புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
68 Posts - 45%
heezulia
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
5 Posts - 3%
prajai
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
1 Post - 1%
kargan86
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
9 Posts - 4%
prajai
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
6 Posts - 3%
Jenila
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:01 pm

இன்றைக்கு முஸ்லிம் உம்மத்தில் ஆண்களுக்கு அனைத்து விதமான இஸ்லாமிய தகவல்கள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில் அந்த வாய்ப்பு சற்றுக் குறைவு தான். எனினும் இன்றைய தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்திருக்கின்ற இந்தநிலையில் பெண்கள் முயற்சி செய்தால், ஆண்கள் அளவுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்றைக்குப் பெண்களிடத்தில் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அந்த ஆவலில் அவர்கள் இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத் போன்வற்றை ஆர்வத்துடன் நிறைவேற்றுகின்ற அதேவேளை, உள்ளும் புறமும் எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்கள் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். இஸ்லாம் சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமல்ல, மாறாக, ஒருவன் அல்லது ஒருத்தியினுடைய உள் விவகாரங்களையும் மற்றும் வெளிப்படையாகத் தெரியக் கூடிய செயல்பாடுகளையும் தூய்மையுடன் பேண வேண்டும் என்று தான் விரும்புகின்றது. அந்த அடிப்படையில், நோக்குவோமானால் இன்றைக்குப் பெண்களிடையே தனித்துவமாக நிறைந்துள்ள அவதூறு, புறம் பேசுதல் போன்றவற்றை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டோமானால், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அறியாதவர்களாக தங்களது நாவுகளைப் பேண இயலாதவர்களாக ஆகி விடுகின்றார்கள்.

எனவே அவள் அல்லது அவன் தனது மார்க்கம் சொல்கின்ற, மனிதர்களிடையே ஏற்படுத்த விளைகின்ற ஒழுக்க மாண்புகளைப் பற்றியும், அதனூடாக ஏற்படுத்த விளைகின்ற சமூக மாற்றம் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது.

அதைப் போலவே, பெற்றோர்கள், உடன் பிறந்தார்கள், உறவினர்கள், அருகில் வசிக்கக் கூடிய அண்டை வீட்டார்கள், உடன் பயிலக் கூடியவர்கள், வேலை பார்க்கக் கூடியவர்கள், வேலையாட்கள், இன்னும் அறிமுகமில்லாத புதியவர்கள், நண்பர்கள் போன்றவர்களிடம் எவ்வாறு பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்களையும் இந்தத் தொடர் அலசிப் பார்க்கும்.

அவள் குழந்தையாக, வயது வந்தவளாக, மனைவியாக, தாயாக, மாமியாராக என்ற தொடர் மாற்றமாக அவள் வாழ்வில் ஏற்படுகின்ற, அவளது உறவுகளில் அவளுக்குரிய பங்கென்ன? சமூகத்திற்கு அவள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பது குறித்தும் இத் தொடர் அலசிப் பார்க்கும்.

சமீபத்தில் நான் படித்ததொரு கட்டுரையில், மேற்கத்திய நாடுகளில் வாழக் கூடிய முஸ்லிம் பெண்கள் தங்களது பர்தா முறையில் எவ்வளவு கண்டிப்பாக இருக்கின்றார்கள் என்பது பற்றி அறிய முடிந்தது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பயிலக் கூடிய ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, அவள் அணியக் கூடிய பர்தாவின் காரணமாக, பிரச்னையானது அவளது விரிவுரையாளர் மூலமாக வருகின்றது. அவள் பர்தாவைக் கழற்றவில்லை. மாறாக, அவளது அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கக் கூடிய சக மாணவர்கள் அவளது உறுதியைக் கண்டு அவளுக்கு உதவுகின்றார்கள். அவளது உரிமையைப் பாதுகாக்க கல்லூரி நிர்வாகத்துடன் போராடுகின்றார்கள். இவளது இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல கல்லூரியின் அனைத்துப் பிரிவு மாணவர்களிடமும் பரவுகின்றது. அத்துடன் அவளை உறுதியாகச் செயல்பட வைத்த அவளது கொள்கையும் கூட அங்கு அறிமுகமாகின்றது. ஆம்! அவளை இந்தளவு உறுதியுடன் செயல்பட வைத்த அவள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய இஸ்லாம், அந்த மாணவர்கள் மத்தியில் அறிமுகமாகின்றது. அவள் ஏன் கல்லூரி நிர்வாகத்துடன் ஒத்துழைத்துப் போகக் கூடாது என்ற கேள்விக்கு அவள் அளித்த பதில், மாணவர்களை இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்த வைக்கின்றது. இறுதியில் ஒருசில மாணவர்கள் கூட இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

அதே நேரத்தில், நம் சமூகத்தில் வாழக் கூடிய பர்தா அணிவதற்குத் தடையே இல்லாத சமூகத்தில் வாழக் கூடிய நாம், பர்தாவை எந்தளவு பேணிக் கொள்கின்றோம் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், இந்தத் தொடரில் வரக் கூடிய அனைத்து தகவல்களும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:02 pm

1. முஸ்லிம் பெண்மணியும் அவளது இறைவனும்

2. முஸ்லிம் பெண்மணி

3. முஸ்லிம் பெண்மணியும் அவளது பெற்றோர்களும்

4. முஸ்லிம் பெண்மணியும் அவளது கணவனும்

5. முஸ்லிம் பெண்மணியும் அவளது குழந்தைகளும்

6. முஸ்லிம் பெண்மணியும் அவளது ஆண்குழந்தைகளும் மற்றும் பெண்குழந்தைகளும்

7. முஸ்லிம் பெண்மணியும் அவளது உறவினர்களும்

8. முஸ்லிம் பெண்மணியும் அவளது அண்டை அயலார்களும்

9. முஸ்லிம் பெண்மணியும் அவளது சகோதரிகளும் மற்றும் உறவினர்களும்

10.முஸ்லிம் பெண்மணியும் அவளது சமூகமும்

மேலே உள்ள தலைப்புகளின் அடிப்படையில் நமது இந்தத் தொடர் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்ஷா அல்லாஹ்! இந்தப் பணி நிறைவாக முடிவடைய வல்ல அல்லாஹ் எங்களுக்கு அதற்கான வலிமையைத் தந்தருள பிரார்த்திக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

இதனடிப்படையில் எழக் கூடிய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

என்றும் இறைப் பணியில் உங்கள் சகோதரர்கள்.

1. முஸ்லிம் பெண்மணியும் அவளது இறைவனும்

இறைநம்பிக்கை கொண்டவள் எப்பொழுதும் உஷாராகவே இருப்பாள்

இறைநம்பிக்கையை அழுத்தமாகப் பெற்ற ஒரு பெண் எப்பொழுதும் தனது இறைநம்பிக்கை குறித்து அழுத்தமான நம்பிக்கையை, உறுதியான நம்பிக்கையைப் பெற்றிருப்பாள். இந்த உலகத்தில் எது நிகழ்ந்தாலும் சரி, இந்த மனித சமூகத்திற்கு எது நிகழ்ந்தாலும் சரி, அல்லது தனக்கே எது நிகழ்ந்தாலும் சரியே, இவை அனைத்தும் அல்லாஹ்வினுடைய விதிப்படி, அவனது கட்டளைப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்ற அல்லாஹ்வினுடைய விதியைப் பற்றி அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடியவளாக இருப்பாள்.

ஒருவனுக்கோ அல்லது ஒருத்திக்கோ என்ன நிகழ்ந்தாலும் சரியே, அதனைத் தவிர்ந்து கொள்ளக் கூடிய எந்த அம்சமும் அவனிடம் கிடையாது.

ஒரு மனிதன் தனக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு பாதை தான் இருக்கின்றது, அது தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய நேர்வழியாகும், அந்த நேர்வழியில் செல்லக் கூடிய ஒரு மனிதன் தனக்கு என்ன நேர்ந்தாலும், தனக்கு நேர்ந்து கொண்டிருக்கக் கூடியவை அனைத்தும் படைத்தவனான வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி, அவனது விதிப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்றும், தன்னை அவன் எப்பொழுதும் நேர்வழியின் பால் நிலைத்து வைத்திருக்க உதவும்படியும் அவன் அல்லது அவள் அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அன்னை ஹாஜரா அவர்களின் வாழ்வு உலகத்துப் பெண்மணிகளுக்கெல்லாம் ஒரு சிறந்ததொரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை, அவன் மீதே அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத மற்றும் தனது வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அவன் மீதே பொறுப்புச் சாட்டிய பாங்கு (தவக்கல்) இருக்கின்றதே, அதுவே நமக்கெல்லாம் ஒரு சிறந்த படிப்பினையாகும்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் அன்னை ஹாஜரா (அலை) அவர்களை ஜம்ஜம் கிணற்றின் மீது விட்டு விட்டுச் செல்லும் பொழுது, அந்த மக்கா என்னும் பொட்டல் வெளியில் எந்த மனித நடமாட்டமும் இல்லாதிருந்தது. இன்னும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தண்ணீர் கூட இல்லாமலிருந்தது. இன்னும் இஸ்மாயீல் (அலை) என்ற அந்த கைக்குழந்தையைத் தவிர ஹாஜரா (அலை) அவர்களுக்கு ஒரு துணை கூட இல்லாத நிலை தான் இருந்தது.

அப்பொழுது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் எந்தவித தடுமாற்றமும் இன்றி, ஒ! இப்றாஹீமே! எனது கணவரே! என்னையும் என்னுடைய குழந்தையையும் இந்த வனாந்தரத்தில் விட்டு விடச் சொன்னது உங்களது இறைவனது கட்டளையின் பிரகாரம் தானே! என்றார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள், ஆம்! என்று பதிலுரைத்தார்கள். அப்படியென்றால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற அடிப்படையில் ஹாஜரா (அலை) அவர்களது உணர்வின் வெளிப்பாடு அமைந்தது. இன்னும் அவ்வாறென்றால் அவன் எங்களைக் கைவிட மாட்டான் என்றும் அவர்கள் கூறினார்கள். (புகாரி, கிதாபுல் அன்பியா)

இங்கே அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், அவர்களது மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் இப்றாஹீம் (அலை) அவர்கள் ஆள் நடமாட்டமே இல்லாத, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காத அந்த வனாந்தரப் பூமியில் விட்டு விட்டு, மிக நீண்ட தூர தேசமான பாலஸ்தீனத்திற்குச் சென்று விடுகின்றார்கள் என்பதை விட மிகவும் இக்கட்டான நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு விடப் போவதில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஹாஜரா (அலை) அவர்கள் எடுத்த முடிவு என்ன? என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான், அவனது கட்டளை தான் இதுவென்றால், எங்களைப் பாதுகாப்பதற்கு அதிகம் தகுதியுடையவன் அவன் ஒருவன் மட்டுமே! என்ற நம்பிக்கையின் அடிப்படையை வெளிப்படுத்தினார்களே ஒழிய, தன்னுடைய கணவனுடைய திட்டத்திற்கு ஒத்துழைக்காத தன்மையையோ அல்லது இறைவனது கட்டளையை விமர்சிக்கின்ற பாங்கையோ அவர்கள் கைக்கொள்ளவில்லை. இன்னும் இறைவனது அந்தத் திட்டத்தை அறிந்து கைசேதமே என்று கலங்கி விடவும் இல்லை.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:04 pm

அவர்களது அந்த இறைநம்பிக்கையின் உறுதி தான், இன்றைக்கும் இஸ்லாமிய வரலாறும், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற சமூகமும் வருடம் தோறும் ஹஜ் மற்றும் உம்ரா என்ற கிரியைகளின் மூலமாக நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது. தவாப் என்றும் சயீ என்றும் (ஸஃபா மற்றும் மர்வா தொடர் ஓட்டங்கள்), ஜம் ஜம் தண்ணீர் என்றும் அந்த மக்காவின் கஃபாவின் அருகில் இவர்களின் ஈமானின் உறுதியை ஒவ்வொரு நொடியும் பறைசாட்டிக் கொண்டிருப்பதை நாம் அனுதினமும் பார்த்து வருகின்றோம்.

மேற்படி கிரியைகளின் ஊடாக ஒவ்வொரு முஸ்லிமினிடத்தில் அசைக்க முடியாத இறைநம்பிக்கை வெளிப்பட்டு, இஸ்லாத்தைப் பற்றியும், தனது மார்க்கக் கடமைகள் பற்றியும் சிந்தித்துணரக் கூடிய வாய்ப்பு உருவாகுவதோடு, தன்னுடைய ஒவ்வொரு அசைவும் இறைவனுடைய கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது என்பதையும், அவனது பொறுப்பின் கீழ் தான் உலகின் அனைத்து அலுவல்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற உணர்வையும் அதிகரிக்கச் செய்கின்றது.

இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்பது பற்றிய கேள்விக்கு இதனை விட மிக அழகான உதாரணத்தை நாம் காட்ட வேண்டிய தேவையில்லாத அளவுக்கு, ஹாஜரா (அலை) அவர்களது இறை நம்பிக்கை இன்றைக்கும் இன்னும் வரக் கூடிய முஸ்லிம் பெண்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.

அப்துல்லா இப்னு ஜைத் இப்னு அஸ்லம் என்பவர் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கின்றார் :

மதீனாவில் உமர் (ரலி) ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் இரவு ரோந்துப் பணியின் நிமித்தம் உமர் (ரலி) அவர்களுடன் மதீனா நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கலப்படைந்தவர்களாக ஒரு வீட்டுச் சுவரின் மதில் மீது சாய்ந்தார்கள். அது ஒரு நடு இரவுப் பகுதியாகவும் இருந்தது. அப்பொழுது ஒரு பெண் தன் மகளை நோக்கி, என்னருமை மகளே! எழுந்திரு! அந்தப் பாலுடன் சிறிது தண்ணீரையும் கலந்து வை என்றாள். அப்பொழுது அந்தப் பெண் கூறினாள், எனது தாயே! அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களது கட்டளை என்னவென்பதை நீங்கள் அறியவில்லையா? என்றாள். என்ன கட்டளை? என்று அந்தத் தாய் மீண்டும் தன் மகளைப் பார்த்துக் கேட்டாள். பாலில் தண்ணீரைக் கலக்கக் கூடாது என்று ஒருவர் மிகவும் சப்தமாக உமர் (ரலி) அவர்களது அறிவிப்பை அறிவித்து விட்டுச் சென்றார் என்று கூறினாள். எழுந்திரு மகளே! நீ பாலில் தண்ணீரைக் கலப்பதை உன்னுடைய இடத்தில் இருந்தா உமர் (ரலி) பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றார்? என்று அந்தத் தாய் கூறவும், பொதுவாழ்வில் அல்லாஹ்வுக்கு பயப்பட இயலாதவளாகவும், தனிப்பட்ட வாழ்வில் உமர் (ரலி) அவர்களுக்குப் பயப்பட இயலாதவளாகவும் நான் ஆகி விட முடியாது என்று கூறினாள். அதாவது, உமர் (ரலி) அவர்கள் பார்க்கா விட்டாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று அந்தப் பெண் கூறினாள்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ஓ அஸ்லம்! அந்தப் பெண் யார் என்று பார்! அவள் யாருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றாள் என்பதையும் பார்! என்றும், அவளுக்குக் கணவன் இருக்கின்றானா? என்பதையும் அறிந்து வா என்றும் கூறினார்கள். எனவே, நான் அவளது இடத்திற்குச் சென்று பார்த்த போது அவள் மணமாகாத இளம் பெண் என்பதையும், தாயுக்கும் மகளுக்கும் இடையே நடந்த உரையாடல் தான் அது என்பதையும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தேன்.

உமர் (ரலி) அவர்கள் தனது மகன்களை அழைத்து, உங்களில் யாராவது ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேட்டு விட்டு, உங்களது விருப்பத்தைச் சொன்னால், நான் மண முடித்து வைக்க ஆசைப்படுகின்றேன் என்று கூறினார்கள். நான் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாக இருந்தால் இந்த இளம் பெண்ணைத் தான் மணமுடிக்க விரும்பி இருப்பேன் என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:05 pm

உமர் (ரலி) மகன் அப்துல்லா வந்தார், எனக்கு மனைவி இருக்கின்றாள் என்று கூறினார். பின் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் எனக்கு மனைவி இருக்கின்றாள் என்று கூறினார். பின் ஆஸிம் வந்தார். எனக்குத் தான் மனைவி கிடையாது என்று கூறியவுடன், தன் மகன் ஆஸிம் அவர்களுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். அந்தப் பெண் ஒருபெண் குழந்தையை ஈன்றாள். அந்தப் பெண் குழந்தை பெற்ற வீரத் திருமகன் தான், பின்னாளில் இரண்டாவது உமர் என்று போற்றப்பட்ட உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே உள்ள வரலாற்றுச் சம்பவம் அந்தக் காலத்துப் பெண்களின் இதயத்தினுள் இஸ்லாம் விதைத்து வைத்திருந்த இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றது. அவள் தனது வாழ்க்கையை மறைவிலும், வெளிப்படையாகவும் இறைவனுக்கு பயந்த தன்மையை வெளிப்படுத்தினாள். அவள் தன்னுடைய இறைவன் தன்னை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வைப் பெற்றிருந்தாள். இன்னும் அவன் மறைவிலும் இன்னும் வெளிப்படையாகவும் செய்யக் கூடிய அனைத்தையும் சூழ்ந்தறியக் கூடியவனாகவும் இருக்கின்றான் என்றும் அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள். இது தான் உண்மையான இறைவிசுவாசமாகும், இது தான் உண்மையான இறைவிசுவாசத்தின் வெளிப்பாடாகும், இது தான் அவளை இஹ்ஸான் என்றழைக்கக் கூடிய உயர் நிலைக்கு, உயர் தகுதிக்கு உயர்த்திய இறை விசுவாசமாகும். அவளது அந்த இறைவிசுவாசத்திற்கு இறைவன் அளித்த உடனடி அருட்கொடையே மிகச் சிறந்த மணவாழ்க்கையாகும். இன்றைக்கு நேர்வழிகாட்டப்பட்ட நான்கு கலீபாக்களில், ஐந்தாவது கலீபா ஒருவர் உண்டு என்று உலமாப் பெருமக்களால் ஒருமித்து கருத்துக் கூறப்பட்ட உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களைத் தந்ததும் இந்த உன்னத திருமண வாழ்வின் வழியாகத் தான் என்றால், இதனை விட மிகச் சிறந்த அருட்கொடை வேறென்ன வேண்டும்!

இறைநம்பிக்கை மிக்க ஒரு முஸ்லிம் பெண்மணியின் இறைக்கோட்பாடு (அகீதா) என்பது, அறியாமையினால் விளைந்த பாவக் கறை அல்லது பித்அத்கள் என்று கூறக் கூடிய புதினங்களினால் கறை படிந்த இறைநம்பிக்கையாகி விடக் கூடாது. அவளது இறைக் கோட்பாடு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற கொள்கையின் பால் அமைந்ததாக இருக்க வேண்டும், அவன்தான் அனைத்துக் காரியங்களுக்கு மூலமாக இருக்கின்றான், அவன் தான் இந்த உலகத்தின் அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றான் இன்னும் அனைத்தும் அவன் பக்கமே மீள வேண்டியதிருக்கின்றது, என்ற கொள்கையில் உறுதி உடையவளாக, அதனையே தன்னுடைய மார்க்கக் கோட்பாடாகக் கொண்டவளாக அவள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

''எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)"" என்று கேட்பீராக. அதற்கவர்கள் ''(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)"" என்று கூறுவார்கள். (''உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?"" என்று கேட்பீராக. (23:88-89)

இது தான் உண்மையான இறைக்கோட்பாடு, இது தான் அவளது இறைநம்பிக்கை அதிகரிக்கச் செய்யக் கூடியதும், அவளது மனதில் உறுதியை ஏற்படுத்தக் கூடியதும், இன்னும் மன முதிர்ச்சியை அளிக்கக் கூடியதுமாகும், இன்னும் அவள் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலக வாழ்க்கையானது உண்மையிலேயே சோதனைகள் நிறைந்த பரீட்சைக் களம் என்பதையும், இதன் முடிவுகள் யாவும் நிச்சயமாக நிகழவிருக்கக் கூடிய அந்த மறுமை நாளில் வெளிப்பட இருக்கின்றது என்பது பற்றியும் அவள் உறுதியான திடமான நம்பிக்கை கொண்டிருப்பாள்.

''அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை"" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். (45:26)

''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"" (என்றும் இறைவன் கேட்பான்.) 23:115)

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:1-2)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:07 pm

அன்றைய தினம் மனிதன் அவன் செய்த செயல்களின் விளைவுகளைப் பெற்றுக் கொள்தவற்காக அழைத்து வரப்படுவான். அவனது செயல்வினைகள் நன்மையானவையாக இருந்தால், அது அவனுக்கு நல்லதாகும். அவனது செயல்வினைகள் தீமைகள் நிறைந்ததாக இருக்குமென்றால், அது அவனுக்குக் கெட்டதாகும். அங்கு யாருக்கும் அணுவளவும் அநீதிமிழைக்கப்பட மாட்டாது.

அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (40:17)

அவன் செய்த அனைத்து வினைகளும் கொண்டு வரப்பட்டு, மிக மிக நீதமாக எடை போடப்படும், அது அவனுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ கூட இருக்காது.

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:7-8)

அன்றைய தினம் வல்லோனாகிய ரப்பாகிய அல்லாஹ்வின் பார்வையிலிருந்து எதுவும் மறைந்து விடாது, ஒரு கடுகளவு எடை கொண்ட, மிக அற்பமான அளவு கூட அவன் பார்வையிலிருந்து மறைந்து விடாது.

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (21:47)

நிச்சயமாக மேலே உள்ள வசனத்தின் பொருளை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் என்றால், அந்த வரவிருக்கக் கூடிய நாளின் கொடுமை பற்றி நீங்கள் சிந்தித்து ரப்பாகிய அல்லாஹ்வின் அடிபணிந்து வாழக் கூடிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள், இதுவரை செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொள்வீர்கள், இன்னும் அவனை புகழ்ந்து துதித்து, அவனது நேர்வழியை பெற்றுக் கொள்ள உதவுமாறு அவனிடமே நீங்கள் மன்றாடக் கூடியவர்களாகவும், இந்த உலக வாழ்க்கையை மறுமைக்கான தேர்வுக் களமாகவும் நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.

அவள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவாள்

உண்மையிலேயே இறைநம்பிக்கை கொண்ட பெண், தனது வணக்க வழிபாடுகளை முற்றிலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அற்பணித்து வாழக் கூடியவளாகவும், இன்னும் மனித இனத்தில் ஆண், பெண் மீது கடமையாக்கப்பட்டவைகளை ஏற்று வழுவாது பின்பற்றி வாழக் கூடிய முஸ்லிமாகவும் அவள் இருப்பாள். ஆகவே இத்தகைய பெண்மணி இஸ்லாம் கடமையாக்கி இருக்கின்றவைகளை மிகச் சரியாகப் பேணி நடப்பதோடு, அதில் எதனையும் பொடுபோக்கா விட்டு விடாது அல்லது ஏனோ தானோ என்றோ அல்லது கவனக்குறைவாகவோ அவள் இருந்து விட மாட்டாள்.

அவள் தினமும் ஐவேளை தொழக கூடியவள்

இறைவன் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நேரங்குறித்துக் கடமையாக்கி இருக்கின்ற தொழுகைகளைத் முறையாகத் தொழுவதோடு, தாயாக, மனைவியாக இருந்து அவள் ஆற்றுகின்ற எந்தக் கடமையும் இந்தக் கடமையை நிறைவேற்றுவதனின்றும் அவளைத் தடுத்து விடாது. இஸ்லாத்தின் தொழுகை என்பது ஒரு கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண் போன்றது - எவரொருவர் தொழுகையை முறையாகப் பேணி தொழுகின்றாரோ அவர் தனது மார்க்கத்தைப் பேணியவராவார் - எவரொருவர் தொழுகையை முறையாகப் பேணித் தொழுகின்றாரோ அவர் தனது ஈமானை இறைநம்பிக்கையைப் பேணியவராவார் இன்னும் யாரொருவர் தொழுகையை விட்டு விட்டாரோ அவர் தனது ஈமானை இறைநம்பிக்கையை அழித்து விட்டவராவார். இறைவன் விதியாக்கியுள்ள கடமைகளிலேயே தொழுகை தலையாயது, அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவித்திருக்கின்ற ஹதீஸ் வாயிலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன் : இறைவன் விரும்பக் கூடிய செயல்களில் மிகச் சிறந்தது எது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவது என்றார்கள், மேலும் நான் கேட்டேன், அதற்கு அடுத்தது என்ன? அவர்கள் (ஸல்) கூறினார்கள், பெற்றோர்களை கருணையோடும் இன்னும் மரியாதையோடும் நடத்துவது என்றார்கள், மீண்டும் நான், அடுத்தது என்ன? என்று கேட்டேன், அதற்கு (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக ஜிஹாத் (இறைவழியில்) போராடுவது என்றார்கள்.

தொழுகை என்பது அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையில் உள்ள தொடர்பாகும். அந்தத் தொழுகை தான் ஒரு முஸ்லிமிற்கு பலத்தையம், நேர்மையையும், கருணையையும் இன்னும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருகின்றதோடு, அவனது பாவக் கறைகளையும் போக்கி விடக் கூடியதாக இருக்கின்றது. அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், உங்களது வீட்டிற்கு அருகில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்க, அதில் நீங்கள் தினமும் ஐவேளை குளித்து எழுந்தீர்கள் என்றால், உங்களது மேனியில் ஏதாவது அழுக்கின் தடயங்கள் இருக்குமா? அப்பொழுது மக்கள் கூறினார்கள், அழுக்கின் எந்தத் தடையமும் இருக்காது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது போலத் தான் ஐவேளைத் தொழுகையும், அந்தத் தொழுகை மூலம் இறைவன் உங்களது பாவக் கறைகளைப் போக்கி விடுகின்றான். (ஸர்ஹ் அல் சுன்னா 2ஃ175)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:08 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

உங்களது வீட்டின் வாசலுக்கருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்க, அதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் ஐவேளைத் தொழுகையும்.

தொழுகை என்பது இறைவன் தன் அடியார்கள் மீது கொண்ட கருணையின் வெளிப்பாடாகும். அந்தக் கருணையின் நிழலை ஒரு நாளின் ஐவேளைகளின் போது இறைவனிடம் தேடுகின்றார்கள், இன்னும் தன்னுடைய இறைவனைப் போற்றித் துதிக்கின்றார்கள், அவனது பேருதவியை வேண்டியும், அவனது கருணையை வேண்டியும், அவனது வழிகாட்டலையும் இன்னும் அவனது பாவ மன்னிப்பை வேண்டியவர்களாகவும் அவன் முன் நிற்கின்றார்கள். குறிப்பாக தொழுகை என்பது அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு ஒரு வித சுத்திகரிப்பாகும், அதனை நிறைவேற்றுகின்ற ஆண்களும் பெண்களும் தங்களது பாவக் கறைகளினின்றும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நரக நெருப்பை விட்டும், மறுமைத் தண்டனைகளை விட்டும் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், உ@ச் செய்யுங்கள், தொழுகையின் கவனமாக இருங்கள், மிகச் சரியாக ருகூவுச் செய்யுங்கள், நீங்கள் மிகப் பெரும் பாவங்களைச் செய்யாதவரை தொழுகையானது தொழுகைக்கு முன் செய்த உங்களது பாவங்களைப் போக்கக் கூடிய பரிகாரமாக இருக்கின்றது. இது தொழுகையின் இறுதி நேரம் வரைக்கும் உள்ளதாகும். (முஸ்லிம் 3ஃ112)

இதைப் போல எண்ணற்ற நபிமொழிகள் தொழுகையின் முக்கியத்துவத்தைக் குறித்தும், அது வழங்கும் அருட்கொடைகள் பற்றியும் இன்னும் அதனை முறையாக நிறைவேற்றுகின்ற ஆண்களும் பெண்களும் மறுமைப் பலன்களை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது குறித்தும் விளக்கி, தொழுகையின் பால் மக்களை ஆர்வங்கொள்ளச் செய்கின்றது. நீங்கள் தொழுகையின் பால் நிற்கின்ற ஒவ்வொரு வேளையும் இறைவனின் முன் தாழ்மையுணர்வுடன் நிற்கின்ற நிலையில், அதன் காரணமாக பாவமன்னிப்பையும் பெற்றுக் கொள்கின்றீர்கள்.

அவள் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்குச் செல்லலாம்

இஸ்லாம் ஜும்ஆ என்ற கூட்டாக நிறைவேற்றக் கூடிய கடமையான தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்குச் செல்வதற்குப் பெண்களை அனுமதிக்கின்ற அதேவேளையில், செல்லக் கூடிய பெண்கள் பிறரது பார்வைகள் தன் மீது விழும் அளவுக்கு உடையழங்காரங்களைச் செய்து கொண்டு செல்வது கூடாது. தனது வீட்டை விட்டு வெளியே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் நின்று தொழுத முதல் பெண்மணியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலை பஜ்ர் நேரத் தொழுகையை நிறைவேற்றும் பொழுது, நம்பிக்கை கொண்ட பெண்களாகிய நாங்களும் எங்களது ஆடைகளை முழுக்கப் போர்த்தியவர்களாக அவர்களுக்குப் பின் நின்று தொழக் கூடியவர்களாக இருந்தோம். பின் எங்கள் வீடுகளை நோக்கி நாங்கள் செல்லும் பொழுது, எங்களை யாரும் ஆடையாளம் கண்டு கொள்ள முடியாது, மேலும் :

இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பஜ்ர் காலைத் தொழுகையை தங்களது மேலாடைகளை முழுக்கப் போர்த்தியவர்களாக இருக்கும் நிலையில் நிறைவேற்றுவார்கள், தொழுகையை நிறைவேற்றி விட்டு தங்களது இல்லங்களுக்குத் திரும்பக் கூடிய நிலையில், இருளின் காரணமாக யாரும் அவர்களை (இந்தப் பெண் இன்னாரென) அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

தொழுகையின் பொழுது, குழந்தையின் அழுகுரல் கேட்டு விட்டால், அந்தக் குழந்தையின் தாயின் மனது பரிதவித்து விடக் கூடாது என்பதற்காக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது தொழுகையை சுருக்கித் தொழுவார்கள்.

தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையை ஆரம்பித்தேன், ஆனால் குழந்தையின் அழுகுரலைக் கேட்டதன் காரணமாக என்னுடைய தொழுகையைச் சுருக்கிக் கொண்டேன், ஏனெனில், அந்தக் குழந்தையினுடைய அழுகுரலானது அதன் தாய்க்கு மன அழுத்தம் (வேதனையைக்) கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.

இறைவன் பெண்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஐவேளைத் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றுவதனின்றும் அவர்களுக்கு விலக்கு அளித்துள்ளான், அவ்வாறில்லை எனில், அந்தக் கடமையை நிறைவேற்றுவது என்பது அவர்களுக்கு மிகப் பாரமானதாக இருந்திருக்கும். அதனை அவர்கள் நிறைவேற்றச் சக்தி பெற்றவர்களாக இருந்திக்க மாட்டார்கள். இன்றைக்கு ஆண்களில் அதிகமானோர் கூட்டாக நிறைவேற்றக் கூடிய இந்தக் கடமையைச் சரிவர நிறைவேற்ற இயலாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள், கூட்டாக நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் எங்கிருந்தாலும் வேலையில் இருந்தாலும், அல்லது வீட்டிலிருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வந்து அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றிருக்கின்ற நிலையில், அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி, இறுதியில் தொழுகையையே விட்டு விடக் கூடியவர்களாக இருந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

ஆனால் பெண்களுக்கு அவ்வாறல்ல. இறைவன் பெண்களை வீட்டிலேயே தொழுது கொள்வதே சிறப்பு என்று கூறி அவர்களுக்கு சிறப்பான விதிவிலக்கு அளித்துள்ளான். ஏனெனில் அவர்கள் தங்களது கணவன், பிள்ளைகள் மற்றும் பெற்றோர், மாமனார், மாமியார் என அவளையே நம்பி இருக்கும் இவர்களுக்குச் செய்ய பணிவிடைகள் அதன் காரணமாக ஏற்படுகின்ற வேலைப்பளு இவற்றை எல்லாம் விட்டு விட்டு, ஐந்து வேளையும் பள்ளிக்கு வந்து தான் தொழ வேண்டும் என்ற நிலை இருக்கும் என்றால், தொழுகை என்பதே அவளுக்கு மிகப் பாரமானதாக, நிறைவேற்ற இயலாத ஒன்றாக மாறி இருக்கும்.

எனவே தான் இறைவன் ஆண்களுக்கு மட்டும் கண்டிப்பாக கடமையாக்கிய ஐந்து வேளைக் கூட்டுத் தொழுகையை, பெண்களுக்கு வீட்டிலேயே தொழுது கொள்ளும் அளவுக்கு எளிதாக்கித் தந்துள்ளான் என்பது அவன் அனைத்து ஞானங்களையும் பெற்றுள்ளான் என்பதன் உள் பொருளை நமக்கு அறிவுறுத்துவதாக உள்ளது. ஒரு பெண் பள்ளிக்கு வந்து தொழுவதைக் காட்டிலும் வீட்டில் தொழுது கொள்வது சிறப்புடையதாகும், ஆனால் அல்லாஹ் அவள் தன்னுடைய தொழுகையை பள்ளியில் அமைத்துக் கொள்வதா? அல்லது வீட்டில் தொழுது கொள்வதா? என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள அவளுக்கு முழுச் சுதந்திரத்தை அளித்துள்ளான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, ஒரு மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று பள்ளியில் தொழுது கொள்ள விரும்பி தன்னுடைய கணவனிடம் அனுமதி கோரினாள் என்றால், அதற்கு கணவன் மறுப்புச் சொல்ல இயலாது.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:08 pm

உங்கள் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதற்குத் தடை விதிக்காதீர்கள், இருந்த போதிலும் வீடே அவர்களுக்குச் சிறப்பாகும். (அதாவது வீட்டில் தொழுது கொள்வதே சிறந்ததாகும்). (அபூதாவூது)

உங்களின் மனைவிமார்கள் பள்ளிக்குச் சென்று தொழ விரும்பி அனுமதி கோரினால், அவர்களைத் தடுக்க வேண்டாம். (பத்ஹ{ல் பாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்களது அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனிதராக நீங்கள் இருப்பீர்களென்றால், உங்களது நலன்களுக்கு எதிராகவே இருப்பினும் உங்களது மனைவிமார்கள் பள்ளிக்குச் சென்று தொழ விரும்பி அனுமதி கோரினால், அதனை நீங்கள் மறுக்கலாகாது. இதனை அப்துல்லா இப்னு உமர் அவர்களின் அறிவிப்பு உறுதி செய்வதாக இருக்கின்றது, அவர் கூறுகின்றார்,

உமர் (ரலி) அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் பஜ்ர் மற்றும் இஷாத் தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாத்துடன் தொழக் கூடியவராக இருந்தார். அவரிடம் கேட்கப்பட்டது, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து (பள்ளிக்குச் சென்று) வருவதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதையும், இன்னும் அவர் அனைத்தையும் கவனமாகப் பார்க்கக் கூடியவராகவும் இருந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் நீங்கள் எவ்வாறு வெளியே சென்று வருகின்றீர்கள்? என்று கேட்ட பொழுது, அவர் கூறினார், அவ்வாறு நான் செல்ல முடியாமல் என்னைத் தடுத்தது என்னவோ? என்று கூறி விட்டு அவர் கூறினார், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பெண் அடியார்களை பள்ளிக்குச் செல்வதனின்றும் நீங்கள் தடுக்க வேண்டாம் என்றார்கள். (பத்ஹ{ல் பாரி 2ஃ382)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறிவுரைப்படி பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழ அனுமதி உண்டு. இன்னும் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுப்பதனின்றும் ஆண்களைத் தடுத்தும் உள்ளார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வருவதும் போவதுமாக இருந்த காட்சியைக் காண முடிந்திருக்கின்றது. இன்னும் பிற்காலத்திலும் இந்த நடைமுறை இருந்தும் வந்திருக்கின்றது. பெண்கள் பள்ளிக்கு வந்து அங்கு நிகழ்த்தப்படக் கூடிய உரைகளைச் செவிமடுக்கவும், இன்னும் இஸ்லாமியப் பாடங்களைக் கற்கவும், இன்னும் பல்வேறு இஸ்லாமிய நடவடிக்கைகளிலும் சுதந்திரமாகப் பங்கு கொள்ள இஸ்லாம் உரிமை வழங்கியிருக்கின்றது. ஆண்களும் பெண்களும் பள்ளியில் தொழலாம் என்பதற்கு கீழ்க்கண்ட சம்பவம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

முன்பு முஸ்லிம்கள் பைத்துல்முகத்திஸை முன்னோக்கியவர்களாக, அதனைத் தங்களது கிப்லாவாக எண்ணம் கொண்டவர்களாகத் தொழுது வந்ததை நாம் அறிவோம். அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களது விருப்பப்படி, கிப்லாவை பைத்துல் முகத்திஸிலிருந்து மக்காவுக்கு மாற்றிய பொழுது, தொழுது கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் தங்களது முகத்தை பைத்துல் முகத்திஸை விட்டும் கிப்லாவின் பக்கம் திரும்பினார்கள் என்று, கிப்லா மாறிய சம்பவ வரலாறு கூறுகின்றது.

இன்றைக்கும் அந்த கிப்லா தான் உலக முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு தொழுகையின் பொழுது முன்னோக்கக்கூடிய தளமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. பெண்களும் பள்ளிக்குச் சென்று தொழலாம் என்ற அனுமதி உண்மையானதும், சத்தியமானதுமாகும், இன்னும் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில், முஸ்லிம் பெண்கள் பள்ளியின் முக்கிய நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்களாக இருந்தார்கள்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:15 pm

முஸ்லிம் பெண்கள் பள்ளியின் நடவடிக்கைகள் மற்றும் பல சம்பவங்களில் கலந்து கொண்டு சிறப்புப் பங்காற்றி இருக்கின்றார்கள் என்பதை ஏராளமான ஹதீஸ்கள் இன்னும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. பெண்கள் எவ்வாறு ஜும் ஆத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பதையும், இன்னும் கிரகணத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பதையும், ஈதுப் பெருநாள் மற்றும் முஅத்தினினுடைய அழைப்புக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைப் பற்றியும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

உம்மு ஹிஸாம் பின்த் ஹாரிதா இப்னு அல் நுஃமான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

காஃப், வல் குர்ஆனில் மஜீத் என்ற சூராவை முஹம்மது (ஸல்) அவர்களது மூலமாகத் தவிர நான் வேறு எந்த வகையிலும் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த சூராவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மக்களுக்கு உரை நிகழ்த்தும் பொழுது மிம்பரில் நின்று ஓதாமல் இருந்ததில்லை. (முஸ்லிம்)

இன்னும் அம்ரா பின்த் அப்துல் ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

காஃப், வல் குர்ஆனில் மஜீத் என்ற அத்தியாத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக வெள்ளிக்கிழமைகளில் கற்றுக் கொண்டேன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பொழுது இறைத்தூதர் (ஸல்) மிம்பரில் இருந்த வண்ணம் இந்த அத்தியாத்தை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம் 6ஃ160)

ஜும்ஆ தினத்தன்று ஆண்களும், பெண்களும் குளித்து சுத்தமான ஆடைகள் அணிந்து ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஊக்குவித்தார்கள்.

ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வரக் கூடிய ஆண் அல்லது பெண்ணாக இருக்கட்டும், அவர்கள் முதலில் குளித்து விட்டு வரட்டும்! (இப்னு ஹிப்பான்)

இன்னும், அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்கள், ஒரு கிரகணத் தொழுகையின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுள்ளார்கள் என்று ஒரு ஹதீஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. அப்பொழுது அவர்கள் (ஸல்) என்ன சொல்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை அருகில் இருந்த ஒருவரிடம் அஸ்மா (ரலி) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். கீழ்க்கண்ட ஹதீஸை அஸ்மா (ரலி) அவர்களே இங்கு அறிவிக்கின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை முடிந்த பின்) எங்கள் மத்தியில் எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள், அப்பொழுது சோதனைகள் பற்றியும் இன்னும் மண்ணறையில் ஒருவன் சந்திக்கவிருக்கின்றவைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் அஸ்மா (ரலி) அறிவித்த இன்னுமொரு ஹதீஸ{ம் பதியப்பட்டுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்பொழுது நான் என்னுடைய பணிகளை முடித்து விட்டு, பள்ளிக்கு வந்தேன். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன், எனவே நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். நான் (சோர்வினால்) உட்கார்ந்து விடும் அளவுக்கு அவர்கள் மிக நீண்ட நேரம் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். (எனக்கு அருகில் இருந்த) ஒரு பெண்மணி மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் நின்று கொண்டிருந்ததைக் கண்ட நான், என்னை விட பலவீனமான அவரே நிற்கும் போது, நான் நின்று கொண்டு தொழுவதே நல்லது என நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டு, நின்று கொண்டு தொழ முடிவெடுத்தேன். பின் அவர் (ஸல்), குனிந்து ருகூஉ செய்தார்கள், இன்னும் அதே நிலையிலேயே மிக நீண்ட நேரம் இருந்தார்கள், பின் தலைநிமிர்த்தி மீண்டும் மிக நீண்ட நேரம் அவ்வாறே நின்று கொண்டிருந்தார்கள், அதாவது இந்த நிலையைக் காணும் எவரும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யவில்லை என்று எண்ணம் கொள்வார். கிரகணம் விலகியதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின் அம்மா பஃத் என்று கூறி, இறைவனைப் புகழ்ந்தவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (ஃபத்ஹ{ல் பாரி, முஸ்லிம்)







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 04, 2010 12:18 pm

தகவலுக்கு நன்றி சபீர் ஜி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:18 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த அந்த பொற்காலங்களில் வாழ்ந்த, முஸ்லிம் பெண்மணிகள் இஸ்லாமிய மார்க்க விவகாரங்களில் எந்தளவு கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் நமக்கு விளக்குகின்றது. இன்னும் பாங்குச் சத்தம் கேட்டவுடன், அவர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற கருத்துக்களையும், இன்னும் வழிகாட்டுதல்களையும், போதனைகளையும் செவிமடுத்துக் கொள்ள விரைந்த வரலாற்றை நாம் பார்க்க முடிகின்றது. பாத்திமா பின் கைஸ் (ரலி) இவர்கள் முதல் ஹிஜ்ரத் செய்த பெண்மணியும் கூட, இவர்கள் கூறுகின்றார்கள் :

மக்களை தொழுகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது, எனவே நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுவதற்காக பள்ளிக்கு விரைந்தேன், பெண்களின் அணியில் நான் முதல் வரிசையில் இருந்தேன், அந்த அணி ஆண்களது அணிக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தது. (முஸ்லிம்)

எனவே, மேலே உள்ள சம்பவங்களிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், அவர்களின் முழு அனுமதியுடன் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிக்குச் சென்று தொழுது வந்ததை நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிகின்றது. ஒருமுறை பள்ளிக்குத் தொழ வந்த பெண் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அதன் காரணமாகக் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடவில்லை. எனினும், அந்தச் சம்பவம் நடந்திருந்த போதிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களை பள்ளிக்கு வர அனுமதித்தார்கள், அவர்களைத் தடை செய்தவற்கு ஆண்களுக்கு அனுமதி வழங்கவும் இல்லை. இதன் மூலம் பெண்கள் பல்வேறு சிறப்பு நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள், அப்பொழுது பள்ளியில் நடைபெறும் உரையாடல்கள், அறிவுரைகளைச் செவிமடுத்து, ஆன்மீக ரீதியாகவும், உள ரீதியாகவும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்கின்றார்கள்.

வாயில் அல் கின்தி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அதிகாலைத் தொழுகை நேரத்தின் பொழுது, பள்ளிக்கு (தொழ) வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருள் கவ்வியிருந்த அந்த நேரத்தில் ஒரு மனிதன் தாக்கி விட்டான். அவள் கத்தி அருகில் சென்று கொண்டிருந்தவர்களைத் துணைக்கு அழைத்தாள். அருகில் சென்று கொண்டிருந்தவர்கள் துணைக்கழைத்த பெண்ணை நோக்கி உதவிக்கு வந்த சமயத்தில், அந்த மனிதன் தப்பி விட்டான். அப்பொழுது, (அப்பாவியான) ஒரு மனிதனை (குற்றவாளி என நினைத்து) அவள் முன் நிறுத்தினார்கள். (இன்னும்) அவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் நிறுத்திய பொழுது, இந்தப் பெண் உதவிக்கு அழைத்த பொழுது நான் தான் முதல் ஆளாகச் சென்று உதவிக்குச் சென்றேன், என்னையே பிடித்து வந்து விட்டார்கள் என்றார். அப்பொழுது அந்தப் பெண், இவன் பொய் சொல்கின்றான், இவன் தான் என்னைத் தாக்கினான் என்றாள். இவனைப் அப்புறப்படுத்தி, இவன் மீது கல்லெறியுங்கள் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு மனிதர் எழுந்து வந்து, அவனைக் கல்லெறிய வேண்டாம், நான் தான் அந்தக் காரியத்தைச் செய்தேன் என்மீது கல்லெறியுங்கள் என்று கூறினான். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் மூவர் நின்று கொண்டிருக்கின்றார்கள், முதலாமவர், தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண், இரண்டாவது உதவிக்கு விரைந்த அந்த நபர், மூன்றாவது தாக்கிய அந்த மனிதர். தாக்கிய அந்த மனிதனைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பொறுத்தவரை இறைவன் உன்னை மன்னித்து விட்டான் எனக் கூறினார்கள், இன்னும் உதவிக்கு விரைந்த அந்த மனிதனைப் பார்த்து கனிவான வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள், மக்களைப் பார்த்து இந்த மனிதனை அழைத்துச் சென்று தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்கள், உடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தலையிட்டு), வேண்டாம்! அல்லாஹ் அவனது பாவ இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான், பாவப் பிராயச்சித்தமே (தண்டனை வழங்குவதைக் காட்டிலும்) மிகச் சிறந்தது, மதீனத்து மக்கள் இந்த முறையில் பாவப்பிரயச்சமடைந்து கொள்ளவதைக் கடைபிடிக்கட்டும், அதை அவர்கள் மூலம் நான் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றேன் என்றும் கூறினார்கள். (அஹ்மத்)









சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக