புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_m10அடுத்தவர் பாராட்டு அவசியமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் பாராட்டு அவசியமா?


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Wed Sep 29, 2010 4:56 am



பேரும் புகழும் வேண்டி மனிதர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'அரைப்படி அரிசியில் அன்னதானம், விடியும் வரையில் மேளதாளம்' என்றொரு பழமொழி உண்டு. குறைவாகச் செய்தாலும், பலரும் அதைப் பெரிதாக நினைத்துப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப் பாராட்டத் தவறுபவர்கள் வயிற்றெரிச்சல் பேர்வழிகள் என்ற வகைப்படுத்தப்படுவார்கள். இன்று அரசியல், ஆன்மீகம், கலை என்று எல்லா துறைகளிலும் இந்தப் புகழாசை மலிந்திருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் புகழ் பற்றிய எண்ணமே இல்லாமல் பெரும் சாதனைகள் செய்த ஓரிருவர் அல்ல, ஒரு கூட்டமே ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அஜந்தா, எல்லோரா சென்றிருந்தேன். அஜந்தாவில் பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு ஓவியமும் கலை நுணுக்கத்துடன் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஓவியத்தை வரையவும் பல வாரங்கள் தேவைப்பட்டிருக்கும். அந்தக்காலம், இந்தக் காலம் போல வண்ணங்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் காலமல்ல. ஒவ்வொரு வண்ணத்தையும் இயற்கை முறையில் கஷ்டப்பட்டு தயாரித்து வரைந்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஓவியத்திலும் வரைந்தவரின் பெயர் இல்லை. (அதற்கு கீழே இந்தக் கால ரசிகர்கள் தங்கள் பெயர்களை எழுதிப் புளங்காகிதம் அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதனால் இப்போது அதன் அருகே பார்வையாளர்களை விடுவதில்லை. சில அடிகள் தள்ளியே நின்று பார்க்க வேண்டி இருக்கிறது).

எல்லோராவிலும் கண்ணையும் கருத்தையும் கவரும் ஏராளமான சிற்பங்கள் இருந்தன. மலையைக் குடைந்து செதுக்கிய சிற்பங்கள் பல. எல்லாம் மிக நுணுக்கமான நிகரில்லா வேலைப்பாடுகள். அதிலும் ஒன்றில் கூட செதுக்கியவர் பேரில்லை.

நம் உபநிடதங்களை மிஞ்சக் கூடிய அறிவுப் பொக்கிஷங்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. அவற்றில் கூட எழுதிய ஆட்கள் பெயர் இல்லை.

சரித்திரம் நம்மைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் அந்த ஓவியர்களிடமோ, சிற்பிகளிடமோ, ரிஷிக்களிடமோ இருந்தது போலத் தெரியவில்லை. ஆத்மதிருப்தி ஒன்றே அவர்கள் குறிக்கோளாகவும், பெற்ற பலனாகவும் இருந்திருக்கிறது.

இன்றோ பெருமைக்குரிய செயலுக்காகப் பாராட்டு என்ற நிலை போய் பாராட்டை எதிர்பார்த்து செயல் என்றாகி விட்டது. இதில் பெரிய குறை என்ன என்றால் இது போன்ற செயலின் தன்மை பாராட்டைப் பொறுத்தே அமையும். பாராட்டு இல்லா விட்டால் செயலும் இல்லை என்ற நிலையும் வந்து விடும். ஒவ்வொன்றையும் மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைந்தால் நம் செயல்களின் மூலம் ஆத்ம திருப்தியைக் காணத் தவறி விடுவோம்.

பாராட்டைப் பொறுத்தே செயல்புரிவது என்று சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இன்று நாம் எந்தக் கண்டுபிடிப்புகளின் பயன்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்க முடியாது. காரணம் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்ப கட்டங்களில் பாராட்டை விட கசப்பான விமரிசனங்களும், ஏளனமும் தான் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. பல உண்மைகள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போது கடும் எதிர்ப்பும், பைத்தியக்காரப் பட்டமும் தான் கிடைத்திருக்கின்றன. விமரிசனங்களின் உஷ்ணத்தில் பின் வாங்கியிருந்தால் எந்த சாதனைகளுமே உலகில் அரங்கேறி இருக்க முடியாது. இவ்வளவு தூரம் உலகம் முன்னேறி இருக்க முடியாது.

எல்லாத் துறைகளிலும் முத்திரை படைத்தவர்களும், ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தவர்களும் பாராட்டை விட தங்கள் ஆத்ம திருப்தியையே முக்கியமாக நினைத்தார்கள். தாங்கள் சரியென்று இதயத்தின் ஆழத்திலிருந்து நம்பியதைச் செய்தார்களே ஒழிய பாராட்டுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

எனவே அடுத்தவர் பாராட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து விடாதீர்கள். அடுத்தவர் பாராட்டுக்கள் உங்கள் செயலின் தன்மையைத் தீர்மானிக்க விட்டு விடாதீர்கள். தங்கள் நோக்கம் உன்னதமாக இருக்கட்டும். செயல் தங்கள் முழுத் திறமையின் வெளிப்பாடாக இருக்கட்டும். இரண்டும் இருந்தால் அந்தச் செயலைச் செய்து முடிக்கையில் கண்டிப்பாக மனநிறைவைக் காண்பீர்கள். அதைவிடப் பெரிய பாராட்டு அடுத்தவரிடமிருந்து உங்களுக்குத் தேவையில்லை.


-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 5:03 am

மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யக்கூடிய காரியங்கள் எதுவுமே நிறைவு பெறுவதில்லை! தனது திருப்திக்காகச் செய்யப்படும் செயல்கள் மட்டுமே மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது! மிகச் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள்! நன்றி அண்ணா!

அஜந்தா ஓவியங்கள் இங்கே!

http://www.eegarai.net/-f22/-t27291.htm



அடுத்தவர் பாராட்டு அவசியமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Sep 29, 2010 9:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 29, 2010 10:09 am

சிவா wrote:மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யக்கூடிய காரியங்கள் எதுவுமே நிறைவு பெறுவதில்லை! தனது திருப்திக்காகச் செய்யப்படும் செயல்கள் மட்டுமே மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது! மிகச் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள்! நன்றி அண்ணா!

அஜந்தா ஓவியங்கள் இங்கே!

http://www.eegarai.net/-f22/-t27291.htm

உண்மை அண்ணா எமது திருப்திக்கா நாம் செய்பவை மற்றவர்களால் பாராட்டப்படுதல் சிறப்பு பாராட்டுக்காக வேண்டி எதைச்செய்தாலும் அதில் திருப்திகாண முடியாது



நேசமுடன் ஹாசிம்
அடுத்தவர் பாராட்டு அவசியமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக