புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
29 Posts - 73%
heezulia
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
11 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
66 Posts - 65%
heezulia
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
32 Posts - 31%
mohamed nizamudeen
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_m10எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 17, 2011 6:00 pm

தற்போதைய கல்வி சீர்திருத்தத்தில் சமச்சீர் கல்வி அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சினை எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற சட்டம்.மேற்பார்வைக்கு இது குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டு, அவர்களது
கல்விச்சுமையைக் குறைக்க வந்த திட்டம் என்று தோன்றினாலும், உண்மையில்
அவர்களுக்கு பெரும் கெடுதலையே இந்தச் சட்டம் செய்கிறது.



இந்தச்சட்டப்படி, ஒரு மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்க முடியாது. படிப்பறிவு பெறாத பெற்றோர் விழிப்புணர்வு பெற்று
’நாங்க தான் படிக்கவில்லை. எங்கள் பிள்ளைகளாவது படிக்கட்டும்’ என்று
பள்ளிக்கு அனுப்பும் காலம் இது. நானும் அப்படிப் படித்து வந்தவனே. இந்தச்
சட்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது என் நினைவுக்கு வருவது இரு நபர்கள்..

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? School
முதலாவது
என்னுடன் படித்த நண்பன் ராமன். அவனது அப்பாவும் அம்மாவும் படிக்காத கூலித்
தொழிலாளிகள். ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராம அரசுப் பள்ளியில் படித்த
ராமன் ஆறாவது படிக்க டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் ததிங்கிணத்தோம் தான்.
இங்கிலீஸ் சுத்தமாகத் தெரியாது. எனவே ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆனான். அவன் அப்பாவும் ‘ஒழுங்கா படிக்கலேன்னா, சாந்துச்சட்டி தாம்லே’ என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அது அவனை மிகவும் யோசிக்க வைத்தது. சாந்துச்சட்டி என்பது கொத்து வேலைக்கு பயன்படுவது. எனவே ராமன் பயந்து போய் படிக்க ஆரம்பித்தான்.இன்று அவன் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறான்.



அடுத்தவர்
என் அண்ணி. என் அண்ணனின் மகன் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக் கார்டு தபாலில்
வந்தது. அன்று நானும் இருந்தேன். பிரித்துப் பார்த்தால் மகன் ஃபெயில்!
அண்ணியார் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ”நீயாவது உங்கப்பா மாதிரி
இல்லாம படிச்சு முன்னேறுவேன்னு பார்த்தா, இப்படி ஃபெயிலாகி
நிக்குறியே..நம்ம தலையெழுத்தே அவ்வளவு தானா?” என்று அழுது தீர்த்தார். அது
அவனைப் பாதித்தது. அதன் பிறகு அவன் ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தான்..


முதல்தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷயம். பெரும்பாலான மாணவர்கள் படிப்பது ஆசிரியரின்
கண்டிப்புக்குப் பயந்தும், ஃபெயிலாகி விடுவோம் என்ற அவமானத்திற்குப்
பயந்தும் தான்.



ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனுக்கு ஆனா ஆவன்னா தெரியாவிட்டாலும், அவன் எட்டாம் வகுப்பு வரை வந்துவிட முடியும். அப்ப்டி வந்த ஒருவன், 14 வயதிற்குப் பின் திடீரென படித்தால் தான் பாஸ் என்றால் அவன் என்ன செய்வான்? டீன் ஏஜில் நுழைந்த பிறகா ஒருவன் படிப்பில் திடீர் அக்கறை கொள்வான்?


சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஒரு ஆசிரியரின் திறமை மதிப்பிடப் படுவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்துத் தான். எட்டாம் வகுப்பு வ்ரை ஆல் பாஸ் என்றால், அவர்கள் சரியாகத் தான் பாடம் நடத்துகிறார்கள் என்பதற்கு என்ன
உத்தரவாதம்? எப்படியும் ஆல் பாஸ் எனும்போது எதற்காக அவர்கள் அக்கறையோடு பாடம் நடத்த வேண்டும்? அப்படியென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெறப்போகும் சம்பளம் வீண் தானா?



இந்தப்பதிவிற்காக இப்படி எல்லாம் சிந்தித்த வேளையில், ஒரு அரசுப்பள்ளியில்
ஆசிரியராக வேலை செய்யும் என் சித்தப்பா ஒருவரைத் தொடர்பு கொண்டேன். மேலே உள்ள கேள்விகளைக் கேட்டேன்.



அதற்கு அவர் சொன்னது:”நீ கேக்குறது சரி தான்பா..பாடத்தை ஏண்டா கவனிக்கலேன்னே ’எப்படியும் பாஸ் தானே போடப்போறீங்க சார்..அப்புறம் ஏன் படி படின்னு இம்சை பண்றீங்க’ன்னு கேட்குறானுக. என்னை மாதிரி மனசாட்சிக்குப் பயந்தவங்க தான் சிலபஸ் முடிக்கிறோம்..மத்தவங்க ‘எப்படியும் இவனுக கவனிச்சுப் படிக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் தொண்டை வத்த நாம கத்தணும்’னு நினைக்கிறாங்க. கிராமத்து மாணவங்க வாழ்க்கையே வீணாப் போகுது”
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Large_115733
தனியார் பள்ளிகளாவது 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் காட்ட, இந்தச் சட்டத்தை
மதிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே கண்டிப்புடன் பாடம் நடத்தலாம். ஆனால்
அரசுப்பள்ளிகளின் நிலை என்ன ஆகும்? ஒருவேளை இந்தச் சட்டமே ஏற்கனவே
தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை அழிக்க, தனியார்+அரசால்
செய்யப்பட்ட சூழ்ச்சியோ?



நன்றி:செங்கோவி


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 17, 2011 6:48 pm

உண்மை தான். நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியன் என்ற வகையில். இந்த கட்டுரையோடு உடன்படுகிறேன்.ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு வித அலட்சியம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு மாணவன் சில மாதமே பள்ளி வந்தான். ஆண்டு தேர்வுக்கு கூட வரவில்லை. ஆனால் அவனை ஒன்பதாம் வகுப்பிற்கு பாஸ் போட வேண்டியுள்ளது. காரணம் . ஒரு நாள் பள்ளிக்கு வந்தாலும் பாஸ் தானாம் இதற்கு எங்கே போய் என்ன கொடுமை சார் இது வதோ தெரியவில்லை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:36 am

ஹூம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 6:57 am

இது உண்மையிலேயே ஒரு மோசமான சட்டம். இதனால் மாணவர்களின் கல்வி திறன் குறையுமே தவிர கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 8:31 am

மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் கேவலமான இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் போராட வேண்டும்.

இந்தச் சட்டத்தால் சிறு துளியும் நன்மை இல்லை! பிறகு எதற்கு என்றால் கட்டுரையில் இறுதியில் கூறியுள்ள வார்த்தைகள் முற்றிலும் உண்மை!

இப்பொழுது பெரும்பாலான அரசு பள்ளிகள் ஒரு சில மாணவர்களுடன் செயல்படுகிறது! அந்த ஒரு சில மாணவர்களையும் தனியார் பள்ளிகள் விழுங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சட்டம்!



எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 8:56 am

அட அநியாயமே ! இப்படி செய்தால் "பிரெய்ன் டிரைன்" தான் ஆகும். ஓர் படத்தில் காட்டுவார்கள், அந்நிய சக்க்த்திகள் இந்தியா வில் உள்ள அறிவு ஜீவிகளை கொன்றுக்கொண்டே வருவார்கள் என. இந்த சட்டத்தால் அவர்களுக்கு அந்த வேலை இல்லாம செய்து விட்டது நம்ம அரசு எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? 44296 "சொந்த துட்டுல சூனியம் வெச்சுக்கிட்டார் " போல ஆயிடுச்சு சோகம் கட்டுரை இல் சொன்னது போல 14 வயதுக்குமேல் ஒரு மாணவன் அல்லது ஒரு மாணவி படிக்க ஆரம்பிப்பாளா என்ன? எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? 139731 ஒரு 4 வருஷம் அவா ஊர்ரை வெட்டியாக சுத்தி வந்துட்டா போரும், பிறகு தான் அரசு இலவச அரிசி, அடுப்பு, கிரைண்டர், டி‌வி, மிக்சி என சகல பொருட்களும் தருகிறது; இவன் வெறும பிள்ளை பெற்றுக்கொண்டால் போறும் ; சீச்சீ என்ன ஒரு மனம் கெட்ட பிழப்பாக போச்சு? "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "என்கிற காலமெல்லாம் மலை எறிப்போச்சு சோகம் இது தமிழ் நாட்டில் இருப்பவர்களை விட வெளி மாநிலத்தில் அல்லது வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல புரியும் ; சம்டைம்ஸ் ரொம்ப அவமானமாய் இருக்கும் சோகம் என்ன பண்ணறது ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 9:24 am

சிவா wrote:மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் கேவலமான இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் போராட வேண்டும்.

இந்தச் சட்டத்தால் சிறு துளியும் நன்மை இல்லை! பிறகு எதற்கு என்றால் கட்டுரையில் இறுதியில் கூறியுள்ள வார்த்தைகள் முற்றிலும் உண்மை!

இப்பொழுது பெரும்பாலான அரசு பள்ளிகள் ஒரு சில மாணவர்களுடன் செயல்படுகிறது! அந்த ஒரு சில மாணவர்களையும் தனியார் பள்ளிகள் விழுங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சட்டம்!

குழந்தைகளை முட்டாள் கள் ஆக ஆக்கும் ஒரு சட்டம் ; இது நமக்கு தேவையா ? சிவா சொல்வது போல் பெற்றோரும் ஆசிரியர்களும் இதை எதிர்க்கணும் . செய்வார்களா?
அல்லது கட்டுரை இல் சொன்னது போல் பாடம் நடத்தாமலேயே நமக்கு சம்பளம் வருது என பொறுப்பில்லாமல் இருப்பார்களா ? பொறுத்திருந்து தான் பார்க்கணும் ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 9:37 am

ஆசிரியர்கள் போராட மாட்டார்கள் இதனால் "பணப் பயன்" ஒன்றும் வரப்போவதில்லை! மேலும் இந்த அரசு முன்பு போராட்டத்தை ஒடுக்கிய விதம் " ஹிட்லர்" ( ஆயிரக்கணக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன் ) தேவலாம்.

சமச்சீர் கல்வி பற்றி பள்ளியில் ஆசிரியர்கள் பேசக்கூடாது என்று ஒரு வாய்மொழி உத்தரவு இருக்கிறது.

"படித்த " வசதியான" பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கு போய்விட்டார்கள்

அன்றாடம் கூலி வேலைக்கு போனால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலயில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் மட்டுமே ! பெரும்பாலான அரசு பள்ளியில் உள்ளார்கள் .

இந்நிலையில் அரசே உணர்ந்து மாற்றினால்தான் உண்டு! வேற வழி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 9:51 am

ஓ , வாய் வழி உத்தரவு வேறயா? கருமம் டா சாமி. ஆகக்கூடி குழந்தைகளின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறி ஆய்டுச்சே என்ன? ஆனால் , இதே அரசு கிராமப்புற மாணவர்களுக்காக என (வேஷம் ? ) இங்கினியரிங்க் கல்லூரிகளின் நுழைவ்ய்த்தெர்வை ரத்து செய்து அங்கு ஒரு 'ப்ரெய்ன் டிரைன்' ஐ செய்தது; இப்ப இப்படி. சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 11:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Dove_branch
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Dஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Iஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Vஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Yஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Aஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்? Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக