புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
32 Posts - 51%
heezulia
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
74 Posts - 57%
heezulia
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மதிப்பு Poll_c10மதிப்பு Poll_m10மதிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்பு


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 10:51 am



உங்க சண்டையைத் தீர்க்கவே முடியாதா? ச்சே... இந்தச் சின்ன வயசுலேயே ஒருத்தர் மேல ஒருத்தர் பகையாடிக்கிட்டா நல்லாவா இருக்கு? ஏங்க... இவங்களைப் பாருங்க...'' புலம்பியதோடு கணவனையும் அழைத்தாள் ராஜம். வாசலுக்கு வந்த நாவரசர் தன் வாரிசுகளை மாறி மாறிப் பார்த்தார்.

""ஊருக்குப் போகும்போது கூட ஒற்றுமையா இருக்கமாட்டீங்களா? அங்கேயும் போய் உங்க மோதலைக் காட்டினா தாத்தாவும் பாட்டியும் எங்கள் வளர்ப்பைப் பற்றி என்ன நினைப்பாங்க...?'' சற்று கடுமையாகவே பேசினார் நாவரசர்.""இல்லேப்பா... ரகு நான் சேர்த்து வைத்த சேமிப்புப் பணத்தைச் செலவுக்குக் கேட்டான். அதனால் கோபமா பேசிட்டேன்...'' என்றாள் காயத்ரி கோபத்தோடு.

""ஏம்பா... அக்காவிடம் காசு கேட்க எனக்கு உரிமை இல்லையா...? தாத்தாவுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போகத்தான் பணம் கேட்டேன்...''""உன்னைப் பற்றித் தெரியாதா? பணத்தை வாங்கி ஏதாச்சும் வீண் செலவு செய்வே...'' காயத்ரியின் குரல் ஓங்கியது.""அப்ப நான் வீண் செலவாளியா... உன்னை...'' பொருமினான் ரகு.

""இங்க பாரு ரகு... உங்க மோதல் கருத்துகளோடுதான் இருக்கணுமே தவிர மனசுக்குள்ள இருக்கக் கூடாது. அது ஆரோக்கியமானதல்ல. இதற்கு மேலேயும் என் முன்னாலேயே பேதம் பேசினீங்க... அப்புறம்.... அவ்வளவுதான்!'' கண்களை உருட்டினார் நாவரசர்.""ஊர் உலகத்துல உடன்பிறப்புகள் எப்படி இருக்காங்க?'' பெருமூச்சுவிட்டாள் ராஜம்.

""சரிப்பா... அம்மா நாங்க கிளம்பறோம்...'' என்றபடி ரகுவும் காயத்ரியும் ஊருக்குக் கிளம்பினர். வீட்டிற்கு சற்று தூரத்திலேயே பேருந்து நிறுத்தம். பேசிக் கொள்ளாமலேயே ஒருவர் பின் ஒருவராக நடந்தனர். ரகுவும் காயத்ரியும் முறையே ஏழாம் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் தந்தை நாவரசர் அரசு ஊழியர். தன் பிள்ளைகள் சுதந்திரமான கருத்துகளோடு வளர வேண்டும் என்பது அவர் கொள்கை.

சில மாதங்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க வந்திருந்தனர் தாத்தாவும் பாட்டியும். குடும்பமே குதூகலமானது. வரும்போது இரண்டு உண்டியல்களை வாங்கி வந்திருந்தனர். அது ஆப்பிள் மண் உண்டியல்கள். ஆளுக்கு ஒன்றாக தந்த தாத்தா சில்லறைகளை சேர்த்து வைக்கச் சொன்னார். கிடைக்கும் நாணயங்களை அனாவசியமாக செலவு செய்யாமல் சேமிக்கும் பழக்கத்தை அறிவுறுத்தினார். அடுத்தமுறை நீங்கள் கிராமத்துக்கு வரும் போது சேர்ந்திருக்கும் தொகையின் ஒரு பங்கில் தனக்கு ஏதாவது வாங்கி வந்தால் மகிழ்வதாகவும் தெரிவித்துச் சென்றார்.

இருவரும் தத்தம் உண்டியல்களை கண்களைப் போல் பாதுகாத்து வந்தனர். கிடைக்கும் சில்லறைகளை செலவு செய்யாமல் அதை உண்டியல்களில் சேர்த்து வந்தனர். அவ்வப்போது உண்டியல்களை எடுத்து குலுக்கும் போது ஏற்படும் சத்தம் அலாதியான இன்பத்தைத் தந்தது. ஆனால் சில நாட்களிலேயே ரகுவிற்கு காசு சேர்த்து சலித்துவிட்டது.

செலவு செய்ய கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல் விட்டால் எப்படி? தனது உண்டியலை தலைகீழாக கவிழ்த்து "காம்பசின்' முனையால் சில்லறைகளை கீழே தள்ளுவான். நாணயங்கள் "சலசல'வென்ற சத்தத்தோடு கீழே விழும். எடுத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடுவான். நண்பர்களுக்கும் வாங்கித் தருவான். நண்பர்களால் ரகுவே ஈ மொய்க்கும் பண்டமானான்.

தன் பிள்ளைகளுக்கு சேமிப்பின் மீது ஆர்வம் வளரவேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு தெரியாமலேயே பெற்றோர்களும், அவர்கள் உண்டியலில் பணம் இட்டு வந்திருந்தனர். ஆனால் ருசி கண்ட பூனையான ரகுவால் அவனது உண்டியல் வறண்ட கிணறு போலானது. இந்த நிலையில் தன் தமக்கையிடம் பணம் கேட்டு நச்சரித்தான் ரகு.

அவள் மறுதலிக்க அவள் மேல் வெறுப்பு கொண்டான். இருவரும் எதிர் எதிராக கருத்துகளை வீசிக் கொண்டனர். ரகுவையும் காயத்ரியையும் பத்திரமாக தாத்தா வீட்டிற்குப் போய் வருமாறு சொன்ன அவர்களின் தந்தை நாவரசர் பணிக்குக் கிளம்பினார்.தன்னுடைய பேரப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் ரகுவின் தாத்தா.

பேருந்திலிருந்து இறங்கியவுடனேயே, ""அப்பப்பா... எவ்வளவு அழகான ஊர்... இல்ல ரகு'' என்று குதூகலித்தாள் காயத்ரி.ரகு முகத்தைத் திருப்பிக் கொண்டான். காயத்ரியின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல்.இதைக் கவனித்துக் கொண்டிருந்த தாத்தா அர்த்தமுடன் புன்னகைத்துக் கொண்டார்."

"சரி.. உங்க பைகளை கொடுங்க... நாம அப்படியே தோட்டத்து வழியாக போவோம் '' என்றார்.மூவரும் மண்பாதையில் நடந்தனர். "பதநீர்.... பதநீர்...' என்று சிறிது தூரத்தில் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு முண்டாசுக்காரன் ஒருவன் வந்தான். அவனை நிறுத்திய தாத்தா, ""எங்களுக்கும் ஒவ்வொரு குவளைக் கொடுப்பா..'' என்றார்.

இளம் பனை ஓலையால் கரண்டி போல கட்டி எல்லோருக்கும் வழங்கினான். ரகு குடித்துவிட்டு பெரிதாக ஏப்பமிட்டான்.பரமசிவம் தன் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினார். அவனும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போனான்."

"ஏன் தாத்தா... மூவரும் இவ்வளவு சாப்பிட்டோமே.... வெறும் ஐந்து ரூபாய்தானா?'' ஆச்சரியப்பட்டான் ரகு.சிறிது தூரத்தில் வெள்ளரிக்காய்கள் கூடையோடு வர, மேலும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைத் தந்து பல வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கி பைகளில் போட்டுக் கொண்டார்."

"ஹைய்யா.... விடுமுறையை உற்சாகமாக கொண்டாடலாம்..'' காயத்ரி கலகலவெனச் சிரித்தாள்.ஊர் எல்லையை நெருங்கிய போது "தட்'டெனப் பரமசிவத்தின் செருப்பு அறுந்து போனது.""இவ்வளவு பழைய செருப்பா.. இதை அப்படியே ஓரமாகப் போட்டுட்டு வாங்க தாத்தா... புதுசா வாங்கிக்கலாம்...'' அலுத்துக் கொண்டான் ரகு.

அவன் சொல்வதைப் பொருட்படுத்தாமல் அவர் அருகிலிருந்த செருப்பு தைப்பவரிடம் கொடுத்தார். வார் தைத்தும் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு அதைப் போட்டு கம்பீரமாக நடந்தார்.பாட்டி பார்வதி எல்லோரையும் உற்சாகமாக வரவேற்றாள். இருவரையும் அணைத்து உச்சி மோந்தாள்."

"எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?'' வாஞ்சையுடன் கேட்டாள்.ரகு தலைகுனிந்தான்.""உண்டியல் வாங்கித் தந்த உங்களுக்காக முதல் தொகையைச் செலவு செய்திருக்கிறேன். உங்க இரண்டு பேருக்கும் புத்தாடைகளை வாங்கி வந்திருக்கேன். நீங்கள் படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை வாங்கி வந்திருக்கேன்..'' என்றாள் காயத்ரி.காயத்ரியை தாத்தாவும் பாட்டியும் பாராட்டிக் கொண்டிருந்த நேரம்... பக்கத்து வீட்டு இருளப்பன் அவசரமாக ஓடிவந்தான்."

"ஐயா... ஐயா... என் மகளுக்கு திடீர்னு காய்ச்சல். வைத்தியரிடம் போக பணம் அவசரமாகத் தேவைப்படுது... நீங்கதான் கொடுத்து உதவணும்...'' என்றான்.""அடடா.. என்னிடம் இருந்த சிறு தொகையையும் பயிர் செலவுக்குக் கொடுத்திட்டேனே... எம்பா ரகு... உனக்கும் ஒரு உண்டியல் தந்தேனே... என்ன செஞ்சே...'' என்றார் பரமசிவம்.

அவன் தலையை தொங்கப் போட்டவாறே கைகளைப் பிசைந்தான். பேச்சு வராமல் எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தான். காயத்ரி குறுக்கிட்டாள்.""அவன் வீண் செலவு செய்திட்டான் தாத்தா. என் சேமிப்பில் ஒரு பங்குதான் உங்களுக்கு செலவு செய்தேன். மீதி ஒரு சிறு தொகையாக என்னிடம் உள்ளது. இந்தாருங்கள்...'' என்றவாறு தொகையைத் தந்தாள்."

"அருமை... அருமை... அவசரத்துக்கு உதவாத பணத்தாலும் ஆபத்துக்கு உதவாத நண்பனாலும் எந்தப் பயனுமில்லை என்பார்கள். காயத்ரி.. உன் சேமிப்புப் பணம் நல்ல காரியத்துக்கு உதவுகிறது'' என்றவாறு இருளப்பனிடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.ரகு கண்களை கசக்கிக் கொண்டு தேம்பினான்.""என்னை மன்னிச்சிடுங்க தாத்தா... எவ்வளவு அனாவசியமாக இதுவரை செலவு செய்திருக்கேன். சேமிப்போட அருமை இப்போதுதான் தெரியுது...'' என்றான்.""பணத்தோட மதிப்பு நாம அதைச் செலவு செய்யற வகையிலதாம்பா இருக்குது. வரும்போது சிறு நாணயங்களை கொடுத்து நாமும் சாப்பிட்டோமே நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல. அதை விற்கும் சாதாரண மக்களும் பயன்படுவார்கள். அவர்களிடம் சேரும் சில்லறை நாணயங்கள் தான் தொகையாகிறது.

அதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு ஜீவநாடி.ஆம்! பலூன் விற்பவர் முதற்கொண்டு மோர் வியாபாரி வரை அவர்கள் சேர்க்கும் சில்லறை நாணயங்களில் தான் அவர்கள் வாழ்க்கையே அடங்கியுள்ளது. மொத்தத்தில் பணத்தின் மதிப்பு ஒன்றுதான். ஒவ்வொரு நாணயமும் கண்ணின் மணி போல என்றால் சிக்கனமும் சேமிப்பும் நமக்கு இரண்டு கண்களாகும்.அது மட்டுமல்ல! ஒரு பொருளையோ, தின்பண்டங்களையோ முழுமையாக நுகர்வதும் அவசியம். அரைகுறையாக நுகர்ந்து வீசி எறிவது அனாவசியம் மாத்திரமல்ல குற்றமும் கூட.

விருந்து வீட்டில் வீணாய்ப் போட்ட பண்டங்களை தன் மக்களுக்கு சேகரித்த அன்னை தெரசாவின் வாழ்க்கையும், நண்பன் பரிசாய் கொடுத்த சிறு பெண் சிலையும் பேணிப் பாதுகாத்து பயன்படுத்திய நம் தேசப்பிதாவின் வாழ்க்கையும் தன்னை ஈன்றெடுத்த அன்னைக்கும் கூட சிக்கனத்தை எடுத்துரைத்த கர்ம வீரரின் வாழ்க்கையையும் நமக்கு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்...'' என்று பரமசிவம் பெருமூச்சு விட்டார்.""உண்மையை அனுபவமா புரிஞ்சிக்கிட்டேன். அக்கா நீயும் என்னை மன்னிச்சுடு...'' என்றான் ரகு. காயத்ரி ரகுவைப் பார்த்து புன்னகைத்தாள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 12:06 pm

அருமையான கதை... பகிர்வுக்கு நன்றி சபீர்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 12:27 pm

கலை wrote:அருமையான கதை... பகிர்வுக்கு நன்றி சபீர்...!

நன்றி சார் நன்றி சார்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:39 pm

கலை wrote:அருமையான கதை... பகிர்வுக்கு நன்றி சபீர்...!

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மதிப்பு Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 8:30 pm

நல்ல கதை நன்றி மகிழ்ச்சி



மதிப்பு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 7:15 pm

ஹனி wrote:நல்ல கதை நன்றி மகிழ்ச்சி
நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 22, 2010 9:21 pm

கதை அருமையா இருந்தது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 8:54 pm

நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 8:59 pm

அருமை நண்பா, அருமையான கதை,



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 9:01 pm

நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக