புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
17 Posts - 4%
prajai
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
8 Posts - 2%
Jenila
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
4 Posts - 1%
jairam
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_m10எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:30 pm

நான்கு நாட்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஓசினி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டிரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய சனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிக்கை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், கைப்பேசி போன்றவை, அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.

இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977ல் எகிப்தை நிலைகுலையச் செய்தது. அதற்கு ‘ரொட்டிக் கலவரம்’ என்று பெயரிடப்பட்டது. உணவுப் பஞ்சம் தான் அந்த கலவரத்துக்கு காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

விக்கிலீக்சு வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் சசீரா தொலைக்காட்சியின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.

மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் இலஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்கு பகுதியையும் இணைக்கும் சூயசு கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான இசுலாமிய சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்த பிறகு, வந்து சேர்ந்திருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.

இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மௌனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்துவிட்டிருக்கிறது.

இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இசுலாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக ‘அல்லாவு அக்பர்’ கோசம் எழுப்பப்படவில்லை. ‘ஆட்சி மாற்றம் தேவை’ என்ற கோரிக்கைத்தான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்படவில்லை.

எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம் கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க இராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்குக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று இராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், சன்நாயகமும் கேட்டுப் போராடும் எந்த கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் இராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் கிடையாது. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.

அதிபர் பராக் ஒபாமா கடந்த யூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை – “உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!”

இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஓசினி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!

சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்கலுக்கு எதிராக எகிப்து, யேமன், யோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!

இந்தியவைத் தவிர! முக்கியமாக தமிழகத்தில் நடக்கவே நடக்காது!...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 2:37 pm

நன்றி தினமணி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 2:59 pm

வேதனையான விஷயம் இது... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 3:24 pm

ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல நிசாந்தன், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இராணுவத்தின் முடிவு பாராட்டுக்குரியது.

அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என அங்கிருந்து திரும்பிய தமிழக இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எகிப்திய மக்களின் போராட்டம் வெற்றிபெறட்டும். தாய்லாந்துக்கு அடுத்தபடியாக இப்பொழுது எகிப்து!

நம்நாட்டிலும் வாராது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஊழல் ஊழல் எனப் படித்து நொந்து போயிருக்கும் மக்களிடம் சிறு நெருப்புத் தோன்றினாலும் நாடெங்கும் பற்றி எரியத் துவங்கிவிடும்.

பொறுத்திருந்து பார்ப்போம்!



எகிப்து எழுப்பும் எச்சரிக்கை...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக