருகவிஞனின் அனுபவமா என்று வியக்கிறேன்,,,

எனக்கென்னவோ நானே என் கையால் எழுதியதை வாசித்தது போல் உணர்ந்தேன்,,,

உண்மையில் சொல்லவேண்டும் என்றால் பெண்களை மென்மையான இதயம் படைத்தவர்கள் என்று சொல்வதெல்லாம் பொய்தான்,,,

அர்த்தமற்ற ஐயங்கள்.... வீணான புறமுதுகுகாட்டுதல்...
தமக்கென வரும் போது தேடல்கள்,,, ஏன் தவிர்க்கிறோம் என்பது புரியாமலேயே தவிர்த்தல்,,,

எல்லாப்பெண்களும் ஒன்றுதானோ,,,?

மனம் நெகிழ்ந்துவிட்ட கலை....
எல்லாப் பெண்களும் ஒன்றில்லை அண்ணா அன்பு மலர்
நம் கை விரல்கள் அனைத்தும் சமமாகவா உள்ளது. இல்லையே

சிவா அண்ணாவின் கதை மனதை கலங்க வைத்தது.



ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 11:50 am

உங்கள் ஆறுதல்கள் நிலாகாட்டி குழந்தையைச்சிரிக்கச்செய்யும் தாயாக அமைந்துள்ளது மலை மகள்...

ஆண்களின் இடத்திலிருந்தும் சிந்திக்கத்தான் வேண்டுகோள் விடுக்கிறேன்...

பெண்கள் மனதை ஆழ்கடல் என்று சொல்வார்கள்... அது உண்மை தான் என்பதை என் அனுபவம் பலமுறை உணர்த்தியுள்ளது,,,,

உங்கள் ஆறுதல்களுக்கு நன்றி மலைமகள்...

- வஞ்சிக்கப்பட்ட ஆணினத்தின் சார்பாக...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக