புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
32 Posts - 51%
heezulia
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
74 Posts - 57%
heezulia
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_m10போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 16, 2010 6:50 pm

இலங்கை அரசாங்கத்தின்மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புக்களினாலும், ஒரு சில அரசாங்கங்களினாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. போர்க்குற்ற விசாரணையொன்றின் மூலம் இலங்கை அரசாங்கத்தை குறிப்பாக மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்துவிடலாம் என்ற எண்ணம் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் பலரிடம் காணப்படுகிறது.

இதை வலியுறுத்திய போராட்டங்களும், கருத்தாடல்களும் புலம்பெயர் நாடுகளெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன், புலம்பெயர் ஊடகங்கள் பலவற்றிலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணத்துவ ஆய்வுகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றது.

ஆனால், இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான கள யதார்த்தங்களையும், சர்வதேச அரசியலில் இந்த விவாகரம் கையாளப்படும் விதமும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.

உண்மையில் போர்க்குற்றங்கள் நடந்தனவா? அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? இலங்கை அரசாங்கம் மட்டுமா அல்லது விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளனரா என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, இன்றைய சர்வதேச அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அப்படியான ஒரு போர்க்குற்ற விசாரணை நடைபெறும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதையே நாம் ஊன்றிப் பார்க்கவேண்டியிருக்கிறது.

சர்வதேச ஆதரவு!

போர்க்குற்ற விசாரணைகளுக்கான சர்வதேச ஆதரவுக் குரல்கள் ஆரம்பம் முதலே எழுப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை அமைப்புக்கள், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் என இருந்துவந்த இந்த ஆதரவு, ஐக்கிய நாடுகள் சபையில் இதுதொடர்பாக ஆராய்ந்து செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென ஒரு குழு அமைக்கப்படுவது வரையில் வளர்ந்து சென்றது.

பொதுவாகப் பார்த்தால் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச ஆதரவு இருப்பதாகவே, அதிலும் குறிப்பாக மேற்குலகின் ஆதரவு இருப்பதாகவே தென்படுகிறது. ஆனால், இதற்குப் பின்னாலிருக்கும் நோக்கங்களையும், இரட்டை நிலைப்பாடுகளையும், காய் நகர்த்தல்களையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

முதலாவதாக, இன்று போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் இந்தச் சக்திகள் அனைத்தும் வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது என்ன செய்தன என்ற கேள்வி எழுகிறது. குற்றங்கள் நடந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதாகக் கவலைப்படும் இவர்கள், குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள்?

புலம்பெயர் நாடுகள் எங்கும் இலட்சக்கணக்கில் தமிழர்கள் வீதிகளில் இறங்கி, போக்குவரத்துக்களை முடக்கி, வரலாற்றில் என்றுமில்லாதளவு நெருக்கடிகளை அழுத்தங்களைக் கொடுத்தபோதும், இதே மேற்குலக நாடுகள் மௌனமாயிருந்த காரணமென்ன?

குற்றங்கள் நடைபெற்றபின் குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டிக்கத் துடிப்பவர்கள், குற்றம் நடைபெறாமல் தடுக்க மேற்கொண்ட உருப்படியாக நடவடிக்கைகள்தான் என்ன?

இங்கேதான், சர்வதேச அரசியலின் யதார்த்த முகம் வெளிப்படுகிறது. இதுபற்றிக் கோபம் கொள்ள ஒன்றுமில்லை. காலம் காலமாக இது இப்படித்தான் இருந்து வருகிறது – இனியும் இருக்கும்!

எல்லோருமே பங்காளிகள்

வன்னியில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை முன்னெடுத்தவர்கள் யார்? மகிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர் கோத்தபாய இவர்களின் பின்னணியில் இந்தியா என்ற விதமாகத்தான் நாம் இன்னும் வாதிட்டுக்கொண்டிருக்கிறோம். உண்மையில், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை பிரதான உலக நாடுகள் அனைத்துமே இணைந்துதான் முன்னெடுத்தன என்ற யதார்த்தத்தை நாம் சரியாக உணரத் தவறுகிறோம்.

இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா என்று, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை முன்னெடுத்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

உலகின் மிகப் பிரதானமான கடல் போக்குவரத்து மார்க்கத்தின் முக்கிய கடற்பகுதியான இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருக்கும் குட்டி இலங்கைத்தீவில், தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை என்று பலம் மிக்க ஒரு அமைப்பு இருப்பது, தமது கடற்போக்குவரத்துக்கு ஆபத்தாகிவிடலாம் என்பதுதான் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பிரதான காரணி.

படைப்பலத்தை வளர்தெடுப்பதில் கவனம் செலுத்திய புலிகள், சர்வதேச அரசியலரங்கில் அதுவே தமக்குப் பாதகமாகிவிடக்கூடிய சூழலைச் சரியாகக் கணிக்காததுடன், சர்வதேச அரசியலில் இராஜதந்திர நகர்வுகள் மூலம் நண்பர்களை வளர்த்துக்கொள்ளத் தவறியதாலேயே இந்தப் பொது எதிர்ப்பு புலிகளுக்கெதிராக வளர்ந்துவிட்டது.

புலிகளுக்கெதிரான இந்தப் போருக்கு பாகிஸ்தானும், சீனாவும், இந்தியாவும் ஆயுதங்களைக் கொடுத்தன. அமெரிக்கா ஆயுதங்களுடன் பயிற்சியையும் வழங்கியது(கொழும்பு கோல்ஃபேஸ் உல்லாச விடுதியின்மீது விடுதலைப் புலிகள் நடத்திய ஒரு தாக்குதலின்போது இலங்கைக்குப் பயிற்சியளிக்கவந்த அமெரிக்க கொமாண்டோப் படையினர் தங்கியிருந்த தகவல் வெளியானதை நினைவில் கொள்க). பிரித்தானியா குண்டுகளை வழங்கியது. இப்படி அனைவருமே தம்மாலான அனைத்துப் பங்களிப்பை முள்ளிவாய்க்கால் முடிவுக்கு வழங்கியிருந்தனர்.

“முன்னரைவிடப் பலமான இராணுவம்”

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கைக் காலத்தில், புலிகள் திடீரென யாழ்ப்பாணத்தில் மக்கள் படை என்ற பெயரில் கண்ணிவெடித் தாக்குதல்களை ஆரம்பித்திருந்த காலம் அது. அப்போது கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லங்ஸ்டட்டிடம் இந்த நிலைமை பற்றி கேள்வியெழுப்பப்ட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், “புலிகள் போரை ஒரு தெரிவாக மேற்கொள்வாராகவிருந்தால், முன்னரைவிடப் பலமான இலங்கை இராணுவத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும்” என்பதாகும்.

இதன் அர்த்தம் என்ன? மீண்டும் போர் மூண்டால் பலமான இலங்கை இராணுவத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்றால், அதன் பொருளென்ன? போர்நிறுத்த உடன்படிக்கைக் காலத்தில் இலங்கை இராணுவத்துக்கு அந்தப் பலத்தை வழங்கியது யார்?

ஒரு வர்த்தகச் சந்திப்பில் அமெரிக்கத் துதுவர் வெளியிட்ட இந்தக் கருத்தை அப்போது யாரும் உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. ஆனால், அப்போது அவர் சொன்னதன் பொருள் மீண்டும் போர் ஆரம்பித்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஆக, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு எல்லாருமே பங்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மகிந்தவும், கோத்தபாயவும் அதை களத்தில் முன்னெடுத்த தலைவர்கள் – தளபதிகள். அவ்வளவே.

இப்போது என்னவாம்?

சரி, அப்படி புலிகளை அழிக்க இந்த நாடுகள் அனைத்தும் உதவின என்றால், இப்போது இவர்களுக்கு என்ன வந்துவிட்டதாம்? ஏன் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிக் குரல் எழுப்புகிறார்கள்?

இங்கேதான், போருக்குப் பிந்திய இலங்கையை மையமாகக் கொண்ட புதிய சர்வதேச அரசியல் நகர்வுகள் ஆரம்பிக்கின்றன. விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்குக் கைகொடுத்த மேற்கு நாடுகளுக்கு, போருக்குப் பிந்திய சூழலில் இங்கே இந்தியாவினதும், சீனாவினதும் கைகள் ஓங்கி, தாம் ஓரங்கட்டப்படுவது எரிச்சலூட்டுகிறது.

மேற்குலகின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஆர்வம் காட்டாது அதை முறித்துக்கொண்டபோது, போர் வழிமுறை மூலம் அவர்களை வழிக்குக் கொண்டுவந்து ஒரு தீர்வை ஏற்படுத்தவே மேற்குலகம் விரும்பியிருந்தது. ஆனால், போரின் இறுதிக்கட்டம் வரையில் இணைந்திருந்த மேற்குலகைப் புறந்தள்ளிவிட்டு, கடைசி நேரத்தில் இந்தியாவும், இலங்கையும் புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையைச் செய்து முடித்தபோது அது நிலை குலைந்தது.

இதனாலேயே, போரின் இறுதி நாட்களில் கப்பல் மூலம் முள்ளிவாய்க்கால் மக்களை மீட்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. பிரபாகரனைக் காப்பாற்றவே அமெரிக்கா முனைந்தது என்று பின்னர் இதுதொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், அதைச் செய்வதற்கு முன்னரே எல்லாமே முடிந்துவிட்டிருந்தது.

இவ்வாறு மேற்குலகின் கையை மீறிச் சென்றுவிட்ட நிலைமையை – இலங்கை மீதான பிடியை மீண்டும் தக்கவைத்துக்கொள்வதற்கு இப்போது போர்ககுற்ற விசாரணை தேவைப்படுகிறது. இதுதான், முள்ளிவாய்க்காலில் மக்கள் செத்துக்கொண்டிருக்க, புலம்பெயர் தேசமெங்கும் வீதிகளில் இறங்கி தமிழர்கள் போராடிக்கொண்டிருக்க வாழாதிருந்த மேற்குலகம் இப்போது போர்க்குற்றம் பற்றிப் பரிந்து பேசக் காரணமாகும்.

அப்படியானால் நடக்குமா?

அப்படியானால், மேற்குலகின் அழுத்தம் காரணமாக போர்க்குற்ற விசாரணைகள் நடந்தேறுமா?

இங்கேதான் இருக்கிறது சர்வதேச அரசியலின் இரண்டக நிலைமை. அது நடக்குமா இல்லையா என்று கண்டறிவதற்கு, நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டியிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை நடைபெற்றால், பல்வேறு வழிகளிலும் போருக்கு உதவிபுரிந்து போர்க்குற்றங்களுக்குப் பங்களித்தவர்களின் நிலை என்ன?
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி ஒரு சர்வதேச முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதால், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று நீளும் இதைவிடப் பன்மடங்கு பெரிய போர்க்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்ற அழுத்தங்கள் ஏற்படாதா?
இந்தக் கேள்விகளுக்கான விடை, இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடைபெறுமா இல்லையா என்பதை எமக்குத் தெளிவாக உணர்த்தும்.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய உண்மைகள்

ஆரம்பம் முதலே போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவந்த அமெரிக்காவின் இரண்டக நிலை, விக்கிலீக்ஸ் கசியவிட்ட தகவல்களால் வெளிப்பட்டுவிட்டது. இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கான சாத்தியங்கள் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர் பற்ரீசியா புட்டினஸ், ஜனவரி 15ம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் கசியவிட்டது.

இலங்கையின் போர்க்குற்றங்களுடன் அந்த நாட்டுத் தலைவர், அவரது சகோதரர்கள், இராணுவத் தளபதி எனப் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால், போர்க்குற்ற விசாரணைகள் சாத்தியமில்லை என்ற தொனிப்பட அமெரிக்கத் தூதுவரின் அந்தச் செய்தி அமைந்திருந்தது.

போர்க்குற்றத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்போது, அதற்கெதிரான விசாரணைகள் நடைபெற்றதாக எங்குமே முன்னுதராணம் இல்லை என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகள் இவைதான்,

“There are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power,” Butenis noted.

“In Sri Lanka this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country’s senior civilian and military leadership, including President Rajapaksa and his brothers and opposition candidate General Fonseka.”

விக்கிலீக்ஸ் இவ்வாறு இரகசியத் தொடர்பாடலைக் கசியவிட்டமையைக் கண்டித்து அதன் பின்னர் அமெரிக்கத் தூதுரகம் வெளியிட்ட அறிக்கை, நிலைமையைச் சமாளிப்பதுபோல், சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்ற செய்தியை வெளியிட்டது.

இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்கவேண்டியது இலங்கையின் பொறுப்பு என்று இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்ததுடன், இதற்கென உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் அமைத்திருந்த நல்லிணக்க ஆணைக்குழுவையும் வரவேற்றிருந்தது.

உள்நாட்டில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை குறித்த எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஆரம்பிக்கும் அந்த அறிக்கை, பின்னர் இவ்வாறு கூறியது,

“We believe that in cases where allegations of possible violations of human rights have been made, the primary responsibility for investigating them lies with the sovereign national government,”

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலான செயற்பாடுகள் தொர்பாக விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய இந்த அறிக்கை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்திருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவை வரவேற்பதாகப் பின்னர் குறிப்பிட்டது.

“We have consistently expressed to the Government of Sri Lanka the importance of implementing a credible and independent process through which individuals responsible for violations of international human rights and humanitarian law are held accountable for their actions,”

The US also welcomed President Rajapaksa’s appointment of a Lessons Learnt and Reconciliation Commission (LLRC)

என்று நல்லிணக்க ஆணைக்குழுவை வரவேற்றதுடன், இதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட இடைக்கால ஆணைக்குழுவையும் அது வரவேற்றது.

இந்த அறிக்கையின் ஆரம்பத்தில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அமெரிக்கா கூறியிருந்ததை முதன்மைப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்த நம்முடைய ஊடகங்கள், தொடர்ந்து அந்த அறிக்கையில் வெளிப்பட்டிருந்த இந்தப் பூடகமான தகவல்களைத் தவறவிட்டுவிட்டன. அல்லது, இந்த இராஜதந்திரப் பரிபாஷைகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டன.

மிகப்பிந்திய தகவலாக, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் இலங்கை பத்திரிகையான டெய்லி மிறருக்கு வழங்கிய செவ்வியொன்றில், இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான தமது ஆதரவை அமெரிக்கா மீண்டும் மீளுறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

எந்தவொரு போர்க்குற்றம் தொடர்பான விசாரணையும் இதன்மூலமே மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இடையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக்க கருத்துவெளியிட்டிருந்த அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொஸ்னர், இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தமக்குத் தெரியும் என்றும், இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தாம் நெருங்கிப் பணியாற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எதை உணர்த்துகின்றன? சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இவை வலியுறுத்துகின்றனவா?

போர்க்குற்ற விசாரணை சாத்தியமில்லை என்ற தொனிப்பட்ட அமெரிக்கத் தூதுவரின் கூற்று, இறைமையுள்ள இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தியாகபுர்வ அறிக்கை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான ஆதரவு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அதன்மூலமே மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பிளேக்கின் கருத்து என்று எல்லாவற்றையும் தொகுத்துக் பார்க்கும்போது, சர்வதேச போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்ற அமெரிக்காவின் மறைமுகச் செய்தியே வெளிப்பட்டு நிற்கிறது.

எல்லாவற்றையும் நாமறிவோம். நேரடியாக இதுபற்றிப் பணியாற்றுகிறோம் என்ற தொனிப்பட்ட பொஸ்னரின் கருத்து, அதையெல்லாம் நாம் பார்த்துக்கொள்கிறோம் என்ற தோரணையில் அமைந்துள்ளது.

உலகின் பிரதான வல்லரசாகக் கருதப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான செல்வாக்கு மிக்க சக்தியான அமெரிக்கா, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக வெளியுலகுக்குக் காட்டிவிட்டது.

இலங்கையில் நடைபெற்ற போருடன் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ போர்க்குற்றங்களுக்குக் காரணமாயிருக்கும் உலகின் பிரதான வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்தப் போர்க்குற்ற விசாரணையை எந்த அடிப்படையில் கையாள்கின்றன என்பதற்கு அமெரிக்காவே நல்ல உதாரணம்.

உலக நாடுகள் இலங்கைமீது போர்க்குற்றம் சுமத்தினாலும், அதன் போர் வெற்றியை அவை அங்கீகரித்துள்ளன என்றும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கடற்படை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை இதற்குச் சான்று பகர்கிறது என்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தமை, உலக நாடுகளின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நாடுகள் தமக்கிடையிலான உறவு விடயத்தில் இவ்வாறுதான் நடந்துகொள்ளும். ஒருவரையொருவர் அவை இலகுவில் விட்டுக்கொடுக்கமாட்டா. நாடுகளின் நலன் சார்ந்தே, அவற்றின் சர்வதேச அரசியல், இராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சர்வதேச அரசியல் இராஜதந்திரப் போக்குகளைப் புரிந்துகொள்ளாமல், போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் அதீத அக்கறைகொண்டு மனித வளங்களை வீணடிப்பதால் உண்மையில் ஆகப்போவது ஒன்றுமில்லை.

மாறாக, இன்றுள்ள அரசியல், இராஜதந்திர யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, இந்த நிலைமைகளுக்குள், இன்றைய நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை, அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று சிந்திப்பதே காலப்பொருத்தமான செயற்பாடாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக