புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
32 Posts - 51%
heezulia
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
74 Posts - 57%
heezulia
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
புற்று எமன் அல்ல Poll_c10புற்று எமன் அல்ல Poll_m10புற்று எமன் அல்ல Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று எமன் அல்ல


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:52 pm

புற்று எமன் அல்ல!

மனித சமுதாயத்தைப் பெதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு - எய்ட்ஸ் மற்றும் புற்று நோய். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.

எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களையும் அறிந்துகொண்டால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.

புற்றுநோய் என்பது, உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அபமிதமான வளர்ச்சி நிலையாகும். புற்றுநோய், கட்டியாகவும் இருக்கலாம். அல்லது ஆறாத புண்ணாகவும் இருக்கலாம்.
தலை முதல் கால் வரை...: புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது.

அபாய அறிகுறிகள் என்ன? நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய அறிகுறிகளாகும்.

வயது வரம்பு உண்டா? எந்த வயதினரையும் தாக்கக் கூடியது இது. புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்று நோய் ஏற்படக் காரணம். உதாரணமாக, புகையிலை அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோல் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
புற்றுநோயின் தொடக்க நிலையில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் புற்று நோயாளி என்று சொல்ல முடியாது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மட்டுமே சொல்ல முடியும். எனவே, அவ்வப்போது முறையாகப் பசோதனை செய்துகொள்வது ஒன்றுதான், புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் வழியாகும்.

பச்சைக் காய்கறிகள் உதவும்: புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட எந்த வகை உணவும் காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

நோயின் தொடக்க நிலையில் வலி இருக்காது. எலும்பு அல்லது நரம்புகளில் பரவும்போது மட்டுமே வலியிருக்கும். ரத்தப்போக்கு இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறிதான் என்றில்லை. ஆனாலும், ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது அவசியம்.
சயான முறையில் உய சிகிச்சை செய்துகொண்டால், புற்றுநோயாளிகளும் மற்றவர்களைப்போல இயல்பாக வாழ முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, உய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவீதம் நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

பெண்களுக்கு "பேப் ஸ்மியர்' என்ற சோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அறுவைச் சிகிச்சை மற்றும் கதியக்கச் சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
புற்றுநோய்க்கு ஒரு முறை சிகிச்சை பெற்று, குணமடைந்த ஒருவருக்கு ஐந்தாண்டுகள் வரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால், அவருக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
எனினும், சிலவகை புற்றுநோய்கள், 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டு வர சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, முற்றிலும் குணமடைந்தாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பசோதனை செய்துகொள்வது அவசியம்.

மூன்று வகை சிகிச்சைகள்:

பொதுவாக புற்றுநோய்க்கு மூன்று வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன -கதியக்க சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருத்துவ சிகிச்சை.

புற்றுநோயாளிகளில் 80 சத நோயாளிகளுக்கு கதியக்கச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது முதன்மை சிகிச்சைகளுடன் (அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை) சேர்த்தோ அல்லது நோயின் தன்மைக்கும் அது பரவியிருக்கும் நிலைக்கும் ஏற்பவோ அளிக்கப்படுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் நம் நாட்டில் அதிகமாகக் காணப்பட்டாலும், பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவை; ஆண், பெண் இருபாலரையும் அதிகமாகத் தாக்கக் கூடியது, வாய்ப் புற்றுநோய்.

இந்த மூன்று புற்றுநோய்களுமே மிகக் கொடிய, உயிர்க்கொல்லிகள் என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை ஆகும்.

மார்பகப் புற்றுநோய்: மார்பகப் புற்றுநோய் என்பது வெறும் புற்றுநோய் மட்டுமல்ல. அது பெண்மை சம்பந்தப்பட்டதாகவும் பாலியல் சம்பந்தப்பட்டதாகவும் மற்றும் உடல் அழகு சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதால் அது பெரும் துன்பத்தோடு மன உளைச்சலையும் கொடுக்கக் கூடிய நோயாக இருக்கிறது.
இது மார்பகத்தில் ஒரு சிறு கட்டியாக ஆரம்பித்து, சிறிது சிறிதாக வளர்ந்து மார்பகத் தோல் மற்றும் மார்பகக் காம்புகளிடையே பரவுகிறது. நேரடியாக உட்புறமாக வளர்ந்து, மார்பகத்தின் பின்புறம் உள்ள சதைகளிலும் பரவுகிறது.

அது தவிர, இரண்டாவது வழியாக நிணநீர்க் குழாய் வழியாக அக்குள்களுக்கிடையே பரவி, பல நிணநீர் முடிச்சுகளாக அங்கே வளர்கிறது.ரத்தம் மூலமாக மார்பகப் புற்றுநோய் பல பாகங்களுக்கும் பரவலாம்.
யார் யாருக்கெல்லாம், என்னென்ன காரணங்களால் மார்பகப் புற்றுநோய் வரலாம்?

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு, மிகத் தாமதமாக (31 வயதுக்கு மேல்) முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு, மிகச் சிறிய வயதிலேயே பூப்படையும் பெண்களுக்கு, மிகத் தாமதமாக மாதவிலக்கு நிற்கும் பெண்களுக்கு, தன்னுடைய குடும்பத்திலேயே தாயோ சகோதகளோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அத்தகைய பெண்களுக்கு, மிக அதிக அளவில் மது அருந்தும் பெண்களுக்கு, கொழுப்புச் சத்து மிகுந்த பொருள்களையும் அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்: மார்பகத்தில் சிறிய கட்டிகள், காம்புகளில் வெடிப்பு, வீக்கம், வலி, அப்பு, நீர் அல்லது ரத்தம் கசிதல், மார்பகம் வழக்கத்துக்கு மாறாகப் பெதாக இருந்தல், இரு மார்பகங்களும் வெவ்வேறு நிலையில் இருத்தல் ஆகியவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் மார்பகப் புற்றுநோய்க்கான பசோதனை செய்துகொள்ளுதல் அவசியம். மாதம் ஒரு முறை சுயமாகவும் பசோதித்துக் கொள்ளலாம். Mammo Graphy என்ற பசோதனை மூலம் மருத்துவமனையில் பசோதித்துக்கொள்ளலாம். கைகளால் கட்டியைக் கண்டுபிடிப்பதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பசோதனை மூலம் கட்டியைக் கண்டுபிடிக்க முடியும்.

அறுவைச் சிகிச்சை, கதியக்க சிகிச்சை, மருந்து சிகிச்சை ஆகிய மூன்று சிகிச்சைகள் மூலம் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத் முடியும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: இந்திய பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்: மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைபடுதல் அல்லது ரத்தப்போக்கு இருப்பது, உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு இருப்பது ஆகியவை இதற்கான அறிகுறிகள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க எளிய, வலியில்லாத பசோதனை முறை பேப் சிமியர் (PAP SMEAR) சோதனை ஆகும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தப் பசோதனை செய்துகொள்வது அவசியம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மை சிகிச்சையாக கதியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மைக்கேற்ப கால அளவு மாறுபடும்.

வாய்ப் புற்றுநோய்: நமது நாட்டில் காணப்படும் புற்றுநோய்களில் அதிகமாகக் காணப்படுவது வாய்ப்புற்று நோய் ஆகும். கடைவாயின் உட்பகுதியிலும் ஈறுகளிலும் வரக்கூடிய இந்தப் புற்றுநோயை ஐய்க்ண்ஹய் இஹய்ஸ்ரீங்ழ் என்றுகூடச் சொல்லுவார்கள்.

புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகிப்பதுதான் இந்த நோய் வருவதற்குக் காரணம். நாக்கிலோ அல்லது வாய்க்குள் ஏதாவது புண் நீண்ட நாள் ஆறாமல் இருப்பது, வாயின் உட்புறத்தில் தடிப்பான அல்லது வெள்ளை நிறப்படை வளர்ந்து வருவது, உதட்டில் வெடிப்பு அல்லது நீண்ட நாளாக புண் இருப்பது, வாய்க்குள் வலியில்லாத வீக்கம் இருப்பது, நாக்கிலோ அல்லது வாயின் வேறு பகுதியிலோ நீண்ட நாளாக ஆறாத புண் இருப்பது ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள்.
மதுவுடன் சேர்த்து புகை பிடிப்பவர்களுக்கு இந் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; நோயின் கடுமையும் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க சில வழிமுறைகள் உண்டு. நாமே கண்ணாடி முன் நின்று, டார்ச் லைட் உதவியுடன் பசோதித்துக்கொள்ளலாம்.

சந்தேகத்துக்குய இடத்தில் இருந்து சதையின் ஒருசிறு பகுதியை வெட்டி எடுத்து பசோதிப்பது பயாப்ஸி சோதனை எனப்படும். Tolidine Blue Test என்பது, வாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் மற்றொரு பசோதனை. வாய்ப்புற்று நோயை கதியக்கச் சிகிச்சை (Radio theraphy), அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

* உணவில் பீன்ஸ் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

* கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை "பேப் ஸ்மியர்' சோதனை செய்து கொள்வது நல்லது.

* மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய "மேமோகிராம்' கருவி உதவும்.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 3:27 am

பயனுள்ள பதிவு...
பகிர்வுக்கு நன்றி....
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக