புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
16 Posts - 3%
prajai
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
9 Posts - 1%
Jenila
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
4 Posts - 1%
jairam
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_m10மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி


   
   

Page 1 of 2 1, 2  Next

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 4:06 pm

ராஜ்குமார், ஒரு லாரி டிரைவர். நண்பர்களின் சகவாசத்தால் தொற்றிக் கொண்ட
குடிப்பழக்கம், காலையில் கண் விழித்ததும் மதுவை தேட வைத்தது. மது
அருந்தாவிட்டால், கைகளில் கடும் நடுக்கம். குடிபோதையில் என்ன செய் கிறோம்
என்பதே தெரியாது. விபச்சாரிகளுடனும் சகவாசம் ஏற்பட்டது. விளைவு:
ஆட்கொல்லியான எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொண்டு விட்டது.
சொந்த குடும்பமே ஒதுக்கி வைத்தாலும், இவரைப் போல வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அன்பு காட்டினர். குடிப்பழக்கத்தை கைவிட்டு, நேர்மையான
வாழ்க்கைக்கு திரும்பினார். தான் சம்பாதிப்பதில் தன் தேவைகள் போக, மீதித்
தொகையை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறார்.
*குடும்பம், உறவினர், நண்பர்கள், அலுவலக சகாக்கள் என, அனைவராலும்
வெறுத்து ஒதுக்கப் பட்டவர் நிர்மல். 20 ஆண்டுகாலம் அவரை ஆக்கிர மித்து
இருந்த குடிப்பழக்கம், இப்போது அறவே அவரிடம் இருந்து விலகிவிட்டது. நாள்
முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க முடிகிறது. 20 ஆண்டுகளாக முடங்கிக்
கிடந்தவர், அதற்கெல்லாம் சேர்த்து வைத்ததைப் போல, இப்போது கடுமையாக
உழைக்கிறார். வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டதை உணர்கிறார்.
*அவர் பெயர் கண்ணன். கல்லூரிக் காலத்தில் கைநிறைய பணப்புழக்கம்.
தேவைக்கு அதிகமான பணம், அவருக்கு சேரா நட்பை தேடித் தந்தது. நண்பர்கள்
அறிமுகப்படுத்திய குடிப்பழக்கம், அவரை அடிமையாக்கி விட்டது. திருந்தி
விடுவார் என்று திருமணம் செய்து வைத்தார் தந்தை. மூச்சுக்காற்றில் கூட
மதுவின் நெடி. அவரை நெருங்க விடாத மனைவி, தாய் வீட்டில் தஞ்சமடைந்து
விட்டாள்.
குடிப்பதற்கு பணம் இல்லாத போது, சொந்த வீட்டிலேயே திருடத் துவங்கினார்.
நாள் முழுவதும் போதை ஏற்றிக் கொள்ள பணம் போதவில்லை. அலுவலகத்தில் கையாடல்
செய்து சிக்கிக் கொண் டார். ஒரு மாத சிறைவாசத்தில், ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ்
இயக்கத்தின் அனுசரணை கிடைத் தது. குடிப்பழக்கம் அவரிடம் இருந்து விலகியது.
என்றாவது ஒரு நாள் தன் மனைவி திரும்ப வருவாள் என்று காத்திருக்கிறார்
கண்ணன்.
இவர்கள் வாழ்வில் புது வசந்தம் வீசுவதற்கு காரணம், “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ இயக்கம்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பில். இவர், ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக
பணியாற்றியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், பணி யில் கவனம் செலுத்த
முடியவில்லை; குடும் பத்தையும் கவனிக்க முடியவில்லை. குடிப்பழக் கத்தை
கைவிட பெரும் முயற்சி எடுத்தார்; முடியவில்லை. வில்லியம் சில்க் ஒர்த் என்ற
மனநல மருத்துவரிடம் சென்றார். குடிப்பழக்கத்தை நிறுத்து வதற்கு உதவி
கோரினார். ஆறு ஆண்டுகள் போராடி யும், குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.
ஆனால், எதையும் கருதாமல் டிச., 11,1934ல் திடீரென்று குடிப்பழக்கத்தை
நிறுத்தினார்.
இவரைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் டாக்டர் பாப். அறுவை
சிகிச்சை நிபுணர். குடிப்பழக்கம் இருந்தாலும், மருத்துவத் தொழிலில் பெரும்
கில்லாடி. குடிக்காமல், அவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது; கைகள்
நடுங்கும்.
டாக்டர் பாப்பை அறிந்த பில், அவரை சந்திக்க நேரம் கோரினார். 15 நிமிடம்
நேரம் ஒதுக்கித் தந் தார் டாக்டர் பாப். இருவரும் மனம் விட்டு பேசினர். 15
நிமிடம் நேரம் ஒதுக்கிய டாக்டர் பாப், ஆறே கால் மணி நேரம், குடிப்பழக்கம்,
அதனால் ஏற்படும் தீமை, பழக்கத்தை கைவிடும் முயற்சிகள் குறித்து பில்லுடன்
உரையாடினார். குடிப்பழக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதில் இருந்து
மீண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், இறுதித் தீர்வு கிடைக்கும்
என்று இருவரும் நம்பினர். இந்த சந்திப்பு நிகழ்ந்தது மே 12,1935ல்.
சில நாட்களில் டாக்டர் பாப்பும் குடிப் பழக் கத்தை நிறுத்தினார்.
குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை டாக்டர் பாப் உணர்ந்தார். கோபம், சுயபச்
சாதாபம் போன்றவையே குடிப் பழக்கத்துக்கு முக் கிய காரணங்களாக உணர்ந்தார்.
தன் மருத்துவமனையில் குடிநோயாளிகளுக்கு, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவே
தனி வார்டு துவக்கினார்; ஆனால், அதில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
பில் மற்றும் டாக்டர் பாப் இது குறித்து ஆலோசித்தனர். இருவரும்
சேர்ந்து, ஜூன் 10,1935ல் ஒரு குழுவை ஏற்படுத்தினர். “ஆல்கஹாலிக்ஸ்
அனானிமஸ்’ என்பது அந்த குழுவின் பெயர். இந்த அமைப்பை துவக்கிய போது சில
கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர் பாப் மற்றும் பில். அவை:
* அரசின், மது தொடர்பான கொள்கை முடிவுகளில் தொடர்பு இல்லை.
* மதம், ஜாதி, பிரிவுகள், அமைப்புகள், அரசியல் இயங்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
* கட்டாய உறுப்பினர் சேர்க்கை கிடையாது.
* உறுப்பினர்கள் மட்டுமே நன்கொடை அளிக்கலாம்.
* அதிகபட்ச நன்கொடைக்கு வரம்பு நிர்ணயம். தற்போது, அதிகபட்சமாக 40
ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதுவும் உறுப்பினர்களிடம் மட்டுமே நன்கொடை பெற்றுக்
கொள்ளப்படுகிறது.
* எதிர்காலத்தில் சச்சரவுகளை தவிர்ப்பதற்கு, இக்குழுவுக்கென சொத்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.
அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்த, “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பு,
உலகம் முழுவதும் பரவியது. 212 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டும் 840 குழுக்கள் உள்ளன; இவற்றில் 30 ஆயிரம் பேர்
உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமும், குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இக்கூட்டத்தில், மதுவால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும்,
அதில் இருந்து எப்படி மீண்டனர், அதற்குப் பின் ஏற்பட்ட புது வாழ்க்கையின்
வசந்தம் குறித்தும், உறுப்பினர்கள் விவரிக்கின்றனர்.
பெங்களூரு மற்றும் மும்பையில், குடிப் பழக்கத்துக்கு ஆளான பெண்களை மீட்பதற்காக, பிரத்யேக கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
“ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பில் உறுப்பினர்களாக இருப்போர், குடியின்
கொடுமை குறித்து முழுமையாக அறிந்து, அதில் இருந்து மீண்டு, நல்வாழ்க்கை
நடத்துவோர்கள் தான். இவர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மற்றவர்களை
மீட்பதை தங்களின் முக்கிய குறிக் கோளாக கொண்டுள்ளனர்.
குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் குடிக்கும் ஆவல் எழும் போது,
இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அப்போது, அவர்கள்
தொலைபேசியிலேயே கவுன்சிலிங் அளித்து, குடிக்கும் எண்ணத்தை மாற்றி
விடுகின்றனர். தேவைப்பட்டால், வீட்டிற்கு அல்லது குடிப்பழக்கத்தை
நிறுத்தியவர் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று கவுன்சலிங்
அளிக்கின்றனர். இதை ஒரு சேவையாக மட்டுமின்றி, கடமையாக அவர்கள்
கருதுகின்றனர்.

குடிப்பழக்கத்தில் இருந்து மீள விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி:

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
சென்னை ஒருங்கிணைப்புக்குழு
கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்,
17, பால்பர் ரோடு, கீழ்பாக்கம்,
சென்னை 600 010.
தபால் பெட்டி எண்: 1065
போன்: 2644 1941
இ-மெயில்: alcoholicsananymouschennaiig@gmail.com

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 938222 அன்புடன் லக்ஷ்மன் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 938222

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:15 pm

அருமையான எல்லோருக்குமே பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மண்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 47
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 4:16 pm

நன்றி அக்கா



மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113 அன்புடன் லக்ஷ்மண் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Sat Mar 19, 2011 4:23 pm

பயனுள்ள செய்தி அவர்கள் பணி தொடர என் மனமாற கடவுளை பிரார்த்திக்கிறேன்





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 4:25 pm

நண்பா எல்லா புகழும் கடவுளுக்கே



மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113 அன்புடன் லக்ஷ்மண் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 7:52 pm

சேர்ந்த இரண்டே நாட்களில் பல அரிய தகவல்களை வழங்கி வரும் லக்‌ஷ்மணனுக்கு அன்பார்ந்த நன்றிகள்..

என்ன பணி செய்கிறீர்கள் தம்பி..?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 11:01 am

வணக்கம் அக்கா, நான் ஈசா எஜுகேஷன் என்னும் டிரஸ்ட்-ல் அக்கவுண்டன்ட் -ஆக பணிபுரிகிறேன்



மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113 அன்புடன் லக்ஷ்மண் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:04 am

அருமையான பயனுள்ள தகவல் லக்ஷ்மண் நீங்க கொடுத்து இருக்கற பதிவு.என் அன்பு நன்றிகள்



மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Yமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Sமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Hமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 11:09 am

Lakshman wrote:வணக்கம் அக்கா, நான் ஈசா எஜுகேஷன் என்னும் டிரஸ்ட்-ல் அக்கவுண்டன்ட் -ஆக பணிபுரிகிறேன்

அதிர்ச்சி அதிர்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:14 am

கலை wrote:
Lakshman wrote:வணக்கம் அக்கா, நான் ஈசா எஜுகேஷன் என்னும் டிரஸ்ட்-ல் அக்கவுண்டன்ட் -ஆக பணிபுரிகிறேன்

அதிர்ச்சி அதிர்ச்சி
எனக்கு தெரியும் நீங்க இந்த மாதிரி ஷாக் ஆகுவீங்கன்னு.நீங்க எதுக்கு உங்க புகை படத்தை எடுத்துட்டு நாய் குட்டி படத்தை போட்டு இருக்கீங்க.பாருங்க நீங்க அக்காவா இல்லை அண்ணாவானு அவருக்கு தெரியலை



மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Yமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Sமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி Hமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக