புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
1 Post - 20%
Manimegala
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
11 Posts - 4%
prajai
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிம்பம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:26 am

எஸ். திருமலைவடிவு

``சங்கீதா... ஏய் சங்கீதா... எங்கேடி போனே? பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிட்டு இருக்கு... சங்கீதா...'' என்று அவளின் அம்மா ஒருபுறம் கத்திக் கொண்டிருந்தாள். இடை யிடையே சங்கீதாவின் பச்சைக்கிளி கூண்டுக்குள் இருந்தபடி, ``சங்கீதா வா... சங்கீதா வா...'' என்று தன்பங்குக்கு சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.

இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் வீட்டின் பின்னால் கிணற்றடி அருகே ஒரு வாளித் தண்ணீரில் தனது பிம்பத்தைப் பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தாள் சங்கீதா.

கற்பகம் அவள் இருக்கும் இடத்துக்கு வந்து, ``வாடி... பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிட்டுது...'' என்று அழைத்துச் சென்றாள்.

ஒற்றையடிப் பாதையில் சங்கீதாவை கற்பகம் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். அப்போது மெதுவாய் சங்கீதா, ``அம்மா... நம்ம வீட்டுக்கு எப்பம்மா கண்ணாடி வரும்? வாங்கித் தாம்மா... அதுல நான் என்னைய பார்க்கணும்மா...'' என்றாள்.

``சரிம்மா... நிச்சயமா வாங்கித் தர்றேன். இப்போ பள்ளிக்கூடத்துக்கு நல்லபிள்ளையா அடம் பிடிக்காம போ...'' என்று அவளை சமாதானம் செய்தாள் அம்மா.

கற்பகத்தின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. அவள் என்ன செய்வாள்? பாவம்! நோய்வாய்ப்பட்டு வேலை பார்க்க இயலாத கணவர். சம்பாதிக்க முடியாதவர். நோய் வாய்ப்படுவதற்கு முன்பும் அவர் ஒரு இடத் திலும் உருப்படியாய் வேலை பார்த்தது கிடை யாது. கற்பகத்துக்குப் பணம் கொடுத்ததும் கிடையாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:26 am

கணவரின் கையை எதிர்பார்க்காமல் தானா கவே கூடை பின்னி ஏதோ அரைவயிற் றுக்கு சம்பாதித்து வந்தாள் கற்பகம். இப்படி அன்றாடப் பொழுது கழிவதே கடினம். இதில் சங்கீதாவின் ஆசையை எப்படி நிறை வேற்றுவது? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

சங்கீதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் வகுப்பில் படிக்கும் சக மாணவி விஜயா பணக்கார வீட்டுப்பெண். தன் பையில் எப் போதும் பவுடர், கண்ணாடி, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு என்று பலவகை அலங்காரப் பொருட்களை வைத்திருப்பாள். அவளது பெயரும் கூட நோட்டுகளில் பளபளவென்று மின்னும் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். யாருக்கும் ஒரு பொருள்கூட கொடுக்க மாட்டாள். இரக்கம் என்பது சிறிதும் கிடையாது.

மதிய உணவு இடைவேளையில் அவள் சாப்பிடுவாளோ இல்லையோ, கண்ணாடியும் கையுமா கத்தான் பள்ளிக்கூடத்தை வலம் வந்துகொண்டிருப்பாள்.

விஜயா கண்ணாடியில் பலமுறை தனது பிம்பத்தைப் பார்த்து ரசிக்கும்போதெல்லாம் சங்கீதா வுக்கும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் இருக்கும். விஜயாவிடம் வாய்விட்டுக் கேட்டாலும் நடக்காது என்று தெரிந்திருந்தும் ஒருநாள் மனதைத் திடப்படுத்திக்கொண்டு அவளிடம் கண்ணாடி கேட்டாள். ஆனால் விஜயாவோ முகத்தில் அறைந்தமாதிரி `தர முடியாது' என்று கூறி அவமானப்படுத்தி விட்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

ஒருநாள் வகுப்பறையில் மதிய உணவு இடைவேளையில் விஜயா தன் பையை வைத்துவிட்டு கேன்டீன் வரை சென்றிருந்தாள். வகுப்பறையில் இருந்து கேன்டீன் வரை போய்விட்டு வர குறைந்தது ஆறேழு நிமிடங்கள் ஆகும்.

விஜயா அன்றைய தினம் மதிய உணவுக்குத் தின்பண்டங்கள் வாங்க கேன்டீனுக்கு சென்றி ருந்தாள். அப்போதுதான் வகுப்பறையில் அது அவசர அவசரமாக அரங்கேறியது.

விஜயாவின் பையிலிருந்து நைசாக கண்ணாடியை எடுத்த சக தோழிகள், தங்கள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.

விஜயாவின் குணம் தெரிந்திருந்த சங் கீதா, கண்ணாடியில் தன்னைப் பார்க்க ஆசைப்பட்டபோதும் அதைக் கட்டுப்படுத் திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அப்போது இரு சிறுமிகள், ``ஏய்... ஏய்... எங்கிட்ட தா... ம்ஹூம்... தர முடியாது போ... அஸ்க்கு... புஸ்க்கு...'' என்று கண் ணாடியைப் பிடித்துக்கொண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

இறுதியில், `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது' என்கிற கதையாய் கண்ணாடி தரையில் விழுந்து துண்டு துண்டாய் உடைந்தது. அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சங்கீதா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து எழுந்து வந் தாள்.

``ஏண்டி இப்படி செஞ்சீங்க? அனுமதி இல் லாம அடுத்தவங்க பொருளை எடுத்தது தப்பில்லையா?'' என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே அவள் கன்னத்தில் `பளார்' என்று அறை விழுந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

அவளை அறைந்தது விஜயா. அவள் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. ஒரு கணம் அங்கு ஆழ்ந்த அமைதி. பின்னர் புயலாய்ச் சீறினாள் விஜயா. ``ஏய் சங்கீதா... ஏற்கனவே நான் உனக்கு கண்ணாடி தரமாட்டேன்னு சொல்லியும் நீ இவங்கள கூட்டு சேர்ந்துக்கிட்டு கண்ணாடியை உடைச்சிருக்கே...'' என்று திட்டித் தீர்த்தாள். பின்னர் மீண்டும் அங்கு `புயலுக்குப் பின் அமைதி' என்ற நிலை.

அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து விஜயா சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ரோட் டில் குறுக்கே ஓடிய நாய், அவள் சைக்கிளில் சிக்கியது. அதனால் விஜயா தடுமாறிக் கீழே விழுந்தாள். அவளது கையில் ரத்தக்கறை ஏற்பட்டது. அதை, தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சங்கீதா பார்த்தாள். ஓடோடி வந்து விஜயாவைத் தூக்கிவிட்டு, காயத்தைத் துடைத்து தனது கைக்குட்டையால் கட்டுப் போட்டாள்.

ஆனால் விஜயாவோ கண்ணாடி உடைந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவள் போட்ட கட்டைக் கழற்றி வீசிவிட்டுச் சென்றாள். சங்கீதா மனம் வாடிப் போனாள்.

மறுநாள் காலை சங்கீதாவும், விஜயாவும் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். விஜயா முகத்தை `உம்'மென்று வைத்திருந்தாள். சங்கீதா எப்போதும்போல் இயல்பாக இருந்தாள்.

சங்கீதாவிடம் விஜயா மோசமாக நடந்துகொண்டது, உண்மையில் கண்ணாடியை உடைத்த இரு சிறுமிகளின் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

இருவரும் மதிய இடைவேளையில் விஜயாவை சந்தித்து, ``விஜயா... எங்களை மன்னிச் சிடுடி... கண்ணாடியை உடைச்சது சங்கீதா இல்லை... நாங்கதான்! மத்தவங்களோட பொருளை எடுப்பது தப்புன்னு அவ எங்களுக்கு அட்வைஸ்கூட பண்ணாடி'' என்றனர்.

நடந்த உண்மையை உணர்ந்த விஜயா தன் தவறை எண்ணி மனம் வருந்தினாள். சங்கீதா விடம் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டாள். சங்கீதா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

மறுநாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த விஜயா கையில் ஓர் அழகிய கண்ணாடி. ``இதை நீ மறுக் காம வாங்கிக்கணும். நம்ம புதிய நட்புக்கு அடையாளமாய் இருக்கட்டும்...'' என்று வற் புறுத்திக்கொடுக்க, வாங்கிக் கொண்டாள் சங்கீதா.

இருவரின் அழகிய புன்னகைகளை காட்டியது கண்ணாடி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக