புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
17 Posts - 4%
prajai
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
9 Posts - 2%
jairam
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_m10கரை மேல் பிறக்க வைத்தான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரை மேல் பிறக்க வைத்தான்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:25 pm

தமிழக மீனவர்களை இனிமேல் சுடமாட்டோம் என்று இலங்கை உறுதி கூறியிருக்கிறது. 2008-ம் ஆண்டு வரை மீனவர்கள் சுடப்பட்ட போது விடுதலைப்புலிகளுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துகிறார்கள், அதனால் சுட்டோம் என்றார்கள். வருத்தப்பட்டோம். பிறகு எங்களுக்குப் பயந்து உதவி செய்யாத மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள் என்றார்கள். பேசாமல் இருந்தோம். பின்னர், போரில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்று பறைசாற்றிய பின்பும் சுட்டுக் கொல்கிறார்கள். மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறோம்.

தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை சுடப்பட்டபோதும் மத்திய அரசின் மென்மையான கண்டிப்பும், கடிதம், தந்தி மட்டுமே அனுப்பும் தமிழக அரசின் நடவடிக்கைகளும் சனவரி-12ம் தேதியும், சனவரி 22ம் தேதியும் நடந்த படுகொலைச் சம்பவங்களின் பின்பு மாறியிருக்கிறது. இருமுறையும் சற்றே வேகம் காட்டியிருக்கும் மத்திய, மாநில அரசுகளைப் போன்று இலங்கை அரசும் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகளில் கவனிக்க வேண்டியது 3 விடயங்கள். முதலில், இம்முறை மீனவர் செயக்குமார் என்பவர் சுடப்படவில்லை. கயிற்றால் கழுத்து இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ சுடப்படவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டாவது, சனவரி 12 அன்று மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த பின்னும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் படுகொலை செய்ததற்கு மத்திய அரசு மீண்டும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது(எச்சரிக்கை அல்ல்!). மூன்றாவது, இலங்கை அரசு இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மூலம் இனிமேல் சுடமாட்டோம் என உறுதி அளித்திருக்கிறது. அதாவது ‘இதுவரை சுட்டது நாங்கதான்’ என்பதை எங்கப்பன் குதருக்குள் இல்லை என்பதைப்போல ஒத்துக்கொண்டிருக்கிறது.

மீனவர் கொல்லப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தது குறித்து அரசு தலைமைச் செயலரிடம் மேற்கண்ட உறுதியைக் கூறியிருக்கிறார் இலங்கைத் தூதர்.

முதலில் ஒரு மீனவர் கொல்லப்படுகிறார். பிறகு ஒரு கும்பல் இலங்கை சங்கத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், தூதரோ தாக்குதல் நடத்தப்பட்டதை முதன்மைப்படுத்தி மாநில அரசைச் சந்திக்கிறார். ஒரு தாக்குதலுக்கே இலங்கை அரசு தூதுவரை அனுப்பி விளக்கம் கேட்கிறது. ஆனால், 400க்கும் மேலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன என்பதுதான் தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் இலங்கையில் யாரும் கேட்கமாட்டார்கள் என்று மென்மையான கண்டிப்புடன் நிறுத்திவிட்டார்கள் போலும்!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று இலங்கை கடற்படையினரை அறிவுறுத்தியிருக்கிறோம் என்கிறார் இலங்கைத் தூதர். இலங்கைக் கடற்படையினரும் சுடவில்லை, அங்கு இல்லாத புலிகளும் சுட வாய்ப்பில்லை. அப்படியெனில் யார் இந்தப் படுகொலைகளைச் செய்திருப்பார்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் என்று மூடி மறைக்கப் பார்க்கிறார் அவர்.

கடற்படையும் அல்ல, புலிகளும் அல்ல என்றால் அப்பகுதியில் வேறு நாடு ஏதாவது கப்பலில் ரோந்து சுற்றுகிறதா? அப்படியே இருந்தாலும் அது இந்தியக் கடர்படைக்குத் தெரியாதா? அல்லது சோமாலியக் கடற்கொள்ளையர்கள் யாரேனும் வழி தவறி வந்துவிட்டார்களா? அல்லது சீன வீரர்களும் இலங்கைக் கடற்படையுடன் வருகிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன் மீனவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே, அவர்கள் செய்த வேலையா?

கடந்த காலங்களிலும் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்காத இந்திய அரசு இம்முறை தெரிவித்திருக்கிறது. அதே போல் எப்போதும் வராத இலங்கைத் தூதர் இப்போது வந்து விளக்கம் தருகிறார் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை இந்தியத் ‘தேர்தல்’ ஆணையத்திடம்தான் கேட்கவேண்டுமோ என்னவோ!

வேதாரண்யத்தில் இருந்து சென்றவர்கள் சுற்றுலாப் பயணிகளும் அல்ல. அவர்கள் சென்றது சொகுசுக் கப்பலும் அல்ல. மீன் வலையை வீசினால்தான் பசி வலையை அறுத்தெறிய முடியும் என்று வாழும் மீனவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் நடந்ததை தப்பி வந்த 2 மீனவர்களும் விரிவாகக் கூறிய பின்னரும் வந்தது நாங்கள் அல்ல, இருந்தாலும் இனி சுடமாட்டோம் என்று இலங்கை அரசு என்று இலங்கை அரசு கூரினால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

ஈரானியப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கப் பத்திரிக்கை நிருபர் ரோக்சானா சபேரி ஈரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டபோது அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் முயற்சி எடுத்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 2008ம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இந்தியா கண்டனம் தெரிவித்த 10வது நாள் மீண்டும் ஓர் இந்தியக் குடிமகனை நடுக்கடலில் இலங்கை படுகொலை செய்கிறது என்றால், அதை மத்திய அரசின் மெத்தனப்போக்கு என்பதா அல்லது இலங்கை அரசின் அலட்சியம் என்பதா எனத் தெரியவில்லை. குசராத் மீனவர்களுக்கோ, மேற்குவங்க மீனவர்களுக்கோ இப்படி நடந்தால் மத்திய அரசு சும்மா இருக்குமா? என்று விரக்தி அடையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின்(ஒரு சில அறிவாளிகள் தவிர) உள்ளக் குமுறலையும் யார் தடுப்பது?

யூலை 2008ம் ஆண்டு இதுபோல் இராமேசுவரம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது ‘இராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ருக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிரது. மத்திய அரசுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது சுமூகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கைகளில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனைப் பற்றி இங்கே செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விடயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.(9 யூலை 2008, தினமணி)

2009 யூலையில் இருந்து அதேநிலை இப்போதும் தொடர்கிறது. இப்போது முடிவு பிரதமர் கையில் மட்டுமல்ல, முதல்வர் கையிலும் உள்ளது. விரைவில் சுமூகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். இல்லையெனில், கரை மேல் பிறக்க வைத்தான், எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற வரிகல் உண்மையாகி, மீனவர்கள் தங்கள் வாழ்வின் முடிவை நடுக்கடலில் சந்திக்கும் பேரவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக