புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
17 Posts - 4%
prajai
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
9 Posts - 2%
jairam
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_m10மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 18, 2011 1:09 pm

அடாவடிகளும் ஆணவப்போக்கும் அமைச்சர்களின் வெற்றியைக் காவு வாங்கத் தயங்காது என்பது குறித்து, '6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!’ என்ற தலைப்பில் 3.4.11 தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம். வானில் மிதப்பவர்களாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள், 'நாங்கள் வெற்றி பெறப்போகும் வித்தியாசத்தை ஜூ.வி. பார்க்கத்தானே போகிறது?’ என்று சவால் விட்டார்கள். வாக்கு எண்ணிக்கை வெளியான நாளில் நம் கணிப்பு அப்படியே நிகழ்ந்தது. 26 அமைச்சர்களில் 18 பேர் மண்ணைக் கவ்வினார்கள். அசைக்க முடியாத சக்திகளாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள் செமத்தியாக வீழ்த்தப்பட்டதற்கு என்ன காரணம்?

'அய்யோ பாவம்’ அன்பழகன்!

'துறைமுகம் தொகுதியில் இருந்து வில்லிவாக்கத்துக்கு மாறினாலும் அன்பழகனுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை!’ எனச் சொல்லி இருந்தோம். அது அப்படியே நிகழ்ந்தது. அடாவடி, முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அறவே இல்லை என்றாலும், ஆக்கபூர்வமான பணி எதுவுமே இல்லை என்பதால், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் இந்த பழுத்த அரசியல்வாதி!



'ஆறு கொலை’யால் வீழ்ந்த ஆறுமுகம்!

தடாலடிக்குக் குறைவு இல்லாத வீரபாண்டி ஆறுமுகம் தற்காப்பு முயற்சியாக இந்தத் தேர்தலில் சங்ககிரி தொகுதிக்கு மாறினார். ஆனாலும், மக்களின் ஆவேசத்தில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. சேலத்தில் ஒரே வீட்டில் நடந்த ஆறு படுகொலைகளும், அதில் வீரபாண்டியாரின் உறவின​ரான பாரப்பட்டி சுரேஷ் வளைக்கப்​பட்டதும், சொத்துக் குவிப்புகளும் மாவட்டத்தையே திகைக்கவைத்தது. போதாக் குறைக்கு ஸ்டாலினுடன் மோதல் வேறு. எல்லாமும் சேர்ந்து​தான் தலை குப்புறத் தள்ளி​விட்டது, இந்தத் தடாலடிப் புள்ளியை!

பொன்முடியைப் புரட்டிய 'எரிச்சல்!’

பொன்முடி, கட்சிக்காரர்களிடம் எரிந்து விழும் வழக்கம்கொண்டவர். இவரை வீழ்த்த சரியான ஆயுதமாக, மென்மைப் புள்ளியான சி.வி.சண்முகத்தை அ.தி.மு.க. நிறுத்தியது. அப்போதே உஷாராகி இருக்கவேண்டிய பொன்முடி, கரன்ஸியை நம்பினாரே தவிர, கட்சிக்காரர்களைக் கடுகளவும் மதிக்கவில்லை. தேர்தல் முடிந்த ஒரு மாத இடைவெளியில், பொன்​முடியின் கல்லூரிக்காக 30 பேருந்துகள் வாங்கப்பட்டன. 'மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆவார்’ என்கிற நம்பிக்​கையில் அவற்றை வாங்கி வந்தது பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி. மக்களின் மனநிலை புரியாமல் 'பெருக்குவதிலேயே’ தீவிரமாக இருந்ததால்தான், பொன்முடிக்கு இந்தப் பொளேர் அடி!

நெளிய முடியாத நேரு!

'ஊரையே வளைத்துப் போட்டுள்ள நேருவின் அடா​வடிகளே, திருச்சி மாவட்​டத்தில் அ.தி.மு.க-வை அமோகமா ஜெயிக்க​வெச்சி​டுவாங்கம்மா!’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் நேருவை எதிர்த்துக் களம் இறங்கிய மரியம் பிச்சை. 'திருச்சியில் மலைக்கோட்டையை மட்டும்தான் விட்டுவெச்சிருக்கியா நேரு?’ என கருணாநிதியே நேரடியாக நேருவை கிண்டல் அடித்ததாகச் சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் நேருவின் உறவினருக்குச் சொந்தமான எம்.ஜெ.டி. பேருந்தில், ஐந்தரை கோடி ரூபாய் பிடிபட்டது. நேருவின் சகோதரர்கள் சேர்த்து​வைத்த 'நல்ல’ பெயர்களும் சந்தி சிரித்தன. தொகுதி முழுக்கப் பண மழை பொழிந்தும் நேரு வெல்ல முடியாததற்குக் காரணம், அதே பணம்!

பரிதாபப் பரிதி!

பரபரப்பும் விறுவிறுப்புமாக பரிதியைப் பார்த்து பலவருடங்​களாகிவிட்டன. மிகச் சொற்​பமான வாக்குகள் முன்னும் பின்னுமாக ஏறி இறங்கியபோது, 'என் தொகுதி என்னைக் கைவிடாது’ என நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் பரிதி. கட்சியின் அடிமட்டத் தொண்​டன் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் தேர்தலுக்கு முன்னால் கண்டுகொள்ளவில்லை என்ற கோபம் இவர் மீது இருந்​தது!

அடங்காத அன்பரசன்!

ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டே இருப்பது தா.மோ.அன்பரசனின் வழக்கம். அதனாலேயே இவருடைய பெயரை டவுட் பட்டியலில் எழுதி இருந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளைச் சரிக்கட்டி, பெரும் வெற்றிக்குத் தயாராக இருந்தார். தேர்தல் நேரத்திலும் தீராத பண மழை... ஆனாலும், ஸீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த இ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை, அன்பரசனால் சரிக்கட்ட முடியவில்லை.மணல் விவகாரம் தொடங்கி பல விவகாரங்கள், அவருடைய வெற்றிக்கு ஆப்புவைத்தன!

இடியில் சிக்கிய எம்.ஆர்.கே.!

'நிச்சயம் ஜெயிப்பார்!’ எனக் கட்சி இவரை உறுதியாக நம்பிய​போதும், இவர் தேறுவது கடினம் என்றே எழுதி இருந்தோம். கடுகடு முகம்... சிடுசிடு வார்த்தை... எனக் கட்சிக்காரர்களிடம் எம்.ஆர்.கே. சம்பாதித்த 'நல்ல’ பெயருக்கு அளவே இல்லை. 'அவரை வளர்ப்​பது... இவரை வளைப்பது’ எனக் கோஷ்டி அரசியலை கொம்பு சீவிவிட்டதிலும் எம்.ஆர்.கே-வுக்கு பெரிய 'புண்ணியம்.’ யாரையும் மதிக்காத 'மாண்பே’ இவரை இடியில் சிக்கவைத்தது!

ஒன்றும் செய்யாத உபயதுல்லா!

மூன்று முறை தொடர்ந்து தஞ்சாவூரில் வென்று இருந்தாலும், தொகுதிக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 'நான் நிச்சயம் தோற்றுவிடுவேன்’ எனப் பிரசாரத்தின்போது வெளிப்​படையாகப் பேசி, பீதியைக் கிளப்​பினார். மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் உள்ளடி வேலைகளைத்தான் அப்படி சூசகமான வார்த்தைகளால் சொன்​னார். அது அப்படியே பலித்தது!

மன்றாடிய மதிவாணன்!

'மதிவாணனுக்கு பால் பொங்​குவது கஷ்டம்!’ என சொல்லி இருந்தோம். கீழ்வேளூர் தொகு​தியின் மீனவர் பகுதி வாக்குகள் இவரைத் தலைகுப்புறத் தள்ளித் தோற்கடித்தன. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த மதிவாணன், பங்களா கட்டி பால் காய்ச்சியபோதே, அய்யாவின் செல்வாக்கு அவுட். 'அங்கே சொத்து... இங்கே ஃபேக்டரி...’ என எதிர்க் கட்சிகள் கிளப்பிய பிரசாரமும் நன்றாக எடுபட்டது!

செல்வாக்கு இழந்த செல்வராஜ்!

வனத் துறை அமைச்சராக இருந்த செல்வராஜ், கோஷ்டி அரசியலை தீவிரமாக முன்னெடுத்​தவர். நேருவுக்கும் இவருக்கும் நேரடி​யாகவே மோதல் நடந்தது. சாதிய வாக்குகளை மட்டுமே நம்பியதும், உள்ளடி வேலைகளும்தான் செல்​வராஜின் செல்வாக்கை ஓட்டை​யாக்கின!

சுறுசுறு இழந்த சுரேஷ்ராஜன்!

அசராத சுறுசுறுப்பாலேயே அமைச்சர் பதவி பெற்றவர். எளிமையும் சுறுசுறுப்பும் சைரன் கார் சத்தத்தில் சைலன்ட்டானது. உள்ளடிப் பூசல்களும் நிறைய. உறவு வட்டமும் கட்சியை ஆட்டிப் படைத்ததால், இவருடைய தோல்வியில் கட்சித் தலைமைக்கே பெரிய ஆச்சர்யம் இல்லை!

புகழ் இழந்த பொங்கலூர் பழனிசாமி!

அமைச்சர் ஆனது முதல் 'கோஷ்டி’ அக்கப்போரில் இறங்கியதும், கட்சி வேலைகளைவிடச் சொந்த சம்பாத்தியங்களில் கவனம் செலுத்தி​யதும்தான் இவரது தோல்விக்குக் காரணம். உள்ளடி உபத்திரவங்களே பழனிசாமியைப் பஞ்சராக்கின!

சக்தி இழந்த சாத்தூர் ராமச்சந்திரன்!

சாத்தூரைத் தவிர்த்துவிட்டு, அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். கட்சிக்காரர்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யாததும், உறவினர்களைக் கட்சிக்குள் வளரவிட்டதும், சாத்தூராரின் சக்தியைக் குறைத்து​விட்டன!

வீழ்த்தப்பட்ட 'வெள்ளக்கோவில்’!

''சொல்லிக்கொள்ளும்படி என்ன செய்தார்?'' எனத் தொகுதிக்குள் பட்டிமன்றமே நடத்தலாம். தொகுதி மாறியதால், தொல்லை இருக்காது என நினைத்தார். பண இறைப்பை நிகழ்த்தினார். ஆனாலும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சண்முகவேலு கையே ஓங்கியதால் வீழ்ந்தார்!

தடுமாறிய தமிழரசி!

'உன்னைப்பற்றிய ரிப்போர்ட் சரி இல்லையே... அதனால், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!’ என கருணாநிதி பகிரங்கமாகச் சொன்னபோதே, தலைவரின் வார்த்தைகளை தமிழரசி ஏற்று இருக்கலாம். 'எப்படி இருந்த தமிழரசி இப்படி ஆயிடிச்சு?’ எனத் தென் மாவட்டமே திகைத்தது. அழகிரி பெயரை அதிகமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கவனிக்காததன் விளைவு இது!

சாமியை வீழ்த்திய தாட்பூட்!

கே.பி.பி.சாமி அமைச்சரான பிறகும், அவருடைய தடாலடி முகம் மாறாததுதான் ஆச்சர்யம். சாமியின் பேரைச் சொல்லி திருவொற்றியூர் தொகுதி முழுக்கக் கட்டப் பஞ்சாயத்து, வெட்டுக் குத்து என மிரட்டல்கள். சாமி தடுக்கவும் இல்லை; தட்டிக் கேட்கவும் இல்லை. இந்த நிலைகுலைவுக்கு அதுதான் காரணம்!

புஸ்ஸான பூங்கோதை!

'என்னதான் சிரமப்பட்டாலும் தேறுவது கடினம்!’ என்றே இவருடைய நிலவரம் குறித்து எழுதி இருந்தோம். அதன்படியே நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்து இருக்கிறார் பூங்கோதை. கட்சிக்காரர்கள் மத்தியிலான வெறுப்பு, தொகுதிக்குப் பெரிதாக ஏதும் செய்யாதது என மைனஸ் பட்டியலின் நீளம் அதிகம்!

'கிர்’ கீதா ஜீவன்!

முரட்டு பக்தர் பெரியசாமியின் மகள். தந்தையின் தலையீடுகளே கீதா ஜீவனைக் கிறுகிறுக்கவைத்தன. 'தொகுதிக்கு இன்னும் செய்திருக்கலாம்’ என்கிற ஏக்கமும் மீனவர்கள் விவகாரமும், கீதாவுக்குப் பின்னடைவைக் கொடுத்தன. தனிப்பட்ட புகார்கள் ஏதும் இல்லை என்றாலும், தாளித்து எடுத்த புயலுக்கு இவர் தப்பவில்லை

விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 1:35 pm

நல்லா தாம்பா சொல்லி அடிச்சிருக்காங்க கில்லி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 1:41 pm

இவை யாவும் முன்னரே தெரிந்தது தானே சிரி சிரி சிரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்  Scaled.php?server=706&filename=purple11
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 2:35 pm

'கிர்’ கீதா ஜீவன்!
புஸ்ஸான பூங்கோதை!

அனைத்து தலைப்புகளும் அருமை





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக