புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்யுக்தா Poll_c10சம்யுக்தா Poll_m10சம்யுக்தா Poll_c10 
42 Posts - 63%
heezulia
சம்யுக்தா Poll_c10சம்யுக்தா Poll_m10சம்யுக்தா Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சம்யுக்தா Poll_c10சம்யுக்தா Poll_m10சம்யுக்தா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சம்யுக்தா Poll_c10சம்யுக்தா Poll_m10சம்யுக்தா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்யுக்தா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:04 pm

"ஐயா...''

பிரம்பு நாற்காலியில் பேப்பர் சகிதம் உட்கார்ந்து இருந்த அப்பா நிமிர்ந்து பார்த்தார்.

நோஞ்சான் உடம்போடு வேலையாள் நின்றிருந்தான். அவன் பெயர் கன்னியப்பன். என்ன கன்னியப்பா? முரட்டுக் குரலில் கேட்டார்

அப்பா."நாளைக்கு பண்ணை வீட்டுக்கு போவணுமான்னு கேக்க வந்தேனுங்க!'' குரலிலும் உடம்பிலும் பவ்யம்.

அப்பா சற்றே யோசித்தார்.

"போலாம் கன்னியப்பா... நீ போயி சம்யுக்தாவை ரெடி பண்ணி வை!''

"சரிங்கய்யா!''

கன்னியப்பன் அதே பணிவோடு வெளியேறினான். கன்னியப்பன் என்றில்லை. வீட்டில் எல்லா வேலைக்காரர்களுக்கும் அப்பா சிம்ம சொப்பனம்... வேலைக்காரர்கள் மட்டுமா... நானுந்தான்.

"என்னடா ஒழுங்கா படிக்கிறியா... ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சியா?''

"செஞ்சிட்டேம்பா!''

இதற்குள் எனக்கு டிராயர் நனைஞ்சிடும். அப்படிப்பட்ட அப்பா. என்ன இருந்தாலும் நாலாங்கிளாஸ் படிக்கிற என்னை அப்பா இப்படி மிரட்டுவது அதிகம் தானே?

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. அப்பா தன் பிசினஸ் வேலைகளை ஓரமாய் மூட்டை கட்டி வைத்திருக்கும் நாள். காலை ஐந்தரைக்கெல்லாம் ரெடியாகி விடுவார். அம்மாவையும் என்னையும் கூட்டிக் கொண்டு திருவான்மிïர் பண்ணை வீட்டுக்கு போய்விடுவார். அம்மா சமைப்பாள். நான் வீட்டை சுற்றிச் சுற்றி வருவேன். அப்பா மட்டும் சம்யுக்தாவுடன் போய் விடுவார்.

கொஞ்சம் கறுப்புக் கலரையும் நிறைய பிரவுன் கலரையும் சேர்த்துக் குழைத்து எண்ணெய் பூசினால் எப்படி இருக்கும்? அந்த கலவை தான் சம்யுக்தா குதிரை. நல்ல உயரம். சீவி விட்ட மாதிரியான வால் முடியை ஆட்டிக் கொண்டு அது நிற்கிற அழகே தனிதான். எனக்கெல்லாம் அந்தக் குதிரையை தொடக்கூட மனசு வராது. அத்தனை அழகு. அதில் போய் எப்படித்தான் அப்பா உட்காருகிறாரோ...

சில சமயம் அப்பா சாட்டையால் அதை அடிக்கும் போது எனக்கு வலிக்கும்.

"இந்த அப்பாவை எனக்குப் புடிக்கலை கன்னியப்பா... சம்யுக்தாவைப் போட்டு எப்படி அடிக்கிறார் பாரு..''

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது தம்பி. அது ஒழுங்கா ஓடமாட்டேங்குது. அதான் ஐயா அதை அடக்கிறாரு!''

"அதுக்கு ஓடப் புடிக்கலியா இருக்கும்... எதுக்கு கட்டாயப் படுத்தறாரு?''

என்னுடைய கேள்விக்கு பல சமயங்களில் கன்னியப்பன் பதில் சொல்வதில்லை.

அப்பா சவாரி செய்யாத நேரங்களில் நான் அதன் அருகே போயிருக்கிறேன். தலையை இஷ்டத்திற்கு ஆட்டிக் கொண்டு நிற்கும்.

அதன் வெல்வெட் மாதிரி தோற்றம் தரும் உடம்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். எத்தனை நேரம் பார்த்தாலும் ரசித்தாலும் எனக்குள் மிஞ்சுவதென்னவோ வியப்பு மட்டும் தான்.

எவ்வளவு அழகான குதிரை...

"என்னடா சோம்பேறியாட்டம் உக்காந்திருக்க... கெட்-அப். நாளைக்கு பண்ணை வீட்டுக்குப் போகணும்னு அம்மாட்ட போயிச்சொல்லு. ஓடு... ம்... க்விக்''

விட்டால் போதுமென்று அம்மாவிடம் ஓடினேன்.

மறுநாள் காலை திருவான்மிïர் வீடு. வீட்டின் முன்புறம் பெரிய வாள். புல்வெளியில் வெள்ளை பெயிண்ட்அடித்த நாற்காலிகளும் குட்டை மேடையும் கிடப்பது அழகு. வீட்டுக்கு வலதுபக்கம் இரையும் கடல்.

நாங்கள் போன நேரம் கன்னியப்பன் சம்யுக்தாவை துடைத்து விட்டுக் கொண்டிருந்தான்.

அப்பா டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நடைபோட, நான் அம்மாவின் கையை சுரண்டி விட்டு லாயத்துப் பக்கம் ஓடினேன்.

"சம்யுக்தா ரெடியாயிருச்சா கன்னியப்பா...''

"வந்துட்டீங்களா தம்பி... ஆச்சு... கழுதை சாப்பிடத்தான் மாட்டேங்குது...''

எனக்குக் கவலையாக இருந்தது.

"ஏன் கன்னியப்பா...?''

"யாருக்குத் தெரியும்? வாயைத் தொறந்து பேசற நமக்கே பலநேரம் என்ன பண்ணுதுன்னு சொல்ல வரமாட்டேங்குது. இது பாவம்! வாயில்லாப் பிராணி... என்ன பண்ணும்... எப்பிடிச் சொல்லும்... ஏதோ ஒடம்புக்கு பண்ணுது... அவ்வளவு தான் நமக்கு புரியும்!''

கண்ணுக்கு கவசம் மாட்டி, சேணம் மாட்டி சம்யுக்தாவை தயார் பண்ணிக் கொண்டிருந்தான் கன்னியப்பன்.

"என்ன கன்னியப்பா... ரெடியா?''

அப்பாவின் கனமான குரல் கேட்டது. வெள்ளை நிற ஸ்போர்ட்ஸ் உடையில் இருந்தார் அப்பா.

சம்யுக்தா சாப்பிடவில்லையே... இவ்வளவு பெரிய அப்பாவைத் தூக்கிக் கொண்டு எப்படி ஓடும்?

"சம்யுக்தாக்கு சுகமில்லை டாடி... சாப்பிடவே இல்லியாம்!''

அப்பா முறைத்தார்.

"நீ இங்க என்ன பண்றே?''

சுவரோடு ஒண்டினேன்.

"போ... போயி ஏதாவது காமிக்ஸ் படி. வீடியோல கார்ட்டூன் பாரு. அத விட்டுட்டு...''

சம்யுக்தாவை பரிதாபமாய் பார்த்து விட்டு நகர்ந்தேன்.

அரைமணி கழித்து திடீரென்று போர்டிகோ பக்கம் ஏதோ வேன் சத்தம்... காரே மூரேயென்று மனிதக் குரல்கள்...

வாசலுக்கு ஓடினேன்.

அழுக்கு லுங்கியும் கையில்லா பனியனும் போட்ட ஐந்தாறு ஆசாமிகள் சம்யுக்தாவை வேனில்இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

"சாவித்ரி...''

அப்பாவின் கத்தலுக்கு அம்மா அவசரமாய் ஈரக்கையோடு கிச்சனிலிருந்து வந்தாள்.

"ஓடும் போது ஸ்லிப்பாகி சம்யுக்தா விழுந்திருச்சு. கால் ஒடிஞ்சிருச்சின்னு நெனைக்கிறேன். வேன்ல போட்டு கொண்டாந்திருக்கேன்... கன்னியப்பன் வந்ததும் அலெக்சுக்கு ஆளனுப்பி வரச்சொல்லி சுட்டுடச்சொல்லு... அப்புறமா என்னைய வந்து பாக்கச் சொல்லு!''

வரிசையாய் கட்டளைகளை போட்டுவிட்டு அப்பா படியேற... சாமி மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு நின்றாள் அம்மா. நான் திகைத்தேன்.

`சுட்டுடறதா... எதுக்கு... கால்ல அடிபட்டா காலு ஒடிஞ்சுபோனா டாக்டர்கிட்ட ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாதா? சுட்டா செத்துப் போயிடாதா...

கிச்சனுக்கு போகத் திரும்பிய அம்மாவை உலுக்கினேன்.

"அம்மா... சம்யுக்தாவ எதுக்கும்மா சுடணும்?''

"அப்பத்தான் செத்துப்போகும்!''- அம்மா சாதாரணமாய் சொல்லிவிட்டுப் போனாள்.

எனக்கு திக்கென்றது.

சம்யுக்தா எதுக்கு சாகணும்... சம்யுக்தா எவ்வளவு நல்ல குதிரை... இத்தனை நாளாய் அப்பாவுக்கு அது எவ்வளவு உபயோகமாய் இருந்தது. கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அம்மா அதை சுட்டுவிடச் சொல்லி விடாதே... சம்யுக்தா பாவமில்லியா... தானா செத்தா பரவாயில்லை... சாமி கூப்பிட்டுகிட்டுன்னு வெச்சிக்கலாம்... எதுக்கு நாமளே அதை சாவடிக்கணும்...

மனசு தாளாமல் சம்யுக்தாவை தேடிப் போனேன்.

ஒரு மாதிரி இரைச்சலாய் மூச்சு விட்டுக் கொண்டு தரையில் சரிந்து கிடந்தது சம்யுக்தா. கண்ணை மூடியிருந்த கவசத்தை மீறி நீர்க்கோடு இறங்கியிருந்தது. வலி தாங்காமல் அழுகிறதா? கன்னியப்பன் ஓடிவந்தான். அவன் கண்களும் கலங்கியிருந்தன.

"தம்பி... நீ ஏன் இங்க வந்த...அப்பா பாத்தா கோச்சுக்குவாரு...''

"சம்யுக்தா பாவம் கன்னியப்பா... ஆஸ்பத்திரில சேத்து காப்பாத்திடேன்... மருந்து போட்டா சரியாயிடும்ல...''

"சரியாயிடும் தம்பி... ஆனா, உங்கப்பா எதிர்பார்க்கற மாதிரி ஓடாதே...''

"அதுக்காக... சாவடிக்கணுமா... நமக்கெல்லாம் அடிபடலை... டாக்டர் சரி பண்ணிடறார்ல... எத்தனை மனுஷங்க நொண்டியா... கால் குட்டையால்லாம் இருக்காங்க... அவங்களை சாவடிக்கவா செய்யறோம்... குதிரைன்னா மட்டும் என்னா...''

"குதிரைக்கு வாயில்லப்பா... இதையெல்லாம் கேக்குறதுக்கு! மனுஷனுக்கு மனுஷன் இஷ்டம் போல வாலாட்ட முடியாமல் போயித்தான் எரிச்சலையெல்லாம் பிராணிங்க மேல காட்டறாங்க... நல்லாருக்க வரைக்கும் உபயோகிப்பாங்க... ஒருநாள் படுத்துட்டாலும் ஒதுக்கிடுவாங்க...''

அவன் பேசியது நிறைய புரியவில்லை.

"ஆனா நமக்கு வாயிருக்கே...நாம சம்யுக்தாவுக்காக பேசலாமே கன்னியப்பா...''

"என்ன தம்பி சொல்றே?''

"புளூகிராசுக்கு போன் பண்ணியிருக்கேன். கொஞ்ச நேரத்திலே வரதா சொன்னாங்க. ஒருவேளை அவங்க மூலமாவாச்சும் சம்யுக்தாவுக்கு கால் சரியாச்சுன்னா கடைசிவரைக்கும் உயிரோடயாவது இருக்கும்தானே...''

கன்னியப்பனிடம் பதில் இல்லை. ஆனால் கண்கள் பனித்திருந்தன.

- போளூர் சி. ரகுபதி



சம்யுக்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:09 pm

நல்ல கருத்து உள்ள கதை.பகிர்ந்தமைக்கு நன்றி



சம்யுக்தா Uசம்யுக்தா Dசம்யுக்தா Aசம்யுக்தா Yசம்யுக்தா Aசம்யுக்தா Sசம்யுக்தா Uசம்யுக்தா Dசம்யுக்தா Hசம்யுக்தா A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 7:50 pm

நான்காம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு ப்ளூ கிராஸ் பத்தி தெரியுதே... நல்ல கதை... நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 8:11 pm

குழந்தைக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட வளர்ந்த அப்பாக்கு இல்லையே...

எல்லாரையும் உருட்டி மெரட்டிக்கிட்டே இருந்தால் ஆச்சா?

வாயில்லா ஜீவன்....அது நினைச்சிருந்தா கொன்னு போட்டிருக்கும் இவர் செய்ற அழும்புக்கு.....

நல்லவேளை குதிரை சம்யுக்தா உயிர் தப்பியது....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சம்யுக்தா 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக